எம்.ஏ.சுமந்திரன் Archives - Oruvan.com

கட்சி தீர்மானங்களை விமர்சித்தால் கடும் நடவடிக்கை
“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முடிவுகள், தீர்மானங்களைப் பகிரங்க வெளியில் விமர்சிக்கின்ற கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதை கட்சி உறுப்பினர்களும் பிரமுகர்களும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தி இருக்கின்றார்.

கட்சியின் தீர்மானங்களை விமர்சிப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் கட்சி உறுப்பினர்களுக்குத் தமிழரசுக் கட்சியின் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் தெரியப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், அனைத்து முறைப்பாடுகள் சம்பந்தமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாய தேவை இருப்பதினால், மேலும் எவரையும் சங்கடத்திற்கு உட்படுத்தாமல் நடந்து கொள்ளுமாறு கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்று தவிசாளர்களைக் கேட்டிருக்கின்றார்.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு இது பற்றிய தகவல்களை அவர் வழங்கியிருக்கின்றார் எனத் தெரிகின்றது.

கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் ஆலோசையின் அடிப்படையில் இந்த அறிவுறுத்தலை அவர் தெரியப்படுத்தி இருக்கின்றார் என அறியவந்தது.

The post கட்சி தீர்மானங்களை விமர்சித்தால் கடும் நடவடிக்கை appeared first on Oruvan.com.

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு முழு ஆதரவு
அரசின் கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை நெடுங்கேணியில் நடைபெறவுள்ள மாபெரும் போராட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வாழும் மக்கள் திரளாக வந்து பங்கேற்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் இன்று கருத்துத் தெரிவிக்கையில்,

“கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிரான மாபெரும் போராட்டம் எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை நெடுங்கேணியில் நடைபெறும்.

இதில் சகல மாவட்டங்களிலும் வாழும் மக்கள் திரளாக வந்து பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி இந்தப் போராட்டத்துக்கு எமது முழுமையான ஆதரவை வழங்குவதோடு எமது பங்களிப்பையும் தொடர்ச்சியாக வழங்குவோம்.” – என்றார்.

The post கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு முழு ஆதரவு appeared first on Oruvan.com.

கூட்டாட்சி முறைமை குறித்து தமிழ்த் தரப்புடன் பேசத் தயார்
‘இலங்கையில் கூட்டாட்சி முறைமையை (சமஷ்டி) அறிமுகப்படுத்துவது குறித்து தமிழ்க் கட்சிகளுடன் பேசுவதற்கு தயாராக இருப்பதாக அண்மையில் சுவிட்ஸர்லாந்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த செயலமர்வில் கலந்துகொண்ட ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் கூறினார்கள்’ என்று இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிறி வோல்ட், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் தெரிவித்தார்.

இலங்கை – சுவிட்ஸர்லாந்து நாடாளுமன்ற நட்புறவு சங்கத்துடன் கூட்டிணைந்து சுவிட்ஸர்லாந்து அரசின் ஏற்பாட்டில் அந்நாட்டின் கூட்டாட்சி அரசியல் முறைமை மற்றும் தேசிய ஒருமைப்பாடு வலுவாக்கம் என்பன பற்றி இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கு தெளிவூட்டும் வகையிலான செயலமர்வொன்று கடந்த செப்டெம்பர் மாதம் 14 – 21 ஆம் திகதி வரை சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்றது.

அந்தச் செயலமர்வில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளருமான நிஹால் அபேசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திம ஹெட்டியராச்சி, நிலாந்தி கொட்டஹச்சி, சமன்மலி குணசிங்க ஆகியோரும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவலவும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கமும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தலதா அத்துகோரளவும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரனும், மக்கள் விடுதலை முன்னிணியின் உறுப்பினர் டபிள்யூ.ரி.பத்மா மஞ்சுளவும், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருக்கான ஒருங்கிணைப்புச் செயலாளருமான கபிலன் சுந்தரமூர்த்தியும் கலந்துகொண்டனர்.

இந்த செயலமர்வின்போது சுவிட்ஸர்லாந்தின் அரசியல் முறைமை மற்றும் இருதரப்பு உறவுகள், சுவிட்ஸர்லாந்தின் கூட்டாட்சி (சமஷ்டி) முறைமையை ஆழமாகப் புரிந்துகொள்ளல் ஆகிய தலைப்புக்களில் இலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விரிவான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டதுடன் இதனுடன் தொடர்புடைய முக்கிய கட்டமைப்புக்களுக்கான கள விஜயங்கள் மற்றும் உயர்மட்ட சந்திப்புக்கள் என்பனவும் இடம்பெற்றன.

அதேவேளை, இந்த செயலமர்வின் ஓரங்கமாக நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துரைத்த தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நிஹால் அபேசிங்க, 2015 – 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவு மீளக்கொண்டு வரப்படும் எனவும், அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் என அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை வாசித்து ஆராயும் பணிகள் முடிவுறும் தருவாயில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இந்தச் செயலமர்வு தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிறி வோல்ட்டின் அழைப்பின் பேரில் நேற்று (29) புதன்கிழமை கொழும்பில் உள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுடன் நடைபெற்ற சந்திப்பின்போது மேற்படி செயலமர்வு குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அதன்படி இலங்கையில் கூட்டாட்சி முறைமையை (சமஷ்டி) அறிமுகப்படுத்துவது குறித்து தமிழ்க் கட்சிகளுடன் பேசுவதற்கு தயாராக இருப்பதாக செயலமர்வில் கலந்துகொண்ட ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் கூறினார்கள் என்று தூதுவர் சிறி வோல்ற் சுமந்திரனிடம் தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த சுமந்திரன், அரசியல் தீர்வு குறித்துப் பேசுவதற்கு நேரம் ஒதுக்கித்தருமாறு தாம் ஜனாதிபதியிடம் கோரியுள்ள போதிலும், அதற்கு இன்னமும் பதில் கிட்டவில்லை என சுட்டிக்காட்டினார்.

இருப்பினும் இது குறித்து சுவிட்ஸர்லாந்தில் நடாத்தப்பட்ட செயலமர்வில் கலந்துகொண்ட தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுடன் பேசுவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

The post கூட்டாட்சி முறைமை குறித்து தமிழ்த் தரப்புடன் பேசத் தயார் appeared first on Oruvan.com.

ஹர்த்தால் தினத்தில் மாற்றம் – தமிழரசு கட்சி விசேட அறிவிப்பு
முல்லைத்தீவில் இளைஞர் ஒருவர் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படவிருந்த ஹர்த்தால் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

“வடகிழக்கு முழுவதும் ஹர்த்தால் அனுட்டிப்புக்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை 15 ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தது.

ஆனால் மடுமாதா தேவாலயத்தில் அன்றைய தினம் விசேட நிகழ்வு நடக்க இருப்பதால் அந்தத் திகதியை வேறொரு திகதிக்கு மாற்றுமாறு மன்னார் மறைமாவட்ட ஆயர் அடிகளார் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

நேற்று மன்னார் மறை மாவட்டக் குரு முதல்வருடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் பின்னர் இந்தத் திகதியை மாற்றுவதென்று முடிவு செய்யப்பட்டது.

இந்த மாற்றம் சம்பந்தமாக நல்லூர் கோவில் திருவிழா நிகழ்வுகளையும் அனுசரித்து எதிர்வரும் திங்கள் கிழமை 18ஆம் திகதிக்கு ஹர்த்தால் அனுட்டிப்பை மாற்றுவதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டு வடகிழக்கு முழுவதையும் முடக்கி எமது எதிர்ப்பை பாரிய அளவில் வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

The post ஹர்த்தால் தினத்தில் மாற்றம் – தமிழரசு கட்சி விசேட அறிவிப்பு appeared first on Oruvan.com.

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட தயார் – எம்.ஏ.சுமந்திரன் விருப்பம்
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட விரும்புவதாக முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கட்சி என்ன முடிவெடுக்கின்றதோ அதற்கு தான் முழுமையாக கட்டுப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியற் குழுக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றிருந்தது.

யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் உள்ள அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

இதன் போது கட்சியின் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பான விடயங்களை கையாள என கட்சியினால் தெரிவு செய்யப்பட்ட ஏழு பேர் கொண்ட குழுவும் ஒன்று கூடி பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடின.

இக்கூட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த கட்சியின் முக்கியஸ்தர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட விரும்புவதாக குறிப்பிட்ட அவர், தனது விருப்பத்தை கட்சிக்கு முறையாக அறிவிக்க உள்ளதாகவும் எனினும், தனது வேட்புமனுவை அங்கீகரிப்பதோ அல்லது நிராகரிப்பதோ கட்சியின் முடிவைப் பொறுத்தது என்றும் வலியுறுத்தினார்.

மேலும், தன்னை விட பொருத்தமான ஒரு வேட்பாளரை முதலமைச்சர் பதவிக்கு கட்சி அடையாளம் கண்டால், கட்சியின் முடிவுக்கு தான் முழுமையாக கட்டுப்படுவேன் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

The post வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட தயார் – எம்.ஏ.சுமந்திரன் விருப்பம் appeared first on Oruvan.com.

17 சபைகளிலும் ஆட்சி அமைப்போம் குறுக்கே எவரும் வர வேண்டாம் – யாழில் சுமந்திரன் சவால்
யாழில் 17 சபைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்றையதினம்(8) நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது பேசிய அவர் ஏனைய கட்சிகள் போன்று ஒரு சந்திப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவருக்கும் தெரிந்த பின்பு மறுக்கும் அல்லது சந்திப்புகளை பிற்போடும் செயற்பாடுகள் தமிழரசுக் கட்சிக்குள் நடைபெறுவதில்லை.

சமஸ்டி அடிப்படையில் ஆட்சி அதிகாரங்கள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே எமது கட்சி உருவாக்கப்பட்டது. அதற்காகவே அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுகின்றோம்.

1956ம் ஆண்டு முதல் இன்றுவரை தமிழ் மக்கள் பிரதானமாக நம்புவது இலங்கைத் தமிழரசுக் கட்சியை மட்டும்தான். கடந்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னரும் மக்களது ஆணைக்கு நாங்கள் தலை வணங்குகிறோம் என வெளிப்படையாக சொன்னேன்.

மக்கள் தவறாக முடிவெடுப்பதில். என்பிபி வாக்களித்த விவகாரத்தில் கூட அது மக்களுடைய தீர்ப்பு. அரசாங்கம் உட்பட அனைத்துக் கட்சிகளுக்கும் மக்களது தீர்ப்பினை மதிக்குமாறு நீண்டகாலமாக நாங்கள் கோரி வருகின்றோம்.

ஒரு குறிப்பிட்ட சபையில், தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களைப் பெற்றிருந்தால் மக்களின் ஆணையை மதித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி அந்த சபையில் ஆட்சியமைக்க ஆதரவளிக்க வேண்டியது உங்களுடைய ஜனநாயகக் கடமை. இதனை நாங்கள் 2018ம் ஆண்டிலேயே சொல்லியிருக்கிறோம்.

சந்திப்புகள் தொடர்பாக சில உணர்வுபூர்வமான விடயங்கள் இருக்கின்றன நாங்கள் அதனை மதிக்கின்றோம். அதனைப் புறம்தள்ளவில்லை. கஜேந்திரகுமாருடனான சந்திப்பு அவரது வீட்டிலேயே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

நானும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. அனாலும் அவர் இடையில் தும்புக்கட்டை கதை ஒன்றைக் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் எமது கட்சிக்குள் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. எனவே நாம் சந்திப்புக்கான இடத்தை மாற்றியிருந்தோம்.

எனவே சந்திப்புக்கான இடம் குறித்த விவகாரத்தில் மக்களுக்கு ஒரு உணர்வுபூர்வமான தாக்கம் ஏற்பட்டிருந்தால் அத்தனையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

ஒட்டுமொத்தமாக இந்த விடயத்தைப் பார்க்கின்றபோது நாங்கள் யாருடனும் கூட்டாட்சி அமைக்கவில்லை.

மக்கள் எமக்கு வழங்கிய ஆணையின் பிரகாரம் நாங்கள் அதிகாரத்தய் கோருகின்ற அரசியற் கட்சி. அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஆணையை மக்கள் வழங்கிய பிறகு அதற்கு குறுக்கே எவரும் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கிறோம்.

யாழில் உள்ள 17 சபைகளில் ஒன்றிரண்டு சபைகளில் எமக்கு பெரும்பான்மை இல்லாமல் இருக்கலாம். நாங்கள் சொன்ன கோட்பாட்டை ஏற்றுக்கொண்டதாக சொல்லிவிட்டு, அதனை மறுதலிப்பதற்காக கபடத்தனமாக பலர் செயற்படும் காரணத்தால், 17 சபைகளிலும் நாங்கள் ஆட்சி அமைப்போம்.

மக்களின் ஆணை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தடவை தேசிய மக்கள் சக்தீயை விட கூடுதலாக எடுக்கும் வகையில் மக்கள் மாற்றியமைத்திருக்கிறார்கள். ஏனையவர்களால் தேசிய மக்கள் சக்தியை மேவி வர முடியவில்லை.

தமிழா மக்களை, தமிழ்த் தேசியத்தை நிமிர வைத்திருக்கிற ஒரே கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி. அவ்வகையிலான மக்கள் ஆணையை பெற்ற நாங்கள் எல்லா சபைகளிலும் நிர்வாகத்தை அமைப்பதற்கான உரித்துடையவர்கள். அதற்கு குறுக்கே எவரும் வர வேண்டாம் என எச்சரிக்கை விக்கிறோம் எனத் தெரிவித்தார்.

The post 17 சபைகளிலும் ஆட்சி அமைப்போம் குறுக்கே எவரும் வர வேண்டாம் – யாழில் சுமந்திரன் சவால் appeared first on Oruvan.com.

எம்.ஏ.சுமந்திரன் – கஜேந்திரகுமார் இடையே நாளை பேச்சுவார்த்தை: சிவாஜிலிங்கம் தகவல்
உள்ளூராட்சி சபைகள் அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்க இடையில் நாளை வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது என்று தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

”உள்ளூர் ஆட்சி தேர்தல் முடிந்து மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையிலும், இன்னமும் முழு சபைகளினதும் பெயர் பட்டியல்கள் வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை. அனைத்து உறுப்பினர்களினதும் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டவுடன் ஜூன் மாதம் 2ஆம் திகதியில் இருந்து 4 ஆண்டுகளுக்கான பதவிக் காலம் ஆரம்பிக்கும்.

இந்த நிலையில், உள்ளூராட்சி சபைகள் அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்க இடையில் நாளை வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தை பரந்துபட்ட அளவிலான ஒற்றுமைக்கான பேச்சாகவும், வாய் மூலமான மாத்திரம் இல்லாது எழுத்து மூலமான பேச்சாகவும் அமைய வேண்டும் .” என்றார்.

The post எம்.ஏ.சுமந்திரன் – கஜேந்திரகுமார் இடையே நாளை பேச்சுவார்த்தை: சிவாஜிலிங்கம் தகவல் appeared first on Oruvan.com.

வடக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணியை கையகப்படுத்தும் அரசின் திட்டம் தோல்வி
வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட காணி உரிமை ஆர்வலர்களின் எதிர்ப்பை அடுத்து, போரினால் ஏற்பட்ட அழிவினால் காணி உரிமையை நிரூபிப்பது கடினமான காரியமாக மாறியுள்ள, வடக்கு மக்களுக்குச் சொந்தமான, நான்கு கடலோர மாவட்டங்களில் உள்ள, சுமார் ஆறாயிரம் ஏக்கர் காணியை கையகப்படுத்தும் நோக்கில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் மீளப்பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பிரதமருக்கும் காணி அமைச்சருக்கும் இடையேயான அவசரக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட, இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்திய வடக்கு மற்றும் கிழக்கின் மக்கள் பிரதிநிதிகள், 2025 மார்ச் 28 வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வர்த்தமானி இல. 2430ஐ இரத்து செய்யுமாறு கடுமையாகக் கோரியிருந்தனர்.

வர்த்தமானி அறிவிப்பு நேற்று இரத்து செய்யப்பட்டதை காணி அமைச்சும் உறுதிப்படுத்தியது.

காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தால் வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பில், அதன் அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள 5,941 ஏக்கர் காணியின் உரிமை மூன்று மாதங்களுக்குள் உறுதிப்படுத்தப்படாவிட்டால், அவை அரசால் கையகப்படுத்தப்படும் என எச்சரித்திருந்தது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய, வவுனியாவைத் தவிர்த்து, வடக்கு மாகாணத்தின் நான்கு மாவட்டங்களிலும் மொத்தமாக 5,941 ஏக்கர் காணி உள்ளடக்கப்பட்டுள்ளது. இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் 1,703, யாழ்ப்பாண மாவட்டத்தில் 3,669, கிளிநொச்சி மாவட்டத்தில் 515 மற்றும் மன்னார் மாவட்டத்தில் 54 ஏக்கர் காணி உள்ளடங்கும்.

அரசாங்கம் தங்களது காணியை கையகப்படுத்த முயற்சிப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்கள் அச்சம் தெரிவித்த நிலையில், அப்பகுதியில் உள்ள தமிழ் பிரதிநிதிகளும் முக்கிய காணி உரிமை ஆர்வலர்களும் இந்த வர்த்தமானி அறிவிப்பை கடுமையாக எதிர்த்தனர்.

எழுந்த கடும் எதிர்ப்பை எதிர்கொண்டு, மே 23 அன்று நாடாளுமன்றத்தின் குழு அறை இல. 1 இல் வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் தலைமையிலான குழுவைக் கூட்டிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், காணிகளின் உரிமைகளைக் கொண்டுள்ள மக்களுக்கு உடனடியாக காணிகளை கையளிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் தெரிவித்திருந்தார்.

காணியை கையளிக்கும் அரசாங்கத்தின் அணுகுமுறை ஒரு ‘தவறான வழிமுறை’ என, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்கள் பிரதிநிதிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

“பொதுமக்களின் சந்தேகங்களைப் போக்க முறையான வழிமுறையை அறிமுகப்படுத்தி, சட்டப்பூர்வ உறுதிப்படுத்தல்களுடன் மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது என்றும் மக்களின் நிலங்களை எந்த வகையிலும் கையகப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு எந்த எண்ணமும் இல்லை என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.” என பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இருப்பினும், வடக்கு மற்றும் கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துரையாடலில் பங்கேற்ற அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரன் ஆகியோர் சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவிப்பு குறித்து அறிந்திருக்கவில்லை.

விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க, விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்கிரமசிங்க, மேலதிக அரச தலைமை வழக்குரைஞர் விக்கும் டி அப்ரூ, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், காணி பதிவுத் திணைக்களம், நில அளவைத் திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், அரசாங்க அதிபர்கள் உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசால் 2025 மார்ச் 28 வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வர்த்தமானி இல. 2430, மே 26 அன்று இரத்து செய்யப்பட்டதாக, விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பீ. விக்ரமசிங்க, இன்றைய தினம் தெரிவித்தார்.

மே 3, 2025 அன்று ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கு, இந்த விடயம் குறித்து கடிதம் ஒன்றை அனுப்பியிருந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், வடக்கில் காணி கையகப்படுத்த தற்போதைய அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் இந்தச் சட்டம் மக்களின் காணிகளை கைப்பற்ற பிரித்தானிய அரசாங்கத்தால் இயற்றப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தக் கட்டளைச் சட்டம் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களால் எமது மக்கள் நூற்றாண்டுகளாக பாவித்து வந்த, ஆனால் தெளிவான உரித்தாவணங்கள் இல்லாத காணிகளை பறிப்பதற்காக உருவாக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள்.”

கடந்த அரை நூற்றாண்டிற்கு மேலாக பலமுறை இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் அவர்களின் காணிகளில் குடியேறவில்லை என ஜனாதிபதியிடம் தெரிவித்த முன்னாள் தமிழ் மக்கள் பிரதிநிதி, தற்போதைய சூழ்நிலையில் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவது ஏன் பொருத்தமானதல்ல என்பதற்கான பிற காரணங்களுடன் கூடுதலாக, நான்கு காரணங்களின் அடிப்படையில் அவர் விளக்கமளித்திருந்தார்.

இதேவேளை, வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டமை தொடர்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சமூக ஊடகங்கள் ஊடாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கு நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post வடக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணியை கையகப்படுத்தும் அரசின் திட்டம் தோல்வி appeared first on Oruvan.com.

பிரதமர் ஹரிணி தேர்தல் சட்டத்தை மீறியுள்ளார் – சுமந்திரன் குற்றச்சாட்டு
யாழ்ப்பாணத்தில் அண்மையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு ஆலய வளாகம் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் பேசிய அவர், குறித்த விடயம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடு அளிக்கப்பட்டதாகவும், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.

இந்தப் பிரச்சினைகளை விசாரிக்கவோ அல்லது நிவர்த்தி செய்யவோ தேர்தல் ஆணையத்திடம் முதுகெலும்பு இல்லை என்றும் கூறிய சுமந்திரன், நல்லாட்சி மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதாகக் கூறிக்கொண்ட அரசாங்கம், ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களுக்குள் இவற்றை வெளிப்படையாக மீறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

The post பிரதமர் ஹரிணி தேர்தல் சட்டத்தை மீறியுள்ளார் – சுமந்திரன் குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.

உள்ளூராட்சித் தேர்தல் – தனித்து ஆட்சியமைப்பது கடினம்
உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறோம். ஆனால் எல்லோருக்கும் தெரிந்த விடயம். இந்த தேர்தல் முறைமையிலே எந்த கட்சியாக இருந்தாலும் தனித்து ஆட்சியமைப்பது கடினமான விடயம். இருந்தாலும் நாங்கள் முயற்சி செய்கிறோம் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்த பின்னர் நேற்று யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

”இவ்வளவு காலமும் தாங்கள் மட்டுமே புனிதமானவர்கள் என்று தேர்தலில் போட்டி போட்டுக் கொண்டிருந்தவர்கள் தங்கள் நிலைமையை உணர்ந்து ஒரு சிலரோடு சேர்ந்து தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இப்படியாகத்தான் நாடாளுமன்ற தேர்தலுக்கும் ஒன்பது கட்சி கூட்டு, பத்து கட்சிக் கூட்டன பல செய்திகள் வந்தன. தப்பி தவறி ஒருவர் மட்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வந்தார். எந்தவித தாக்கத்தையும் இந்த கூட்டு செலுத்தாது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் ஐந்து உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்திருக்கிறோம். மிகுதி 12 சபைகளுக்கான வேட்புமனுக்களை நாளை (இன்று) சமர்ப்பிப்போம்.

நிறைந்த போட்டியின் மத்தியிலே வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டியதாக இருக்கிறது. அதனால் தாமதித்து தான் இறுதி செய்து கொண்டிருக்கிறோம்.

கட்சியினுடைய தீர்மானத்தின் படி எந்த ஒரு சபைக்கும் முதல்வரோ தவிசாளரோ அறிவிக்கப்படப் போவதில்லை. தேர்தலுக்கு பிறகு தான் அது சம்பந்தமாக கட்சி முடிவு எடுக்கும்.

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறோம். ஆனால் எல்லோருக்கும் தெரிந்த விடயம். இந்த தேர்தல் முறைமையில் எந்த கட்சியாக இருந்தாலும் தனித்து ஆட்சியமைப்பது கடினமான விடயம்.

ஆனாலும் நாங்கள் முயற்சி செய்கிறோம். அப்படியாக அல்லது பெரும்பான்மை கிடைக்காத இடங்களில் அந்தந்த சபைகளையும் சபைகளில் வேறு யாருக்கு பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது என்பதை பொறுத்து நாங்கள் தீர்மானிப்போம்.”என்றார்.

The post உள்ளூராட்சித் தேர்தல் – தனித்து ஆட்சியமைப்பது கடினம் appeared first on Oruvan.com.