எரங்க குணசேகர Archives - Oruvan.com

வீடற்ற 2,500 குடும்பங்களுக்கு இவ்வருடத்துக்குள் புதிய வீடுகள்
குறைந்த வருமானம் உடைய மற்றும் வீடற்ற 2,500 குடும்பங்களுக்கு, இவ்வருடத்துக்குள் புதிய வீடுகள் வழங்கப்படும் என நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகர்ப்புற மறுசீரமைப்பு பங்களிப்புத் திட்டத்தின் கீழ் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு 14, சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ‘ஸ்டேடியம் கம’ வீடமைப்புத் தொகுதியை பார்வையிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.

வீடுகளை வழங்குவது என்பது வெறும் கட்டிடங்களை வழங்குவது அல்ல, அவை மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய முழுமையான குடியிருப்புகளாக இருக்க வேண்டும்.

மக்கள் குடியேறுவதற்கு முன்னர் பாதுகாப்பு, சமூகத் தேவைகள் மற்றும் வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது. இவ்வருடத்தில் மூன்று வீடமைப்புத் திட்டங்கள் கையளிக்கப்படவுள்ளன.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் கொழும்பில் மொத்தம் 7,000 புதிய நகர்ப்புற வீடுகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

The post வீடற்ற 2,500 குடும்பங்களுக்கு இவ்வருடத்துக்குள் புதிய வீடுகள் appeared first on Oruvan.com.

கல்வியுடன் விளையாட எவருக்கும் உரிமை இல்லை
கல்வி சீர்திருத்தத்தின் போது 6ஆம் வகுப்புக்குரிய மொட்யூல்கள் தொடர்பாக தெளிவான ஒரு பிழை ஏற்பட்டுள்ளதாகவும், அந்தப் பிழையை திருத்தி முன்னேறுவதற்கு ஒரு கால அவகாசம் தேவைப்படுவதால் 6ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது அடுத்த ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.

“கல்வி என்பது ஒரு கட்டிடம் கட்டுவது போலவோ, ஒரு பாலம் அல்லது கல்வெட்டு ஒன்றை அமைப்பது போலவோ எளிய விஷயம் அல்ல. கல்வி என்பது எங்கள் நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலம். அதனுடன் விளையாட எவருக்கும் உரிமை இல்லை. அங்கு ஒரு தெளிவான பிழை ஏற்பட்டுள்ளது. அந்தப் பிழையை திருத்திக்கொண்டு முன்னேற எங்களுக்கு காலம் தேவைப்படுகிறது.

எனவே, இதுகுறித்து பொதுமக்களை தெளிவாக அறிவுறுத்தி, மேலும் சிறப்பாக 6ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தத் தொடங்குவோம். ஆகையால் இந்த கல்வி மாற்றம் எவ்விதத்திலும் நிறுத்தப்படவில்லை” என அவர் கூறினார்.

கொலன்னாவ பகுதியில் ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்துடன் இணைந்து நிர்மாணிக்கப்பட்ட மூன்று வீடுகளை திறந்து வைக்கும் நிகழ்வுக்குப் பின்னர் நடைபெற்ற நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது பிரதி அமைச்சர் எரங்க குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

The post கல்வியுடன் விளையாட எவருக்கும் உரிமை இல்லை appeared first on Oruvan.com.

வாக்குறுதியளித்து விட்டு செய்யாமல் விட்ட ஒன்றை காட்டுங்கள் ; எதிர்க்கட்சிகளுக்கு சவால்
தேசிய மக்கள் சக்தி செய்வதாக வாக்குறுதியளித்து நிறைவேற்றாத ஒன்றை காட்ட முடியுமா என தான் எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுவதாக பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மக்கள் தமது அரசாங்கத்திற்கு அறுபது மாதங்களாக அதிகாரத்தை வழங்கியுள்ளனர். அதற்கான பலமான தொடக்கத்தை அரசாங்கம் ஏற்கனவே எடுத்துள்ளது.

எதிர்வரும் தேர்தலிலும் தேசிய மக்கள் படையை வெற்றியடையச் செய்ய மக்கள் அணிவகுத்து நிற்கின்றனர்.

நாம் மக்களுடன் அரசியல் செய்கிறோம். அதனால் எதிர்க்கட்சிகளுக்கு பயமில்லாது செயல்படுகிறோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

The post வாக்குறுதியளித்து விட்டு செய்யாமல் விட்ட ஒன்றை காட்டுங்கள் ; எதிர்க்கட்சிகளுக்கு சவால் appeared first on Oruvan.com.