இலங்கை அணி Archives - Oruvan.com

ஓமான் அணியை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி
கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இடம்பெற்ற டி20 உலகக் கிண்ணத் தொடரின் 16-வது லீக் போட்டியில் ஓமான் அணியை 105 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது.

இன்றைய போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமான் அணி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக்க அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 19 பந்துகளில் அரைசதம் கடந்து சாதனை படைத்தார். இது டி20 சர்வதேசப் போட்டிகளில் இலங்கை வீரர் ஒருவரால் பெறப்பட்ட அதிவேக அரைசதமாகும்.

ஆரம்ப விக்கெட்டுகள் விரைவில் வீழ்த்தப்பட்ட போதிலும், குசல் மெந்திஸ் மற்றும் பவன் ரத்நாயக்க ஆகியோர் பொறுப்புடன் ஆடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். குசல் மெந்திஸ் 61 ஓட்டங்களையும், பவன் ரத்நாயக்க 60 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

அதன்படி, 226 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 120 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் மொஹமட் நதீம் ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் துஷ்மந்த சமீர மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

The post ஓமான் அணியை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி appeared first on Oruvan.com.

தமிழ் கால்பந்தாட்ட வீரர்களால் துர்க்மேனிஸ்தானை முதல் தடவையாக வீழ்த்தி சரித்திரம் படைத்தது இலங்கை
கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் வியாழக்கிழமை (09) நடைபெற்ற ஏஎவ்சி ஆசிய கிண்ணம் சவூதி அரேபியா 2027க்கான மூன்றாம் சுற்று தகுதிகான் முதலாம் கட்டப் போட்டியில் துர்க்மேனிஸ்தானை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிகொண்டு சரித்திரம் படைத்தது.

சர்வதேச கால்பந்தாட்டப் போட்டி ஒன்றில் துர்க்மேனிஸ்தானை இலங்கை வெற்றிகொண்டது இதுவே முதல் தடவையாகும். அத்துடன் மத்திய ஆசிய நாடு ஒன்றை இலங்கை வெற்றிகொண்டதும் இதுவே முதல் தடவையாகும்.

இதற்கு முன்னர் விளையாடப்பட்ட இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஆறு போட்டிகளில் ஐந்தில் துர்க்மேனிஸ்தான் வெற்றிபெற்றிருந்ததுடன் ஒரு போட்டி (2004) வெற்றிதோல்வியின்றி முடிவடைந்திருந்தது.

இதன் காரணமாக இன்றைய போட்டியில் இலங்கை சாதிக்குமா என்ற கேள்வி இயல்பாகவே இருந்துவந்தது.

ஆனால், இன்றைய போட்டியில் மிக அற்புதமாக விளையாடிய இலங்கை அணி, 57ஆவது நிமிடத்தில் மணிமெல்துர லியோன் பெரேரா அடித்த கோல் மூலம் வெற்றியீட்டியது.

அந்த சந்தர்ப்பத்தில் ஆதவன் ராஜமோகன் மிக அருகில் இருந்து பரிமாறிய பந்தை பெனல்டி எல்லைக்குள் இருந்தவாறு லியோன் பெரேரா பலமாக உதைத்து துர்க்மேனிஸ்தான் கோல்காப்பாளர் சரியெவ் ரசூலை திக்குமுக்காடவைத்தார்.

எவ்வாறாயினும் இந்த வெற்றியில் மிகப் பெரிய பங்காற்றியவர் யாழ். தந்தைக்கு பிறந்து ஜேர்மனியில் கழகமட்ட கால்பந்தாட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜேசன் தயாபரன் ஆவார்.

துர்க்மேனிஸ்தான் வீரர்கள் இரண்டு சந்தர்பங்களில் (58ஆவது மற்றும் 89ஆவது நிமிடங்களில்) கோல் போட எடுத்த முயற்சிகளை கோல் வாயிலில் வைத்து மிக அற்புதமாக ஜேசன் தயாபாரன் தடுத்து இலங்கையைக் காப்பாற்றி வெற்றி அடையச் செய்தார்.

இதனிடையே இலங்கை அணித் தலைவரும் கோல்காப்பாளருமான சுஜான் பெரேராவும் ஒரு கோலை தடுத்து நிறுத்தினார். மற்றொரு சந்தர்ப்பத்தில் துர்க்மேனிஸ்தானின் முயற்சி ஒன்று கோல்காப்பின் குறுக்கு கம்பத்தில் பட்டு திசை திரும்பியது.

போட்டி முடிவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, இரண்டு நிச்சயமான கோல்களைத் தடுத்து நிறுத்தி இலங்கையைக் காப்பாற்றி வெற்றி அடையச் செய்ததைப் பற்றி என்ன கூறவிரும்புகிறீர்கள் என 23ஆம் இலக்க பின்கள வீரர் ஜேசன் தயாபரனிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோது,

‘இரண்டு கோல்களைத் தடுத்தது குறித்து நான் பெருமை படுகிறேன். ஆனால், இலங்கை அணியின் வெற்றியை அதனை விட பெருமையாக கருதுகிறேன். இந்த வெற்றிக்கு எனது தனிப்பட்ட ஆற்றல்கள் காரணம் என்பதை ஒப்புக்கொள்ளமாட்டேன்.

இந்த வெற்றி முழு அணியினதும் கூட்டு முயற்சியாகும். போட்டியில் விளையாடிய வீரர்கள், ஆசனங்களில் அமர்ந்திருந்த மாற்று வீரர்கள், பயிற்றுநர் மற்றும் உதவியாளர்கள் அனைவரும் இந்த வெற்றியில் பங்காற்றியிருந்தார்கள் என்றே நான் கூறுவேன்.

‘இலங்கையின் இந்த சரித்திரம் வாய்ந்த வெற்றியை எனது மனைவிக்கும் மகனுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன். அவர்கள் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு வருகை தருவார்கள்’ என பதிலளித்தார்.

இதேவேளை, துர்க்மேனிஸ்தானுடனான இந்த வெற்றி முழு இலங்கைக்கும் கிடைத்த வெற்றி என பெருமிதத்துடன் தெரிவித்த பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தெய்ரி, இரண்டாம் கட்டப் போட்டி இலகுவாக அமையாது என்றார்.

‘நாளைய தினம் இலங்கை வீரர்கள் நன்கு ஒய்வு எடுத்து தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்வார்கள். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கட்டப் போட்டியில் துர்க்மேனிஸ்தானை எதிர்த்தாடுவதற்காக பயணிக்கவுள்ளோம்.

இந்தப் பயணம் 23 மணிநேரம் நீடிக்கும். எமது பயணத்தில் இடைவழி விமான நிலையத்தில் (Transit) தங்கும் நேரம் சுமார் 8 மணித்தியாலங்களாகும். அங்குதான் எமது வீரர்கள் நன்றாக ஓய்வு எடுக்கவேண்டியுள்ளது.

அதன் பின்னர் துர்க்மேனிஸ்தான் சென்றடைந்ததும் இரண்டாம் கட்டப் போட்டிக்கான பயிற்சிகளில் ஈடுபடுவோம். துர்க்மேனிஸ்தானை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது இலகுவல்ல.

ஆனால், சிறந்த வியூகங்களை அமைத்து வெற்றிபெற முயற்சிப்போம்’ என்றார் அப்தூல்லா அல்முத்தெய்ரி.

இது இவ்வாறிருக்க, இலங்கையிடம் அடைந்த தோல்வி அதிர்ச்சி தருவதாகத் தெரிவித்த துர்க்மேனிஸ்தான் பயிற்றுநர் ரோவ்ஷென் மெர்டோல், எமது தோல்விக்கான குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்து கொண்டு இரண்டாம் கட்டப் போட்டியில் வெற்றிபெற முயற்சிப்போம்’ என்றார்.

இன்றைய போட்டியில் ஆட்டநாயகனாக இரண்டு கோல்களைத் தடுத்து நிறுத்திய இலங்கையின் பின்கள் வீரர் ஜேசன் தயாபரன் தெரிவானார்.

The post தமிழ் கால்பந்தாட்ட வீரர்களால் துர்க்மேனிஸ்தானை முதல் தடவையாக வீழ்த்தி சரித்திரம் படைத்தது இலங்கை appeared first on Oruvan.com.

ஆசிய கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் இன்று (28) மாலை அறிவிக்கப்பட்டுள்ளது.

சரித் அசலங்க தலைமையிலான 16 பேர் கொண்ட குழாமை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

இம்முறை ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இலங்கை அணி தனது முதல் போட்டியில் பங்களாதேஷூடன் செப்டம்பர் 13ஆம் திகதி விளையாடவுள்ளது.

இலங்கை குழாம் விபரம்

1. சரித் அசலங்க (தலைவர்),

2. பெதும் நிஸ்ஸங்க,

3. குசல் மெந்திஸ்,

4. குசல் பெரேரா,

5. நுவனிது பெர்னாண்டோ,

6. கமிந்து மெந்திஸ்,

7. கமில் மிஷார,

8. தசுன் ஷானக,

9. வனிந்து ஹசரங்க,

10.துனித் வெல்லாலகே,

11.சாமிக கருணாரத்ன,

12. மஹிஷ் தீக்ஷன,

13. துஷ்மந்த சமீர,

14. பினுர பெர்னாண்டோ,

15. நுவான் துஷார,

16. மதீஷ பத்திரன

The post ஆசிய கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு appeared first on Oruvan.com.

இலங்கை அணி செப்டெம்பரில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம்
இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தலா மூன்று டி20 மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டியில் ஆடுவதற்காகவே இலங்கை அணி செப்டெம்பர் மாத நடுப்பகுதியில் இங்கிலாந்து செல்லவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று டி20 போட்டிகளும் செப்டெம்பர் 15, 17 மற்றும் 19 ஆம் திகதிகளில் முறையே சௌதம்டன், காடிப் மற்றும் மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து இரு அணிகளும் மோதும் மூன்று ஒருநாள் போட்டிகளும் செப்டெம்பர் 22, 24 மற்றும் 27 ஆம் திகதிகளில் முறையே டர்ஹம், லீட்ஸ் மற்றும் லண்டனில் நடைபெறவுள்ளது.

The post இலங்கை அணி செப்டெம்பரில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் appeared first on Oruvan.com.

இலங்கை அணி முதல் இன்னிங்ஸ்ஸில் 485 ஓட்டங்கள்
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளிக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தற்சமயம் காலி மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.

போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 485 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் பெத்தும் நிசங்க அதிகபடியாக 187 ஓட்டங்களையும், கமிந்து மென்டிஸ் 87 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் பங்காளாதேஷ் அணி சார்பில் நயீம் ஹசன் 05 விக்கெட்டுக்களையும், ஹசன் மஹ்மூத் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

முன்னதாக பங்காளாதேஷ் அணி தமது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 495 ஓட்டங்களை பெற்றது.

இதன்படி 10 ஓட்டங்கள் முன்னிலையில் பங்காளாதேஷ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடவுள்ளது.

The post இலங்கை அணி முதல் இன்னிங்ஸ்ஸில் 485 ஓட்டங்கள் appeared first on Oruvan.com.

இறுதி போட்டிக்கான வாய்ப்பை தவற விட்ட இலங்கை மாஸ்டர்ஸ் அணி
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இலங்கை மாஸ்டர்ஸ் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மாஸ்டர்ஸ் அணி 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் மாஸ்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தொடர்ந்து 180 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 173 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

இதன்படி, நாளைய தினம் இடம்பெறவுள்ள சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய மாஸ்டர்ஸ் அணியும் மேற்கிந்திய தீவுகள் மாஸ்டர்ஸ் அணியும் மோதவுள்ளன.

The post இறுதி போட்டிக்கான வாய்ப்பை தவற விட்ட இலங்கை மாஸ்டர்ஸ் அணி appeared first on Oruvan.com.

257 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை அணி – ஆஸி.யின் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம்
இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.

நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான இந்த போட்டியல் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடிப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன் பிரகாரம் முதலில் துடிப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 257 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி சோபிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.

இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் 85 ஓட்டங்களையும் தினேஸ் சந்திமால் 74 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் மிச்சல் ஸ்டார்க், நெதன் லியோன் மற்றும் மெத்யூ குஹ்னேமன் ஆகியோர் தலா 3 விக்கட்டுக்கள் வீதம் கைப்பற்றியுள்ளனர். ஆஸி. பந்துவீச்சாளர்களின் ஆதிக்கமே போட்டியின் ஆரம்பம் முதல் நிலவுவதாக வர்ணனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அவுஸ்ரேலியா அணி முதல் இன்னிஸுக்காக துடுப்பெடுத்தாடி வருகிறது. சற்றுமுன்னர் வரை விக்கெட் இழப்பின்றி 6 ஓவர்கள் நிறைவில் 30 ஓட்டங்களை அவுஸ்ரேலிய அணி பெற்றுள்ளது.

டிராவிஸ் ஹெட், உஸ்மன் கவாஜா ஆகியோர் களத்தில் உள்ளனர்.

The post 257 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை அணி – ஆஸி.யின் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் appeared first on Oruvan.com.

அவுஸ்ரேலியாவை வீழ்த்துமா இலங்கை? -இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பம்
(வி.தனூஷா)

அவுஸ்ரேலியா அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று வியாழக்கிழமை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன் பிரகாரம் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி நண்பகல் வரை 40.0 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் பதும் நிசங்க 11 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்துள்ளதுடன், ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடிவரும் தினேஸ் சந்திமால் 48 ஓட்டங்களுடன் களத்தில் இருக்கிறார்.

பந்துவீச்சில் நதன் லயன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அணிக்கு பலத்தை சேர்த்துள்ளார்.

இதேவேளை, உஸ்மான் கவாஜாவின் முதல் இரட்டை சதத்தால் முதல் டெஸ்டில் அவுஸ்திரேலியா அணி வெற்றிபெற்றிருந்தது.

முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 242 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த இலங்கை அணி, மீண்டும் எழுச்சி பெறும் நோக்கில் இந்தப் போட்டியில் கவனமாக செயல்படும் என வீரர்கள் கூறியுள்ளனர்.

முதல் போட்டியில் அவுஸ்திரேலியா அணி அனைத்து துறைகளிலும் இலங்கையை விட சிறப்பாக ஆதிக்கம் செலுத்தியது.

இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரமேஷ் மெண்டிஸ் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதுடன், வேகப்பந்து வீச்சாளர் விஷ்வா பெர்னாண்டோ மற்றும் துடுப்பாட்ட வீரர் லஹிரு உதார ஆகியோர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டவாது டெஸ்டில்  15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சகலத்துறை ஆட்டக்காரரான ரமேஷ் மெண்டிஸ், அணிக்கு வலுசேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில்  மோசமான ஆட்டத்தைத் வெளிப்படுத்தியதால் ரமேஷ் மெண்டிஸ் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். இந்தப் பின்புலத்தில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்டர் வீரரும் அணியின் முன்னாள் தலைவருமான திமுத் கருணாரத்ன இந்த போட்டியுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடை கொடுக்க உள்ளார். இது அவரது 100ஆவது டெஸ்ட் போட்டியாகும்.

அணி விபரம் வருமாறும்,

இலங்கை:

Dimuth Karunaratne, Oshada Fernando, Dinesh Chandimal, Angelo Mathews, Kamindu Mendis, Dhananjaya de Silva(c), Kusal Mendis(w), Prabath Jayasuriya, Lahiru Kumara, Vishwa Fernando, Asitha Fernando, Sadeera Samarawickrama, Jeffrey Vandersay, Nishan Peiris, Sonal Dinusha, Lahiru Udara, Milan Priyanath Rathnayake

அவுஸ்திரேலியா:

Sam Konstas, Usman Khawaja, Marnus Labuschagne, Steven Smith(c), Travis Head, Beau Webster, Alex Carey(w), Sean Abbott, Mitchell Starc, Nathan Lyon, Scott Boland, Josh Inglis, Matthew Kuhnemann, Nathan McSweeney, Todd Murphy, Cooper Connolly

The post அவுஸ்ரேலியாவை வீழ்த்துமா இலங்கை? -இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பம் appeared first on Oruvan.com.