இராமலிங்கம் சந்திரசேகர் Archives - Oruvan.com

இலங்கை நபர் மீது தாக்குதல்: கடும் கண்டனம் – கடற்றொழில் அமைச்சர் கண்டனம்
இலங்கை நபர் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் மனித உரிமைகளை மீறும் அதேவேளை, அண்டை நாடுகளுக்கிடையிலான பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையையும் பாதிக்கும் வகையிலானது என அவர் வலியுறுத்தினார். குறிப்பாக, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதிப்படுத்துவது எந்த நாட்டிற்கும் அடிப்படைப் பொறுப்பாகும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இலங்கை கடற்பரப்பிற்குள் அடிக்கடி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் நடவடிக்கைகள் குறித்து நீண்டகாலமாகவே இலங்கை மீனவர்கள் கவலை வெளியிட்டு வருகின்றனர். பல சந்தர்ப்பங்களில் இலங்கை மீனவர்கள் அமைதியான முறையில் நடந்துகொண்டு, இந்திய மீனவர்களை “தொப்புள் கொடி உறவுகள்” என்ற உணர்வோடு அணுகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், கடந்த காலங்களில் இலங்கை கடல் வளங்கள் பலமுறை சூறையாடப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோதமான மீன்பிடி முறைகள் கடல் சூழலுக்கும் மீன்வள வளங்களுக்கும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதனால், உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இவ்விடயங்களுக்கு தீர்வு காணும் நோக்கில், இந்திய உயர் அதிகாரிகளுடனும், மீன்பிடி துறை அதிகாரிகளுடனும் பல கட்டங்களில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இருநாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தி, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்க இணைந்த நடவடிக்கைகள் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இத்தகைய சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் விரைவான மற்றும் நியாயமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருநாடுகளுக்கிடையிலான பிரச்சினைகள் அனைத்தும் அமைதியான பேச்சுவார்த்தைகள் மற்றும் பரஸ்பர புரிதலின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பதே இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post இலங்கை நபர் மீது தாக்குதல்: கடும் கண்டனம் – கடற்றொழில் அமைச்சர் கண்டனம் appeared first on Oruvan.com.

மனோ, ஜீவன், திகா, ராதா ஆகியோரை மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர்
பாராளுமன்ற உறுப்பினரானான ஜீவன் தொண்டமான், மனோ கணேசன், திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரை மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். எனவே, கேடு கெட்ட அரசியலை அவர்கள் நிறுத்தாவிட்டால் முகத்திரைகளை கிழித்தெறிய வேண்டிய நிலை ஏற்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘மீரியபெத்த மண்சரிவு ஏற்பட்டு எத்தனை வருடங்கள்? இவ்வளவு நாளும் எங்கிருந்தீர்கள் என ஜீவன் தொண்டமான், மனோ கணேசன், திகாரம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் கேட்கின்றேன். இவ்வளவு நாளும் படுத்து தூங்கிக் கொண்டிருந்தீர்களா? அவர்களுக்கான வீடுகள் தற்போதுதான் கட்டப்பட்டு கையளிக்கப்படக்கூடிய சூழ்நிலை வந்துள்ளது.

வெத்து காகிதம் என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது. வழங்கப்பட்டது காகிதமாக இருந்தாலும் உண்மை என்னவென்பது மக்களுக்கு தெரியும். எனவே, கேடு கெட்ட அரசியலை நிறுத்துங்கள். எமது மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக்கொடுக்காமல், அவர்களை அடிமை வாழ்வு வாழ வைத்ததால்தான் கடந்த தேர்தலில் மக்கள் பதிலடி கொடுத்தார்கள். கொழும்பில் இருந்த மக்களும் மனோவின் நாடக நடிப்பு அரசியலை நிராகரித்து, அவரை ஒதுக்கி வைத்துள்ளனர்.

மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்திக்குரிய ஆதரவு அதிகரித்துவருவதால்தான் இவர்கள் கத்துவதற்கு ஆரம்பித்துள்ளனர். தம்பி ஜீவன் அரசியலை நல்ல முறையில் கத்துக்கொள்ளுங்கள். கூவித்திரிவதால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. கடந்த காலங்களில் நீங்கள் எத்தனை வீடுகளை கட்டினீர்கள்? கட்டிய சில வீடகள்கூட எந்த நிலையில் உள்ளது? எனவே, முடியுமாக இருந்தால் உதவி செய்யுங்கள், தயவு செய்து உபத்திரம் செய்யாதீர்கள் என திகா, மனோ, ராதா, ஜீவனிடம் கேட்டுக்கொள்கின்றேன். நாங்கள் கதைக்கபோனால் உங்களின் முகத்திரைகளை கிழிக்க நேரிடும்.” என்றார்.

The post மனோ, ஜீவன், திகா, ராதா ஆகியோரை மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர் appeared first on Oruvan.com.

மக்களின் நம்பிக்கைக்கு ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டோம்
தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் நிச்சயம் மாற்றம் வருமென தமிழ் மக்கள் உறுதியாக நம்புகின்றனர். அந்த நம்பிக்கைக்கு ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டோம் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (09) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

“இந்நாட்டில் கடந்த 76 வருடகால அரசியலானது மேட்டுக்குடிகள், தனவந்தர்களுக்கு மட்டுமே சொந்தமான அரசியலாக இருந்து வந்தது. இவர்களின் தாளத்துக்கேற்பவே அரசியல்வாதிகள் ஆட்டம் போட்டனர்: ஆட்டுவிக்கப்பட்டனர். இந்நிலைமைய நாம் மாற்றியமைத்துள்ளோம். மேட்டுக்குடிகள் மற்றும் உயர் வர்க்கம் வசமிருந்த அரசியல் சாதாரண மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

எனவே, மக்களை மதிக்கின்ற, மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுகின்ற, உறுதிமொழிகளுக்கு செயல் வடிவம் கொடுக்கின்ற அரசாங்கமாகவே தேசிய மக்கள் சக்தி திகழ்கின்றது. ஆகவே இந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு மக்கள் முன்வரமாட்டார்கள். மாறாக அரசாங்கத்தின் பின்னால் அணிதிரண்டு அதன் பயணத்தை வலுப்படுத்திவருகின்றனர்.” எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

”இன்றைக்கு ஒரு வருடத்துக்கு முன்னர் இந்நாடு எந்நிலையில் இருந்தது. பல சவால்களுக்கு மத்தியில் நாட்டை மீட்டுள்ளோம். பொருளாதாரத்தை வளப்படுத்திவருகின்றோம். வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் சுதந்திரமாக நாடு திரும்புவதற்குரிய சூழ்நிலை நிலவுகின்றது.

இனவாத மற்றும் மதவாத அரசியலுக்கும் முடிவுகட்டப்பட்டுள்ளது. எனவே கடந்த ஒரு வருடத்தில் நாம் கடந்து வந்த பாதை மகிழ்ச்சியளிக்கின்றது. யாழ்ப்பாணத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

சர்வதேச விளையாட்டு மைதானம்கூட நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. வடக்கு மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பட்டுள்ளது. அங்குள்ள மக்களின் வாழ்க்கை மேம்பட்டு வருகின்றது.” எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் குறிப்பிட்டார்.

The post மக்களின் நம்பிக்கைக்கு ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டோம் appeared first on Oruvan.com.

மலையக அதிகார சபை வலுப்படுத்தப்படும் – இராமலிங்கம் சந்திரசேகர்
மலையக அபிவிருத்தி அதிகார சபை இல்லாதொழிக்கப்படாதென்றும் அது தொடர்பில் அரசாங்கம் எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அந்த அதிகார சபையை விரிவாக்கம் செய்து முன்னெடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் தீர்மானம். மலையக மக்களையும் அவர்களுக்கான நிறுவனங்களையும் அரசாங்கம் பாதுகாக்கும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று மனோ கணேசன் எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் சந்திரசேகர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; மலையக அபிவிருத்தி

அதிகார சபையை அரசாங்கம் ஒரு போதும் இல்லாதொழிக்காது. அவ்வாறான ஒரு தீர்மானமும் கிடையாது.

பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையிலான குழுவில் மேற்படி அதிகார சபையை மேலும் விரிவு படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதே தவிர, அதனை இல்லாதொழிக்கும் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

அந்த வகையில் மலையக அபிவிருத்தி அதிகார சபை எந்த வகையிலும் இல்லாதொழிக்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் தெரிவித்தார் .இது தொடர்பில் சபையில் குறுக்கீடு செய்து கருத்து தெரிவித்த மனோ கணேசன் எம்பி;

அமைச்சர் இவ்வாறு தெரிவித்தாலும் ஜனாதிபதி எனக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேற்படி அதிகார சபை தொடர்பில் பிரச்சினை காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். அவ்வாறான சம்பந்தப்பட்ட அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் இது தொடர்பில் முறையாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மீண்டும் அதற்கு பதிலளித்த அமைச்சர் சந்திரசேகர்;

மேற்படி அதிகார சபையை இல்லாதொழிக்கப்போவதில்லை என்பது அரசாங்கத்தின் தீர்மானமாகும். அந்த வகையில் அதை விரிவாக்கம் செய்து முன்னெடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

அதை விடுத்து மனோ கணேசன் எம்பி கூறுவது போன்று, பொது பிரச்சனைகள் காணப்பட்டால் அது தொடர்பில் நாம் உரிய கவனம் செலுத்தி பேச முடியும் என்றும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய பல விடயங்கள் இருந்தும் அதனை மேற்கொள்ள முடியாமற் போயுள்ளது.எனினும் நாம், மலையக மக்களுக்கு சேவைகளை வழங்கக்கூடிய நிறுவனம் இருக்குமானால் எந்த விதத்திலும் அதனை இல்லாதொழிக்கப் போவதில்லை. அந்த வகையில் நாம் அவற்றையும் பாதுகாத்து மலையக மக்களையும் பாதுகாப்போம் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றும் தெரிவித்தார்.மனோ கணேசன் எம்பி கூறுவது போன்று எமது அதிகாரிகள் எவரும் மேற்படி அதிகார சபை தொடர்பில் மாற்றுக் கருத்துக்களை கொண்டிருக்கவில்லை. அவர்கள் மலையக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று மனப்பாங்குடனேயே செயல்படுகின்றனர்.

The post மலையக அதிகார சபை வலுப்படுத்தப்படும் – இராமலிங்கம் சந்திரசேகர் appeared first on Oruvan.com.

மானியங்கள் வழங்கி மீன் பிடித்துறையை முன்னேற்ற அரசாங்கம் நடவடிக்கை – இராமலிங்கம் சந்திரசேகர்
மீன் பிடித்துறையை முன்னேற்றுவதற்கு மானியம் வழங்கத் தீர்மானித்துள்ள அரசாங்கம், இயந்திர மீன்பிடி படகுகளுக்காக இரண்டு மில்லியன் ரூபாவுக்கும் அதிக நிதியை வழங்கவுள்ளதாக கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் செல்வம் அடைக்கலநாதன் எம்பி சபையில் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் ;தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் எரிபொருள் விலைகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் மீனவர்களுக்கு மேலும் எரிபொருள் மானியங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டீசல் படகுகளுக்கு 06 மாதங்களுக்காக அதிகபட்சம் 3 இலட்சம் ரூபா வழங்கப்படும்.மண்ணெண்ணெய் படகுகளுக்கு 06 மாதங்களுக்கு 9375 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படுகிறது.’வளமான நாடு அழகான வாழ்க்கை’’ என்ற அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்தின்படி, மீனவர் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் உரிய முறையில் முன்னெடுத்து வருகிறது.

மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் மானியங்கள் கடந்த காலங்களில் நிறுத்தப்பட்டிருந்தது. உள்ளூர் மீன்பிடித் துறையில் டீசலை எரிபொருளாக பயன்படுத்தும் 5750 படகுகளும் மண்ணெண்ணெயை பயன்படுத்தும் 27530 படகுகளும் காணப்படுகின்றன.அத்துடன் எரிபொருள் பயன்படுத்தப்படாத 17000 சிறிய படகுகளும் உள்ளன.

இந்நிலையில் மீன்பிடித் துறையில் 02 இலட்சத்திற்கும் அதிகமானோர் ஈடுபடுகின்றனர்.இந்நிலையில் ‘’வளமான நாடு அழகான வாழ்க்கை’’ என அரசாங்கத்தின் கொள்கை யின்படி மீனவர் சமுகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எமது அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது மக்கள் எரிபொருள் விலையேற்றங்களால் பாதிக்கப்பட்டிருந்தனர். எனினும் நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் எரிபொருள் விலைகளை பெருமளவில் குறைத்துள்ளோம்.

அதேவேளை மாதாந்த எரிபொருள் விலை நிர்ணயத்திற்கமைய மேலும் எரிபொருள் மானியத்தை வழங்கும் கலந்துரையாடலும் இடம்பெற்று வருகின்றன.மேலும் வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கான பெருமளவு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும்அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதேவேளை, நுண்நிதி கடன்களால் மீன்பிடி சமூகத்தினர் பல்வேறு நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ளனர். பெண்களே அதிகளவில் இதில் சிக்கியுள்ளனர். வன்னி மாவட்டத்திலேயே அதிகளவான பெண்கள் நுண்நிதி கடன்களை மீளச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதனால் இது தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றோம் என்றும் அவர் கூறினார்.

The post மானியங்கள் வழங்கி மீன் பிடித்துறையை முன்னேற்ற அரசாங்கம் நடவடிக்கை – இராமலிங்கம் சந்திரசேகர் appeared first on Oruvan.com.

இடிந்து விழுந்த மந்திரி மனையை பார்வையிட்ட அமைச்சர் சந்திரசேகர்
யாழில் நேற்றைய தினம் (17) பெய்த கடும் மழையால் இடிந்து விழுந்த மந்திரி மனையை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் பார்வையிட்டனர்.

யாழ்ப்பாணத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளமை மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாண இராசதானி காலத்திற்குரியதாக கருதப்படும் மந்திரி மனை, பாதுகாக்கப்பட வேண்டிய தொல்பொருள் சின்னமாக 2011ஆம் ஆண்டு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மந்திரி மனையின் திருந்த வேலைகள் தனி நபர் ஒருவரின் காணிக்குள் இருப்பதாகவும், அதனை பாதுகாக்க தாம் கோரிக்கை விடுத்தபோதும் குறித்த நபர் அதனை ஏற்கவில்லை எனவும் தொல்லியல் திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய உதவிப்பணிப்பாளர் பந்துல ஜீவ விசனம் வெளியிடிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post இடிந்து விழுந்த மந்திரி மனையை பார்வையிட்ட அமைச்சர் சந்திரசேகர் appeared first on Oruvan.com.

கச்சதீவு சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்கப்படுகிறதா?
நெடுந்தீவு மற்றும் கச்சதீவை இணைக்கும் முன்மொழியப்பட்ட சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் குறித்து ஆய்வு நடந்து வருவதாக அமைச்சர் c தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் நேற்று கச்சத்தீவுக்கு கண்காணிப்பு விஜயம் செய்தபோது அமைச்சர் இந்தக் கருத்துக்களை கூறியுள்ளார்.

கச்சதீவு பகுதியில் செயல்படும் உள்ளூர் மீனவர்களின் பாதுகாப்பு, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் எதிர்கால மேம்பாட்டு முயற்சிகள் குறித்து கடற்படையுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பார்வையாளர்களை ஈர்க்கும் நெடுந்தீவு முதல் கச்சதீவு வரை சுற்றுலா வளர்ச்சியை விரிவுபடுத்தும் திட்டங்கள் உட்பட, பிராந்தியத்தில் சுற்றுலாவை மேம்படுத்த பல திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன எனறும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

The post கச்சதீவு சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்கப்படுகிறதா? appeared first on Oruvan.com.

சிறிய குற்றம், இது பெரிய குற்றம் என பிரித்து பார்ப்பதுகூட குற்றம்தான் – அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு
” சட்டம் தனது கடமையை சரிவர செய்யும்போது, குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவே கூட்டணி அமைத்து, அரசியல் பழிவாங்கல் புராணத்தை எதிரணிகள் ஓதி வருவதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மைத்திரி, மகிந்த மற்றும் சஜித் தரப்புகள் ஜனநாயகம் பற்றி பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவதற்கு ஒப்பானதாகும்.” எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியாப் பல்கலைக்கழகத்தின் வியாபார இணைப்பு அலகும், முயற்சியாண்மைக் கற்கைநெறி மாணவர்களும் இணைந்து நடத்திய உலக முயற்சியாளர் தின விழாவும், மாபெரும் வர்த்தக சந்தையும் பல்கலைக்கழகத்தில் நேற்று (26.08.2025) சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அமைச்சர் பங்கேற்றிருந்தார். இந்நிகழ்வின் பின்னர் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

” உலக முயற்சியாளர்களை நாம் பாதுகாக்க வேண்டும், அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும். ஆனால் ஊழல்வாதிகளை பாதுகாக்க கூடாது.

அவர்கள் சுதந்திரமாக சுற்றிதிரிவதற்கு இடமளிக்கவும் கூடாது. எனவே, முயற்சியாளர்களை பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ அதுபோல்தான் ஊழல்வாதிகளுக்கு எதிராக கட்டாயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தேங்காய் திருடினாலும் குற்றம்தான், மாங்காய் திருடினாலும் குற்றம்தான். டயமன்ட் திருடினாலும் குற்றம்தான். எனவே, அது சிறிய குற்றம், இது பெரிய குற்றம் என குற்றத்தை பிரித்து பார்ப்பதுகூட குற்றம்தான்.

கடந்தகாலங்களில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டம் தற்போது செயற்பட ஆரம்பித்துள்ளது. எனவேதான் தம்மை தற்காத்துக்கொள்வதற்காக கள்வர்கள் கூட்டு சேர்ந்துள்ளனர்.

இது ஜனநாயகத்துக்கான கூட்டணி அல்ல. மாறாக கள்வர்களை காப்பதற்கான கூட்டணியாகும்.

ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தவர்கள், ஜனநாயகம் பற்றி கதைப்பது சாத்தான் வேதம் ஓதுவதற்கு ஒப்பான செயலாகும். நாட்டில் இன்று நீதி கட்டமைப்பு சுயாதீனமாக செயற்படுகின்றது. எவ்வித அரசியல் தலையீடுகளும் இல்லை.

சட்டம் தனது கடமையை செய்வதற்குரிய வளங்களை நாம் வழங்கி வருகின்றோம். ஜனநாயகம் பற்றி எதிரணிகள் எமக்கு பாடம் எடுக்க வேண்டியதில்லை.

ஜனநாயகம் என்றால் என்னவென்பதை செயலில் காட்டியவர்கள் தான் நாம். கடந்த இரு தேர்தல்களின்போது ஜனநாயகம் எப்படி பாதுகாக்கப்பட்டது என்பது முழு உலகமும் அறியும்.” – என்றார்.

The post சிறிய குற்றம், இது பெரிய குற்றம் என பிரித்து பார்ப்பதுகூட குற்றம்தான் – அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு appeared first on Oruvan.com.

மயிலிட்டி துறைமுகத்தை நவீனமயப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் சந்திரசேகர்
‘யாழ். மயிலிட்டி துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றியமைப்பதற்குரிய நடவடிக்கை வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, கிழக்கில் வாழைச்சேனை துறைமுகத்தை விஸ்தரிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாறறும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,” எமது அமைச்சின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழ். மாவட்டத்துக்கென ஒரு துறைமுகமொன்று இருக்கவில்லை. எனவே, மயிலிட்டி துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றுவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. வெகுவிரைவில் அதற்குரிய வேலைத்திட்டம் ஆரம்பமாகும். அத்துடன், 165 மில்லியன் ரூபா செலவில் யாழ். கொழும்புத் துறையிலுள்ள துறைமுகத்தையும் நவீன துறைமுகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் நல்லதொரு துறைமுகம் இல்லாத குறைப்பாடு காணப்படுகின்றது. வாழைச்சேனை துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டபோதிலும், மீனவர்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

ஏனெனில் ஒலுவில் துறைமுகம் இன்று செயல் இழந்து காணப்படுகின்றது. விஞ்ஞானப்பூர்வமான ஆய்வின்றி கட்ட வேண்டும் என்பதற்காகவே குறித்த துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதனால் வாழைச்சேனை துறைமுகத்தை நோக்கியே மீனவர்கள் படையெடுத்து வருகின்றனர். எனவே, வாழைச்சேனை துறைமுகத்தை மேலும் விஸ்தரிப்பதற்குரிய நடவடிக்கை அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும். இதற்காக 1, 700 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

மன்னார், பேசாலையில் இறங்குத்துறையை அமைப்பதற்குரிய நடவடிக்கையை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பேசாலையில் வாழும் மக்களுடன் பேச்சு நடத்தி அவர்களின் குறைப்பாடுகளை தீர்த்து, பேசாலையிலும் துறைமுகமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

யாழ். குருநகர் பகுதியில் இறங்குத்துறைமுகமொன்றை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கை இடம்பெறுகின்றது. இப்பணி முடிந்த பின்னர் நிதி ஒதுக்கப்படும்” இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

The post மயிலிட்டி துறைமுகத்தை நவீனமயப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் சந்திரசேகர் appeared first on Oruvan.com.

ஆட்சி கவிழ்ப்பு குறித்து போலி பரப்புரை – மக்கள் நம்பத் தயாரில்லை என்கிறார் அமைச்சர் சந்திரசேகர்
“இந்த ஆட்சி கவிழும் என வங்குரோத்து அடைந்த அரசியல்வாதிகள் பிரச்சாரம் முன்னெடுத்து வருகின்றனர். இந்த போலி பரப்புரைக்கு வடக்கில் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளும் உயிர்கொடுக்க முற்படுகின்றனர்.” – என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இலங்கை ஐயப்ப சுவாமிமார்களின் யாத்திரையினை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தியதன் பின்னர் அது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (18.08.2025) கொழும்பு செட்டியார் தெரு கல்யாண முருகன் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.

ரவி குருசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு அதிதியாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பிரதம அதிதியாகவும், இந்து சமய அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் வை.அனிருத்தன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கெளரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள ஐயப்ப நாமத்தில் இயங்கும் அமைப்புக்கள், குரு சுவாமிகள் மற்றும் ஐயப்பன் தொடர்புடைய அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இதன்போது சுவாமிமார்களால் பரிந்துரைக்கப்பட்ட ஐயப்ப மாலை அணிந்த சுவாமிமார்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகள் அடங்கிய அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

நாடளாவிய ரீதியில் இருந்து வருகைதந்த ஐயப்பசாமி குருமார்கள் தங்களது கருத்துக்களையும் முன்வைத்தனர். அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோர்களை குருசுவாமிகள் பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.

இதன்போது அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,

“ஐயப்பன் யாத்திரை கடந்த காலங்களில் புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தப்படவில்லை. இதற்குரிய முயற்சி முன்னெடுக்கப்பட்டும் ஏன் அத்தனை வருடங்கள் நடக்கவில்லை? இனவாத ஆட்சியாளர்கள், இனவாத அமைச்சரவை இருந்ததால்தான் நடக்கவில்லை.

ஆனால் எமது சமதர்ம ஆட்சியில் இனவாதம் இல்லை. மக்கள் நலனுக்கே முக்கியத்துவம், முன்னுரிமை வழங்கப்படுகின்றது. அந்தவகையில் புனித யாத்திரை தொடர்பான அமைச்சரவை பத்திரம் வந்தபோது அதற்கு ஏகமனதாக ஆதரவளிக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு முழுமையாக முன்னின்று செயற்பட்ட பிரதி அமைச்சர் பிரதீப்புக்கு நன்றிகள்.

இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர். சமூக சீர்கேட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, சமூக மாற்றத்துக்கு ஆன்மீகவாதிகளின் பங்களிப்பும் மிக முக்கியம்.

அதேவேளை, வறுமை ஒழிப்புக்குரிய நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. மறுபுறத்தல் வரி வருமானம் அதிகரித்துள்ளது. பொருளாதார இலக்குகளை அடைந்து வருகின்றோம்.

இந்நிலையில் ஆட்சி மாற்றம் பற்றி வங்குரோத்து அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இதற்கு உயிர்கொடுக்கும் வகையில் வடக்கில் தோல்விகண்ட, மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகள் முயற்சித்து வருகின்றனர்.” – என்றார்.

The post ஆட்சி கவிழ்ப்பு குறித்து போலி பரப்புரை – மக்கள் நம்பத் தயாரில்லை என்கிறார் அமைச்சர் சந்திரசேகர் appeared first on Oruvan.com.