இந்தோனேசியா Archives - Oruvan.com

கெஹல்பத்தர பத்மே பிடிபட்டார் – இந்தோனேசியாவில் இலங்கை கும்பல் கைது
“கெஹெல்பத்தர பத்மே” எனப்படும் பத்மசிறி பெரேரா உட்பட, இலங்கையின் ஒரு பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேர் இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குழுவில் “கொமாண்டோ சாலிந்த, பாணந்துறை நிலங்க, பெக்கோ சமன்” மற்றும் “தெம்பிலி லஹிரு” ஆகிய பெயர்களில் அழைக்கப்படும் பாதாள உலக நபர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கூடுதலாக, கைது செய்யப்பட்டவர்களில் கும்பல் உறுப்பினரான “பெக்கோ சமன்” என்பவரின் மனைவியும் மூன்று வயது குழந்தையும் உள்ளடங்குவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் ஜகார்த்தா காவல்துறையின் சிறப்புக் குழு நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது இந்தக் கைதுகள் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எஃப்.யு.வுட்லர் தெரிவித்தார்.

The post கெஹல்பத்தர பத்மே பிடிபட்டார் – இந்தோனேசியாவில் இலங்கை கும்பல் கைது appeared first on Oruvan.com.

இந்தோனேசியா கல் குவாரியில் பாறைகள் சரிந்து 8 பேர் பலி – தேடுதல் பணி தீவிரம்
இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளில் செயல்பட்டு வந்த சுண்ணாம்பு கல் குவாரியில் பாறைகள் சரிந்ததில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

மேற்கு ஜாவா மாகாணத்தின் சிரேபன் நகரத்தில் செயல்பட்டு வந்த சுண்ணாம்பு கல் குவாரியில், இன்று (மே 30) காலை 9.30 மணியளவில் பாறைகள் சரிந்துள்ளன.

அப்போது, அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் மற்றும் ஏராளமான இயந்திரங்கள் பாறைகளுக்குள் புதைந்தன. இந்தச் சமபவத்தில் 8 தொழிலாளர்கள் பலியான நிலையில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்தச் சுரங்கம் சட்டப்படி உரிய அனுமதிகள் பெற்று இயங்கி வந்தாலும், அங்குப் போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லையென மேற்கு ஜாவா ஆளுநர் டெடி முல்யாடி கூறியுள்ளார்.

இதுகுறித்து, உள்ளூர் காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பாறைச்சரிவுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்; இதுவரை 8 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், படுகாயமடைந்துள்ள 12 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நிகழாண்டு (2025) துவங்கியதிலிருந்து அந்தச் சுரங்கம் 2வது முறையாக சரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் இந்தச் சுரங்கத்தின் சில பகுதிகள் சரிந்தன. இருப்பினும், அப்போது எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை என்பது உறுதியானது.

இதனைத் தொடர்ந்து, அந்தச் சுரங்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள குழிகள் அனைத்தும் நிரந்தரமாக மூடப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2024-ம் ஆண்டு சுலாவெசி தீவில் திடிரென ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கு சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த தங்கச் சுரங்கம் மண்ணுக்குள் புதைந்தது. இதில், 23 பேர் பலியானதுடன், 35 பேர் மாயமானது குறிப்பிடத்தக்கது.

The post இந்தோனேசியா கல் குவாரியில் பாறைகள் சரிந்து 8 பேர் பலி – தேடுதல் பணி தீவிரம் appeared first on Oruvan.com.

இந்தோனேசியாவில் சா்ச்சைக்குரிய இராணுவ சட்டம் நிறைவேற்றம்
இந்தோனேசிய ஆட்சியதிகாரத்தில் இராணுவத்தின் பங்கை அதிகரிக்கும் சா்ச்சைக்குரிய சட்டத்தை அந்த நாட்டு நாடாளுமன்றம் ஏகமனதாக நிறைவேற்றியது.

இந்த இராணுவ சட்டத்திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், இராணுவ அதிகாரிகள் தங்களது பதவிகளை இராஜிநாமா செய்யாமலேயே மேலும் பல அரசுப் பொறுப்புகளை வகிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதியும் முன்னாள் இராணுவ தலைமைத் தளபதியுமான பிரபாவோ சுபியாந்தோவுக்கு ஆதரவான கட்சிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்துக்கு அனைத்துக் கட்சிகளுமே ஆதரவு தெரிவித்தன.

இருந்தாலும், இந்தோனேசியாவின் மிகப் பலவீனமான ஜனநாயகத்துக்கு இந்த சட்டத் திருத்தம் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ஜனநாயக ஆதரவாளா்களும் மனித உரிமை ஆா்வலா்களும் அச்சம் தெரிவித்துள்ளனா்

The post இந்தோனேசியாவில் சா்ச்சைக்குரிய இராணுவ சட்டம் நிறைவேற்றம் appeared first on Oruvan.com.

வாகரை கடற்கரையில் ஆளில்லா இந்தோனேசியா நாட்டு படகு மீட்பு
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பால்சேனை கடற்கரையில் ஆளில்லா இந்தோனேசியா நாட்டு படகு ஒன்று கரையொதுங்கிய நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (31) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த படகு கடலில் மிதந்து வந்து கரையை அடைந்ததையடுத்து அதனை மீட்டுள்ளனர்.

The post வாகரை கடற்கரையில் ஆளில்லா இந்தோனேசியா நாட்டு படகு மீட்பு appeared first on Oruvan.com.