ஆளுநர் நா.வேதநாயகன் Archives - Oruvan.com

பலாலியில் முக்கிய சந்திப்பு: யாழ். கட்டளைத் தளபதியைச் சந்தித்தார் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் டி.சில்வா மற்றும் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று மாலை பலாலியில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின்போது, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகள் கட்டம்கட்டமாக விடுவிக்கப்பட்டமைக்காக ஆளுநர் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

அத்துடன், தொடர்ந்தும் விடுவிக்கப்படாதுள்ள ஏனைய காணிகளை பொதுமக்களின் பாவனைக்காக விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், வடமாகாண மாணவர்களிடையே தேசிய மாணவர் படையணியின் செயற்பாடுகளை ஊக்குவிப்பது தொடர்பில் ஆளுநர் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு கட்டளைத் தளபதி பாராட்டுத் தெரிவித்தார்.

மாணவர்களிடையே சிறுவயதிலிருந்தே ஒழுக்கம் மற்றும் தலைமைத்துவப் பண்புகளை வளர்க்க இந்த முன்னெடுப்பு உதவும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். இச்சந்திப்பில் இரு தரப்பு உயரதிகாரிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

The post பலாலியில் முக்கிய சந்திப்பு: யாழ். கட்டளைத் தளபதியைச் சந்தித்தார் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் appeared first on Oruvan.com.

அநுர ஆட்சியில் பாதுகாப்பு உறுதி ; வடக்கில் முதலீடு செய்ய வாருங்கள்
“கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் முதலீடுகளைச் செய்ய வந்தவர்கள், சாதகமற்ற சூழல் காரணமாகத் திரும்பிச் சென்றதே வரலாறாக இருந்தது. ஆனால், தற்போதைய அரசின் ஆட்சிக்காலத்தில் முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் உருவாகியிருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் ‘வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026’ நடைபெறுகின்றமை மிகப் பொருத்தமானது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு, தேசிய மொத்த உற்பத்திக்கான வடக்கின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்ய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.”

இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண வரலாற்றில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026’ யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தில் இன்று புதன்கிழமை காலை மிகப் பிரமாண்டமாக ஆரம்பமானது. இந்த மாநாட்டை ‘த மனேஜ்மன்ட் கிளப்’ – இலங்கை ஒழுங்கமைத்திருந்தது.

மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர்,

“வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மாநகரில் நடைபெறும் இந்த நிகழ்வானது வெறும் ஒரு மாநாடு மட்டுமல்ல, வடக்கு மாகாணத்தின் ஒரு தீர்க்கமான மற்றும் மூலோபாயத் திருப்புமுனையை நாம் அனைவரும் ஒன்றுகூடிச் சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

இயற்கை வளங்கள், மீளெழும் வல்லமை கொண்ட மனித மூலதனம் மற்றும் ஆழமான கலாச்சாரப் பாரம்பரியம் ஆகியவற்றைக் கொண்டுள்ள போதிலும், நீண்ட காலமாக இம்மாகாணம் எமது நாட்டின் தேசிய மொத்த உற்பத்தியில் மிகக் குறைந்தளவான பங்களிப்பையே வழங்கி வந்துள்ளது. இன்று, ‘வளர்ச்சியை வலுவூட்டல், நுண்ணறிவு மிக்க புத்தாக்கங்கள்’ என்ற தொனிப்பொருளின் கீழ், அந்த வரலாற்றை மாற்றியமைக்கும் பணியை நாம் ஆரம்பிக்கின்றோம்.

இலங்கை, பொருளாதார மீட்சியிலிருந்து நீண்டகால நிலையான வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கத் தயாராகும் இத்தருணத்தில், இந்நிகழ்வானது மிகச் சரியான நேரத்தில் நடைபெறுகின்றது. எந்தவொரு மாகாணமும் பின்தங்கிவிடக் கூடாது என்ற அடிப்படையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ‘அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரம்’ என்ற தூரநோக்குப் பார்வை மற்றும் வழிகாட்டலின் கீழேயே இம்முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது.

எமது வரலாற்றைத் திரும்பிப் பார்க்கையில், வடக்கு மாகாணமானது எப்போதும் ‘சிறப்புக்கான ஒரு நுழைவாயிலாக’ திகழ்ந்து வந்துள்ளது. அந்தப் பெருமையை மீட்டெடுப்பதே இந்த உச்சிமாநாட்டின் நோக்கமாகும்.

விவசாயம் மற்றும் கடற்றொழில், சுற்றுலாத்துறை, கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பம், மற்றும் வலுசக்தி ஆகிய நான்கு மூலோபாயத் தூண்களில் கவனம் செலுத்துவதன் மூலம், எமது இளைய சமூகத்தின் திறமையையும், மூத்தவர்களின் அனுபவத்தையும், சர்வதேச மூலதனம் மற்றும் புத்தாக்கங்களுடன் இணைப்பதற்கான ஒரு வரைபடத்தை நாம் உருவாக்குகின்றோம்.

இன்று மேற்கொள்ளப்படும் முதலீடுகள், வடக்கு மாகாணத்தின் ஒவ்வொரு பிரஜைக்கும் நிலையான வேலைவாய்ப்புகள், துடிப்பான தொழில் முயற்சிகள் மற்றும் செழிப்பானதொரு எதிர்காலத்தை உருவாக்குவதை உறுதி செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம்.” – என்றார் ஆளுநர்.

விருந்தினர்கள் மங்கல வாத்தியங்களுடன் விழா மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் மங்கல விளக்கேற்றப்பட்டது. வரவேற்புரையை ‘த மனேஜ்மன்ட் கிளப்’ – இலங்கைத் தலைவர் ரோஜர் தலயரத்னவும், உச்சிமாநாட்டின் நோக்கம் மற்றும் அறிமுக உரையை மாநாட்டின் செயற்றிட்டத் தலைவர் இந்திக கௌசால் ராஜபக்ஷவும் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், இலங்கைக்கான பிரிட்டன் மற்றும் மலேசிய உயர்ஸ்தானிகர்கள், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி, தென்னிந்தியாவுக்கான இலங்கையின் பிரதித் தூதுவர், பிரதமரின் செயலாளர், இலங்கை முதலீட்டுச் சபை, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் தேசிய தொழில் முயற்சி அதிகார சபை ஆகியவற்றின் தலைவர்கள், வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், மாவட்டச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

The post அநுர ஆட்சியில் பாதுகாப்பு உறுதி ; வடக்கில் முதலீடு செய்ய வாருங்கள் appeared first on Oruvan.com.

சட்டவிரோத கட்டடங்களை இடியுங்கள் – வடக்கு ஆளூநர் உத்தரவு
பருவகால மழை ஆரம்பமாவதற்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட வெள்ளவாய்க்கால்கள் மற்றும் மதகுகளை துப்புரவு செய்யும் பணிகளை ஆரம்பிக்கவேண்டும் எனவும் அதேபோல கடந்த ஆண்டு வெள்ள இடர் பாதிப்புக்களை கவனத்திலெடுத்து அவற்றை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுடனான மாதாந்தக் கலந்துரையாடல் என்பன வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினமும் புதன்கிழமை நடைபெற்றது.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர்,

அமைக்கப்படும் வீதிகளின் தரம் தொடர்பில் திணைக்களத் தலைவர்கள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். அது தொடர்பில் திணைக்களத் தலைவர்கள் நேரடியாகச் சென்று வேலைத் திட்டங்களை நேரடியாகப் பார்வையிட வேண்டும். மக்களின் தேவைகளின் அடிப்படையில் வீதித் திருத்தங்களை முன்னுரிமைப்படுத்த வேண்டும்.

அதேபோன்று, திணைக்களங்களுக்கு அனுப்பப்படும் கடிதங்களுக்கு பதிலளிக்க ஒரு மாத காலங்கள் எடுத்துக்கொள்ளும் நிலை காணப்படுகிறது. அது தவறான செயற்பாடு. அன்றன்றே கடிதங்களுக்கு பதிலளிக்க வேண்டும்.

அத்துடன் திணைக்களத் தலைவர்கள் தங்கள் திணைக்களங்களின் கீழான விவரங்கள் தொடர்பில் விரல் நுனியில் தரவுகளை வைத்திருக்க வேண்டும். திணைக்களத் தலைவர்கள் மக்களின் மனங்களை வெல்லும் வகையில் தங்கள் சேவைகளை ஆற்ற வேண்டும்.

எமது மாகாணத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்தியின் எதிர்பார்ப்பும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவேண்டும் என்பதே, அதனை விடுத்து கட்டடங்கள் கட்டுவதாலோ அல்லது வீதிகள் அமைப்பதாலோ மாத்திரம் பயனில்லை.

உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் வருமானத்தை அதிகரிப்பது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் செயற்பட வேண்டும். அத்துடன் சோலை வரி மீளாய்வை அனைத்துச் சபைகளும் செய்து முடிக்க வேண்டும்.

இதனைத் தொடர்ந்து, உள்ளூராட்சி அமைச்சு, உள்ளூராட்சித் திணைக்களம், ஒவ்வொரு மாவட்டத்தினதும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள் அலுவலகம், மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களம், வீதி அபிவிருத்தித் திணைக்களம், சுற்றுலா அதிகார சபை, வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை என ஒவ்வொரு திணைக்களங்களினதும் ஒவ்வொரு திட்டங்களினதும் முன்னேற்றங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டன.

The post சட்டவிரோத கட்டடங்களை இடியுங்கள் – வடக்கு ஆளூநர் உத்தரவு appeared first on Oruvan.com.

வடக்கில் ஒவ்வொரு ஆண்டும் பாடசாலைகள் மூடப்பட்டு வருகின்றன – ஆளுநர் நா.வேதநாயகன்
வடக்கில் ஒவ்வொரு ஆண்டும் பாடசாலைகள் மூடப்பட்டு வருகின்றன. தரம் 1 அனுமதிக்காக வரும் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது. இது எமக்கு ஆபத்தான நிலைமை. அனைவரும் இதனைக் கவனத்திலெடுக்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்  கோரிக்கைவிடுத்தார்.

குரும்பசிட்டி பொன்.பரமானந்தர் மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும், ‘பரமானந்தம்’ மலர் வெளியீடும் பாடசாலை அதிபர் க.வசந்தரூபன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பரமானந்தம் நூலை வெளியிட்டு வைத்த ஆளுநர், முன்னாள் அதிபர்களுக்கு நினைவுப்பரிசில்களையும் வழங்கி கௌரவித்தார். அத்துடன் மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

ஆளுநர் தனது பிரதம விருந்தினர் உரையில், போரால் இந்தப் பிரதேசங்கள் பாதிக்கப்பட்டது மாத்திரமல்ல இந்தப் பாடசாலையும் பாதிக்கப்பட்டது. பல குடும்பங்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைமையும் ஏற்பட்டது. மீள்குடியமர்ந்த பின்னர் இந்தப் பாடசாலையை முன்னேற்றுவதென்பது கடினமானதுதான். ஆனால் அதைச் செய்துள்ளார்கள்.

பாடசாலைகளின் வளர்ச்சி அந்தப் பாடசாலையின் அதிபரின் கையில்தான் தங்கியிருக்கின்றது. பாடசாலை அதிபரின் தலைமைத்துவத்துக்கு பழைய மாணவர்கள், புலம்பெயர்ந்துள்ள பழைய மாணவர்கள், பெற்றோர்கள் எல்லோரும் ஒத்துழைப்புக் கொடுத்திருக்கின்றீர்கள். அவர்களைப் பாராட்டுகின்றேன். அதேபோல பாடசாலையின் தலைமைத்துவமும் ஏனையோர் நம்பிக்கைகொள்ளும்படியாக வெளிப்படைத்தன்மையுடன் இருந்தமையால்தான் இவ்வளவும் சாத்தியமாகியிருக்கின்றது.

ஒரு பாடசாலையின் வளர்ச்சி என்பது கல்வியின் தரத்தை உயர்த்துவது மாத்திரமல்ல, மாணவர்களின் பண்புகளையும் மேம்படுத்துவதில்தான் தங்கியிருக்கின்றது. இங்கு கற்கின்ற மாணவர்கள் எதிர்காலத்தில் இந்தப் பிரதேசத்தின் வளர்ச்சிக்காக பங்காற்றவேண்டும்.

இன்றும் எங்கள் இளம் சமூகத்திடம் வெளிநாட்டு மோகம் தொடர்ந்தும் இருக்கின்றது. இங்கிருந்து முன்னேறுவோம் என்ற எண்ணம் இல்லை. வடக்கில் உள்ளதைப்போன்று வளங்கள் வேறு எங்கும் இல்லை. இப்படியான வளங்கள் இருந்தும் நாம் அதனைப் பயன்படுத்தவில்லை. முல்லைத்தீவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை அண்மையில் நான் கௌரவித்திருந்தேன். அவர்கள் விவசாயத்தில் சாதித்தவர்கள். அவர்கள் இங்கிருந்து தம்மால் மிகச் சிறந்த தொழில்முனைவோராக வரமுடியும் என்று கூறினார்கள். அப்படி இங்கிருந்து சாதிக்க இளையோர் எதிர்காலத்தில் முனையவேண்டும், என்றார் ஆளுநர்.

இந்த நிகழ்வில், வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஜமுனா ராஜசீலன், வலி. வடக்கு பிரதேச செயலர் திருமதி சிவகெங்கா சுதீஸ்னர் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும், தெல்லிப்பழை கோட்டக் கல்விப் பணிப்பாளர் வே.அரசசேகரி, ஓய்வுபெற்ற உள்ளூராட்சி உதவி ஆணையாளர் வ.கிருஷ;ணசாமி ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.

The post வடக்கில் ஒவ்வொரு ஆண்டும் பாடசாலைகள் மூடப்பட்டு வருகின்றன – ஆளுநர் நா.வேதநாயகன் appeared first on Oruvan.com.

வடக்கில் ‘பால்நிலை கொள்கை ஆவணம்’ – ஆளுநர் வேதநாயகன் உத்தரவு
வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சால், வடக்கு மாகாணத்துக்குரிய ‘பால்நிலை கொள்கை ஆவணம்’ தயாரிக்கப்பட்டு வருகின்றது.

இந்தக் கொள்கை வரைவை முன்வைத்து அது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (25.02.2025) இடம்பெற்றது.

வடக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் அமைச்சுக்களினதும் செயலாளர்கள் ஆகியோரும், இந்த வரைவு ஆவணத்தை உருவாக்கிய நிறுவனத்தின் ஆலோசகர் மற்றும் ஐ.எல்.ஓ. நிறுவனப் பிரதிநிதிகளும் இந்தக் கலந்துரையாடலில் நேரடியாகப் பங்கேற்றதுடன், வடக்கின் 5 மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர் சார்பான பிரதிநிதிகள் ‘சூம்’ வழியாக இணைந்து கொண்டனர்.

இந்த வரைவு ஆவணம் இறுதிப்படுத்தப்பட்டு எதிர்வரும் 7ஆம் திகதி வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலர் பொ.வாகீசன் தெரிவித்தார்.

The post வடக்கில் ‘பால்நிலை கொள்கை ஆவணம்’ – ஆளுநர் வேதநாயகன் உத்தரவு appeared first on Oruvan.com.

தங்கள் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றனர் மக்கள் – தென்னிலங்கை சிவில் சமூகத்தினரிடம் வடக்கு ஆளுநர் தெரிவிப்பு
“இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்கக் கோரவில்லை. அவர்களின் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றார்கள் என்ற தெளிவுபடுத்தலை தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லுமாறு என்னைச் சந்தித்த தென்னிலங்கையைச் சேர்ந்த சிவில் சமூகக் குழுக்களிடம் தெரிவித்துள்ளேன்.”

– இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வயாவிளான், பலாலி தெற்கு, பலாலி கிழக்கு மக்களின் அழைப்பின் பேரில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடலும், பூனையன்காடு இந்து மயானத்தில் மர நடுகையும் நேற்று புதன்கிழமை காலை வயாவியானில் நடைபெற்றது.

அந்தப் பிரதேச மக்கள் சார்பில் கருத்துத் தெரிவித்த உ.சந்திரகுமாரன், “வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் இந்த மண்ணை நேசிக்கும் ஒருவர். நாம் தற்போது எடுத்தோம் கவிழ்த்தோம் எனச் செயற்பட முடியாது. கட்டம் கட்டமாக எமது காணிகளை விடுவிக்க ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என நாம் முழுமையாக நம்புகின்றோம். பலாலி வீதியில் வசாவிளான் சந்தி வரையான வீதி விடுவிக்கப்படும் என நாம் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால், இந்த அரசின் காலத்தில் ஆளுநரின் கோரிக்கையால் அது நடைபெற்றது. அதேபோன்று ஏனைய இடங்களும் நாம் எதிர்பாராத நேரத்தில் விடுவிக்கப்படும் என நம்புவோம். அரசியல் கலப்பற்று ஒற்றுமையாக இது நடைபெறவேண்டும். அதைவிட எமது விடுவிக்கப்பட்ட பகுதிகளில் எம் முன்னோர்கள் நினைவாக மரங்களை நட்டு பசுமைத் தேசமாக மாற்றுவோம்.” – என்றார்.

இதன் பின்னர் உரையாற்றிய வடக்கு ஆளுநர்,

“2015ஆம் ஆண்டு காலத்தில் யாழ். மாவட்ட செயலராக நான் இருந்தபோது படிப்படியாக பல பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டன. விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்கள் குடியமரவில்லை எனப் பாதுகாப்புத் தரப்பினர் எங்களுக்கு திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் வீட்டுத் திட்டங்களை நாம் நடைமுறைப்படுத்தினோம். மக்களும் எதிர்பார்த்ததைப்போன்று மீள்குடியமர்ந்தார்கள். 2018ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தைத் தொடர்ந்து காணி விடுவிப்புக்கள் நடைபெறவில்லை.

இந்த ஆண்டு சிறிய அளவில் காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. விடுவிக்கப்பட்ட காணிகளை விவசாயபூமியாக மாற்றுவதுதான் நீங்கள் எங்களுக்கு செய்யும் உதவி.

இடம்பெயர்ந்தவர்களின் வலி எனக்கும் தெரியும். நானும் இடம்பெயர்ந்த ஒருவன்தான். தற்போது யாழ். மாவட்ட இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள யஹம்பத் நேர் சிந்தனையுடைய ஒருவர். எனவே, இந்த அரசின் காலத்தில் படிப்படியாக காணிகளை விடுவிக்க முடியும் என நம்புகின்றோம்.

இங்கு காணிகள், வீதிகள் விடுவிக்கப்பட்டதும் தென்னிலங்கையிலிருந்து சில தேவையற்ற கருத்துக்கள் வெளியிடப்பட்டு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. தென்னிலங்கை மக்களுக்கு இங்கு நடைபெறுவது என்ன என்ற உண்மையைத் தெளிவுபடுத்துமாறு என்னைச் சந்தித்த தென்னிலங்கையை சேர்ந்த சிவில் சமூகக் குழுக்களிடம் தெரிவித்திருக்கின்றேன். வடக்கு மக்கள் எல்லோருக்கும் எதிர்பார்ப்பு இருக்கின்றது என்பது எனக்குத் தெரியும். விரைவில் சாதகமான விடயங்கள் நடக்கும் என நம்புகின்றேன்.” – என்றார்.

இதன் பின்னர் அந்தப் பிரதேசத்தில் வடக்கு ஆளுநரால் மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன.

இந்த நிகழ்வில் தெல்லிப்பழை பிரதேச செயலர், வலிகாமம் வடக்கு பிரதேச சபை செயலர், தெல்லிப்பழை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வை வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும்கரங்கள் மற்றும் பூனையன்காடு இந்து மயான அபிவிருத்திச் சபை என்பன ஒழுங்குபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post தங்கள் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றனர் மக்கள் – தென்னிலங்கை சிவில் சமூகத்தினரிடம் வடக்கு ஆளுநர் தெரிவிப்பு appeared first on Oruvan.com.