எச்-1பி விசா Archives - Oruvan.com

எச்-1பி விசா வழங்க புதிய நடைமுறை அமல் : அமெரிக்காவின் முடிவால் இந்தியர்களுக்கு சிக்கல்
குலுக்​கல் முறைக்கு பதிலாக, எச்​-1பி விசா வழங்க புதிய முன்​னுரிமை நடை​முறையை அமல்​படுத்த அமெரிக்க அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. இது இந்​தி​யர்​களுக்கு பாதிப்பை ஏற்​படுத்​தும் எனத் தெரி​கிறது.

அமெரிக்​கா​வில் வெளி​நாட்​டினர் தற்​காலிக​மாக தங்கி வேலை செய்​வதற்​காக எச்​-1பி விசா வழங்​கப்​படு​கிறது. குறிப்​பாக, தொழில்​நுட்ப நிறு​வனங்​கள் (ஐ.டி.) திறமை​யான வெளி​நாட்டு ஊழியர்​களை பணி​யமர்த்த இந்த விசா பயன்​படு​கிறது. இப்​போது குலுக்​கல் முறை​யில் இந்த விசா வழங்​கப்​படு​கிறது. எச்​-1பி விசா பெறு​பவர்​களில் பெரும்​பாலானவர்​கள் இந்​தி​யர்​கள் ஆவர்.

இந்த சூழ்​நிலை​யில், அமெரிக்க அதிப​ராக ட்ரம்ப் பொறுப்​பேற்ற பிறகு, அமெரிக்​கர்​களின் வேலை வாய்ப்பை பறிப்​ப​தாகக் கூறி எச்​-1பி விசா நடை​முறை​யில் கடும் கட்​டுப்​பாடு​களை விதித்து வரு​கிறார். குறிப்​பாக, விசா கட்​ட​ணத்தை 1 லட்​சம் டால​ராக (ரூ.90 லட்​சம்) சமீபத்​தில் உயர்த்​தி​னார்.

இந்​நிலை​யில் அதிபர் ட்ரம்ப் நிர்​வாகம், நீண்​ட​கால​மாக நடை​முறை​யில் இருந்த எச்​-1பி பணி விசா குலுக்​கல் முறைக்கு பதிலாக புதிய முன்​னுரிமை நடை​முறையைக் கொண்​டுவர உள்​ளது. குறிப்​பாக, விண்​ணப்​ப​தா​ரர்​களின் அதிக திறமை மற்​றும் அதிக ஊதி​யம் பெறும் வெளி​நாட்டு ஊழியர்​களுக்கு முன்​னுரிமை வழங்​கும் புதிய ‘வெ​யிட்​டடு அப்​ரோச்’ முறை நடை​முறைக்கு வரும். இது இந்​தியா உள்​ளிட்ட நாடு​களின் தொடக்க நிலை பணி​யாளர்​கள் அமெரிக்​கா​வில் வேலை விசா பெறு​வதைக் கடின​மாக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

அமெரிக்க உள்​நாட்டு பாது​காப்​புத் துறை​யின் அதி​காரப்​பூர்வ அறி​விப்​பின்​படி, இந்த புதிய நடை​முறை​யானது 2026ஆம் ஆண்டு பிப்​ர​வரி 27 முதல் நடை​முறைக்கு வரு​கிறது. இது 2027ஆம் நிதி​யாண்​டுக்​கான விசா பதிவு காலத்​தில் தொடங்கி ஆண்​டு​தோறும் ஒதுக்​கப்​படும் எச்​-1பி விசாக்​களின் விநி​யோகத்தை முறைப்​படுத்​தும்.

இதுகுறித்து அமெரிக்க குடி​யுரிமை மற்​றும் குடியேற்ற துறை செய்​தித் தொடர்​பாளர் மேத்யூ டிராகேசர் கூறும்​போது, “தற்​போது நடை​முறை​யில் உள்ள எச்​-1பி பதிவு​களுக்​கான தன்​னிச்​சை​யான குலுக்​கல் முறை, அமெரிக்க முதலா​ளி​களால் தவறாக பயன்​படுத்​தப்​பட்​டது.

அமெரிக்​கர்​களுக்கு வழங்க வேண்​டிய ஊதி​யத்தை விட குறை​வான ஊதி​யத்​தில் வெளி​நாட்டு பணி​யாளர்​களை இறக்​குமதி செய்​வதையே முதன்​மை​யான நோக்​க​மாகக் கொண்​டு, இந்த முறையை துஷ்பிரயோகம் செய்​தனர். இதனால்​ இந்​த முறை​யில்​ மாற்​றம்​ கொண்​டு​வரப்​பட உள்​ளது’’ என்​றார்​.

The post எச்-1பி விசா வழங்க புதிய நடைமுறை அமல் : அமெரிக்காவின் முடிவால் இந்தியர்களுக்கு சிக்கல் appeared first on Oruvan.com.