உள்ளூராட்சித் தேர்தல் Archives - Oruvan.com

உள்ளூராட்சித் தேர்தல் – முறைப்பாடுகளின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக தேசிய தேர்தல் ஆணைக்குழுகளில் அளிக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளின்  எண்ணிக்கை 1,000 ஐ தாண்டியுள்ளது.

கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் தேசிய தேர்தல் முறைப்பாடுகள் மையம் மற்றும் மாவட்ட தேர்தல் முறைப்பாடு மையங்களில்  மொத்தம் 1,046 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்றுமுன்தினம் ஏப்ரல் 9 ஆம் திகதி, தேர்தல் சட்டங்களை மீறியதாக 98 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஒவ்வொரு நாளும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவவதாகவும் ஆணைக்குழு கூறியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post உள்ளூராட்சித் தேர்தல் – முறைப்பாடுகளின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது appeared first on Oruvan.com.

உள்ளூராட்சித் தேர்தல் எப்போது? நாளை வெளியாகவுள்ள அறிவிப்பு
உள்ளூராட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தும் கால அவகாசம் இன்று (19) நண்பகல் 12 மணியுடன் முடிவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று 19ஆம் திகதி நண்பகல் வரை கட்டுப்பணத்தை செலுத்தும் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.  எந்த சூழ்நிலையிலும் கால அவகாசம் நீடிக்கப்படாது என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான கால எல்லை நாளை (20) நண்பகல் 12 மணியுடன் முடிவடையும்.

வேட்புமனுக்கள் மார்ச் 17 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வேட்புமனு தாக்கலுக்கான கால எல்லை நாளை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த பின்னர் 12 மணி முதல் 1.30 மணிவரை ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க தேர்தல் ஆணைக்குழு நேரத்தை ஒதுக்கியுள்ளது.

இந்த செயல்முறை முடிந்ததும் உள்ளூராட்சித் தேர்தலுக்கான தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

The post உள்ளூராட்சித் தேர்தல் எப்போது? நாளை வெளியாகவுள்ள அறிவிப்பு appeared first on Oruvan.com.

உள்ளூராட்சித் தேர்தல் ; சு.க கதிரை சின்னத்தில் – ஐ.ம.ச, ஐ.தே.க கூட்டணி இன்னமும் முடிவில்லை
உள்ளூராட்சித் தேர்தலில் கதிரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை (20) நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார்.

சு.கவில் இருந்து பிரிந்துச் சென்ற முன்னாள் தரப்புகளை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையிலான குழு மேற்கொண்டுவந்த போதிலும் அந்தப் பேச்சுகளில் இணக்கப்பாடுகள் எட்டப்படாமையால் இந்த தீர்மானத்தை சு.கவின் மத்திய குழு எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

கடந்த பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் இடாப்பே உள்ளூராட்சித் தேர்தலிலும் பயன்படுத்தப்பட உள்ளது.

தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடுகள் 2025ஆம் நிதியாண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் தேர்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது. இதற்காக உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச்சட்டமும் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாக கட்சிகள் கூட்டணிகளை அமைக்க தீவிர பேச்சுகளில் ஈடுபட்டுள்ளன.

சு.க தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ள போதிலும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன இன்னமும் இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை. இரு கட்சிகளையும் இணைக்கும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி ஆகியன இம்முறை தனித்து தேர்தலை சந்திக்கும் முடிவை அறிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

The post உள்ளூராட்சித் தேர்தல் ; சு.க கதிரை சின்னத்தில் – ஐ.ம.ச, ஐ.தே.க கூட்டணி இன்னமும் முடிவில்லை appeared first on Oruvan.com.

உள்ளூராட்சித் தேர்தல் – விரைவில் சட்டத்திருத்தம்
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான சட்டத்திருத்தங்களை அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

உள்ளராட்சிமன்றத் தேர்தலை கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்த வேட்புமனுக்கள் கோரப்பட்டிருந்த போதிலும் கடந்த அரசாங்கம் தேர்தலை நடத்த உரிய நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டிருக்காமையால் தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியிருந்தது.

என்றாலும், கடந்த ஆகஸ்ட் மாதம் உயர் நீதிமன்றம் உள்ளூராட்சித் தேர்தலை விரைவாக நடத்துமாறு உத்தரவிட்டது. அதன் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் தேர்தலை நடத்த உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியிருந்தது.

என்றாலும், புதிய அரசாங்கம் அமைந்து குறுகிய காலமே ஆகியுள்ளதாலும் 2025ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மார்ச் மாதமே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்பதாலும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், புதிய வேட்புமனுக்களின் கீழ் தேர்தலை நடத்தவும் கட்சித் தலைவர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர். இதனால் எதிர்வரும் ஏப்ரல் மாதம் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதுடன், அதற்கான சட்டத்திருத்தங்களை அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நிறைவேற்றம் உத்தேசித்துள்ளது.

The post உள்ளூராட்சித் தேர்தல் – விரைவில் சட்டத்திருத்தம் appeared first on Oruvan.com.