ஆனந்த விஜயபால Archives - Oruvan.com

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள குழுக்களுக்கு அரசாங்கத்தின் எச்சரிக்கை
வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள குழு உறுப்பினர்களை நாட்டுக்கு அழைத்துவந்து, சட்டத்தின் முன் நிறுத்துவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

அரசாங்க தொலைக்காட்சிக்கு நேற்றிரவு வழங்கிய செவ்வியில் அவர்  இந்த தகவலை வெளியிட்டார்.

“216 பேருக்கு எதிராக சிவப்பு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பாதாள குழுவை சேர்ந்தவர்கள் அல்லர். சுமார் 82 பேரே பாதாள குழுவுடன் தொடர்புடையவர்கள்.

பாதாள குழுவை சேர்ந்தவர்களில் 17 பேர் இதுவரையில் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்” எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாதாள குழுவை சேர்ந்தவர்களில் அதிகளவானோர் துபாயிலேயே இருக்கின்றனர். சிலர் வெளிநாட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  இவர்களை அழைத்து வருவதற்கான இராஜதந்திர நடவடிக்கையும் இடம்பெறுகின்றது.

இந்தோனேசியாவில் முன்னெடுக்கப்பட்டது போலவே எதிர்காலத்தில் நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு வெளிநாடுகளில் பதுங்கி வாழ்வதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். அவர்கள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.

இதற்கு நீதி அமைச்சின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற்றுவருகின்றது.” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார்.

The post வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள குழுக்களுக்கு அரசாங்கத்தின் எச்சரிக்கை appeared first on Oruvan.com.

500 கோடி ரூபா பெறுமதியான சொத்துகள் முடக்கம் – அரசாங்கம் அறிவிப்பு
இந்த ஆண்டில் இதுவரையில் சுமார் 500 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் தற்காலிக அடிப்படையில் முடக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

இவ்வாறு முடக்கப்பட்ட சொத்துக்களில் சில அரசியல்வாதிகளின் சொத்துக்களும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட குற்றச் செயல்களின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்களை முடக்கும் சட்டத்தின் அடிப்படையில் இந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன்படி, திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக்குழு உறுப்பினர்களது என சந்தேகிக்கப்படும் சொத்துக்களே அதிகளவில் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களது சொத்துக்களை பொறுப்பேற்று பராமரிப்பதற்காக விசேட அதிகார சபையொன்றை உருவாக்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post 500 கோடி ரூபா பெறுமதியான சொத்துகள் முடக்கம் – அரசாங்கம் அறிவிப்பு appeared first on Oruvan.com.