அரிசி Archives - Oruvan.com

தியவன்னத் தவளைகளும் உலகப் போர் ஆபத்தும் ; 2022 இன் படிப்பினைகளை மறந்ததா இலங்கை
– Dharmaraja Rasmila

ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் பிராந்தியப் போர்ச் சூழல், உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தி வரும் தாக்கம் மிகப் பயங்கரமானது.

உலகளாவிய இந்த நெருக்கடி ஒருபுறமிருக்க, இலங்கையின் தற்போதைய நிலையைச் சரியாகப் புரிந்துகொள்ள நாம் 2022 ஆம் ஆண்டின் கசப்பான யதார்த்தங்களை மீண்டும் உற்றுநோக்க வேண்டியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றபோது 110 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் மதிப்பு, அவர் நாட்டை விட்டு வெளியேறும்போது 370 ரூபாவைக் கடந்து சென்றமை நம் அனைவருக்கும் நினைவிருக்கும். ஆனால், 2022 ஆம் ஆண்டில் இன்றைய நாளைப்போல உலகப் போர்களோ அல்லது சர்வதேசச் சந்தையில் பாரிய எரிபொருள் விலை அதிகரிப்போ இருந்திருக்கவில்லை. கொவிட் பெருந்தொற்றுப் பரவியது உண்மைதான் என்றாலும், அதனை உலகின் ஏனைய நாடுகள் அழுத்தங்களுக்கு மத்தியிலும் மிக அற்புதமாக மேலாண்மை செய்திருந்தன என்றே சொல்லவேண்டும்.

இந்த நிலையில், ஈஸ்டர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இலங்கையின் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்ததை நாம் ஒப்புக்கொண்டேயாகவேண்டும். இருப்பினும், 2022 இல் ஏற்பட்ட அந்தப் பொருளாதார நெருக்கடிக் காலத்தில் ஒரு கிலோ பருப்பு 700 ரூபாவுக்கும் ஒரு கிலோ சீனி 500 ரூபாவுக்கும் விற்கப்பட்டதுடன், அவை தலா ஒன்று அல்லது இரண்டு கிலோ என்ற கட்டுப்பாடுகளுடனேயே மிகக் கடினமாகப் பெறப்பட்டன. உள்நாட்டு வெங்காயத்தில் இருந்து ஒரு கட்டுக் கீரை வரை அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அனைத்தும் உச்சத்தைத் தொட்டன.

அத்துடன், வரலாறு காணாத வகையில் நான்கு வருடங்களுக்கும் மேலாக வாகன இறக்குமதி முற்றிலும் தடைப்பட்டிருந்தது.

இலங்கை வரலாற்றின் மிக மோசமான 70 சதவீதப் பணவீக்கம் அப்போதுதான் பதிவாகியது. இதற்கெல்லாம் சர்வதேசக் காரணிகள் எதுவும் இருக்கவில்லை. மாறாக, ஆட்சியாளர்களின் தவறான நிதி நிர்வாகமும் நிதி ஒழுக்கமின்மையுமே பிரதான காரணங்களாகும்.

திறந்த பொருளாதாரக் கொள்கைக்குள் நுழைந்து 48 ஆண்டுகள் கடந்த பின்னரும், இலங்கை இன்றுவரை வெறும் 6 முதல் 7 பில்லியன் டொலர் வரையிலான ஓர் ஏழ்மையான, சொற்பமான வெளிநாட்டுக் கையிருப்பைக் கொண்ட நாடாகவே நீடிக்கிறது.

அதிலும் கணிசமான பகுதி சீனாவினால் வழங்கப்பட்ட ‘சுவாப்’ (Swap) நிதியுதவியாகும். இதற்கு நேர்மாறாக, சீனாவிடம் 3 முதல் 4 ட்ரில்லியன் டொலர்களும், வியட்நாமிடம் 87 முதல் 90 பில்லியன் டொலர்களும் வெளிநாட்டுக் கையிருப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய உலகப் போர்ச் சூழலால் சர்வதேசச் சந்தையில் விலைகள் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளன.

யூரியா 151 சதவீதத்தாலும், டீசல் 148 சதவீதத்தாலும், பெட்ரோல் 136 சதவீதத்தாலும், உரம் 135 சதவீதத்தாலும், நிலக்கரி 112 சதவீதத்தாலும், அரிசி 107 சதவீதத்தாலும் விலை அதிகரிப்பைக் கண்டுள்ளன.

குறிப்பாக, உலகளாவிய உர வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பகுதி ஈரான், கட்டார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய வளைகுடா நாடுகள் சூழ்ந்துள்ள ‘ஹோர்முஸ் நீரிணை’ வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.

தற்போது இப்பாதையில் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகளால், உரத் தொழிற்சாலைகளின் உற்பத்திச் செலவு மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.

போருக்கு முன்னர் 150 டொலராக இருந்த ஒரு தொன் சல்பூரிக் அமிலத்தின் விலை, தற்போது 1,000 டொலரை நெருங்கியுள்ளது.

உலகமே இத்தகைய பாரிய பொருளாதாரப் பேரழிவை எதிர்கொண்டுள்ள இந்த இக்கட்டான தருணத்தில், தியவன்ன நாடாளுமன்றத்தில் ஆட்சி பீடத்தில் உள்ள ஆளுங்கட்சியினர் சிலர் இன்னும் அலங்காரப் பொம்மைகளைப் போல எவ்விதப் பொறுப்பும் இன்றி நாடாளுமன்றில் கதிரைகளைச் சூடாக்கிவருகின்றனர்.

மறுபுறம் எதிர்க்கட்சியினரோ, ‘இன்று ஆட்சியைத் தாருங்கள், நாம் உடனே விலைவாசியைக் குறைப்போம்’ என்று எவ்விதத் தெளிவான பொருளாதாரத் திட்டமும் இன்றி ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தியவன்ன ஏரியில் இருக்கும் தவளைகளைப் போலப் பயனில்லாமல் சத்தமிடுவதைத் தவிர்த்து, உலக நிலைவரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பிராந்தியப் போர் முடியும் வரையிலாவது உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது பற்றி ஆராய்ந்து, பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வுகளைத்தேட ஒன்றிணைய வேண்டும், என்பதே இன்றைய காலத்தின் அவசியமான தேவையாகும்.

The post தியவன்னத் தவளைகளும் உலகப் போர் ஆபத்தும் ; 2022 இன் படிப்பினைகளை மறந்ததா இலங்கை appeared first on Oruvan.com.

அரிசியைப் பயன்படுத்தி உப உற்பத்திப் பொருட்களைத் தயாரிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் விரைவில் தளர்வு
அரிசியைப் பயன்படுத்தி உப உற்பத்திப் பொருட்களைத் தயாரிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை விரைவில் தளர்த்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற மஹாவலி நீர் முகாமைத்துவக் குழுக் கூட்டத்தின் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

நாட்டில் அரிசி இருப்பு நிலைமை மற்றும் சந்தை தேவைகளை கருத்தில் கொண்டு இந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து அரசு ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரிசியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் உப உற்பத்திப் பொருட்கள் தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால், சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தேவையான ஆய்வுகள் மற்றும் கலந்தாலோசனைகள் முடிவடைந்த பிறகு இதுகுறித்த இறுதி முடிவு அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டின் சோளத் தேவையில் 50 சதவீதமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், ஏனையவை இறக்குமதி செய்யப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், உள்நாட்டில் சோள உற்பத்தியை அதிகரிக்கப் போதுமான சாகுபடி நிலங்கள் இல்லாத காரணத்தினால், அதற்குப் பதிலாக அரிசி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்காக வயல் நிலங்களை விரிவாக்க எதிர்பார்க்கவில்லை என்றும், விவசாயத் திணைக்களத்தின் முறையான வழிகாட்டல்களைப் பின்பற்றி விளைச்சலை அதிகரிக்குமாறும் அவர் விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் நெல் விலையை வர்த்தமானி மூலம் சட்டமாக்கவில்லை. தனியார் துறையினர் குறைந்த விலைக்கு நெல்லைக் கொள்வனவு செய்வதைத் தடுப்பதே எமது நோக்கம். நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலையீடு போதுமானதாக இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அங்கு களஞ்சியசாலை மற்றும் பணியாளர் பிரச்சினைகள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வெள்ளப் பாதிப்புகளுக்குப் பிறகு விவசாயத்தை மீட்டெடுக்க நீண்ட காலம் எடுக்கும் என நாம் அஞ்சினோம். ஆனால், அதிலிருந்து மீண்டு வந்துள்ளோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

The post அரிசியைப் பயன்படுத்தி உப உற்பத்திப் பொருட்களைத் தயாரிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் விரைவில் தளர்வு appeared first on Oruvan.com.

அரிசியை அதிக விலையில் விற்றால் சட்டம் பாயும் – அமைச்சர் கடும் எச்சரிக்கை
(வீ.தனுஷா)

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி கிலோ ஒன்றை 230 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக வணிக, உணவு பாதுகப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அரிசியின் விலை சந்தையில் அதிகரித்துள்ளமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் பதிலளித்த அமைச்சர்,

”எதிர்வரும் நாட்களில் அரிசி ஒரு கிலோவை  230 ரூபாய்க்கும் குறைவாக சதோசயில் பெற்றுக்கொள்ளலாம்.  சிவப்பு அரிசி போதுமான அளவு கையிருப்பில் உள்ளது.

தம்புள்ளை, கொழும்பு கோட்டை, பதுளை, மாத்தறை, காலி மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில் அதிக விலையில் அரிசி விற்பனை செய்தவர்கள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதுடன், அவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அரிசி பற்றாக்குறையே விலை அதிகரிப்பிற்கான காரணம். விவசாயத்திற்குத் தேவையான உரங்களை வழங்கி அரசாங்கம் தொடர்ந்து விவசாயிகளுக்கு உதவியளிக்கிறது.” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

The post அரிசியை அதிக விலையில் விற்றால் சட்டம் பாயும் – அமைச்சர் கடும் எச்சரிக்கை appeared first on Oruvan.com.

அரிசி விநியோகத்தில் ஈடுபட்டுள்ள கடற்படை லொரிகள்
கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக அரிசி விற்பனை செய்யப்பட்டதாலும், பச்சை அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாலும் அரிசி விநியோகத்தில் அரசாங்கம் தலையிட்டுள்ளது.

அதன்படி, மாத்தறை மாவட்டத்தில் சிறு வணிகர்கள் கடைகளுக்கு அரிசியை கொண்டு சென்று மொத்த விலையில் விநியோகிக்க அனுமதிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் தலையிட்டு, இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை கடற்படை லொரிகளைப் பயன்படுத்தி சிறு வணிகர்களின் கடைகளுக்கு கொண்டு செல்கிறது.

மாத்தறை மாவட்டத்தின் அனைத்து நகரங்களுக்கும் அரிசி விநியோகம் கடற்படை லொரிகள் மூலம் தொடங்கப்பட்டுள்ளது.

ரூ.205 என்ற மொத்த விலை அரிசியை நேரடியாக கடைக்கு கொண்டு வருவதன் மூலம் நுகர்வோர் குறைந்த விலையில் அரிசியைப் பெற வாய்ப்பு உள்ளது.

The post அரிசி விநியோகத்தில் ஈடுபட்டுள்ள கடற்படை லொரிகள் appeared first on Oruvan.com.

அரிசிக்கான தட்டுப்பாடு 7ஆம் திகதியின் பின் நீங்கும் – அரசாங்கம் அறிவிப்பு
ஜனவரி 7ஆம் திகதியின் பின்னர்  அரிசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு படிப்படியாக நீங்கும். இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசி உரிய நடைமுறைகளின் கீழ் விநியோகிகப்பட்டு வருவதாக இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவிந்து பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகச்சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

”அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதன் ஊடாக கடந்த காலத்தில் நாட்டில் அரிசிக்கு ஏற்பட்டிருந்த தட்டுப்பாடு நீங்கும். அரசாங்கம் இறக்குமதி செய்த 5200 மெற்றிக் தொன் அரிசியின் முதல் தொகுதி கடந்த 30ஆம் திகதி எமக்கு கிடைக்கப்பெற்றது. அதனை பகிர்ந்தளிக்கும் பணிகளும் இடம்பெறுகின்றன. இரண்டாம் கட்டமாக 520 மெற்றிக்தொன் எமது கூட்டுத்தாபனத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அதனை பகிர்ந்தளித்து வருகிறோம்.

இறக்குமதி செய்யப்பட்டஅரிசியை நான்கு கட்டங்களாக விநியோகித்துள்ளோம். மேலும் 5200 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்யும் அனுமதியையும் நிறுவனமொன்றுக்கு வழங்கியுள்ளோம். எதிர்வரும் 7ஆம் திகதி குறித்த தொகை எமக்கு கிடைக்கப்பெறும்.

7ஆம் திகதியின் பின்னர் அரிசிக்கான தட்டுப்பாடு படிப்படியாக நீங்கும். இதற்கு அப்பால் மேலும் 28ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க உள்ளோம். நாட்டில் காணப்படும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம். அரசாங்கம் நாட்டு அரிசியை மாத்திரமே இறக்குமதி செய்துள்ளது.” என்றார்.

இதேவேளை, தனியார் துறையினர் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. என்றாலும், சிவப்பு அரிசிக்கு பாரிய தட்டுபாடுகள் இருப்பதாகவும் அரிசியின் விலைகள் கட்டுப்பாட்டு விலையில் இல்லை என்றும் நுகர்வோர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.

The post அரிசிக்கான தட்டுப்பாடு 7ஆம் திகதியின் பின் நீங்கும் – அரசாங்கம் அறிவிப்பு appeared first on Oruvan.com.