ஊடகவியலாளர்கள் Archives - Oruvan.com

அரசாங்கத்தின் ஊடக தணிக்கைக்கு எதிராக வீதியில் இறங்கும் ஊடகவியலாளர்கள்
நாட்டு மக்களின் அனைத்து அபிலாசைகளையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், ஊடகவியலாளர்களை கொலை செய்த குற்றவாளிகளைப் பின்தொடர்வதற்குப் பதிலாக ஊடகவியலாளர்கள் மீது கூட்டுத் தடையை விதித்தமைக்கு கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.”இன்று வரை, லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்கெனலிகொட, போத்தல ஜெயந்த ஆகியோரைக் கடத்தியது யார்? இந்த மக்களைக் கொன்றது யார்? அவர்களை யார் காணாமல் ஆக்கியது என்பதைக் கண்டுபிடிப்பதில் இந்த அரசாங்கத்திற்கு எந்த ஆர்வமும் இல்லை. ஆனால் இந்த அரசாங்கம் எங்களிடம் அடையாள அட்டைகளைக் கேட்கிறது.”

அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பு நேற்று முன்தினம் (மே 27) நடைபெற்றபோது, ஊடக அமைச்சின் வளாகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் நிர்வாக உறுப்பினரான ஊடகவியலாளர் சாந்த விஜேசூரிய, அரச அடையாள அட்டைகளைக் கொண்ட ஊடகவியலாளர்களுக்கு மாத்திரமே அரசாங்கத்தின் தீர்மானங்களை வெளிப்படுத்துவது என்ற அரசாங்கத்தின் தீர்மானத்தை கண்டித்து, இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

“ஊடகவியலாளர்களுக்கு அரசாங்க ஊடக அடையாள அட்டைகளை கட்டாயமாக்குவதை எதிர்ப்போம், இனிமேல் அரச ஊடகக் கொள்கை மோசடி வேண்டாம்” என்ற தலைப்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு வழிவகுத்த அரசாங்கத்தின் ஊடக தணிக்கை குறித்து, தகவல் திணைக்கள ஊடக அடையாள அட்டைகளை வைத்திருக்கும் எந்த ஊடகவியலாளரும் அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பவில்லை.

ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்ட இந்த போராட்டத்தின் போது, லங்கா ஸ்கை நியூஸ் வலைத்தளத்தின் ஆசிரியர் சாந்த விஜேசூரிய, தகவல் திணைக்களம் தற்போது ஊடக அடையாள அட்டைகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும், ஊடக நிறுவனங்களின் தலைவர்களும் அடையாள அட்டைகளைப் பெறுவதால் தொழில்முறை ஊடகவியலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தினார்.

“இதில் உண்மையான விசேடம் என்னவென்றால், இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் பிற ஊடகங்களில் பணிபுரியும் சக ஊடகவியலாளர்களுக்கு, உண்மையில்,  இப்போது நிறுவனங்களில் உள்ள முதலாளிகளுக்கே ஊடக அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. இப்போது, இந்த முறை, ஊடக அடையாள அட்டைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே, வெளியில் பணிபுரியும் சுயாதீன ஊடகவியலாளர்களுக்கு முன்னர் அடையாள அட்டை வழங்கப்பட்டாலும், இப்போது அடையாள அட்டைகள் வழங்கப்படுவதில்லை, அதில் ஒரு பெரிய சிக்கல் உள்ளது. பின்னர் அவர்கள் தங்கள் வேலையை எப்படிச் செய்வார்கள்?”

லங்கா ஸ்கை நியூஸ் இணையதளத்திள் ஆசிரியர் சாந்த விஜேசூரிய, மே 8, 2025 அன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் பங்கேற்க, அரசாங்க தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டை இல்லை என்ற காரணத்திற்காக, பணிப்பாளர் நாயகம் அனுமதிக்கவில்லை.

“இது எனக்கு ஒரு அச்சுறுத்தல் என்பதை விட, இது இந்த நாட்டின் முழு ஊடகங்களுக்கும் ஜனநாயகத்திற்கும் ஒரு கடுமையான சூழ்நிலை. ஏனென்றால், ஒவ்வொரு அரசாங்கமும் ஆட்சிக்கு வரும்போது செய்யும் முதல் விடயம் ஊடகங்களைத் தொடுவதுதான்.”

அரசாங்க தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டை இல்லாததால் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் பங்கேற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்ட நாட்டின் பிரபல யூடியூபர் லால் பெரேராவும் போராட்டத்தில் இணைந்தார்.

அழைக்கப்பட்டவராக அவர் கலந்து கொண்ட அமைச்சரவை ஊடக சந்திப்புகளில் ‘ஜீரணிக்க முடியாத’ கேள்விகளைக் கேட்ட பின்னர் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக? அவர் கேள்வி எழுப்பினார்.

“இந்த ஊடக சந்திப்பில் நாம் நுழைய முடியாது என்பது இப்போது உங்களுக்குத் தெரியும். ஆனால் நான் வருவதற்கு இருக்கவில்லை, என்னைத்தான் வரச் சொன்னார்கள். நான் நான்கு முறை வந்தேன். நான் வந்து கேள்விகள் கேட்டபோது, அதை ஜீரணிக்க முடியவில்லையா? என எனக்குத் தெரியவில்லை.”

அரசாங்க தகவல் திணைக்களத்தால் ஊடகவியலாளர்களுக்காக வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை எனக் குறிப்பிட்ட ஊடகவியலாளர் சாந்த விஜேசூரிய, அரசாங்கத்தை விட ஊடக அடையாள அட்டையை வழங்கும் அதிகாரம் தனது சங்கத்திற்கு உள்ளது என்பதை வலியுறுத்துகிறார்.

“நாங்கள் இந்த அடையாள அட்டையை நாங்கள் எப்படியும் தயார் இல்லை. நாங்கள் அரசாங்க அடையாள அட்டையை ஏற்க மாட்டோம் என்றே எங்கள் சங்கம் இருந்தது. ஏனென்றால் அரசாங்க தகவல் திணைக்களத்தை விட எங்களுக்கு அதிக உரிமை உள்ளது. எங்கள் சங்கம். இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம், 1978 இல் நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட ஒரு சங்கமாகும். ஆகவே, அடையாள அட்டையை வழங்கும் அதிகாரம் எங்களிடம் உள்ளது.”

மே 8 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவிலாளர் சந்திப்பிற்கு லங்கா ஸ்கை நியூஸ் இணையதள ஆசிரியர் சாந்த விஜேசூரியவை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்திற்குள் நுழைய முற்பட்டபோது, அதன் பணிப்பாளர் நாயகம் அவரை தடுத்த நேரத்தில், சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு மற்றும் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் இணைந்து வழங்கிய ஊடக அடையாள அட்டையையும், அவர் பணிபுரியும் லங்கா ஸ்கை நியூஸ் இணையதளத்தின் அடையாள அட்டையையும் ஊடகவியலாளர் வைத்திருந்ததாக இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பில் காலி முகத்திடலில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மே தின பேரணியில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உரையாற்றும் புகைப்படத்தை வெளியிடுவதை நிறுத்துமாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவு லங்காதீப புகைப்பட ஊடகவியலாளர் லஹிரு ஹர்ஷன மீது அழுத்தம் கொடுத்ததையும் ஊடகவியலாளர் சாந்த விஜேசூரிய மே 27 போராட்டத்தின் போது நினைவு கூர்ந்தார்.

“இந்த அரசாங்கம் மிகவும் ஜனநாயக விரோதப் பயணத்தில் உள்ளது. இந்த ஊடகத்தின் மீது அது கை வைத்துள்ளது. லங்காதீப ஊடகவியலாளர், அனுர குமாரவின் புகைப்படத்தை எடுத்திருப்பதைக் கண்டோம், அவரது ஆசிரியரிடம் பேசி அதை தணிக்கை செய்தனர். அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தினர்.”

அரசாங்கம் ஆட்சிக்கு வந்த உடனேயே, சர்வதேச கவனத்தை ஈர்த்த ஊடகவியலாளர், லசந்த விக்ரமதுங்க, தர்மரத்னம் சிவராம் மற்றும் பிரகீத் எக்னாலிகொட உள்ளிட்டவர்கள் தொடர்பான பல வழக்குகளை மீண்டும் விசாரிப்பதாக கூறியிருந்தாலும், அந்த விடயத்தின் முன்னேற்றம் தொடர்பில் அண்மைக் காலத்தில் வெளிப்படுத்தியதா என்பது தெரியவில்லை.

The post அரசாங்கத்தின் ஊடக தணிக்கைக்கு எதிராக வீதியில் இறங்கும் ஊடகவியலாளர்கள் appeared first on Oruvan.com.