உள்ளூராட்சி மன்றத் தேர்தல் Archives - Oruvan.com

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்புமனுகள் நிராகரிப்பு – நீதிமன்றத்தை நாட முடிவு
தமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடருவோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் தெரிவித்துள்ளனர்.

யாழ் . மாவட்டத்தில் சில சபைகளில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் அந்தக் கட்சியின் சார்பில் ஊடகங்களுக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யாழ் . மாவட்டத்தில் உள்ள இரண்டு சபைகளை தவிர ஏனைய 15 சபைகளுக்குமான வேட்பு மனுக்களை நாம் கையளித்திருந்தோம். அவற்றில் பல சபைகளில் எமது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன

வடக்கு கிழக்கில் எம்மை ஓரம் கட்டி விட்டு ஆளும் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளை மாத்திரம் தேர்தலில் போட்டியிட வைக்கும் செயற்பாட்டை தேர்தல் திணைக்களம் செய்துள்ளதாகவே நாம் சந்தேகிக்கின்றோம்.

இது தொடர்பில் நாம் நீதிமன்றில் வழக்கு தொடர்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

The post ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்புமனுகள் நிராகரிப்பு – நீதிமன்றத்தை நாட முடிவு appeared first on Oruvan.com.

தபால் மூல வாக்கு விண்ணப்பங்களுக்கான இறுதிநாள் இன்று
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று (12) நள்ளிரவு 12.00 மணியுடன் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள், சான்றளிக்கும் அதிகாரிகள் மூலம் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிப் பகுதிக்கான மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

வேட்புமனு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளின் நியமனக் கடிதங்களை மார்ச் 14 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு முன்னர் ஒவ்வொரு உள்ளூராட்சி நிறுவனங்களின் தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், நாளை (13) போயா தினமாக இருந்தாலும், தேர்தல் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களும் திறந்திருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

The post தபால் மூல வாக்கு விண்ணப்பங்களுக்கான இறுதிநாள் இன்று appeared first on Oruvan.com.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி நடத்த முடியும் சபை தலைவரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இந்த சட்ட மூலம் தொடர்பில் எதிர்வரும் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான சட்டமூலத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை என சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

என்றாலும், உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் கடந்த 27ஆம் திகதியே கிடைக்கப்பெற்றுவிட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

The post உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு appeared first on Oruvan.com.