அன்புமணி Archives - Oruvan.com

அதிமுக கூட்டணியில் பாமக : பழனிசாமி, அன்புமணி கூட்டாக அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அதிமுக கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் இபிஎஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் பாமகவுடனான கூட்டணி குறித்தும் அதிமுக பரிசீலித்து வந்தது.

இந்நிலையில், இன்று காலை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்றார்.

இந்த சந்திப்புக்குப் பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாமக தலைவர் அன்புமணியும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது இபிஎஸ் கூறியதாவது: ஏற்கெனவே அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. இந்நிலையில் இந்தக் கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. இது இயற்கையான கூட்டணி. இந்தக் கூட்டணி அதிமுக – பாமக கட்சியினர், தொண்டர்கள் விரும்பியவாறு அமைந்துள்ளது. இது வெற்றிக் கூட்டணி.

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற லட்சியத்தின் அடிப்படையில் ஒரு வலிமையான தமிழகத்தை உருவாக்க, மக்களுக்கு தேவையான திட்டத்தை கொடுக்கும் அரசு அமைய எங்களது கூட்டணி 234 தொகுதிகளிலும் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று, அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

அதிமுக, பாஜக, பாமக ஆகிய 3 கட்சிகளும் இணைந்து இரவு, பகல் பார்க்காமல் சுறுசுறுப்பாக செயல்பட்டு, மிகப்பெரிய வெற்றிபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். தொகுதிகள் எண்ணிக்கை முடிவு செய்துவிட்டோம். மற்றவை பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு இபிஎஸ் கூறினார்.

இருப்பினும், பாமகவுக்கு 20 சட்டப்பேரவைத் தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து அன்புமணி பேசியபோது, “வரும் சட்டப்பேரவை தேர்தலை அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து சந்திக்கும் வகையில் இணைந்திருக்கிறோம். இது, எங்களுக்கு மகிழ்ச்சியான தருணம். எங்கள் தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணியில் நாங்கள் சேர்ந்து இருக்கிறோம். இது வலுவான கூட்டணி.

எங்களது நோக்கம் மக்கள் விரோத, ஊழல் செய்கிற, பெண்களுக்கு எதிரான, சமூக நீதிக்கு எதிரான திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே. மிகப்பெரிய வெற்றியை நாங்கள் பார்த்து இருக்கிறோம்.

சமீபத்தில் 100 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டபோது கிராமப்புற மக்கள் திமுக மீது மிகுந்த கோபத்தில் இருப்பதை பார்த்தோம். தேர்தல் எப்போது வரும் என்று அவர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். உறுதியாக எங்களது கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்.” என்றார்,

The post அதிமுக கூட்டணியில் பாமக : பழனிசாமி, அன்புமணி கூட்டாக அறிவிப்பு appeared first on Oruvan.com.

பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்: அன்புமணி அறிவிப்பு
கட்சி விரோத செயல்பாடுகள் காரணமாக ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரைப்படி பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து ஜி.கே.மணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருவதால், அதற்காக கட்சியின் அமைப்பு விதி 30-ன்படி அடிப்படை உறுப்பினரில் இருந்து அவரை ஏன் நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் கடந்த 18.12.2025 ஆம் நாள் அறிவிக்கை அனுப்பப்பட்டிருந்தது.

அவருக்கு அளிக்கப்பட்ட காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஜி.கே.மணியிடமிருந்து எந்த விளக்கமும் வரவில்லை. அதைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு சென்னையில் கூடி இது குறித்து விவாதித்தது. கட்சி விரோத செயல்பாடுகள் குறித்து ஜி.கே.மணி எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், கட்சியின் அமைப்பு விதி 30-ன்படி அடிப்படை உறுப்பினரிலிருந்து அவரை நீக்கலாம் என்று கட்சித் தலைவர் அன்புமணிக்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரைத்தது.

அதை ஏற்று ஜி.கே.மணி பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து இன்று (26.12.2025) வெள்ளிக்கிழமை முதல் நீக்கப்படுவதாக கட்சித் தலைவர் அன்புமணி அறிவித்திருக்கிறார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஜி.கே.மணியுடன் பாட்டாளி மக்கள் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்: அன்புமணி அறிவிப்பு appeared first on Oruvan.com.

‘தேவைப்பட்டால் அன்புமணியை கட்சியை விட்டு நீக்குவேன்’ – ராமதாஸ் அடுக்கடுக்காக குற்றச்சாட்டு
அன்புமணியை அவரது 35-வது வயதில் அமைச்சராக்கினேன். நான் செய்த சத்தியத்தை மீறி அவரை அமைச்சராக்கியது தவறு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், தேவைப்பட்டால் பொதுக்குழுவைக் கூட்டி அன்புமணியை கட்சியை விட்டே நீக்குவேன் என்று தெரிவித்துள்ளார்.

பாமகவின் நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இன்று (மே.29) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அன்புமணியை அவரது 35 வயதில் நான் அமைச்சராக்கினேன். நான் செய்து கொடுத்த சத்தியத்தை மீறி அவரை அமைச்சராக்கியது எனது தவறு.

எங்களின் கட்சி பற்றிய பலமுறை கேள்வி கேட்டிருக்கிறீர்கள். நானும் பதில் சொல்லியிருக்கிறேன். தருமபுரியில் நடந்த கூட்டமொன்றில் அன்புமணி பேசியதை பார்த்திருப்பீர்கள், நானும் கேட்டேன். அந்தப் பேச்சில், “நான் என்ன தவறு செய்தேன், ஏன் பதவி நீக்கம் என்று.” அன்புமணி கேட்டிருந்தார். அது கட்சிக்காரர்களையும் மக்களையும் திசைதிருப்பும் முயற்சி. தனது தவறுகளை மறைத்து மக்களிடமும், கட்சிக்காரர்களிடமும் அனுதாபம் பெற முயற்சித்திருக்கிறார். அதற்கு சரியான விளக்கம் அளிப்பது எனது கடமை. என்னைக் குற்றவாளியாக்கி அன்புமணி அனுதாபம் தேட முயற்சித்துள்ளார்.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடோடு பயணித்தக் கட்சியில் அவர் கலகத்தை உண்டாக்கினார். வளர்த்த கிடா மார்பில் பாய்ந்துள்ளது. கட்சி வளர்ச்சிக்கு தடையாக இருந்து பல இன்னல்களைச் செய்தவர் அன்புமணி.

பாமக என்னும் ஆளுயுர கண்ணாடியை நொடியில் உடைத்தது யார்? புதுச்சேரி கூட்டத்தில் கண்ணியம் இல்லாமல் நடந்து கொண்டது யார்? நான் ஏதோ இதைப் போகிற போக்கில் சொல்லவில்லை. ஆதாரங்களுடன் தான் சொல்கிறேன்.

குருவை, அன்புமணி கீழ்த்தரமாக நடத்தினார். பெற்ற தாயை பாட்டிலை வீசித்தாக்க முயன்றவர் அன்புமணி. பாமகவை வளர்த்தது யார்? சோறு தண்ணீர் இல்லாமல் பல கிராமங்களுக்கு பயணம் செய்திருக்கிறேன். கூசாமல் பொய் சொல்பவர் அன்புமணி. நான் கூட்டிய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு செல்லவேண்டாம் என்று 108 பேருக்கு அவரே கூறியுள்ளார்.

2024 தேர்தலின் போது பாஜகவுடன் கூட்டணி வேண்டுமென்று அமைத்தார் அன்புமணி. நான் அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று கூறினேன். அதிமுகவும், பாமகவும் இயல்பான கூட்டணி. 2024-ல் இந்தக் கூட்டணி அமைந்திருந்தால் பாமக – 3 இடங்களிலும், அதிமுகவும் 6, 7 இடங்களிலும் வென்றிருக்கும்.

பாஜக கூட்டணிக்காக அன்புமணியும், சவுமியாவும் என் கால்களைப் பிடித்து அழுதனர். அந்தக் கூட்டணிக்கான ஏற்பாட்டை சவுமியா செய்தார். தேவைப்பட்டால் பொதுக்குழுவைக் கூட்டி அன்புமணியை கட்சியை விட்டு நீக்குவேன். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

The post ‘தேவைப்பட்டால் அன்புமணியை கட்சியை விட்டு நீக்குவேன்’ – ராமதாஸ் அடுக்கடுக்காக குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.

தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அன்புமணி
சாதிவாரி கணக்கெடுப்பு தேவை தான். ஆனால், அதை மத்திய அரசு தான் செய்ய வேண்டும் என்ற பழைய பல்லவியையே மீண்டும், மீண்டும் பாடி வருகிறது. இந்த நிலையிலிருந்து திராவிட மாடல் அரசு எப்போது மாறப் போகிறது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தெலங்கானா மாநிலத்தைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்திலும் அடுத்த வாரம் தொடங்கவுள்ள புதிய நிதியாண்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. கர்நாடகம், பிஹார், ஒடிசா, தெலங்கானா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து ஐந்தாவது மாநிலமாக ஜார்க்கண்ட் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளவுள்ளது.

ஆந்திரம் உள்ளிட்ட மேலும் சில மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசு வெற்று நாடகங்களை மட்டுமே நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அம்மாநில வருவாய்த் துறை அமைச்சர் தீபக் பிருவா, ‘‘கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ஆம் திகதியே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு விட்டது.

அதனடிப்படையில் விதிகள் திருத்தப்பட்டு, அதனடிப்படையில் கடந்த 4-ஆம் திகதி ஆணைகள் வெளியிடப்பட்டு விட்டன. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த எவ்வளவு பேர் தேவைப்படுவார்கள்? எவ்வளவு செலவாகும்? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வரும் நிதியாண்டில் கண்டிப்பாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, ஒடிசா, பிகார், ஜார்க்கண்ட் என ஒவ்வொரு மாநிலமாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருவதன் மூலம் 2008-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்பது செயல் அளவில் உறுதியாகியுள்ளது.

உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றமும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு உள்ள அதிகாரத்தை ஏற்றுக் கொண்டுள்ளன. இவ்வளவுக்குப் பிறகும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று எவரேனும் கூறினால் அவர்கள் அறியாமையில் உழல்கின்றனர் அல்லது சமூகநீதிக்கு எதிராக செயல்படுகின்றனர் என்று தான் பொருள் ஆகும்.

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியதன் தேவை, அதற்கான வாய்ப்புகள், சாத்தியக் கூறுகள் ஆகியவை குறித்து தமிழக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி தனிப்பட்ட முறையிலும், பொதுத்தளங்களின் வாயிலாகவும் விரிவாக விளக்கியிருக்கிறது. அனைத்தையும் கேட்டுக் கொள்ளும் தமிழக அரசு, ‘‘சாதிவாரி கணக்கெடுப்பு தேவை தான். ஆனால், அதை மத்திய அரசு தான் செய்ய வேண்டும்” என்ற பழைய பல்லவியையே மீண்டும், மீண்டும் பாடி வருகிறது. இந்த நிலையிலிருந்து திராவிட மாடல் அரசு எப்போது மாறப் போகிறது?

ஒருபுறம் சமூகநீதியைக் காப்பதற்காகவே பிறந்தவர்கள் என்று கூறிக் கொள்ளும் திமுக, சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு விவகாரத்தில் நடத்தும் நாடகங்கள் காரணமாக மக்களிடம் அம்பலப்பட்டு விட்டனர். இனியும் அதே நாடகத்தை தொடர்ந்து நடத்த முடியாது. எனவே, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

The post தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அன்புமணி appeared first on Oruvan.com.