இஸ்ரேல்- ஹமாஸ் Archives - Oruvan.com

இஸ்ரேலை சென்றடைந்தார் டொனால்ட் டிரம்ப்
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் திங்கட்கிழமை (ஒக்டோபர் 13) ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை வந்தடைந்துள்ளார்.

இஸ்ரேலின் பென் குரின் விமான நிலையத்திற்கு வந்த டொனால்டு டிரம்ப்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் சென்று வரவேற்றார்.

ஹமாஸ் ஏழு இஸ்ரேலிய பணயக்கைதிகளின் முதல் தொகுதியை விடுவித்துள்ளது. இதைத் தொடர்ந்து விரைவில் பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்.

காசா சமாதான உச்சிமாநாட்டிற்காக எகிப்துக்குச் செல்வதற்கு முன்பு, பணயக்கைதிகளின் குடும்பத்தினரை டிரம்ப் சந்தித்து இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இஸ்ரேல், ஹமாஸ் இடையே தற்காலிக போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. ஹமாஸ் தங்கள் வசம் உள்ள 20 இஸ்ரேலிய பணய கைதிகளை இன்று விடுதலை செய்கிறது.

முதற்கட்டமாக ஏழு பணய கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 13 பணய கைதிகள் இன்னும் சற்று நேரத்தில் விடுதலை செய்யப்பட்ட உள்ளனர்.

மேலும், ஹமாஸ் ஆயுதக்குழுவால் கொல்லப்பட்ட மேலும் 28 இஸ்ரேலிய பணய கைதிகளின் உடல்களும் இன்று ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இஸ்ரேலை சென்றடைந்தார் டொனால்ட் டிரம்ப் appeared first on Oruvan.com.

போரை நிறுத்த இஸ்ரேல்-ஹமாஸ் இணக்கம்!! டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரை நிறுத்த இணக்கம் வெளியிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் அமைதிக்கான முதல் கட்ட திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக டிரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“ஒப்பந்தத்தின்படி அனைத்துப் பிணைக் கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்.

அதேபோல் இஸ்ரேல் தனது படையைக் காஸாவிலிருந்து மீட்டுக்கொள்ளும். அமைதிக்கான முதல் அடியை வலிமையாக எடுத்து வைத்துள்ளோம்,” என்று டிரம்ப் சுட்டிக்காட்டியள்ளார்.

“அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள். இஸ்ரேல், அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளுக்கு இது ஒரு சிறப்பான நாள். அமைதிப் பேச்சுக்குத் துணையாக இருந்த கத்தார், எகிப்து, துருக்கிக்கு நன்றி,” என்று டிரம்ப் கூறியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நீடித்துள்ள நிலையில், அமைதிக்காக 20 அம்சத் திட்டத்தை கடந்த வாரம் டிரம்ப் வெளியிட்டார்.

இதை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டிருந்தனர். இந்த இருதரப்பினருக்கும் இடையிலான போர் அண்டைய நாடுகளுக்கும் பரவிய நிலையில் உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கத்தார், எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளின் பங்களிப்புடன் அமைதிப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கடந்த சில நாள்களாக எகிப்தில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினர்களுக்கு இடையே மறைமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்தப் பின்னணியிலேயே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமைதி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதாக ஹமாஸ் தரப்பும் உறுதி செய்துள்ளது.

எனினும், இஸ்ரேல் தனது படையைக் காஸாவிலிருந்து முழுமையாக மீட்டுக்கொள்வதை அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் உறுதி செய்ய வேண்டும் என ஹமாஸ் தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

2023ஆம் ஆண்டு ஒக்டோபர் ஏழாம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதில் 1200 பேர் உயிரிழந்ததுடன், 251 பேர் பணையக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக காஸாமீது இஸ்ரேல் போர் தொடுத்தது. அதில் 67,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post போரை நிறுத்த இஸ்ரேல்-ஹமாஸ் இணக்கம்!! டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு appeared first on Oruvan.com.

அமெரிக்காவுடன் கலந்தாலோசித்து இஸ்ரேல் படுகொலை – காசாவில் பலி எண்ணிக்கை 244 ஆக உயர்வு
அமெரிக்காவுடன் கலந்தாலோசித்த பின்னர், ஹமாஸுடனான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை ஒரு முடிவை எட்டாததை அடுத்து, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் கடும் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஃபாக்ஸ் நியூஸிடம் இதனை தெரிவித்துள்ளார்.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து டிரம்ப் நிர்வாகம் மற்றும் வெள்ளை மாளிகையுடன் ஆலோசனை நடத்தியதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார்.

ஜனாதிபதி டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளபடி, ஹமாஸ், ஹவுத்திகள், ஈரான் இஸ்ரேலை மட்டுமல்ல, அமெரிக்காவையும் மிரட்ட முயற்சித்துள்ளதாகவும் அதற்கான விலையைக் கொடுக்க நேரிடும் எனவும் லீவிட் குறிப்பிட்டுள்ளார்.

ஹமாஸ் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும் அல்லது காசா நரகமாக மாறும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்பு கூறியிருந்தார்.

ஜனவரி 19 அன்று இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதிலிருந்து, இன்று காலை, இஸ்ரேல் காசா மீது அதன் மிகவும் தீவிரமான தொடர் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது.

ஜபாலியா, காசா நகரம், நுசைரத், டெய்ர் அல்-பலா மற்றும் கான் யூனிஸ் உள்ளிட்ட காசா பகுதியில் வடக்கிலிருந்து தெற்கு வரை பல்வேறு பகுதிகளை குறிவைத்து தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 244 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரமழான் மாதத்தில் இஸ்ரேலின் கொடூரமான தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் பல பெண்களும் குழந்தைகளும் அடங்குவர்.

இந்த தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

காசா மக்களுக்கு எதிரான சியோனிச அழிப்புப் போரை மீண்டும் தொடங்குவதை எதிர்க்குமாறு அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் மக்களையும், உலகின் சுதந்திர மக்களையும் ஹமாஸ் கேட்டுக் கொண்டது.

மீண்டும் போருக்குத் திரும்பும் நெதன்யாகுவின் முடிவு, போர்க் கைதிகளைப் பலியிட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் முடிவாகும். பேச்சுவார்த்தை மூலம் அடைய முடியாததை, எதிரி போர் மற்றும் அழிவு மூலம் அடைய முடியாது என்றும் ஹமாஸ் கூறியது.

The post அமெரிக்காவுடன் கலந்தாலோசித்து இஸ்ரேல் படுகொலை – காசாவில் பலி எண்ணிக்கை 244 ஆக உயர்வு appeared first on Oruvan.com.

இறுதி கட்டத்தில் இஸ்ரேல்- ஹமாஸ் பேச்சுவார்த்தை
இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் போர் நிறுத்தம் ஏற்படும் எனவும், ஹமாஸ் 33 பிணைக்கைதிகளை விடுதலை செய்ய தயாராக இருப்பதாகவும், அமெரிக்க செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில், டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர், ‘நான் ஜனாதிபதியாக பதவியேற்ற 24 மணிநேரத்தில் உக்ரைன், ரஷ்யா இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்’ என சபதம் எடுத்தார்.

தற்போது, அவர் வரும் ஜனவரி 20ம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். அனைத்து ஏற்பாடுகளும் பிரம்மாண்டமாக செய்யப்பட்டு வருகிறது. இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளார்.

இதற்கிடையே, நான் பதவியேற்று 2 வாரங்களுக்குள் பிணைக்கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் செய்யப்படாவிட்டால், மத்திய கிழக்கில் மோதல் வெடிக்கும்’ என ஹமாஸ் படையினருக்கு அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ள டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், விரைவில் இஸ்ரேல்- காசா இடையில் போர் நிறுத்தம் ஏற்படும் எனவும், ஹமாஸ் 33 பிணைக்கைதிகளை விடுதலை செய்ய தயாராக இருப்பதாகவும், அமெரிக்க செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் திகதி நடத்திய தாக்குதலில் பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டவர்களில் இன்னும் 94 பேர் ஹமாஸ் மற்றும் அதன் கூட்டாளிகள் வசம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post இறுதி கட்டத்தில் இஸ்ரேல்- ஹமாஸ் பேச்சுவார்த்தை appeared first on Oruvan.com.