உலக வங்கி Archives - Oruvan.com

நாட்டின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி
இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் சபை இன்று (20) அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இத்திட்டம் இலங்கையின் டிஜிட்டல் துறையில் புத்தாக்கம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதோடு, அரசாங்க சேவைகளை நவீனமயப்படுத்தவும், மக்கள் மற்றும் வணிகங்கள் அவற்றை இலகுவாகவும் வினைத்திறனாகவும் அணுகுவதற்கும் வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் ஊடாக அரசாங்க சேவைகளை பொதுமக்கள் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய இணையத்தள உருவாக்கம், அரசாங்க நிறுவனங்களுக்கு இடையே தகவல்களைப் பாதுகாப்பாகப் பகிர்ந்துகொள்வதன் மூலம் வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல், டிஜிட்டல் ஆவணங்களை பாதுகாப்பாகச் சேமித்து வைப்பதற்கான வசதி மற்றும் தேவைக்கேற்ப விரிவாக்கக்கூடிய நவீன தரவுத் தளம் போன்ற வசதிகள் உருவாகும்.

இந்த டிஜிட்டல் உட்கட்டமைப்பு முதலீடுகளுடன், பொதுமக்களும் அரச ஊழியர்களும் இந்த புதிய சேவைகளை தன்னம்பிக்கையுடன் பயன்படுத்துவதற்குத் தேவையான பயிற்சித் திட்டங்களும் முன்னெடுக்கப்படும் என உலக வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நாட்டின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி appeared first on Oruvan.com.

உலக வங்கியின் பிரதிநிதிகளை சந்தித்த ஜனாதிபதி
உலக வங்கி குழுமத்தின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் ஜோஹன்னஸ் ஸட் (Johannes Zutt) உள்ளிட்ட உலக வங்கி குழும பிரதிநிதிளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள உலக வங்கி குழுவின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் ஜோஹன்னஸ் ஸட் உள்ளிட்ட உலக வங்கி பிரதிநிதிகள் நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கையின் தற்போதைய பொருளாதாரத் திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்த உலக வங்கி பிரதிநிதிகள், பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்தனர்.

டிஜிட்டல் மயமாக்கல், சுற்றுலா, விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு, வடக்கு மற்றும் கிழக்கின் வளர்ச்சி உள்ளிட்ட குறுகிய காலத்தில் பயனடையக்கூடிய பகுதிகளை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

அரசாங்கத்தால் உலக வங்கிக்கு சமர்ப்பிக்கப்பட்ட திட்டத்திற்கான உதவியை இலங்கை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது என்பதும் தெரியவந்தது.

நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்குத் தேவையான சட்ட கட்டமைப்பைத் தயாரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் அதற்கான அரசாங்கத்தின் கொள்கைத் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இலங்கையின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும் பொருளாதார வளர்ச்சியை அடையவும் அரசாங்கம் பாடுபடுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சர்வதேச அளவில் ஊழல் நிறைந்த நாடாக முத்திரை குத்தப்பட்ட இலங்கை, தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் வெளிப்படையான திட்டத்தின் காரணமாக படிப்படியாக பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் நிலையானதாக மாறி வருவதாகக் கூறியுள்ளார்.

The post உலக வங்கியின் பிரதிநிதிகளை சந்தித்த ஜனாதிபதி appeared first on Oruvan.com.

இலங்கை முன்னேற்றம் அடைந்துள்ளது – உலக வங்கி
நெருக்கடிக்குப் பின்னர் பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post இலங்கை முன்னேற்றம் அடைந்துள்ளது – உலக வங்கி appeared first on Oruvan.com.

உலக வங்கிக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆய்வு
உலக வங்கியின் ஆசிய பிராந்திய பிரதிநிதிகளுக்கும் பிரதமரின் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு.

உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்தின் சுபீட்சத்திற்கான பிராந்திய பணிப்பாளர் வர்கிஸ், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரியை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார தொலைநோக்கு, தற்போது நடைமுறைப்படுத்தப்படும் சீர்திருத்தங்கள் மற்றும் உலக வங்கிக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

கலந்துரையாடலின் போது, உலக வங்கியின் பிரதிநிதிகள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் முன்னேற்றம் குறித்து நன்றி தெரிவித்ததுடன், பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான சாதகமான நடவடிக்கையாக அரசாங்கத்தின் 2025 வரவுசெலவுத் திட்ட உரையை பாராட்டினர்.

பயனுறுதிவாய்ந்த கொள்கை அமுலாக்கத்தின் முக்கியத்துவத்தை தூதுக்குழுவினர் வலியுறுத்தியதுடன், தடைகளின்றி சர்வதேச முகவர் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பை உறுதி செய்வதில் பிரதமர் அலுவலகத்தின் முக்கிய பங்கையும் சுட்டிக்காட்டினர்.

பிரதமரின் செயலாளர் சபுதந்திரி, அரசாங்கத்தின் முன்னுரிமைகள் பற்றி விளக்கியதுடன், 2025 வரவு செலவுத் திட்டம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை, நல்லாட்சி மற்றும் பேண்தகு அபிவிருத்தியை மையமாகக் கொண்டதாகக் குறிப்பிட்டார்.

முதலீட்டை ஊக்குவித்தல், வர்த்தகத்துறைக்கான வசதிகளை வழங்குதல் மற்றும் டிஜிட்டல் மயப்படுத்தல் ஆகியவற்றில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு குறித்தும் அவர் விளக்கினார். ஊழலுக்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டுடன், பாதிக்கப்படக்கூடிய சமூகக் குழுக்கள் எதிர்கொள்ளும் சமூக-பொருளாதார சவால்களை எதிர்கொள்வது முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.

சுகாதாரம், கல்வி மற்றும் சுற்றுலாத் துறைகளில் அபிவிருத்திக்கு விசேட முக்கியத்துவம் அளித்து, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் (SMEs) மற்றும் விவசாயத் துறைக்கான விநியோகங்களை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் செயலாளர் வலியுறுத்தினார்.

கொள்கைத் திட்டமிடலில் பேண்தகுதன்மை மற்றும் சமூகப் பாதுகாப்பை முன்னிறுத்தி, இந்த அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குத் தேவையான சட்டச் சீர்திருத்தங்கள் குறித்தும் கவனம்செலுத்தப்பட்டு வருவதாக பிரதமரின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் டி.ஏ.டி.டி. பிரேமரத்ன மற்றும் உலக வங்கியின் ஆசிய பிராந்திய பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

The post உலக வங்கிக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆய்வு appeared first on Oruvan.com.