இலங்கை மத்திய வங்கி Archives - Oruvan.com

ஓர் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக 310 ரூபாவை தொட்ட டொலரின் பெறுமதி
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளுக்கு அமைய, இன்று (07) அமெரிக்க டொலருக்கு நிகரான உடன் செலாவணி வீதத்தின் நடுவீதம் ரூ. 310.02 ஆகப் பதிவாகியுள்ளது.

2024 பெப்ரவரி 29 ஆம் திகதிக்குப் பின்னர் டொலரின் சராசரிப் பெறுமதி இவ்வாறு 310 ரூபாய் என்ற எல்லையைக் கடந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதேவேளை, இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாளாந்த நாணய மாற்று வீத அட்டவணையின் படி, இன்று (07) ஒரு அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ. 306.28 ஆகவும், விற்பனை விலை ரூ. 313.81 ஆகவும் பதிவாகியுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டில் இலங்கை ரூபா, அமெரிக்க டொலருக்கு எதிராக 5.6 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்ததாக இலங்கை மத்திய வங்கி முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post ஓர் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக 310 ரூபாவை  தொட்ட டொலரின் பெறுமதி appeared first on Oruvan.com.

கிரிப்டோகரன்சி குறித்து மத்திய வங்கி எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
‘கிரிப்டோகரன்சி’யை எவ்வாறு தொடரலாம் என்பது குறித்த கொள்கை முடிவுகளை எடுக்க உயர்மட்டக் குழுவை நியமிக்குமாறு இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திற்கு முன்மொழிந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய வங்கி ஏற்கனவே நிதி அமைச்சகத்திற்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது. அரசாங்கமும் இதற்கு ஒப்புக்கொண்டதாக நிதி அமைச்சக வட்டாரங்கள் ‘தி ஐலண்ட்’ பத்திரிகைக்கு செய்தி வெளியிட்டுள்ளன.

கிரிப்டோகரன்சிகளை இலங்கை எவ்வாறு தொடரும் என்பது குறித்த கொள்கை முடிவுகளை எடுப்பதற்கான பரிந்துரைகளைப் பெறுவதே முன்மொழியப்பட்ட குழுவின் நோக்கமாகும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்க அமைச்சர்கள் சமர்ப்பித்த சொத்து அறிவிப்புகளிலும் கிரிப்டோகரன்சிகளில் முதலீடுகள் குறிப்பிடப்படுவதால், சமீபத்திய நாட்களில் ‘கிரிப்டோகரன்சி’ குறித்த பேச்சுக்கள் அதிகரித்துள்ளது.

சமீபத்தில் மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இது தொடர்பாக தற்போது எந்த சட்டமும் இல்லை என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post கிரிப்டோகரன்சி குறித்து மத்திய வங்கி எடுத்துள்ள முக்கிய தீர்மானம் appeared first on Oruvan.com.

2025ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 4.5% வளர்ச்சியை அடையும் – மத்திய வங்கி கணிப்பு
அமெரிக்க வரிகளால் இலங்கையின் பொருளாதாரம் பாதிப்பதற்கான சில அபாயங்கள் இருந்தபோதிலும், இந்த ஆண்டு 4.5% இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட பணவியல் கொள்கை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான உலக வங்கியின் 3.5 வீத வளர்ச்சிக் கணிப்பைவிட மத்திய வங்கியின் கணிப்பு அதிகமாக உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) $2.9 பில்லியன் கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் அடிப்படையில், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024 இல் 5% வளர்ச்சியடைந்தது, கடுமையான நிதி நெருக்கடியிலிருந்து வலுவான நிலையை நோக்கி நாடு நகர்வதாக இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது.

மத்திய வங்கியின் அறிக்கையில் எதிர்காலத்திற்கான சில அபாயங்கள் குறித்து விளக்கப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை இரண்டாவது பெரிய அந்நியச் செலாவணியை ஈட்டும் துறையாக ஆடை உற்பத்தித் துறை உள்ளது.  இந்தத் துறை அதன் உற்பத்தியில் 40% ஐ அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதுடன், கடந்த ஆண்டு 4.8 பில்லியன் டொலர் வருமானத்தையும் ஈட்டியது. இத்துறையில் சுமார் 300,000 பேர் பணிப்புரிந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள்.

அமெரிக்காவின் வரி விதிப்பை ஓரளவு சாதகமாக்கி கொண்டுள்ளமையின் ஊடாக இலங்கை அதன் பாதையில் பயணிப்பதற்கான கடுமையான தடை நீங்கியுள்ளதாகவும் மத்திய கூறியுள்ளது.

The post 2025ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 4.5% வளர்ச்சியை அடையும் – மத்திய வங்கி கணிப்பு appeared first on Oruvan.com.

பதவி விலகும் திட்டமெதுவும் இல்லை – மத்திய வங்கி ஆளுநர்
மத்திய வங்கி ஆளுநர் பதவியில் இருந்து விலகும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், தான் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக பரவும் தகவல் தவறானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன ஓய்வு பெறுவதோடு மத்திய வங்கியின் ஆளுநரும் பதவி விலகுவார் என்ற செய்திக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

நிதி மற்றும் திறைசேரி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன, இந்த மாத இறுதியில் அந்தப் பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளார், மேலும் அவர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, ஆசிய அபிவிருத்தி வங்கியின் மாற்று நிர்வாக இயக்குநர் பதவியை ஏற்க உள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியில் இலங்கை உள்ளிட்ட நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்த மகிந்த சிறிவர்தன திட்டமிடப்பட்டுள்ளார்.

அதே நேரத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் மாற்று நிர்வாக இயக்குநராக, அந்த வங்கியின் இயக்குநர்கள் குழுவில் சில நாடுகளின் பிரதிநிதியாக அவர் நியமிக்கப்பட உள்ளார்.

The post பதவி விலகும் திட்டமெதுவும் இல்லை – மத்திய வங்கி ஆளுநர் appeared first on Oruvan.com.