அல் ஜசீரா Archives - Oruvan.com

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவது தடுக்கப்பட்டது – அல் ஜசீராவுக்கு ரணில் நேர்காணல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) நிலைப்பாட்டை விமர்சித்ததுடன், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு தன்னைப் பாராட்டுவதற்கு முன்பு அவர்கள் முதலில் தன்னை பதவி நீக்கம் செய்ய முயற்சித்ததாகக் கூறினார்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் ஆறு முறை பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க சவுதி அரேபியாவை தளமாக் கொண்ட அல் ஜசீராவில் வியாழக்கிழமை (06) மாலை ஒளிபரப்பான அல் ஜசீராவின் ஹெட் டு ஹெட் நிகழ்ச்சியில் பிரிட்டிஷ் ஒளிபரப்பாளர் மெஹ்தி ஹசனுடன் ஒரு பரபரப்பான நேர்காணலில் பங்கெடுத்தார்.

இதன்போதே ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தைக் கூறினார்.

இந்த நேர்காணலின் போது அவர்,

பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வழக்குத் தொடுப்பிலிருந்து பாதுகாக்கவில்லை என்று மறுத்தார்.

2019 ஆம் ஆண்டு இலங்கையை உலுக்கிய கொடிய பயங்கரவாத தாக்குதல்களுடன் அரசாங்க தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படுவதை நம்பகத்தன்மையுடன் விசாரிக்க தனது சொந்த நிர்வாகம் தவறிவிட்டது என்ற புதுப்பிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்தார்.

இலங்கையின் உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து போர்க்குற்ற விசாரணைகளை அரசாங்கம் கையாண்ட விதம் மற்றும் 1980 களின் பிற்பகுதியில் அவரது கண்காணிப்பின் கீழ் செய்யப்பட்ட சித்திரவதை குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சூடான விவாதம் இந்த நேர்காணலில் இடம்பெற்றது.

2022 ஆம் ஆண்டு வெகுஜன போராட்டங்களைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு அளித்தீர்களா என்று இங்கு ஊடகவியலாளரினால் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, என் நாட்டில் வழக்குத் தொடருவது குறித்து முடிவெடுப்பது சட்டமா அதிபர் தான், அவர் ஒரு அரசியல் பிரமுகர் அல்ல – நாங்கள் அவருக்கு முன் ஆதாரங்களை மட்டுமே அனுப்ப முடியும் என்றார்.

கோட்டாபய மற்றும் அவரது சகோதரரான முன்னாள் பிரதமர் மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருவரும் ஊழல் மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகவும், நாட்டை பெரும் நிதி நெருக்கடியில் தள்ளியதாகவும் பரவலாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

2022 ஆம் ஆண்டு விக்கிரமசிங்கே ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர், கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்யாமல் நாட்டிற்குள் திரும்ப அனுமதித்தது குறித்தும் இங்கு கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, அவர்கள் மீண்டும் நாட்டுக்குள் உள்ளே வரலாம். அவர்கள் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. நான் எப்படி அதை செய்ய முடியும்? நான் ஒரு சர்வாதிகாரியா? – என்றார்.

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் தொடர்புடைய “பிற சக்திகளை” ஐ.எஸ்.ஐ.எஸ்-சார்புடைய அமைப்பால் நடத்தப்பட்டதாக கத்தோலிக்க திருச்சபையின் புதிய குற்றச்சாட்டுகள் குறித்தும் ஊடகவியலாளர் ஹசன் இதன்போது வினவினார்.

அதற்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க, இந்தக் குற்றச்சாட்டுகளை “அனைத்தும் முட்டாள்தனம்” என்றும் “கத்தோலிக்க திருச்சபையின் அரசியலுக்கு” ஒரு எடுத்துக்காட்டு என்றும் கூறினார்.

இலங்கையில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் முட்டாள்தனமாகப் பேசுகிறாரா?” என்று ஹசன் மறுபடியும் வினவினார்.

அதற்கு “ஆம்,” என ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

2019 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க, உள்ளூர் கார்டினல் மெல்கம் ரஞ்சித்தின் பொது அறிக்கைகளுக்கும், தொலைக்காட்சி பதிவுக்கு முன்பு அல் ஜசீராவின் தலைமை குழுவிற்கு கார்டினல் தெரிவித்த பிரத்யேக கருத்துக்களுக்கும் பதிலளித்தார்.

அல் ஜசீராவுடனான தொலைபேசி அழைப்பில், உண்மையிலேயே சுயாதீனமான விசாரணைக்கான திருச்சபையின் கோரிக்கையை விக்ரமசிங்கே கவனிக்கத் தவறிவிட்டார் என்றும், விக்ரமசிங்கவின் ஜனாதிபதி காலத்தில் முந்தைய விசாரணை மற்றும் அறிக்கை “அது எழுதப்பட்ட காகிதத்திற்கு மதிப்புக்குரியது அல்ல” என்றும் மெல்கம் ரஞ்சித் கூறியிருந்தார்.

இலங்கையின் உள்நாட்டுப் போருக்கு உண்மை மற்றும் சமரசம் குறித்து ஹசன், விடுதலைப் புலிகள் (LTTE) பக்கம் திரும்பியபோது, ​​2009 இல் முடிவடைந்த மோதலில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு நீதி வழங்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, இல்லை. எந்த சமூகத்திற்கும் நீதி இதுவரை வழங்கப்படவில்லை – என்றார்.

அத்துடன், போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் தடுக்கப்பட்டதையும், சில மருத்துவமனைகள் குண்டுத் தாக்குதல்களில் தாக்கப்பட்டத்தையும் அவர் ஒப்புக் கொண்டார், ஆனால் அத்தகைய குண்டுவெடிப்புகள் முறையாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டவை என்பதை மறுத்தார்.

ஐ.நா. குழுவின் கூற்றுப்படி, இலங்கை அரசாங்கப் படைகள் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதைத் தடுத்தன என்று ஹசன் கூறினார்.

அது தொடர்பில் பதிலளித்த போரின் இறுதிக் கட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்ரமசிங்கே, அது நடந்தது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் – என்றார்.

அமெரிக்க வெளிவிகாரத் துறை போர்க்குற்றங்கள் செய்ததாக குற்றம் சாட்டும் ஜெனரல் சவேந்திர சில்வாவை, ஜனாதிபதியாக மீண்டும் இலங்கையின் ஆயுதப் படைகளுக்குத் தலைவராக நியமித்ததற்கான காரணம் குறித்தும் ரணில் விக்ரமசிங்க இதன்போது தெளிவுபடுத்தினார்.

ஒரு தேர்தலின் போது இராணுவத் தளபதிகளை மாற்றக்கூடாது என்பது ஒரு நடைமுறை, நான் பொறுப்பேற்றபோது, ​​அதைச் சரிபார்த்தேன், ஜெனரல் சில்வா அதில் (போர்க் குற்றங்களில்) ஈடுபடவில்லை என்பதில் நான் திருப்தி அடைந்தேன் என்று அவர் மேலும் கூறினார்.

1980களின் பிற்பகுதியில் ஒரு அமைச்சராக தாம் வசித்து வந்த படலந்த என்ற வீட்டுத் தொகுதியில் சட்டவிரோத தடுப்புக்காவல், சித்திரவதை மற்றும் கொலைகள் நடந்ததாக ரணில் விக்ரமசிங்க அறிந்திருந்ததாக அரசாங்க விசாரணை ஆணையகம் கூறிய குற்றச்சாட்டுகளையும் முன்னாள் ஜனாதிபதி இதன்போது மறுத்தார்.

ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், காலி முகத்திடலில் போராட்டக்காரர்களை கையாண்ட விதம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து வந்த விமர்சனங்கள் குறித்து ரணில் விக்கிரமசிங்கேவிடம் இங்கு கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், ​​ஐரோப்பிய ஒன்றியம் சில நிறுவனங்களுக்கு நிதியளித்து, எனது இராஜினாமாவைக் கோரியது, அதன் பின்னரே அதே ஒன்றியம் இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்த மனிதராக என்னைப் பாராட்டியது” என்று கூறினார்.

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் மற்றும் நிதி நெருக்கடிகளில் ஒன்றின் மத்தியில் 2022 இல் நாடாளுமன்றத்தால் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, 2024 தேர்தல் தோல்வியை சந்தித்தார்.

இருந்தாலும் தனது ஜனாதிபதி பதவிக் காலத்தில் மேற்கொண்ட செயல்கள் தொடர்பில் அவர் இந்த நேர்காணலில் பெருமிதம் கொண்டார்.

இரண்டு ஆண்டுகளில், நான் பொருளாதாரத்தை மீண்டும் பாதையில் கொண்டு வந்தேன். அதாவது பணவீக்கக் குறைப்பு, சுருக்கம். இது மிக மிக கடினம்.

“நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் எனக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை செய்தேன்,” என்று கூறினார்.

‍மேலும், ஜனாதிபதியாக அவர் மத்தியஸ்தம் செய்த ஒரு முக்கிய சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஒப்பந்தத்தை மேற்கொள்ளிட்டு “தான் ஜனாதிபதி பதவியை ஏற்கவில்லை என்றால், நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்கும்” – என்று சுட்டிக்காட்டினார்.

The post போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவது தடுக்கப்பட்டது – அல் ஜசீராவுக்கு ரணில் நேர்காணல் appeared first on Oruvan.com.

இஸ்ரேல் மீது ஏமன் ஹூதிகள் மீண்டும் தாக்குதல்
இஸ்ரேல் மீது ஏமன் ஹூதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். மத்திய இஸ்ரேலை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

திங்களன்று இஸ்ரேல் மீது ஹைப்பர்சோனிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக ஹூதிகளின் செய்தித் தொடர்பாளர் யாஹ்யா ஜாரி தெரிவித்துள்ளார்.

காசா பகுதியில் பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் கொன்று குவித்ததற்கு எதிராக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், ஏமனில் இருந்து ஹூதிகள் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலை திறம்பட முறியடித்ததாக இஸ்ரேலிய அதிகாரிகள் அறிவித்தனர். ஏவுகணை தாக்குதல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் இஸ்ரேல் தரப்பு கூறியுள்ளது.

காசாவில் ஐ.நா.வால் நடத்தப்படும் பாடசாலை மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியது. தெற்கு காசாவில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முன், Beit Hanoun, Deir al Balah மற்றும் நுஸ்ரெட் போன்ற அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 60 பேர் பலியாகியுள்ளனர். இதேவேளை, பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45,000ஐ தாண்டியுள்ளது.

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 45,028 பேர் பலியாகியுள்ளனர். தாக்குதல்களில் 106,962 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதிக்கு பின்னர் இடம்பெற்ற தாக்குதல்களில் இத்தனை பேர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்.

The post இஸ்ரேல் மீது ஏமன் ஹூதிகள் மீண்டும் தாக்குதல் appeared first on Oruvan.com.