உயிரிழப்பு Archives - Oruvan.com

முந்தலம் பகுதியில் கோர விபத்து – மூவர் உயிரிழப்பு
முந்தலம் – நவதன்குளம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

கார் ஒன்றும் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

புத்தளம்-கொழும்பு பிரதான சாலையில் உள்ள நவதன்குளம் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

காரில் பயணித்த இரண்டு பெண்களும், ஆண் ஒருவரும் உயிரிழந்தனர்.

குறித்த விபத்தில் காயமடைந்த மேலும் 10 பேர் சிகிச்சைகளுக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post முந்தலம் பகுதியில் கோர விபத்து – மூவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

முல்லைத்தீவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டுப் பகுதியில் இன்று மாலை 7 மணி அளவில் இடம்பெற்ற விபத்தில் வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியை குறுக்கறுத்து செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மீது வீதியால் பயணித்த மற்றுமொரு வாகனம் ஏறிச் சென்றதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

புது குடியிருப்பு ஒன்பதாம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சந்திரமோகன் சானுசன் என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மற்றய நபர் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

The post முல்லைத்தீவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

வவுனியா ஓமந்தையில் கோரவிபத்து! பெண் உட்பட இருவர் பலி பலரது நிலை கவலைக்கிடம்
வவுனியா ஓமந்தை ஏ9 வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தமையுடன் 13பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இலகுரக வாகனம் வவுனியா ஓமந்தை மாணிக்கர் வளவுப்பகுதியில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டுவிபத்திற்குள்ளாகியது.

விபத்தின் போது குறித்த வாகனத்தில் பெண்கள் சிறுவர்கள் உட்பட 15ற்கும் மேற்ப்பட்டோர் பயணித்துள்ளனர். விபத்தினால் வாகனத்தில் இருந்த அனைவரும் வீதியில் தூக்கிவீசப்பட்ட நிலையில் படுகாயமடைந்திருந்தனர்.

மேலும் இலகுரக வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகிய பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கனரக வாகனம் குறித்த பட்டா ரக வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.

இதன்போது வீதியால் பயணித்த பொதுமக்களின் உதவியுடன் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண் உட்பட இருவர் உயிரிழந்தமையுடன் 13பேர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெண்கள் , சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர் உயிரிழந்தவர்கள் முல்லைத்தீவு விசுவமடு பகுதியை சேர்ந்த யாழினி வயது33, சுயன் வயது 30 என்று தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த அனைவரும் ஒரே குடும்பங்களை சேர்ந்த உறவினர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் கண்டியில் இடம்பெற்ற மரணவீடு ஒன்றிற்கு சென்று விட்டு மீண்டும் விசுவமடு நோக்கிப்பயணித்துக்கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை படுகாயமடைந்த சிறுவன் ஒருவன் உட்பட மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்து தொடர்பாக வவுனியா ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

The post வவுனியா ஓமந்தையில் கோரவிபத்து! பெண் உட்பட இருவர் பலி பலரது நிலை கவலைக்கிடம் appeared first on Oruvan.com.

யாழ் தென்மராட்சி எழுதுமட்டுவாள் விபத்து – குடும்பப் பெண் உயிரிழப்பு
யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பிரதேசத்தில் இன்று விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் ஏ9 வீதியில் எழுதுமட்டுவாள்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதுண்டே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்து பயணித்துக்கொண்டிருந்த போது எழுதுமட்டுவாள் பகுதியில் உள் வீதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஏ9 வீதியில் செல்ல முற்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்துச் சம்பவத்தில் எழுதுமட்டுவாள் தெற்கு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.  விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post யாழ் தென்மராட்சி எழுதுமட்டுவாள் விபத்து – குடும்பப் பெண் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

கொழும்பில் துப்பாக்கிச் சூடு – இரண்டாவது நபரும் உயிரிழப்பு (Update)
கல்கிஸ்ஸ வட்டாரபால வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டாவது நபரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 வயதுடைய ஒருவர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு, கல்கிஸ்ஸ வட்டாரபால வீதி பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் கல்கிஸ்ஸ வட்டாரபால வீதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் எனவும், காயமடைந்தவர் 20 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post கொழும்பில் துப்பாக்கிச் சூடு – இரண்டாவது நபரும் உயிரிழப்பு (Update) appeared first on Oruvan.com.

வவுனியா விபத்தில் இளைஞர் பலி!
வவுனியா கோவில்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நேற்றயதினம் இரவு குறித்த இளைஞர் மற்றொரு இளைஞருடன் மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளார்.

கோவில்குளம் பகுதியில் சென்ற மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் கரையில் இருந்த மின்சாரகம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் மோட்டார்சைக்கிளை ஓட்டிச்சென்ற இளைஞர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்தார், மற்றயவர் காயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் யாழ் அராலிபகுதியை சேர்ந்த ப.சஞ்சயன் என்ற 22 வயதான இளைஞரே மரணமடைந்தார். விபத்து தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post வவுனியா விபத்தில் இளைஞர் பலி! appeared first on Oruvan.com.

இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள சாலை விபத்துகள் – இந்த ஆண்டு இதுவரை 2243 பேர் பலி
இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 13ஆம் திகதி வரை சாலை விபத்துகளில் 2,243 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில், பல பகுதிகளில் நடந்த சாலை விபத்துகளில் இரண்டு இளைஞர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ள பின்னணியில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 13ஆம் திகதி வரை, 22,967 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன, அதில் 2,141 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

அதாவது மொத்த வாகன விபத்துக்களில் ஒன்பது வீதமானவை மரண விபத்துகளாக பதிவாகியுள்ளன. அவற்றில் 6500 விபத்துக்கள் கடுமையான விபத்துக்கள்.

இதே காலகட்டத்தில் பதிவான சிறு விபத்துகளின் எண்ணிக்கை 9127 ஆகும். அதன்படி, ஏறத்தாழ 60 சதவீத விபத்துக்கள் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தியது.

இதேவேளை நேற்று (21) இடம்பெற்ற வீதி விபத்துக்களில் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளதுடன் 62 பேர் காயமடைந்துள்ளனர். ஹட்டனில் இருந்து கண்டி நோக்கிய பயணித்த பேருந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.

இதில் மூவர் கொல்லப்பட்டனர். 45க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பத்தேகம மற்றும் பின்னதுவ நுழைவாயில்களுக்கு இடையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கெப்பத்திக்கொல்லாவ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

கடுகண்ணாவ பகுதியில் வான் ஒன்றும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் காயமடைந்துள்ளதுடன், பேருந்து ஒன்று மரத்தில் மோதியதில் 10 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள சாலை விபத்துகள் – இந்த ஆண்டு இதுவரை 2243 பேர் பலி appeared first on Oruvan.com.

மீகொட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு
மீகொட, நாகஹவத்த பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காரில் பயணித்த நபர் ஒருவர் இனந்தெரியாத இருவரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சகோதரரின் வீட்டில் இருந்து மீகொட நாகஹவத்த பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இனந்தெரியாத நபர் ஒருவர் காரை நிறுத்தியதாகவும், மேலும் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நபர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன், துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற போது உயிரிழந்தவரின் ஒன்றரை வயதுடைய மகளும் மனைவியும் காரில் இருந்துள்ளனர்.

உயிரிழந்த நபர் பத்தரமுல்லை செத்சிரிபாயவில் உள்ள சம்ருதி மானிய அலுவலகத்தில் அலுவலக உதவி அதிகாரியாக பணியாற்றியவர்.

இந்த சம்பவம் தொடர்பில் நுகேகொட குற்றப்பிரிவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதுடன், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post மீகொட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.