இந்திய மீனவர்கள் Archives - Oruvan.com

இந்திய மீனவர்கள் 7 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு
கடந்த மாதம் 13ம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 07 இராமேஸ்வரம் மீனவர்களையும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த மாதம் (ஓகஸ்ட்) 13 ஆம் திகதி நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்ட 07 தமிழக மீனவர்களும் இன்று யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போதே இவர்களது விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் கடந்தமாதம் 20 ஆம் திகதி நீதிமன்ற உத்தரவின்பேரில் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது 03.09.2025 வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்த நிலையில் அன்றையதினம் வழக்கினை எடுத்துக்கொண்ட நீதவான் நேற்றுவரை (17) விளக்கமறியல் நீடிக்கப்பட்டது. நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியவேளை இன்றுவரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.

மீண்டும் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது 7 மீனவர்களது விளக்கமறியலை 24ஆம் திகதிவரை நீடித்து நீதவான் உத்தரவை பிறப்பித்தார்.

The post இந்திய மீனவர்கள் 7 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு appeared first on Oruvan.com.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைதுகள் தொடரும் – அமைச்சர் சந்திரசேகர் எச்சரிக்கை
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைதுகள் தொடரும். படகுகள் பறிமுதல் செய்யப்படும். இது விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார் கடற்றொழில்,நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்.

கொழும்பில் நேற்று அமைச்சில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘இந்திய மீனவர்களின் அத்துமீறலானது எமது மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கே பாதகமாக அமைந்துள்ளது. இது தொடர்பில் இந்திய தரப்புக்கும் தெரிவித்திருந்தோம். கடந்த மூன்று மாதங்களாக இந்திய மீனவர்களின் பிரச்சினை இருக்கவில்லை. தற்போது மீண்டும் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைய ஆரம்பித்துள்ளனர். அவர்களை நாம் கைது செய்தோம்.

இந்திய மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் மயிலிட்டி துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளன. அவை அரசுடமையாக்கப்பட்டுள்ளன.

தமிழக மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறுவதை நிறுத்த வேண்டும். அவ்வாறு இல்லையேல் கைதுகள் தொடரும். படகுகள் பறிமுதல் செய்யப்படும். உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மீனவர் பிரச்சினை தொடர்பில் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கையிலும் இறங்கியுள்ளோம். கடற்படைக்கு கூடுதல் வளங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தடுத்து நிறுத்தப்படும். இலங்கை கடற்படையினர் மிகவும் கட்டுக்கோப்பாகவே நடந்துவருகின்றனர்.

இந்திய மீனவர்களின் ரோலர் படகுகளால்தான் இலங்கை கடல்வளம் நாசமாக்கப்பட்டுள்ளது. இந்நிலைமை தொடர்ந்தால் இலங்கை கடற்பரப்பு கடல் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.” – என்றார்.

The post இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைதுகள் தொடரும் – அமைச்சர் சந்திரசேகர் எச்சரிக்கை appeared first on Oruvan.com.

இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கடற்படைக்கு ஆலோசனை
இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கும், மீன்பிடி என்ற போர்வையில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல்களை முறியடிப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கடற்படையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சுக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நாடாளுமன்ற வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, இரு அமைச்சுகளினதும் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கடற்படை தளபதி உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

காணிப்பிரச்சினை, மீன்பிடி துறைமுகங்களில் நிலவும் பிரச்சினைகள், தடைசெய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் விவகாரம்,  போதைப்பொருள் கடத்தல் மற்றும் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறுவது உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

மேற்படி பிரச்சினைகளுக்குரிய தீர்வுகள் பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு மத்தியிலேயே போதைப்பொருள் கடத்தலும் இடம்பெறுகின்றது. எனவே, இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கும், இலங்கை கடல் வளத்தை பாதுகாப்பதற்கும் தேவையான அனைத்து வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு இக்கூட்டத்தின் கடற்படையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

The post இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கடற்படைக்கு ஆலோசனை appeared first on Oruvan.com.

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்த 17 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 17 இந்திய மீனவர்களை இன்று செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை கைது செய்த கடற்படையினர், குறித்த மீனவர்களையும் படகுகளையும் தலைமன்னார் கடற்படையிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 17 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உற்படுத்தி வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர்.

இதேவேளை மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் தங்கச்சி மடம் கிராமத்தில் இந்த ஆண்டு நத்தார் பண்டிகை கருப்பு நத்தாராக மாறி விட்டதாக சோகத்துடன் கூறும் மீனவர்களின் உறவினர்கள், மீனவர்களை உடனடியாக விடுதலை செய்து தாயகம் அழைத்து வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று (23) திங்கட்கிழமை 400க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப் படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

மீனவர்கள் இரவு சுமார் 12:30 மணி அளவில் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பூண்டி ராஜ் மற்றும் ஆரோன் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசை படகையும் அதிலிருந்து 17 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட 17 மீனவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களான எட்டுப் பேர் உள்ளடங்குகின்றனர். இதனால் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் வீட்டில் குழந்தைகளுக்கு புத்தாடை வாங்கவும், நத்தார் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக நேற்று (23) மாலை மூன்று மணிக்கு மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களை இரவு 12 மணிக்கு இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

இதனால் நாளை நத்தார் பண்டிகை எங்களுக்கு கருப்பு நத்தாராக மாறிவிட்டதாகவும் உடனடியாக மீனவர்களை விடுதலை செய்து தாயகம் அனுப்பி வைக்குமாறு சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

குறித்த மீனவர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்

The post இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்த 17 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது appeared first on Oruvan.com.