அமைச்சர் சந்திரசேகர் Archives - Oruvan.com

தமிழ் மக்களிடையே தமது இருப்பை தக்கவைக்கலாமென எவரும் எண்ணலாகாது – அமைச்சர் சந்திரசேகர்
இனவெறியைத் தூண்டி விட்டு தமிழ் மக்களிடையே தமது இருப்பை தக்க வைத்துக்கொள்ள முடியுமென்று எவரும் நினைக்கக்கூடாது என்றும் அன்றிருந்த வடக்கு, கிழக்கு இன்றில்லை என்றும் கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற முப்படைச் சட்டங்களின் ஒழுங்குவிதிகள் மற்றும் அவசரகால சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த பாராளுமன்ற சலுகைகளை பயன்படுத்தி மிக மோசமான கருத்துக்களை சபையில் முன் வைத்து வருகின்றார். நாட்டில் யுத்தம் நிறைவடைந்து 17 வருடங்களாகின்றன. 47 வருடங்களுக்கு முன்னரான நிலைமையை நாம் பார்த்தால் பல்வேறு நெருக்கடிகளை நாடு சந்தித்தது. தமிழ் மக்கள் அழிக்கப்பட்டபோது, தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட போதும் அத்துடன் யாழ். நூலகம் எரிக்கப்பட்ட போதும் யாழ். மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலை நடத்தாமல் வடக்கு இளைஞர்கள் ஜனநாயக நீரோட்டத்திற்கு வருவதற்கு தடுக்கப்பட்ட நிலைமைதான் யுத்தமாக மாறியது.

அப்போது நாட்டில் யுத்தம் நடைபெற்ற போது இந்த மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர், அவரின் தாத்தா, அவரது அப்பா மற்றும் அவரையும் எடுத்துக்கொண்டால் அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான, தமிழ் மக்களை கொன்று குவித்த நபர்களோடு கூட்டு சேர்ந்திருந்தவர்கள். இந்த சபையில் ராஜபக்‌ஷக்களின் குடும்பம், அவர்களின் ஆதரவுடன் தமிழர்களை வேட்டையாடும் குழுக்கள் இருந்தன. அவர்களுடன் இணைந்து தமிழ் மக்களை வேட்டையாடிய நபர் இன்று நீலிக் கண்ணீர் வடித்து தமிழ் மக்கள் மீது கருணைக் காட்டும் நபராக மாறியுள்ளார்.

இனவெறியைத் தூண்டி விட்டு தமிழ் மக்களிடையே தமது இருப்பை தக்க வைத்துக்கொள்ள முடியுமென்று நினைக்கிறார்கள். அன்றிருந்த வடக்கு, கிழக்கு இன்று இல்லை. முற்றிலும் மாறியுள்ள வடக்கு,கிழக்கேயுள்ளது

மட்டக்களப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர், கொழும்பிலிருந்து சுத்துமாத்து செய்கின்ற நபரோடு சேர்ந்து, யாழ்ப்பாணத்திற்கு வரும் போது வேட்டியோடும், கொழும்பில் கோட் சூட்டுடனும் திரிவதுடன் தங்களின் பிள்ளைகளை சிங்களவர்களுக்கு திருமணம் செய்துவைத்து சொகுசாக வாழ்கின்றனர். இவர்கள் மீண்டும் தமிழ் மக்களிடையே இனவெறியை தூண்டுகின்ற, வெறியாட்டம் ஆடுகின்றனர். அவர்களின் வெறித்தனம் கபட நாடகங்கள் செல்லுபடியாகாது என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றோம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

The post தமிழ் மக்களிடையே தமது இருப்பை தக்கவைக்கலாமென எவரும் எண்ணலாகாது – அமைச்சர் சந்திரசேகர் appeared first on Oruvan.com.

மலையகத்தில் புதிய அத்தியாயம் ஆரம்பம் – அமைச்சர் சந்திரசேகர்
“மலையகத்தில் புதிய அத்தியாயத்துக்கு சிறப்பான ஆரம்பம் வழங்கப்பட்டுள்ளது.” -என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ இலங்கையில் காலகாலமாக இனவாதப் பிரச்சினைகள் மேலோங்கியே காணப்பட்டன. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வஞ்சிக்கப்பட்டனர். ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

எனினும், நாடாளுமன்றத்தில் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு வாழ்ந்த அரசியல்வாதிகள் இன நல்லிணக்கத்தை மற்றும் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

மாறாக இனரீதியான பாகுபாட்டுக்கு தீணி போடுபவர்களாகவே செயல்பட்டனர்.

இப்படியானவர்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் சலுகைகள் எதற்கு? எனவே, ஓய்வூதியம் தேவை இல்லை.” எனவும் அமைச்சர் கூறினார்.

கடந்த காலங்களில் நாசமாக்கப்பட்டிருந்த நாட்டை தற்போதே கட்டியெழுப்பி புதிய அத்தியாயத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றோம். அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து பயணிக்ககூடிய சூழலை ஏற்படுத்தியுள்ளோம்.

தமிழ் மக்களுக்கு கடந்தகாலங்களில் பாகுபாடு காட்டப்பட்டது. இந்நிலை தற்போது மாற்றப்பட்டுள்ளது. எவருக்கும் பிரிவினை காட்டப்படுவதில்லை.

கடந்த 200 வருடங்களாக இந்நாட்டுக்கு மலையக மக்கள் உழைத்தனர். அந்த சமூகம் தொடர்பில் கடந்தகாலங்களில் கவனம் செலுத்தப்படவில்லை. அவர்களுக்காக குரல் எழுப்படவில்லை.

இந்நிலைமையும் மாற்றப்பட்டுள்ளது. மலையகத்தில் புதிய அத்தியாயத்துக்கு சிறப்பான ஆரம்பம் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கடந்த கால அரசியல்வாதிகள் இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டி, நாட்டை படுபாதாளத்துக்குள் தள்ளுவதற்கு முற்படுகின்றனர். தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் இந்த செயலில் ஈடுபடுகின்றனர்.

எனினும், இனவாதம் மற்றும் மவாதத்தை தூண்டுவதற்கு இடமளிக்கமாட்டோம்.” – என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் கூறினார்.

The post மலையகத்தில் புதிய அத்தியாயம் ஆரம்பம் – அமைச்சர் சந்திரசேகர் appeared first on Oruvan.com.

மன்னார் மாவட்டத்துக்குரிய துறைமுகம் பேசாலையில் அமைக்கப்படும் – அமைச்சர் சந்திரசேகர்
இந்திய மீனவர்களின் அத்துமீறலை முற்று முழுதாக தடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும், மன்னார் மாவட்டத்துக்குரிய துறைமுகம் பேசாலையில் அமைய உள்ளது எனவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் மன்னார் மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பது பற்றியும் பேசப்பட்டது. அதற்குரிய நடவடிக்கையை கடற்படையினர் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

மன்னார் மாவட்டத்துக்கென துறைமுகமொன்று கிடையாது. எனவே, பேசாலையில் துறைமுகமொன்றை அமைப்பதற்கு திட்டமிட்டு, அதற்குரிய நடவடிக்கை இடம்பெறுகின்றது. எனினும், குறித்த துறைமுகம் தொடர்பில் மக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது. அந்த சந்தேகத்தை நாம் நீக்க வேண்டும். அரசாங்க அதிபர், அதிகாரிகள் உள்ளிட்டோர் மக்களை சந்தித்து கலந்துரையாடி, துறைமுகத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கமளிக்க வேண்டும்.

அதேவேளை, இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு தொடர்பிலும் பேசப்பட்டது. இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுத்து நிறுத்துமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்தார்கள். அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு கடற்படையினரும் உரிய பங்களிப்பை வழங்கி வருகின்றனர். எதிர்காலத்தில் இந்திய மீனவர்களின் வருகையை முற்று முழுமையாக நிறுத்த முடியும் என நம்புகின்றோம். இராஜதந்திர மட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.” – என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே, வடக்கு, கிழக்கில் மீனவர்களை சந்தித்து வருகின்றோம். மாவட்ட, மாகாண மட்டத்தில் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன.

மன்னார், பேசாலையில் 2026 இல் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும். இதற்கு உலக வங்கி ஆதரவு பெறப்படும். அதேபோல மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்படும்.” என்றார்.

இந்திய மீனவர்களின் வருகை தற்போது குறைந்துள்ளதாகவும், அதற்கு நடவடிக்கை எடுத்த அமைச்சர்கள் மற்றும் கடற்படையினருக்கு மன்னார் மாவட்ட மீனவ பிரதிநிதிகள் இதன்போது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே உள்ளிட்ட பல பிராந்திய அரசியல் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அத்துடன், அமைச்சின் மேலதிக செயலாளர், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம், பொலிஸார், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பல முக்கிய கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள், அத்துடன் கடற்றொழில் அமைச்சின் கீழ் உள்ள இலங்கை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனம், இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம், நாரா (NARA) நிறுவனம் மற்றும் நாக்டா (NAQDA) நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

The post மன்னார் மாவட்டத்துக்குரிய துறைமுகம் பேசாலையில் அமைக்கப்படும் – அமைச்சர் சந்திரசேகர் appeared first on Oruvan.com.

தமிழ் மக்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம் – அமைச்சர் சந்திரசேகர்
வடக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களின் இருப்பு கேள்விக்குரியாக மாறிவருகின்றது என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கமநல புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று (20.06.2025) யாழ்ப்பாணம் கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபத்தில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் ரோஹன ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக விவசாயம், கால்நடை, நீர்பாசனம் மற்றும் காணி அமைச்சர் கே.டி.லால்காந்த, சிறப்பு அதிதியாக கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், விசேட அதிதியாக வட மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உள்ளிட்ட ஆசிரியர்கள், அதிபர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ இலங்கையில் வாழ முடியாது என்ற மனோ நிலை எமது இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனால் கல்வி மற்றும் வேலைகளுக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்ற நிலையில் உள்ளனர்.

மறுபுறத்தில் பிறப்புவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. 1981 காலப்பகுதியில் 8 இலட்சத்துக்கு மேல் இருந்த யாழ்.மாவட்ட சனத்தொகை தற்போது 6 இலட்சம் வரைதான் உள்ளது.

முன்னர் 11 எம்.பிக்கள் இருந்தனர். இன்று யாழ்.மாவட்டத்தில் ஆறு எம்.பிக்களே தெரிவாகின்றனர். அடுத்த தேர்தலின்போது இது மேலும் குறைவடையக்கூடும். ஏனெனில் புலம்பெயர்வு அதிகரித்துள்ளது.

வடக்கை முன்னேற்றுவது பற்றி, விவசாயம் உள்ளிட்ட தொழில்துறைகளை மேம்படுத்துவது பற்றி கடந்த காலங்களில் கவனம் செலுத்தப்படாமையும் இளைஞர்கள் மத்தியில் அதிருப்தி உருவாக காரணமாக அமைந்தது.

இந்நிலைமையை மாற்றியமைக்கவே நாம் வந்துள்ளோம். வடக்கு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விவசாயத்தை மேம்படுத்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. வடக்கு மக்கள பற்றி சிந்திக்கக்கூடிய தலைவர் நாட்டின் ஜனாதிபதியாக உள்ளார். அதனால்தான் பாதீட்டில்கூட கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தைக் கட்டியெழுப்பும்போது யாழில் கம்பீரத்தை எடுத்துக்காட்டும் வகையில் நிர்மாணங்கள் இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். எனவே, தமிழ் மக்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம்;. மக்கள் கைவிட்டால்கூட, மக்களுக்காக செய்ய வேண்டிய திட்டங்களை நிச்சயம் நாம் செய்வோம்.” – என்றார்.

The post தமிழ் மக்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம் – அமைச்சர் சந்திரசேகர் appeared first on Oruvan.com.

மக்களை இன ரீதியாகப் பிளவுபடுத்தும் செயலுக்கு கனடா இடமளிக்ககூடாது
மக்கள் மீண்டும் இன ரீதியாகப் பிளவுபடுவதற்கு இடமளிக்க வேண்டாம் என இலங்கைக்கான கனடா தூதுவரிடம், அமைச்சர் சந்திரசேகர் விசேட வேண்டுகோளொன்றை முன்வைத்துள்ளார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இலங்கைக்கான கனடா எரிக் வால்ஷ் ஆகியோருக்கிடையில் நேற்று (21) கொழும்பிலுள்ள அமைச்சில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போதே இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

இலங்கையின் மீனவ சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் முக்கியமாக வடக்கு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

அபிவிருத்தியில் பின்தங்கிய சமூகமாக வாழும் வடக்கு மக்களின் நிலை குறித்து இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், 30 வருட கால யுத்தத்திற்குப் பின்னரும் வடக்கு மக்கள் இன்னும் முறையான கவனம் செலுத்தப்படாமல் வாழ்ந்து கொண்டிருப்பதாக வலியுறுத்தினார்.

கடந்த கால அரசுகள் தமிழ் மக்களைப் பெரும்பாலும் புறக்கணித்ததாகவும், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்தப் பாகுபாடுமின்றி அந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பாரிய அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்த உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஊழல், மோசடி மற்றும் இனவாதம் அற்ற ஒரு நாட்டை உருவாக்குவதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்.

வடக்கில் உள்ள பல சமூகங்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வதாகவும், பெற்றோரை இழந்த பிள்ளைகள், விதவைகள் மற்றும் பல முதியோர் ஆதரவற்ற நிலையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்ப அரசாங்கம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தூதுவரிடம் குறிப்பிட்டார்.

எந்த வடிவத்திலும் இனவாதத்திற்கு இனி இடமளிக்கப்பட மாட்டாது என அவர் திட்டவட்டமாக அறிவித்தார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் குழப்ப மீண்டும் இனவாதப் பிரிவுகளைத் தூண்டிவிட உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சில தீய சக்திகள் முயற்சிப்பதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.

மக்களை மீண்டும் இனரீதியாகப் பிளவுபடுத்தும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இடமளிக்க வேண்டாம் எனவும் கனடா தூதுவரிடம, அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு கனடாவின் முழு ஆதரவை வழங்குவதாகக் கனடா தூதுவர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற தேசிய படைவீரர்கள் தினத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையையும் தூதுவர் பாராட்டியுள்ளார்.

The post மக்களை இன ரீதியாகப் பிளவுபடுத்தும் செயலுக்கு கனடா இடமளிக்ககூடாது appeared first on Oruvan.com.

பட்டலந்த வதை முகாமின் பின்னணியில் இருந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – அமைச்சர் சந்திரசேகர்
1977 முதல் 1994 ஆம் ஆண்டுவரை இந்நாட்டை கொலை களமாக்கிய ஐக்கிய தேசியக் கட்சி பாவிகளே, பட்டலந்த வதை முகாமின் சூத்திரதாரிகளும் கூட. எனவே, பட்டலந்த வதை முகாமின் பின்னணியில் இருந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தினார்.

பட்டலந்த வதை முகாம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று (10) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

‘நல்ல வழியில் நாம் அரசியலை முன்னெடுத்து வந்த வேளை 1983 ஆம் ஆண்டு எமது கட்சி தடைசெய்யப்பட்டது. ஜுலை கலவரத்தை அடிப்படையாகக்கொண்டே எமது கட்சிமீது தடை விதிக்கப்பட்டது. அன்று ஏற்பட்ட கறுப்பு ஜுலையென்பது இன்றளவிலும் கறுப்பு புள்ளியாகவே இருந்துவருகின்றது.

தடையை நீக்குமாறு ஜனாதிபதி முதல் பலரிடம் கோரிக்கை விடுத்தோம். பலன் கிட்டவில்லை. இதற்கிடையில் அடக்குமுறையைக் கட்விழ்த்துவிட்டு எமது உறுப்பினர்களை கொன்றொழித்தனர்.

நாட்டை நாசமாக்குகின்ற ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டவேளை, நாடு காட்டிக்கொடுக்கப்பட்டவேளையில்தான் அதற்கு எதிராகவே 1987 மற்றும் 1989 களில் எமது வீரமறவர்கள் வீறுகொண்டெழுந்தனர். அவர்கள் கொன்று புதைக்கப்பட்டனர். இவ்வாறு புதைக்கப்பட்டவர்கள் விதைக்கப்பட்டவர்களாக மீண்டெழுந்திருக்கின்றார்கள்.

உண்மையை ஒருபோதும் மூடிமறைக்க முடியாது. உண்மைகள் தற்போது வெளிவர ஆரம்பித்துள்ளன.

பட்டலந்த வதை முகாம் கொலையாளிகள், சித்திரைவதை செய்தவர்கள், இதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

வடக்கு மற்றும் மலையக மக்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கெல்லாம் நீதி கிடைக்கப்பட வேண்டும்.” – என்றார்.

The post பட்டலந்த வதை முகாமின் பின்னணியில் இருந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – அமைச்சர் சந்திரசேகர் appeared first on Oruvan.com.