அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் Archives - Oruvan.com

போர் நிறுத்தம் நாளையுடன் நிறைவு: பாகிஸ்தான் பறக்கிறார் அமெரிக்க துணை ஜனாதிபதி
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இன்று (21) பாகிஸ்தான் செல்லவுள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான 2ஆம் கட்ட அமைதி பேச்சு இஸ்லாமாபாத்தில் நாளை (22) நடைபெறவுள்ளது எனவும், இதில் பங்கேற்பதற்காகவே வான்ஸ் அங்கு செல்கின்றார் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், தமது பிரதிநிதிகள் குழு பங்கேற்பதை ஈரான் இன்னும் உறுதிப்படுத்தவில்லை எனவும் மேற்படி ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான தற்காலிக போர் நிறுத்தம் நாளையுடன் (22) காலாவதியாகிறது.

இஸ்லாமாபாத்தில் கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற முதல் சுற்று பேச்சு தோல்வியில் முடிவடைந்தமை தெரிந்ததே.

The post போர் நிறுத்தம் நாளையுடன் நிறைவு: பாகிஸ்தான் பறக்கிறார் அமெரிக்க துணை ஜனாதிபதி appeared first on Oruvan.com.

உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை இனி ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டும்: ஜே.டி.வான்ஸ்
உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை இனி ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் – ரஷ்யா இடையே மூன்றரை ஆண்டு காலமாக நடைபெறும் போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் முயன்று வருகிறார். இதன் நிமித்தமாக அவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி ஆகிய இருவரையும் தனித்தனியாக அழைத்துப் பேசியுள்ளார். இந்நிலையில், உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை இனி ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்துள்ளது உக்ரைன். மூன்றரை ஆண்டுகளாக போர் நீடிக்கும் நிலையில், இனி உக்ரைனுக்கு வான்வழி பாதுகாப்பில் மட்டுமே உதவி என்று ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

கீவ் (உக்ரைன் தலைநகர்) பாதுகாப்புக்காக இனியும் அமெரிக்கா ‘பிளாங் செக்’ எழுதிக் கொண்டிருக்காது என்று தெரிவித்துவிட்டார். இனி ஐரோப்பிய கூட்டாளிகள் தான் உக்ரைன் பாதுகாப்புக்கான சுமைகளை பெருமளவில் சுமக்க வேண்டும் என்ற முடிவுக்கும் ட்ரம்ப் வந்துவிட்டார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளும் ஒரு கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. அதில், உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்ய விரும்பும் நாடுகள் இணையலாம் என்று தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில் புதன்கிழமை ஃபாக்ஸ் நியூஸ் செய்தி சேனலுக்குப் பேட்டியளித்த அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ், “போரின் சுமையை முழுக்கமுழுக்க நாங்களே சுமக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். இதில் ஐரோப்பா தான் பிரதானமான பங்குதாரராக இருக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி ட்ரம்ப் தெளிவாக இருக்கிறார். இனி என்ன நடந்தாலும் ஐரோப்பிய நாடுகள் தான் உக்ரைன் பாதுகாப்பில் பெரும் பங்கை சுமக்க வேண்டும். உக்ரைன் ஐரோப்பிய கண்டத்தில்தான் உள்ளது. எனவே அது அவர்களின் பாதுகாப்பும் சார்ந்தது.” என்றார்.

ரஷ்யா, போரில் இதுவரை தான் ஆக்கிரமித்த உக்ரைனின் பகுதிகளையும், இன்னும் சில பகுதிகளையும் தனதாக்கிக் கொள்ள குறிவைக்கிறது. இதுவரை உக்ரைனின் 5-ல் ஒரு பகுதி ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், “போர் நிறுத்த உடன்படிக்கை ஏதும் எட்டப்படுவதற்கு முன்னர் நில உரிமைகள் தொடர்பான உடன்பாடு எட்டப்பட வேண்டும்.” என்று ட்ரம்ப் கூறுகிறார்.

ஆனால், உக்ரைனோ “எங்கள் நிலத்தின் ஒரு அங்குலத்தையும் விட்டுத்தருவதற்கு இல்லை எனக் கூறுகிறது. ஆனால், ரஷ்யப் படைகளை சமாளிக்கும் அளவுக்கு உக்ரைனிடம் இப்போது படை பலம் இல்லை. அதேபோல் ராஜாங்க ரீதியாக ஏதேனும் உடன்பாட்டை எட்டி ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை குறுகிய காலத்தில் மீட்பதற்கான சாத்தியக் கூறுகளும் இல்லை.” எனக் கூறுகிறது.

The post உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை இனி ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டும்: ஜே.டி.வான்ஸ் appeared first on Oruvan.com.

இந்தியா – பாக். விவகாரத்தில் நாங்கள் தலையிட மாட்டோம்: அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது. மேலும், அது எங்கள் வேலையும் அல்ல என அந்நாட்டு துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் கூறியுள்ளார். அண்மையில் அவர் இந்தியா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கை மற்றும் பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை அடுத்து அவர் இப்படி சொல்லியுள்ளார்.

“போர் பதற்றத்தை தவிர்க்க வேண்டும் என நம்மால் அவர்களிடம் சொல்ல மட்டுமே முடியும். இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றத்தில் நாம் தலையிட போவதில்லை. அது நம் பணியும் அல்ல. இந்தியா மற்றும் பாகிஸ்தான் வசம் உள்ள ஆயுதங்களை கீழே போட வேண்டும் என அமெரிக்கா சொல்ல முடியாது.

இந்த மோதல் பிராந்திய ரீதியிலான போராகவோ அல்லது அணு ஆயுத மோதலாகவோ மாறக்கூடாது என்பது நம் எதிர்பார்ப்பு. அப்படி நடந்தால் பேரழிவு ஏற்படும். இது அந்த நாடுகளின் தலைவர்கள் வசம் உள்ளது” என வான்ஸ் கூறியுள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியாவின் லடாக், காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்கள் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ளன. இந்த மாநிலங்களின் எல்லைகளில் அமைந்துள்ள இந்திய விமானப் படை தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு திடீரென ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது.

காஷ்மீரின் ஜம்மு விமானப்படைத் தளம், பஞ்சாபின் பதான்கோட் விமானப்படைத் தளம், ராஜஸ்தானில் நல், பலோடி, உத்தர்லை ஆகிய 3 இடங்களில் உள்ள விமானத் படைத் தளங்கள் மீது பாகிஸ்தான் ட்ரோன்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தன. இதில் பெரும்பாலான ட்ரோன்களை இந்திய விமானப்படை நடுவானில் சுட்டு வீழ்த்தியது. மேலும் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம் நேற்றிரவு பீரங்கி மூலம் அத்துமீறி தாக்குதல்களை நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் தாக்குதல் கொடுத்தது.

இந்த சூழலில் இந்திய இராணுவம் நேற்றிரவு ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தானின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் விடிய விடிய நீடித்தது குறிப்பாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் லாகூர், கராச்சி, சியால்கோட் கோட்லி உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் சக்திவாய்ந்த குண்டுகள் வீசப்பட்டன. இந்த பகுதிகளில் உள்ள பாகிஸ்தான் இராணுவ தளங்கள், விமானப் படை தளங்களில் மிகப்பெரிய அளவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

The post இந்தியா – பாக். விவகாரத்தில் நாங்கள் தலையிட மாட்டோம்: அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் appeared first on Oruvan.com.

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இந்தியா வருகிறார்
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் ஆகியோர் வருகிற 21ம் திகதி இந்தியா வருகிறார்கள். அவர்கள் 24ம் திகதி வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார்கள்.

ஜே.டி.வான்ஸ் தனது மனைவியும் அமெரிக்கா வின் 2-வது பெண்மணியுமான உஷா மற்றும் குழந்தைகளுடன் இந்தியா வருகிறார். உஷா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அவரது பெற்றோர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள்.

ஜே.டி.வான்ஸ் தனது குடும்பத்துடன் சிம்லா, ஐதராபாத், ஜெய்ப்பூர், டெல்லிக்கு சுற்றுலா செல்ல உள்ளார். அவர் தனிப்பட்ட பயணமாக இந்தியாவுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஜே.டி.வான்ஸ்க்கு பிரதமர் மோடி விருந்து அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பை அறிவித்தார். அதன்பின் வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக தெரிவித்தார்.

வரி விதிப்பு விவகாரம் தொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் டிரம்புக்கு அடுத்தபடியாக மிகவும் சக்தி வாய்ந்த நபராக உள்ள ஜே.டி.வான்சின் இந்திய பயணம் முக்கியத்துவம் பெற்று உள்ளது.

ஜே.டி.வான்ஸ் தனிப்பட்ட பயணமாக இந்தியா வந்தாலும் வரி விதிப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மைக் வால்ட்ஸ் உயா் தொழில்நுட்பம், முக்கிய கனிமங்கள், ஏற்றுமதி கட்டுப்பாடுகள் ஆகியவற்றில், இந்தியா-அமெரிக்கா இடையே ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வரவுள்ளாா்.

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக வருகிற 22ம் திகதி சவூதி அரேபியா செல்லும் முன், அவரை வான்ஸ் மற்றும் வால்ட்ஸ் சந்திப்பார்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

The post அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இந்தியா வருகிறார் appeared first on Oruvan.com.