இந்தியப் பிரதமர் மோடி Archives - Oruvan.com

இந்தியப் பிரதமர் மோடியின் வருகைக்கான சிறப்பு போக்குவரத்துத் திட்டம் தயார்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை இலங்கைக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ளவிருப்பதால் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பொதுமக்களின் சிரமத்தைக் குறைப்பதற்கும் பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ச்சியான சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகளைச் செயல்படுத்தியுள்ளனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, இன்று (ஏப்ரல் 4) மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பேஸ்லைன் சாலையில் அவ்வப்போது பாதை மூடல்கள் அமலில் இருக்கும்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) செல்லும் அல்லது வருகைதரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், நாளை ஏப்ரல் 5 ஆம் திகதி, காலி முகத்திடல், சுதந்திர சதுக்கம் மற்றும் பத்தரமுல்லையில் உள்ள ‘அபே கம’ வளாகத்தைச் சுற்றி சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் அமலில் இருக்கும்.

வாகன சாரதியை மாற்று வழிகளை நோக்கி வழிநடத்தவும், பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கவும் இந்தப் பகுதிகளில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் நிறுத்தப்படுவார்கள்.

ஏப்ரல் 6 ஆம் திகதி, அனுராதபுரம் நகரம், ரயில் நிலைய பாதை மற்றும் புனித ஜெய ஸ்ரீ மகா போதியாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 7:30 மணி முதல் காலை 10:30 மணி வரை பாதை மூடலுடன் சிறப்பு போக்குவரத்து திட்டமும் செயல்படுத்தப்படும்.

அதன்படி, polisaar மேற்கொள்ளும் போக்குவரத்து ஏற்பாடுகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

The post இந்தியப் பிரதமர் மோடியின் வருகைக்கான சிறப்பு போக்குவரத்துத் திட்டம் தயார் appeared first on Oruvan.com.