கசுனி மாயாதுன்ன Archives - Oruvan.com

இலங்கையில் திருநங்கை பாலியல் தொழிலாளர்கள் பலர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர்
இலங்கையில், 25 வீதம் முதல் 30 வீதம் வரையிலான திருநங்கை பாலியல் தொழிலாளர்கள் ஐஸ், ஹெராயின், கஞ்சா மற்றும் மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு அடிமையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரான்ஸ் ஈக்வாலிட்டி டிரஸ்ட் (TET) இன் நிர்வாக இயக்குனர் கசுனி மாயாதுன்ன இதனை தெரிவித்தார்.

இலங்கையில் 5,000 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இருப்பதாகவும், பெரும்பான்மையானவர்கள் தங்கள் குடும்பங்கள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் பாலியல் தொழிலில் தள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல திருநங்கை பாலியல் தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாடகை அறைகள் அல்லது பகிரப்பட்ட தங்கும் விடுதிகளில் வசிக்கின்றனர்.

அவர்கள் அடிப்படை வாழ்க்கைச் செலவுகள் மற்றும் போதைப்பொருட்களை வாங்குவதற்காக இந்தத் தொழிலில் தொடர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் கசுனி மாயாதுன்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

பலர் மறுவாழ்வு திட்டங்களைத் தவிர்க்கிறார்கள் எனவம், ஏனெனில் அவர்கள் குணமடையும் போது அவர்களைக் கவனித்துக் கொள்ள குடும்ப ஆதரவு அமைப்பு இல்லை எனவம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைதுக்குப் பிறகு தாக்குதல்கள், சட்டவிரோத தடுப்புக்காவல்கள், ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் பரவலான சமூக துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை திருநங்கை பாலியல் தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ளனர்.

இதனை சுட்டிக்காட் பொலிஸ்மா அதிபருக்கு டிரான்ஸ் ஈக்வாலிட்டி டிரஸ்ட் கடிதம் எழுதியுள்ளது.

திருநங்கை பாலின அடையாளம் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் வைத்தியசாலை ஊழியர்கள் பெரும்பாலும் அவசரகால வழக்குகளை தவறாகக் கையாள்வதாகவும், இதனால் பராமரிப்புக்கு கூடுதல் தடைகள் ஏற்படுவதாகவும் அந்த அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

The post இலங்கையில் திருநங்கை பாலியல் தொழிலாளர்கள் பலர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர் appeared first on Oruvan.com.