இலங்கை கடற்படை Archives - Oruvan.com

இலங்கை கடற்படையினரைக் கண்டித்து காரைக்காலில் மீனவர்கள் போராட்டம்
இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் மீனவர்களினால் நேற்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அப்பகுதியில் கடையடைப்புப் போராட்டமொன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையிர் கடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால், கிளிஞ்சல் மேடு பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காரைக்கால் மீனவர்கள் பாரிய போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.இலங்கை கடற்படையினரின் செயற்பாடுகள், மற்றும் தமிழ்நாட்டு மீனவர்களை காக்க தவறிய இந்திய மத்திய அரசாங்கமான பா.ஜ.க. அரசாங்கத்தை கண்டித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட 11 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்களினால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு ஆதரவினை வழங்கும்பொறுட்டு, அப்பகுதியில் கடையடைப்புப் போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களும் அவர்களது குடும்பத்தினரும், காரைக்கால் ரயில் நிலையத்தில் வேளாங்கண்ணிக்கு செல்லும் ரயில் முன்பு தண்டவாளத்தில் படுத்து போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது

The post இலங்கை கடற்படையினரைக் கண்டித்து காரைக்காலில் மீனவர்கள் போராட்டம் appeared first on Oruvan.com.

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்த 17 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 17 இந்திய மீனவர்களை இன்று செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை கைது செய்த கடற்படையினர், குறித்த மீனவர்களையும் படகுகளையும் தலைமன்னார் கடற்படையிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 17 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உற்படுத்தி வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர்.

இதேவேளை மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் தங்கச்சி மடம் கிராமத்தில் இந்த ஆண்டு நத்தார் பண்டிகை கருப்பு நத்தாராக மாறி விட்டதாக சோகத்துடன் கூறும் மீனவர்களின் உறவினர்கள், மீனவர்களை உடனடியாக விடுதலை செய்து தாயகம் அழைத்து வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று (23) திங்கட்கிழமை 400க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப் படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

மீனவர்கள் இரவு சுமார் 12:30 மணி அளவில் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பூண்டி ராஜ் மற்றும் ஆரோன் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசை படகையும் அதிலிருந்து 17 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட 17 மீனவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களான எட்டுப் பேர் உள்ளடங்குகின்றனர். இதனால் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் வீட்டில் குழந்தைகளுக்கு புத்தாடை வாங்கவும், நத்தார் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக நேற்று (23) மாலை மூன்று மணிக்கு மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களை இரவு 12 மணிக்கு இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

இதனால் நாளை நத்தார் பண்டிகை எங்களுக்கு கருப்பு நத்தாராக மாறிவிட்டதாகவும் உடனடியாக மீனவர்களை விடுதலை செய்து தாயகம் அனுப்பி வைக்குமாறு சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

குறித்த மீனவர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்

The post இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்த 17 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது appeared first on Oruvan.com.

போர் பயிற்சியில் ஈடுபட இந்திய சென்ற இலங்கை கடற்படை குழு
இலங்கை கடற்படை மற்றும் இந்திய கடற்படைக்கு இடையிலான இருதரப்பு ‘SLINEX – 2024’ கடற்படை பயிற்சி எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.

இந்த பயிற்சியில் பங்கேற்கும் இலங்கை கடற்படை கப்பல் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் இருந்து இந்தியாவை நோக்கி புறப்பட்டு சென்றது.

இந்திய மற்றும் இலங்கை கடற்படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் இந்திய-இலங்கை கடற்படை பயிற்சி நடத்தப்படுகிறது.

இதன்படி, SLINEX – 2024 இருதரப்பு கடற்படைப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இம்முறை கடற்படையின் குழுவொன்று இந்தியா சென்றுள்ளதாக கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

The post போர் பயிற்சியில் ஈடுபட இந்திய சென்ற இலங்கை கடற்படை குழு appeared first on Oruvan.com.