இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தினம் Archives - Oruvan.com

இலங்கையுடனான பொருளாதார மற்றும் வர்த்தக உறவை வலுப்படுத்த அமெரிக்கா உறுதி
இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்நாட்டு மக்களுக்கு அமெரிக்க அரசாங்கம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

பரஸ்பர மரியாதை மற்றும் சுதந்திரமான, பாதுகாப்பான மற்றும் வளமான இந்தோ-பசுபிக் பிராந்தியத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தின் சார்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ விடுத்துள்ள அதிகாரப்பூர்வ செய்தியில், தற்போதைய அமெரிக்க நிர்வாகத்தின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மை புதிய உச்சத்தை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான ஒத்துழைப்புகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மீட்புப் பணிகளுக்கான அமெரிக்காவின் நிபுணத்துவத்தை வழங்குதல் மற்றும் உயிர்காக்கும் உதவிகளை வழங்கியமை போன்ற மீட்பு முயற்சிகளில் அமெரிக்கா ஆற்றிய பங்களிப்பு குறித்து அமெரிக்க அரசாங்கத்தின் சார்பில் ரூபியோ பெருமிதம் தெரிவித்தார்.

பொருளாதார உறவுகள் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தவும், பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கவும், இரு நாட்டு மக்களின் விருப்பங்களுக்கு ஆதரவளிக்கவும் இலங்கையுடனான தனது ஒத்துழைப்பைத் தொடருவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

The post இலங்கையுடனான பொருளாதார மற்றும் வர்த்தக உறவை வலுப்படுத்த அமெரிக்கா உறுதி appeared first on Oruvan.com.