இலங்கைச் செய்திகள் Archives - Oruvan.com

2024இல் இலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 61 பேர் உயிரிழப்பு, 47 பேர் படுகாயம்
கடந்த ஆண்டு 100க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 61 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 47 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டில் நடந்த பெரும்பாலான துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் காரணமாக இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த ஆண்டு பதிவான 103 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 56 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையவை எனவும் இதில் 45 பேர் உயிரிழந்துள்ளமை தங்கள் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

16 பேர் கொல்லப்பட்ட மற்ற 47 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் வெவ்வேறு காரணங்களால் குறிப்பாக தனிப்பட்ட தகராறுகளால் நிகழ்ந்தவை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

2024 ஆம் ஆண்டில் பதிவான கடைசி துப்பாக்கிச் சூடு சம்பவம் டிசம்பர் 28 ஆம் திகதி மாலையில் பதிவாகியிருந்தது. சீதுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் காரில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்தனர். தந்தை மற்றும் அவரது இரண்டு மகன்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் விவரித்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டில் பல பெரிய துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளன. சில பட்டப்பகலில் நடந்தன, துப்பாக்கி ஏந்தியவர்கள் பொது மக்கள் முன்னிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஜனவரி 22 அன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த வெளியேறும் இடத்திற்கு அருகில் ஐந்து பேர் கொல்லப்பட்ட சம்பவம் மிகவும் பாராதூரமான ஒன்றாகும் இந்த சம்பவத்தில் நமது மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் கொல்லப்பட்டார்.

மேலும், ஜூலை 8 ஆம் திகதி, அதுருகிரியவில் ஒரு அழகு நிலையம் திறப்பு விழாவில் தொழிலதிபர் சுரேந்திர வசந்த பெரேரா என்று அழைக்கப்படும் “கிளப் வசந்த” உட்பட இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் பிரபல பாடகர் கே. சுஜீவா உட்பட நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளானார்கள். இவ்வாறான சில துப்பாக்கிச் சூடுகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பெரும்பாலான துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து கைது செய்வதில் பொலிஸார் வெற்றி பெற்றுள்ளதாக, பொலிஸ் செய்தித் தொடர்பாளர் கே. புத்திக மனதுங்க வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக 50க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார். ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் மட்டும் இதுபோன்ற துப்பாக்கிச் சூடுகளுக்குப் பயன்படுத்தப்பட்ட மூன்று டி-56 தாக்குதல் துப்பாக்கிகளை மீட்டுள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக, கடந்த ஆண்டு 20 டி-56 துப்பாக்கிகளை மீட்டெடுக்க முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்’’

2024 ஆம் ஆண்டில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விடக் குறைவாக பதிவாகியிருந்ததாகவும், 2023 ஆம் ஆண்டில், 120 துப்பாக்கிச் சூடுகளில் 54 பேர் கொல்லப்பட்டதுடன், 65 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 2024இல் இலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 61 பேர் உயிரிழப்பு, 47 பேர் படுகாயம் appeared first on Oruvan.com.

தங்க நகைகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட தங்க பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அபுதாபியில் இருந்து இலங்கைக்கு வந்த பயணி ஒருவர் தொடர்பில் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விமான நிலைய பொலிஸார் சந்தேக நபரை நேற்று (04) இரவு கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது, ​​04 தங்க நெக்லஸ்கள், 01 பென்டன்ட், 02 வளையல்கள், 01 தங்க வளையல்கள் மற்றும் ஒரு தங்க மோதிரம் ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெலம்பொட பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post தங்க நகைகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது appeared first on Oruvan.com.

அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகும் அரசாங்கம் – புத்தாண்டில் முக்கிய அரசியல்வாதிகள் கைதாகும் சாத்தியம்?
பல்வேறு மோசடி மற்றும் ஊழல் வழக்குகளில் தொடர்புடைய ஒரு முக்கிய அரசியல் பிரமுகரின் செல்வாக்கு மிக்க மனைவி உட்பட ஐந்து அரசியல்வாதிகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் கைது செய்யப்படுவார்கள் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நம்பகமான அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு சிங்கள ஊடகமான மவ்பிம இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாக பொய்யாக வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட சக்திவாய்ந்த அரசியல்வாதி, ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சுற்றுலா வாரியத்திற்குள் தவறான நடத்தைகளில் ஈடுபட்ட பல தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கூடுதலாக, குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு ஆகியவை நாட்டின் செல்வத்தை சுரண்டுவதாகக் குற்றம் சாட்டப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடரத் தயாராகி வருகின்றன.

இந்த வழக்குகளில் போர் விமான பரிவர்த்தனைகள் மற்றும் சர்ச்சைக்குரிய பத்திர பரிவர்த்தனைகளில் முறைகேடுகள் அடங்கும் என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஒரு முக்கிய அரசியல்வாதியின் மனைவி மீது நடத்தப்பட்ட விசாரணைகள் நடைமுறை குறைபாடுகள் காரணமாக சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டன.

இந்த விசாரணைகள் முறையாக முடிவடைந்தவுடன், அனைத்து சந்தேக நபர்களுக்கும் எதிராக சட்டம் உடனடியாகவும் முறையாகவும் செயல்படுத்தப்படும் என்று மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகும் அரசாங்கம் – புத்தாண்டில் முக்கிய அரசியல்வாதிகள் கைதாகும் சாத்தியம்? appeared first on Oruvan.com.

யாழ்ப்பாணத்தில் இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் ஒருவர் கைது
இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் ஒருவர், பெருந்தொகை பணமோசடியில் ஈடுபட்டமைக்காக யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.

வங்கியில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து 15 லட்சம் ரூபாவை ஒருவரிடம் இருந்து மோசடி செய்ததாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்தே அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தான் பெற்றுக்கொண்ட பணத்துக்காக சந்தேகநபர் காசோலை வழங்கிய போதிலும், குறித்த காசோலை திரும்பியதைத் தொடர்ந்தே அவர் மீதான முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தலைமறைவாக இருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

The post யாழ்ப்பாணத்தில் இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் ஒருவர் கைது appeared first on Oruvan.com.

புதுப்பிக்கப்படும் ரயில் டிக்கெட்
தற்போது பயன்படுத்தப்படும் ரயில் டிக்கெட்டுக்கு பதிலாக முன்பணம் செலுத்திய ரயில் பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்காக தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்க முடியும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் புதிய அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அந்த அட்டைகளைப் பயன்படுத்துபவர்கள் ஒவ்வொரு நிலையத்திலிருந்தும் அணுகுவதற்குத் தேவையான தொழில்நுட்பக் கருவிகளும் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தற்போது பயன்பாட்டில் உள்ள ரயில்வே டிக்கெட்டுக்கு பதிலாக, முன்பணம் செலுத்திய ரயில்வே டிக்கெட்டை சரிபார்க்க, அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

The post புதுப்பிக்கப்படும் ரயில் டிக்கெட் appeared first on Oruvan.com.