ஐரோப்பிய யூனியன் Archives - Oruvan.com

வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்த ஐரோப்பிய யூனியன்
பரஸ்பர வரி விதிப்பை நிறுத்​திய அமெரிக்​கா​வின் செயலை வரவேற்​கும் வித​மாக தாங்​களும் பதிலடி வரி விதிப்பு நடவடிக்​கையை 90 நாட்​களுக்கு நிறுத்தி வைப்​ப​தாக 27 உறுப்பு நாடு​களுக்​கான வர்த்​தகத்தை கையாளும் ஐரோப்​பிய ஒன்​றி​யத்​தின் நிர்​வாக ஆணை​யம் தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து அந்த ஆணை​யத்​தின் தலை​வர் உர்​சுலா வான் டெர் லேயன் நேற்று கூறிய​தாவது:

அமெரிக்க ஜனாதிபதி பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்​களுக்கு நிறுத்தி வைத்​ததற்கு இணை​யாக நாங்​களும் பதிலடி வரி விதிப்பு நடவடிக்​கைகள் எடுப்​பதை ஒத்​திவைக்க முடிவு செய்​துள்​ளோம். அதன்​படி, 20.9 பில்​லியன் யூரோக்​கள் (23 பில்​லியன் டாலர்) அமெரிக்​கப் பொருட்​களின் மீதான புதிய வரி​கள் 90 நாட்​களுக்கு நிறுத்தி வைக்​கப்​படு​கிறது. ஏனெனில், அமெரிக்கா​வுடன் பேச்​சு​வார்த்தை நடத்​து​வதற்கு ஒரு வாய்ப்பை வழங்க விரும்​பு​கிறோம். இந்த பேச்​சு​வார்த்​தைகள் திருப்​தி​கர​மாக இல்லை என்​றார், எங்​கள் எதிர் நடவடிக்​கைகள் தொடங்​கும்.

பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்​கள் நிறுத்தி வைக்​கும் அதிபர் ட்ரம்​பின் முடிவு வரவேற்​புக்​குரியது. இது உலகப் பொருளா​தா​ரத்தை நிலைப்​படுத்​து​வதற்​கான ஒரு முக்​கிய​மான படி​யாகும். இவ்​வாறு உர்​சுலா தெரி​வித்​துள்​ளார்.

வரி​வி​திப்பு நிறுத்​தம் குறித்து ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று முன்தினம் கூறி​யுள்​ள​தாவது: அமெரிக்க பொருட்​களின் இறக்​கும​திக்கு அதிக அளவில் வரி விதிக்​கும் நாடு​களுக்​கான பரஸ்பர வரி விதிப்பு அறி​விப்பை 90 நாட்​களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 75-க்​கும் மேற்​பட்ட நாடு​கள் பரஸ்பர வரி விதிப்பு தொடர்​பாக அமெரிக்கா​வுடன் பேச்​சு​வார்த்தை நடத்த விரும்​புவ​தாக தெரிய​வந்​ததையடுத்து இந்த நிலைப்​பாட்டை எடுத்​துள்​ளேன்.

மேலும், இந்த நாடு​கள் இது​வரை அமெரிக்​கா​வின் நடவடிக்​கைக்கு பதிலடி எது​வும் கொடுக்​க​வில்​லை. இதனை கருத்​தில் கொண்டு இந்த நிறுத்த காலத்​தில் அந்த நாடு​களின் பொருட்​களுக்கு அடிப்​படை​யான 10% வரி மட்​டுமே விதிக்​கப்​படும். ஐரோப்​பிய ஒன்​றி​யத்​தின் வரி 20%-​மாக இருக்​கும்.

பரஸ்பர வரி நிறுத்​தம் செய்​துள்ள நாடு​களின் பட்​டியலில் சீனா சேர்க்​கப்​பட​வில்​லை. அந்த நாட்​டுக்​கான வரி விகிதம் 104% உயர்த்​தப்​பட்ட பிறகு சீனா அமெரிக்க பொருட்​களுக்​கான வரி விகிதத்தை 84%-​மாக உயர்த்தி பதிலடி தந்​தது. இதனால், சீனா​வின் இறக்​குமதி மீதான வரி விகிதம் மட்​டும்125%-​மாக உயர்த்​தப்​படு​கிறது. இவ்​வாறு ட்ரம்ப் கூறி​யுள்​ளார். ட்ரம்ப்​பின் இந்த முடிவு அமெரிக்கா மற்​றும் சீனா இடையே ஏற்​கெனவே உள்ள வர்த்தக போரின் தீவிரத்தை மேலும் அதி​கப்​படுத்​தி​யுள்​ளது.

The post வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்த ஐரோப்பிய யூனியன் appeared first on Oruvan.com.