ஐபிஎல் போட்டிகள் Archives - Oruvan.com

இந்தியா – பாக்கிஸ்தான் போர்ப் பதற்றம் : ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் தீவிரமடைந்து வருவதை அடுத்து ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பட்டுள்ளன.

விமானத் தாக்குதல் எச்சரிக்கைகள் காரணமாக தர்மசாலாவில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையேயான போட்டி பாதியில் கைவிடப்பட்டது.

இதையடுத்து, மற்ற போட்டிகள் தொடர்பாக முடிவெடுக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), இன்று அவசர ஆலோசனை நடத்தியது. கூட்டத்துக்குப் பின்னர் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாக இயக்குநர் கே.எஸ்.விஸ்வநாதன், “ஐபிஎல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வீரர்கள் தங்கள் இடங்களுக்குத் திரும்பி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.

“நாடு போரில் இருக்கும்போது கிரிக்கெட் தொடர்வது நல்லதல்ல” என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

“ஊழியர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்புதான் மிகவும் முக்கியம். எனவே, போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகின்றன. இந்த நேரத்தில் பிசிசிஐ நாட்டுடன் நிற்க விரும்புகிறது, இதனால் உடனடியாக ஐபிஎல் 2025 ஐ நிறுத்தி வைக்கிறது. சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்து ஆலோசித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டது. போட்டிகள் மீண்டும் எப்போது நடக்கும் என்பது குறித்து விரைவில் விரிவான தகவல் வெளியிடப்படும்” என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திரும்பும் வீரர்கள்: டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளின் வீரர்கள் தற்போது தர்மசாலாவிலிருந்து சாலை வழியாக புதுடெல்லி செல்கின்றனர். கொல்கத்தாவில் நடைபெற இருந்த இறுதிப் போட்டி உட்பட பன்னிரண்டு லீக் போட்டிகள் மற்றும் நான்கு நாக் அவுட் போட்டிகள் நடைபெற வேண்டிய நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள அவந்திபோரா மற்றும் ஸ்ரீநகர், பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ், ஜலந்தர், லூதியானா, கபுர்தலா, ஆதம்பூர் மற்றும் பதிண்டா, சண்டிகர், ராஜஸ்தானில் உள்ள நல், பலோடி மற்றும் உத்தர்லாய், குஜராத்தின் பூஜ் ஆகிய 15 நகரங்களை புதன்கிழமை இரவு பாகிஸ்தான் இராணுவம் குறிவைத்தது. இந்த நகரங்களை நோக்கி ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை ஏவியது. எனினும் அந்த முயற்சிகள் இந்திய பாதுகாப்பு படைகளால் முறியடிக்கப்பட்டன.

இந்தியா – பாக். போர் பதற்றம் பின்னணி: கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். கொடூரமான இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக புதன்கிழமை நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது இந்திய இராணுவம்.

அதன் தொடர்ச்சியாக, இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள எல்லை கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து வியாழக்கிழமை பாகிஸ்தான் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல் முயற்சிகளை இந்தியா முறியடித்தது. அதன் தொடர்ச்சியாக இரவிலும் பாகிஸ்தானின் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வெற்றிகரமாக வீழ்த்தியது இந்திய பாதுகாப்புப் படை.

எல்லையோர மாநிலங்களில் தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவுகிறது. ஜம்மு, ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் உள்ள எல்லை கிராமங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு அமலாகியுள்ளது. இதுபோல், தலைநகர் டெல்லியிலும் பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

The post இந்தியா – பாக்கிஸ்தான் போர்ப் பதற்றம் : ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு appeared first on Oruvan.com.