இரா.சாணக்கியன் Archives - Oruvan.com

மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
” மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்தி, மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகாரங்களைக் கையளிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு,

” நாடாளுமன்றம் செயற்படுகின்றது, ஜனாதிபதி உள்ளார், அமைச்சரவை இருக்கின்றது. எனவே, மாகாணசபை அவசியமா என மீன்பிடித்துறை பிரதி அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பழைய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குரிய தனிநபர் சட்டமூலத்தை நான் முன்வைத்துள்ளேன். இதனை அரசாங்கம் ஏற்று, தமது சட்டமூலமாக கொண்டுவந்தால் விரைவாக தேர்தலை நடத்தலாம்.

இவ்வருட இறுதியில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் அடுத்த வருடம் நடுப்பகுதியில்தான் நடக்கும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மாகாணசபைத் தேர்தல் எப்போது நடத்தப்படும்? பழைய முறைமையில் நடத்தப்படுமா? தேர்தல் பற்றி அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்பதை பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சிசபை அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெளிவுபடுத்த வேண்டும்.” – என்றார்.

The post மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் appeared first on Oruvan.com.

ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பான வழக்கை மீண்டும் தாக்கல் செய்யவுள்ளோம் – சாணக்கியன்
சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பான வழக்கை மீண்டும் தாக்கல் செய்யவுள்ளோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

படுகொலை செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் புதல்வர் ஜோசப் பரராஜசிங்கம் டேவிட் 20 வருடங்களுக்குப் பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்புக்கு வருகை தந்த நிலையில் ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதன்போது தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் சிவம்பாக்கியநாதன், பிரதி மேயர் டினேஸ் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் இதன்போது கலந்துகொண்டனர்.

புதூர் பகுதியில் உள்ள மயானத்தில் உள்ள ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவுத்தூபியில் அவரின் மகன் மற்றும் நாடா ளுமுன்ற உறுப்பினர் மற்றும் மேயர், பிரதி மேயர் ஆகியோர் சுடர் ஏற்றி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,

“மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதி கோரி ஒவ்வொரு வருடமும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி போராட்டத்தை நடத்தி வருகின்றது.

ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலையில் முக்கிய சந்தேகநபராகப் பிள்ளையான் நல்லாட்சிக்காலத்திலே கைதுசெய்யப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.

அந்த விடுதலை பல சர்ச்சைகளை உருவாக்கியிருந்தது. தென்னிலங்கையில் கூட நீதித்துறையில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பும் வகையில் அசாத் மௌலானாவின் வாக்குமூலம் இருந்தது. ஆனால், சட்டமா அதிபர் திணைக்களம் அந்த வலக்கைத் தள்ளுபடி செய்து குற்றவாளிக் கூண்டில் இருந்து பிள்ளையானை நீக்கியிருந்தார்கள்.

ஆனால், காலம் மாறியிருக்கின்றது. அந்தப் படுகொலையைச் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் ராஜபக்ஷ – ரணில் விக்கிரமசிங்க அரசு தற்போது ஆட்சியில் இல்லை. தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மீண்டும் பிள்ளையான் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

பிள்ளையான் கைதானது ஈஸ்டர் குண்டுத் தாக்குதலா அல்லது திரிபொலியுடன் இணைந்து மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படும் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் உட்பட ஏனைய கொலைகளைப் பற்றியா என்பது நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனாலும், ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்திருக்கின்றோம்.

இது தொடர்பான விடயங்கள் சில மாதங்களுக்கு முன்னர் ஜோசப் பரராஜசிங்கத்தினரின் குடும்பத்தினரின் இணக்கப்பாட்டுடன் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் விசாரணைகள் மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றார். இங்கு மூடிமறைக்கப்பட்ட, நீதி மறுக்கப்பட்ட பல படுகொலைகளை விசாரணை செய்ய வேண்டும்.

இரு தினங்களுக்கு முன்னர் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வந்தபோது அவர் எங்களிடம் சில விடயங்களைத் தெரிவித்திருந்தார் அதாவது காணாமல் ஆக்கப்பட்டவர்கள், படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பத்து விடயங்களை முன்வைக்குமாறு கூறியிருந்தார்.

இதன்போது நாங்கள் முதலாவதாக ஜோசப் பரராஜசிங்கத்தின் விசாரணையை மீள ஆரம்பிக்க வேண்டும், ரவிராஜ் படுகொலை, திருகோணமலை மாணவர்களின் படுகொலைகள், மாணர்கள் கடத்தப்பட்டமை, இறுதிப் போர்க் காலப் பகுதியில் நேரடியாக கையளிக்கப்பட்டுக் காணாமல்போனவர்கள், கொல்லப்பட்டவர்கள் தொடர்பான விவரங்கள் தொடர்பில் தெரிவித்திருந்தேன்.

இதேபோன்று அனந்தி சசிதரனின் கணவரின் வழக்கு போன்ற பல்வேறு விடயங்களைத் தெரிவித்திருந்தேன். நாங்கள் நீதிக்கான போராட்டத்தைக் கைவிடமாட்டோம்.

ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரையில் நீதி கோரிய போராட்டத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னெடுக்கும் என்பதை அவரின் மகனுக்கு நாங்கள் உத்தரவாதமளிக்கின்றோம்.” – என்றார்.

The post ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பான வழக்கை மீண்டும் தாக்கல் செய்யவுள்ளோம் – சாணக்கியன் appeared first on Oruvan.com.

சமஷ்டி தீர்வை அடைவதே தமிழரசுக் கட்சியின் இலக்கு
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எம்மை நாமே ஆளக்கூடிய சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை அடைவதே எமது இலக்காகும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் டைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

” சமஷ்டி அடிப்படையில் தீர்வு கோருவது நாட்டை பிரிக்கும் நடவடிக்கை அல்ல. எனவே, சமஷ்டி தீர்வு பற்றி இந்த ஆட்சியாளர்கள் படிக்க வேண்டும். வடக்கு, கிழக்கை பிரிப்பதற்கு பங்கு வகித்தவர்களும் ஆட்சியில் இருக்கின்றனர்.

புதிய அரசியலமைப்பு ஊடாக தீர்வு எனக் கூறப்பட்டாலும் இன்னும் முன்னேற்றகரமான நடவடிக்கை இல்லை. 30 வருடங்களாக பராமரிப்பு இல்லாமல் இருக்கும் காணிகள், காடாவது வழமை. அதனை அடிப்படையாகக்கொண்டு மக்களின் காணிகளை அபகரிப்பதற்கு இடமளிக்க முடியாது.

ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவதற்குரிய எந்தவொரு தேவைப்பாடும் எமக்கு கிடையாது.” – எனவும் சாணக்கியன் எம்.பி. குறிப்பிட்டார்.

The post சமஷ்டி தீர்வை அடைவதே தமிழரசுக் கட்சியின் இலக்கு appeared first on Oruvan.com.

காலநிலை மாற்றத்துக்கான திட்டங்களை வடக்கு, கிழக்கில் அறிமுகப்படுத்த தயார் – இரா.சாணக்கியன்
காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு உலக நாடுகளின் ஆதரவோடு வட கிழக்கில் ஆட்சி அமைத்த தமிழரசின் உள்ளூராட்சி மன்றங்கள் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

“ரெய்சினா – Raisina” மாநாடு ஜப்பான் டோக்கியோவில் இடம்பெற்றது. இலங்கை சார்பாக விசேட அழைப்பின் பெயரில் கலந்துகொண்ட போதே பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, “இவ் மாநாடானது, காலநிலை மாற்றம், பசுமை நிதி, மற்றும் சுற்றுச்சூழல் நீதி போன்ற முக்கியமான பிரச்சினைகளில் சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் ஒரு முக்கியமான மேடையாக காணப்படுகின்றது.

இந்த நிகழ்வை அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளை (ORF), ORF அமெரிக்கா, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு வங்கி (JBIC) மற்றும் கெய்சாய் டோயுகாய் (ஜப்பான் வர்த்தக நிர்வாகிகள் சங்கம்) இணைந்து நடத்தினார்கள்.

அங்கு ஆற்றப்பட்ட எமது நாடு தொடர்பிலான எனது விசேட உரையானது. இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் காலநிலை மாற்றம் தொடர்பிலும் அதற்குரிய நடவடிக்கைகள் தொடர்பிலும் மத்திய அரசானது தகுந்த நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் வட கிழக்கில் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைத்த தமிழரசுக் கட்சியின் சபைகள் மூலமாக இவற்றுக்கான நடவடிக்கைகளை உலக நாடுகளின் ஒத்துழைப்போடு நாம் முன்னெடுக்க தயாராக உள்ளோம். காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் அநீதிகள் கரையோர பாதுகாப்பு, மகாவலி, வனப் பாதுகாப்பு, காணிப் பிரச்சனைகள் குறிப்பாக குடிநீர் பிரச்சனைகள் இவற்றுள் அடங்கும். என்பதனையும் இவ் மாநாட்டில் முக்கிய குறிப்பாக குறிப்பிட்டிருந்தேன்.

உங்களுக்குத் தெரியும், இலங்கையில், வானிலையை சரிபார்ப்பதில் நாங்கள் நிபுணர்களாகிவிட்டோம் – ஏனென்றால் அது எங்கள் கொள்கை ஆவணங்களை விட வேகமாக அவை மாற்றமடைகின்றது. ஒரு நாள் வெள்ளத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம், மறுநாள் எல்லாம் வறண்டு போகும் அளவில் உள்ளது. அதற்கும் தயாராக உளோம். நீங்கள் வடக்கு அல்லது கிழக்கில் இருந்தால், “காலநிலை மாற்றமா? அது செவ்வாய் என்று அழைக்கப்படுகிறது என்று நீங்கள் நினைக்கலாம்.

தெற்காசியாவில் காலநிலையால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் இலங்கை ஒன்றாகும். ஆனாலும் இங்கு இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி பற்றாக்குறையாக உள்ளது. இருப்பினும், உலக வங்கி மற்றும் பிறவற்றிலிருந்து எங்களுக்கு சில உதவிகள் கிடைத்துள்ளன, ஆனால் ஒட்டுமொத்தமாக எமது நாட்டிற்கான காலநிலை மாற்றத்திற்கான நிதி மிகவும் குறைவடைந்து விட்டது.

வறட்சியின் போது விவசாயிகளுக்க்கான குறுகிய கால நிவாரணத் திட்டங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால் நிதி முடிந்ததும், உதவியும் முடிந்துவிடுகிறது. நீடிக்கக்கூடிய உள்கட்டமைப்போ அல்லது அமைப்புகளோ பெரிதாக இல்லை. இலங்கையில் நெடுந்தீவு மாதிரியான இடங்களில் மழைநீர் சேகரிப்பு உதவிகரமாக இருந்தாலும், இன்றும் நாட்டின் பல பகுதிகளில் பாதிப்புக்குள்ளான குடும்பங்கள் தண்ணீர் பவுசர்களையே நம்பிக்கொண்டு இருக்கின்றன. பெண்கள் இன்னும் மைல்கள் நடந்து சென்று தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. இது 2025 ஆனாலும் அடிப்படை வசதிக்கே பாரிய போராட்டமாக உள்ளது. இது வெறும் காலநிலை பிரச்சனை அல்ல. இது ஒரு மனிதாபிமானப் பிரச்சனை ஆகும்.

நமது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பான விவசாயம், காலநிலை மாற்றங்களால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகிறது. தொடர்ச்சியான வறட்சி காரணமாக குறைந்த மகசூல், தாமதமான அறுவடைகள் மற்றும் நிலையற்ற உணவு விநியோகம் காணப்படுகின்றது. காலநிலை எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர்கள் வெப்பம், வெள்ளம் மற்றும் மோசமான மண்ணைத் தாங்கும் பயிர்கள் உள்ளன, ஆனால் மிகவும் குறைவாக எமது விவசாயிகளுக்கு கிடைக்கின்றது. இவை தொடர்பான விவசாய ஆராய்ச்சி ஆய்வகங்களிலிருந்து விவசாயிகளின் கைகளில் அவற்றைப் பெறுவதற்கு தகுந்த முதலீடு, விழிப்புணர்வு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் தேவை.

இவை எமது நாட்டில் முக்கிய பிரச்சினைக்குக் கொண்டுவருகிறது. காலநிலை மாற்றம் தொடர்பாக இலங்கையானது தொழில்நுட்பத்தை பாவிப்பது மிகவும் குறைவாக உள்ளது. குறிப்பாக விவசாயத்தில் நமது பொருளாதார நெருக்கடியால் இவற்றை நடைமுறைப்படுத்த முடியில்லை. ஆனால் இப்போது புத்திசாலித்தனமாக மீண்டும் எமது நாட்டை கட்டியெழுப்ப ஒரு வாய்ப்பு உள்ளது.

நமக்கு கலப்பு நிதி, பொது தனியார் கூட்டாண்மை மற்றும் நீண்டகால உத்திகள் தேவை. 12 மாதங்களுக்குப் பிறகு மறைந்துவிடும் நன்கொடையாக அளிக்கப்பட்ட நிதி உதவிகள் அல்ல. பரவலாக்கப்பட்ட உள்கட்டமைப்பில் முதலீடு செய்வோம். தன்னாட்சியுள்ள உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்யலாம், தண்ணீர் அணுகலை மேம்படுத்தலாம், மற்றும் நிலைத்தன்மையை ஒரு தேசிய முன்னுரிமையாக்கப்பட வேண்டியது கட்டாயமானதாகும்.

எமது நாட்டின் நடவடிக்கைக்கான எனது அழைப்பானது. காலநிலை மாற்றங்களுக்கான குறுகிய உதவிகளை வழங்குவதை விட நீடிக்கும் அமைப்புகளை உருவாக்குவோம். நிதி, தொழில்நுட்பம் மற்றும் துறைகள் மற்றும் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒத்துழைப்பு குறித்து தீவிரமாகப் கலந்துரையாடுவோம். நீண்டகால செயல்திட்டங்களை உருவாக்குவோம்.

மேலும், மழைக்காலங்களில் மாம்பழங்களை வளர்த்து, வறட்சியின் போது ஐந்து நிமிடங்களில் நம் துணிகளை உலர்த்த முடிந்தால், நிச்சயமாக இதையும் நம்மால் நிவர்த்தி செய்ய முடியும்.” என்றார்.

The post காலநிலை மாற்றத்துக்கான திட்டங்களை வடக்கு, கிழக்கில் அறிமுகப்படுத்த தயார் – இரா.சாணக்கியன் appeared first on Oruvan.com.

நிரந்தர தீர்வு என்கின்ற எமது இலக்குக்கு வடக்கு, கிழக்கு தமிழர் மீண்டும் ஆணை: சாணக்கியன்
“நிரந்தரமான ஓர் அரசியல் தீர்வை அடைய வேண்டுமென்ற எங்களுடைய இலக்குக்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணை தந்திருக்கின்றார்கள்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியானது வடக்கு, கிழக்கிலே அமோகமான வெற்றியைப் பெற்றிருக்கின்றது.

நாடு யாரிடமாவது இருக்கட்டும், தமிழர் தாயகம் தமிழரசோடு இருக்க வேண்டும் என்று நாங்கள் தேர்தல் பரப்புரைக் காலத்தில் சொன்னதற்கமைய வடக்கு, கிழக்கிலே இருக்கின்ற தமிழ் மக்கள் எங்களுக்கு அமோகமான வெற்றியைத் தந்திருக்கின்றார்கள். இது உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வெற்றி என்பதைத் தாண்டி இது தமிழர்களுடைய எதிர்காலத்துக்கான ஆணையொன்றை தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சியிடம் ஒப்படைத்திருக்கின்றார்கள்.

நிரந்தரமான ஓர் அரசியல் தீர்வை அடைய வேண்டும் என்ற எங்களுடைய இலக்குக்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணை தந்திருக்கின்றார்கள். அந்தவகையில் விரைவில் மாகாண சபைத் தேர்தலையும் நடத்த வேண்டும் என்று நாங்கள் அரசை வலியுறுத்த வேண்டும். மாகாண சபைத் தேர்தலிலும் வடக்கு, கிழக்கில் நாங்கள் கூடுதலான ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைக்க இருக்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாங்கள் போட்டியிட்ட பதினொரு சபைகளிலும் ஆசனங்களைப் பெற்றிருக்கின்றோம். பெரும்பான்மையாகத் தமிழர்கள் இருக்கின்ற அனைத்து பிரதேச சபைகளிலும் நாங்கள் பெரும்பான்மையான ஆசனங்களை வென்றிருக்கின்றோம். அனைத்து பிரதேச சபைகளிலும் ஆட்சியமைக்கக்கூடிய சூழல் இருக்கின்றது. அத்துடன் நாங்கள் சிறுபான்மையாக இருக்கின்ற இரண்டு பிரதேச சபைகளிலும் ஆசனங்களைப் பெற்றிருக்கின்றோம்.

இன்று (நேற்று) மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து முதல் கட்டமாகப் பட்டியல் ஆசனங்கள், சபை அமைத்தல், யாருடன் இணைவது என்பது பற்றி கலந்துரையாடவுள்ளோம்.

நாளை (இன்று) நாங்கள் போட்டியிட்ட அனைத்து சபை உறுப்பினர்களையும் ஒவ்வொரு சபையாக அழைத்து, அந்தந்தச் சபைகளில் பட்டியல் உறுப்பினர்கள் யார் என்றும், தவிசாளர், பிரதி தவிசாளர் பற்றி எவ்வாறு தீர்மானம் எடுப்பது என்பது பற்றியும், யாருடன் நாங்கள் இணைந்து ஆட்சியமைப்பது என்பது பற்றியும் கலந்துரையாடவுள்ளோம்.

எதிர்வரும் இரண்டு, மூன்று வாரங்களுக்குள் இலங்கைத் தமிழரசுக் கட்சி அனைத்து சபைகளிலும் ஆட்சியமைக்கக்கூடிய ஒரு வியூகத்தை நாங்கள் அமைக்க இருக்கின்றோம்.” – என்றார்.

The post நிரந்தர தீர்வு என்கின்ற எமது இலக்குக்கு வடக்கு, கிழக்கு தமிழர் மீண்டும் ஆணை: சாணக்கியன் appeared first on Oruvan.com.

அநுர அரசு வீழ்ச்சியடைய காரணமாக இருக்கப்போவது யார்?
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் வீழ்ச்சியடைவதற்கு பி.ஆர். என்று அழைக்கப்படும் பசில் ராஜபக்‌சவே காரணமாக இருந்தார். அதேபோல் இந்த அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு அமைச்சர் பி. ஆர். அழைக்கப்படும் பிமல் ரத்நாயகவே காரணமாக அமைவார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற முறையற்ற சொத்துக்கள் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

“கடந்த வார அமர்வின் போது சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க எம்மை தொடர்புபடுத்தி குறிப்பிட்ட விடயம் முறையற்றது. அவற்றை முழுமையாக நிராகரிக்கிறேன். நாங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அச்சமடைந்து மிகவும் கீழ்த்தரமான முறையில் எம்மீது சேறு பூசினார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் வடக்கு,கிழக்கு மாகாணத்துக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதி வழங்கப்பட்டது. இதனை அனைவரும் அறிவார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீநாத், ஸ்ரீநேசன் ஆகியோருக்கு நிதி கிடைக்கப்பெற்றதாக சபை முதல்வர் கூறுகின்றார். இவர்கள் கடந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கவில்லை.

ராஜபக்‌சர்களுடன் இணைந்து நான் அரசியல் செய்ததாகக் கூறினார். ஆம் அது எனது தவறான அரசியல் தீர்மானம் என்பதை நான் எனது மக்களுக்குக் குறிப்பிட்டுள்ளேன். தற்போது எனது மக்கள் என்னை இரண்டாவது தடவையாகவும் தெரிவு செய்துள்ளார்கள். கடந்த கோட்டாபயவின் அரசாங்கம் வீழ்ச்சியடைவதற்கு பி.ஆர். என்றழைக்கப்படும் பசில் ராஜபக்‌ச காரணமாக அமைந்தார். அதேபோல, இந்த அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு பி.ஆர். என அழைக்கப்படும் பிமல் ரத்நாயக்க காரணமாக இருப்பார்.” என்றார்.

The post அநுர அரசு வீழ்ச்சியடைய காரணமாக இருக்கப்போவது யார்? appeared first on Oruvan.com.