ஐங்கரநேசன் Archives - Oruvan.com

முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனித்ததோடு எமது கலை, இலக்கியங்களும் மூச்சிழந்து விட்டன – ஐங்கரநேசன்
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் கலை, இலக்கியங்கள் அளப்பெரிய பணிகளை ஆற்றியிருக்கின்றன. போர்க்களத்தில் ஆயுதங்கள் பேசியபோது மக்கள் களத்தில் நின்று கலை, இலக்கியங்கள் பேசின. போராட்டங்களின் நியாயங்களையும், வலிகளையும் சொல்லி மக்களை எழுச்சிகொள்ள வைத்து அவர்களைத் தேசமாக ஒருங்கிணைத்ததில் கலை, இலக்கியங்கள் பெரும் பங்களிப்புகளைச் செய்தன. ஆனால், முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனித்ததோடு, எமது கலை, இலக்கியங்களும் மூச்சிழந்து விட்டன. கலை, இலக்கியங்கள் பேசவேண்டிய விடயங்கள் இன்னும் ஏராளம் இருக்க, அவை ஊமையாக இருப்பது வருத்தமளிக்கிறது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும், ‘வேர்முகங்கள்’ நூலின் ஆசிரியருமான பொ. ஐங்கரநேசன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பொ. ஐங்கரநேசன் கலை, இலக்கிய ஆளுமைகளுடன் நிகழ்த்திய நேர்காணல்களின் தொகுப்பான ‘வேர்முகங்கள்’ நூலின் அறிமுக விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை முள்ளியவளை பரி-மத்தியா ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் ஏற்புரை ஆற்றியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதே தவிர, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. போராட்டம் முளை கொண்டதற்கான காரணங்கள் இப்போதும் அப்படியே நீடிக்கும்போது, போராட்டம் முடிவுக்கு வர இயலாது. அது சாத்தியமான வழிகளில் எல்லாம் ஜனநாயகப் போராட்டமாகத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக, இப்போராட்டங்கள் இன்று அரசியல் வாதிகளுக்குரிய ஒரு பணி என்பதாக மாத்திரமே சுருங்கிப் போயுள்ளது. ஆயுதப் போராட்டத்தின் முடிவுடன் தமது பேனாக்களை மூடி வைத்துள்ள கலை, இலக்கியவாதிகள் ஜனநாயகப் போராட்டக்காலத்திலும் தமது பணிகளைத் தொய்வின்றித் தொடரவேண்டும்.

போராட்டக்காலத்தில் பேசாமடந்தைகளாக இருந்த பலர் இப்போது தமிழ்த் தேசிய வாதத்தைக் கேள்விக்குள்ளாக்கத் தலைப்பட்டுள்ளனர். இலங்கையில் இடதுசாரிகள் தலைமையிலான அரசாங்கம் அமைந்துள்ள நிலையில் அவர்கள் உயிர்பெற்றுள்ளனர்.

போருக்குப் பின்னரான எமது இளைய தலைமுறையைத் தமிழ்த் தேசிய உணர்வில் இருந்தும் மடைமாற்றி, பெருந்தேசிய வாதத்துக்குள் கரைக்கும் நிகழ்ச்சி நிரலை தெரிந்தோ தெரியாமலோ முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், எமது போராட்டத்தின் நியாயங்களை, போரில் பெற்ற வெற்றிகளை, பட்ட வதைகளை எமது இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லுவது வரலாற்றுக் கடமையாகும். அதை எமது கலைஞர்களும் இலக்கியவாதிகளும் செய்ய முன்வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

The post முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனித்ததோடு எமது கலை, இலக்கியங்களும் மூச்சிழந்து விட்டன – ஐங்கரநேசன் appeared first on Oruvan.com.

இலங்கையர் தினத்தைத் கொண்டாடுவதால் மட்டும் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாது
ஆடிக்கலவர நாளில் சகோதர தினத்தை முன்னெடுத்துள்ள ஜே.வி.பி அரசாங்கம் விரைவில் இலங்கையர் தினத்தைக் கொண்டாடவுள்ளது. ஆனால், இந்தத் தினங்களைக் கொண்டாடுவதால் மட்டும் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜுலை நினைவுக் கருத்தரங்கு நேற்று (27.07.2025) யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “நினைவேந்தல்கள் வரலாற்றை நினைவுபடுத்துகின்றன. வரலாறு ஒருவரை எங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றதோ அங்கிருந்துதான் அவர் தனது அடுத்த பயணத்தைத் தொடரமுடியும். நதிகளைப் போன்றே வரலாறும் பின்னோக்கிப் பாய்வதில்லை. இதுவே வரலாற்றின் நியதி.

வரலாறு தமிழ் மக்களை முள்ளிவாய்க்காலில் கொண்டு வந்து நிறுத்தியது. ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட அந்த இடத்தில் இருந்துதான் அஞ்சலோட்டம் போன்று அடுத்த போராட்டத்தைத் தமிழ் மக்கள் ஜனநாயக வழியில் முன்னெடுத்திருக்கவேண்டும்.

முள்ளிவாய்க்கால் பேரழிவு சர்வதேச நாடுகளை எமது போராட்டத்தின் நியாயப்பாடுகளை ஏற்றுக்கொள்ள வைப்பதற்கான சாத்தியங்களைத் தன்னகத்தே கொண்டிருந்தது.

ஆனால், அதைச் செய்யத் தவறிய எமது தலைவர்கள், மாறாக இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் பிணை எடுத்துக்கொடுத்தார்கள்.

வரலாறு இன்னுமொரு சந்தர்ப்பமாகச் செம்மணியில் மனிதப் புதைகுழிகளை அடையாளப்படுத்தியுள்ளது. போரின் சாட்சிகளாக, இன அழிப்பின் சாட்சிகளாக எம்முன்னால் பலர் இன்றும் உள்ளார்கள்.

இவர்களால் உயிர்ப்பயம் காரணமாக உண்மைகளை அதிகம் வெளிப்படுத்த முடியாது. உயிருள்ள சாட்சியங்களைவிட வலுவான சாட்சியங்களாக இன்று எம்முன்னே செம்மணி மனிதப்புதைகுழிகளும் அவற்றில் இருந்து வெளிப்படும் எமது உறவுகளின் எலும்புக்கூடுகளும் உள்ளன.

எலும்புக்கூடுகள் தனது கழுத்தை இறுக்கப் போகின்றது என்று அஞ்சும் பேரினவாதம் இதனைத் திசை திருப்புவதற்கான சகல எத்தனங்களிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

செம்மணிப் புதைகுழிகள் தந்துள்ள அரியவாய்ப்பை எமது தலைவர்கள் சரியாகப் பயன்படுத்தி நீதிக்கான, விடுதலைக்கான எமது பயணத்தை வேகமாகத் தொடர முன்வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

The post இலங்கையர் தினத்தைத் கொண்டாடுவதால் மட்டும் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாது appeared first on Oruvan.com.

பௌத்த – சிங்களப் பேரினவாதத்தை நிறுவனமயப்படுத்தியது ஜே.வி.பிதான்: சாடுகின்றார் ஐங்கரநேசன்
தென்னிலங்கை அரசியலும் பௌத்தமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தது. சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு தென்னிலங்கை அரசியலில் பௌத்த, சிங்களப் பேரினவாதம் கோலோச்சி வந்துள்ளது. ஆனால், அதனை நிறுவனமயப்படுத்தி பிக்குகளுக்கென்று தனியானதொரு அணியை உருவாக்கியது ஜே.வி.பி. மாத்திரமே. ஜே.வி.பியின் முன்னணி அமைப்புகளில் மகளிர் அணி, உயர்கல்வி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் அணிகளுடன் மூன்றாவதாக பிக்குகளுக்கென்று தனியானதொரு அணியும் உருவாக்கப்பட்டது.

இந்திய – இலங்கை ஒப்பந்த காலத்தில் இந்திய விஸ்தரிப்புக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் தமிழின விரோதப்போக்கை சிங்கள மக்களிடையே இந்தப் பிக்குகள் அணியின் மூலமே ஜே.வி.பி. விதைத்தது என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ்த்தேசியப் பேரவையின் யாழ். மாநகரசபை வேட்பாளர்களின் அறிமுகக்கூட்டம்  யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஐங்கரநேசன் இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் –

அமெரிக்கா இலங்கையில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு விதித்துள்ள அதியுயர் வரியை ஜனாதிபதி அநுரகுமர திஸநாயக்க கொரோனாவுக்கும், சுனாமிக்கும் நிகரானதாக ஒப்பிட்டுப் பேசியுள்ளார். இந்தப் பொருளாதார நெருக்கடியை நாம் தேசமாக ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கையைச் சுனாமி தாக்கியபோது நாடுதழுவிய ரீதியில் நிவாரணப் பணிகளை முன்னெடுப்பதற்காக அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க விடுதலைப் புலிகளுடன் செய்துகொள்ளவிருந்த ஒப்பந்தத்தை அடியோடு ஜே.வி.பி. நிராகரித்துப் பேரிணிகளைக்கூட நடாத்தியது.

அப்போது சுனாமி நெருக்கடியை தேசமாக எதிர்கொள்ளவிடாது ஜே.வி.பியைத் தடுத்தது தமிழின விரோதப்போக்கேயன்றி வேறென்ன?

ஜே.வி.பி. தன்னை வெளிப்பார்வைக்கு ஓர் இடதுசாரி அமைப்பாகக் காட்டிக்கொண்டாலும் அது உண்மையான மார்க்சியக் கட்சியாக ஒருபோதும் இருந்ததில்லை. ஆரம்பத்தில் மார்க்சியத்தினதும் சிங்களத் தேசியவாதத்தினதும் கலவையாக இருந்த ஜே.வி.பிழ்பின்னர் முழுமையாக சிங்கள தேசியவாதக் கட்சியாகவே மாறியது. சமாதானப் பேச்சுவார்த்தைகளில் நோர்வேயின் மத்தியஸ்த்தத்தை எதிர்த்துத் தீவிரமான பிரச்சாரங்களை முன்னெடுத்தது. இராணுவத் தீர்வை வெளிப்படையாகவே முன்வைத்து மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தை போரைத் தொடங்குமாறு வலியுறுத்தியது. இந்த கடும் தேசியவாதப் போக்கே ஜே.வி.பியை ஒரு சிங்கள தேசியச் சக்தியாக உருவெடுக்க வைத்து இன்று அதற்குப் பெரும் வெற்றியையும் தேடிக்கொடுத்துள்ளது.

இப்போது ஜே.வி.பி. தேசிய மக்கள் சக்தி என்ற முகமூடியை அணிந்துகொண்டாலும் அதன் உண்மையான முகம் மாறப்போவதில்லை. ஜே.வி.பியின் முகப்பூச்சை நம்பி தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் ஜே.வி.பிக்கு வாக்களித்திருந்தார்கள். ஜே.வி.பி. ஆட்சிபீடம் ஏறி இவ்வளவு மாதங்கள் கடந்த பின்னருங்கூட தமிழின விரோதச் செயற்பாடுகளில்தான் ஈடுபட்டமைக்காகச் சிறுவருத்தங்கூட தெரிவிக்கவில்லை. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆக்கபூர்வ அணுகு முறைகள் எதனையும் வெளிக்காட்டவில்லை. தொடர்ந்தும் ஜே.வி.பியை நம்பாமல் உள்ளூராட்சித் தேர்தலில் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் ஜே.வி.பியை அடியோடு நிராகரிக்கவேண்டும். – என்றும் தெரிவித்துள்ளார்.

The post பௌத்த – சிங்களப் பேரினவாதத்தை நிறுவனமயப்படுத்தியது ஜே.வி.பிதான்: சாடுகின்றார் ஐங்கரநேசன் appeared first on Oruvan.com.