அநுர Archives - Oruvan.com

கல்வி சீர்திருத்தங்கள் ; அநுர, சஜித் கருத்து மோதல்
மாணவர்களின் இலவசக் கல்வி உரிமையைப் பாதுகாப்பதற்காகப் போராடும் எங்கள் மீதே, இந்த அரசாங்கம் பழியைப் போட பார்கிறது என சஜித், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மீது குற்றச்சாட்டு

கல்வி சீர்திருத்தங்கள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அவரது தரப்பினர் பொய்களையும் ஏமாற்று வித்தைகளையும் பரப்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாகச் சாடியுள்ளார்.

அரசாங்கத்தின் திறமையின்மை மற்றும் தோல்வியுற்ற கொள்கைகளே 6ஆம் தர கல்வி சீர்திருத்தங்கள் திடீரென நிறுத்தப்படக் காரணம் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மாணவர்களின் இலவசக் கல்வி உரிமையைப் பாதுகாப்பதற்காகப் போராடும் எங்கள் மீது, அரசாங்கம் இப்போது பழியைப் போட முயல்கிறது.

அனைத்து மக்களையும் எல்லா நேரத்திலும் ஏமாற்ற முடியாது என்பதை அநுரகுமார திசாநாயக்க புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த சீர்திருத்தங்களை எதிர்த்த போதிலும், சரியான முறையில் முன்னெடுக்கப்பட்டால் அதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவரின் விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எதிர்க்கட்சியினர் தமது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக்கொள்வதாக விமர்சித்துள்ளார்.

அத்துடன் “இந்த சீர்திருத்தங்களை ஆரம்பத்தில் கடுமையாக எதிர்த்த ஒரு நபர், இப்போது அது ஏன் நிறுத்தப்பட்டது என்று எங்களிடமே கேள்வி எழுப்புகிறார்” என ஜனாதிபதி, சஜித் பிரேமதாசவை மறைமுகமாகச் சாடியுள்ளார்.

சீர்திருத்தங்கள் நிறுத்தப்பட்டதற்கான பழியை எதிர்க்கட்சி தன் மீது சுமத்துவதை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.

இலங்கையில் 6ஆம் தர மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்படவிருந்த புதிய கல்வி சீர்திருத்தங்கள் இடைநிறுத்தப்பட்டமையே இந்த அரசியல் மோதலுக்கு முக்கிய காரணமாகும்.

The post கல்வி சீர்திருத்தங்கள் ; அநுர, சஜித் கருத்து மோதல் appeared first on Oruvan.com.

நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாசவிற்கு நன்றி தெரிவித்த அநுர
மாகாண சபை தேர்தல் பற்றி எனக்கு தீர்மானிக்க முடியாது. தேர்தல் முறைமையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொடுங்கள். மாகாண சபைத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டுக்கான சுதந்திர இலங்கையின் 80 ஆவது வரவு – செலவுத்திட்டம் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் 2 ஆவது வரவு – செலவுத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 07) நிதியமமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஊழல் மோசடியாளர்களுடன் ஒன்றிணையமாட்டார். அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற சேவைகளை வினைத்திறனாக்க 2500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

The post நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாசவிற்கு நன்றி தெரிவித்த அநுர appeared first on Oruvan.com.

மண்டைதீவு சர்வதேச விளையாட்டு மைதானம் – சாத்தியக்கூற்று மற்றும் சுற்றுப்புறச் சூழல் அறிக்கைகள் எதுவும் இல்லாத அரசியல் நிகழ்ச்சி நிரல்
யாழ்ப்பாணம் மண்டைதீவு பிரதேசத்தில் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கு அநுர அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள பின்னணியில், யாழ்ப்பாணத்தின் தீவுப் பிரதேசங்கள் பற்றிய கரிசனை குறிப்பாக அங்கு வாழும் மக்களின் அடிப்படை வசதிகள், தொழில் முயற்சிகளில் கவனம் செலுத்தப்பட்டதா என்பது தொடர்பான சந்தேகங்கள் எழுகின்றன.

சாத்தியக்கூற்று அறிக்கைகள் (Feasibility Report) சுற்றுப்புறச் சூழல் அறிக்கைகள் (Environmental Report) எதுவும் இன்றி வடக்கு கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

2009 இற்குப் பின்னர் ‘தமிழ் மக்களுக்கு நாங்கள் அனைத்தையும் செய்கிறோம்’ என்பதை உலகிற்கு காண்பிக்கும் நோக்கில் மாத்திரமே அபிவிருத்தி என்ற மாயை உருவெடுத்திருக்கிறது.

மாறாக நூறு வருடங்களுக்கு மேற்பட்ட அரசியல் போராட்டம் ஒன்றை நடத்தி வரும் ஈழத் தமிழ்ச் சமூகம், தனது அரசியல் விடுதலை விவகாரத்தில் பொருத்தமான தீர்வு கிடைக்காத ஒரு பின்னணியில் அபிவிருத்தித் திட்டங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்ற கேள்விகளுக்கு சிங்கள தலைவர்களிடம் இருந்து பதில் இல்லை.

வடக்கு கிழக்கில் சிங்கள மயமாக்கல் நகர்வுகள் மிக நுட்பமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சூழலில், அபிவிருத்தி என்ற போர்வையில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறாது என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் இல்லை.

அபிவிருத்தி செய்தால் அரசியல் தீர்வு அவசியம் இல்லை என்ற தவறான கற்பிதம் ஒன்றை இலங்கை ஒற்றையாட்சி அரசு அன்று முதல் நுட்பமாக கட்டமைத்துள்ளது.

1949 ஆம் ஆண்டு கிழக்கில் கல்லோயா குடியேற்றத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அங்கு சிங்கள மக்களுக்கு முதலிடம் வழங்கப்பட்ட ஒரு பின்னணியில் தான், 1956 ஆண்டு கல்லோயா இன அழிப்பு மோதல் ஏற்பட்டது. இப் பின்புலத்தில்தான், 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் 1949 ஆம் ஆண்டு கல்லோயா குடியேற்றத் திட்டம் போன்றொரு அபிவிருத்திகளை வடக்கு கிழக்கில் அவதானிக்க முடிகிறது.

இதற்கு சந்திரிகா, மகிந்த, மைத்திரி – ரணில் மற்றும் கோட்டாபய என்று தொடர்ச்சியாக உற்று நோக்கினால், அபிவிருத்தி என்ற போர்வையில் இந்த நுட்பங்களை அவதானிக்க முடியும்.

அதேநேரம் அரசியல் நோக்கிலும் ஆட்சி செய்யும் கட்சிகள் தமது செல்வாக்கை தமிழ் மக்களிடம் வேரூன்ற செய்து, தமிழ்த் தேசியக் கட்சிகளை பின்தள்ளும் நோக்கில் வடக்கு கிழக்கில் பெரும் ஆடம்பரமாக ஆரம்பிக்கப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் பின்னர் கைவிடப்பட்ட சம்பவங்களும் உண்டு.

உதாரணமாக மண்டைதீவில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என பிரச்சாரம் செய்யப்பட்டு அடிக்கல்லும் நாட்டப்பட்டுள்ளது.

ஆனால், 2015 ஆம் ஆண்டு மைத்திரி – ரணில் அரசாங்கத்தில் யாழ்.மண்டைதீவில் ஆரம்பிக்கப்பட்ட சுற்றுலா மையத்தின் செயற்பாடுகள் உரிய முறையில் செய்யப்படவில்லை.

யாழ் மாவட்ட செயலகம் ஊடாக ஜனாதிபதி செயலகம் முன்னெடுத்த நடவடிக்கை பொருத்தமானதாக அமையவில்லை.

சுமார் 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் யாழ்.மாவட்ட செயலகத்தால் மண்டைதீவு சுற்றுலா மையத்தின் வேலை திட்டத்திற்கான நிதி விடுவிப்பு செய்யப்பட்டது.

குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வேலனை பிரதேச செயலகம் மற்றும் வேலனை பிரதேச சபை இணைந்து மண்டைதீவு சுற்றுலா மையத்தின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்த நிலையில், குறித்த திட்டம் பொருத்தமான முறையில் முடிவுறுத்தப்படவில்லை.

எந்தவிதமான ஆய்வுகளும் செய்யப்படாமல் அரசியல் நோக்கில் அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் ஆகியோருடைய படம் பொறிக்கப்பட்ட பெயர் பலகை நடப்பட்டிருந்தது.

திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட கடற்பிரதேசம் ஆழம் குறைந்த கடல் பகுதியில் காணப்படும் நிலையில் படகுச் சவாரிகளை மேற்கொள்ள, குறித்த கடல் பிரதேசத்தை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்ற கேள்விகள் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர்தான் எழுந்தன.

ஆகவே, சுற்றுலா அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பிக்க முன்னர் இது பற்றிய சாத்தியக் கூற்று ஆய்வுகள் மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஆய்வுகள் செய்திருக்க வேண்டும்.

ஆனால்,அவ்வாறு எந்த ஒரு ஆய்வுகளும் இல்லாமல் அரசியல் நோக்கில் எடுத்த எடுப்பில் கொழும்பு அரசியல் நிர்வாகம் தமிழ் மக்களை தம் வசப்படுத்த வேண்டுமென்ற ஒரே ஒரு நோக்கில் வடமாகாண அதிகாரிகளை நன்கு பயன்படுத்தியிருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் ஏனைய தீவுப் பகுதிகளான சாட்டி, காரைநகர் கடற்கரைகள் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் பகுதியாக அடையாளம் காணப்பட்டிருந்த ஒரு நிலையில், ஏன் குறித்த திட்டத்தை மண்டைதீவில் செயற்படுத்தினார்கள் என்ற நியாயமான கேள்விகளுக்கு கொழும்பு அரசியல் நிர்வாகத்தினால் இன்றுவரை பதிலளிக்க முடியவில்லை.

ஆகவே, கொழும்பு மைய சிங்கள அரசியல் கட்சிகளுக்கு குடை பிடிக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள அதன் தமிழ் முகவர்கள் முன் யோசனைகள் எதுவுமின்றி பெயர் பலகையை நாட்டுவது, அடிக்கல் நாட்டுவது போன்ற நிகழ்வுகளை பெரும் பிரச்சாரமாக காண்பித்து வாக்கு அரசியலில் ஈடுபடுகின்றனர் என்பது மாத்திரம் இங்கே பகிரங்கமாக தெரிகிறது.

மக்களின் வரிப்பணத்தில் அமைச்சினால் ஒதுக்கப்பட்ட சுமார் 8 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கூறப்படும் மண்டதீவு சுற்றுலா மையம் தற்போது உரிய முறையில் செயற்படுத்தப்படாமல் கவனிப்பாரற்று உள்ளமை அரசியல் வேடிக்கை.

இவ்வாறு பல குற்றச்சாட்டுகள் எழுப்பப்படும் மண்டைதீவு சுற்றுலா மையத்திற்கு ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது என்பதற்கு யார் பொறுப்பு?

யாழ் மாவட்ட செயலக அதிகாரிகள் இத் திட்டத்தை செயற்படுத்தினாலும், கொழும்பு அரசியல் நிர்வாகத்தின் அழுத்தங்களும் அரசியல் நோக்கங்களும் இருந்தன என்ற பின்னணியில் யாழ் செயலக அதிகாரிகள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்களை கொழும்பு நிர்வாகமே முன்வைக்கும் ஆபத்துகள் உண்டு.

கொழும்பு நிர்வாக அரசியல் செல்வாக்குகளின் ஊழல் மோசடிகளை மூடி மறைக்கும் நோக்கில் தான் சமீபகாலமாக வடமாகாண அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுகின்றன.

ஆகவே, இப்படி ஓர் அபிவிருத்தித் திட்டம் தான், மண்டைதீவு பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானமும் என்ற முடிவுக்கு வரலாம்.

ஏனெனில், மைதானம் அமைப்பதற்குரிய சாத்தியக் கூற்று ஆய்வுகள், சுற்றுப்புறச் சூழல் ஆய்வுகள் செய்யப்பட்டமை தொடர்பான ஆய்வு அறிக்கைகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அல்லது வெளியிடப்படாமல் இருக்கலாம்.

இந்த அறிக்கைகள் வடமாகாணத்தை பிரதானப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கையளிக்கப்பட்டதா? அல்லது துறை சார்ந்தவர்களுடன் அது பற்றிய உரையாடல் நடத்தப்பட்டதா?

மைதானம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும் கூட, இதுவரை ஆய்வு அறிக்கைகள் எதுவும் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரியவில்லை.

அதேநேரம் மண்டைதீவு பிரதேசம் விவசாய நிலம் என்றும் அங்கு கடல் வாழ் உயிரினங்கள் இருப்பதாக யாழ் மாவட்ட செயலகம் 2022 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வு அறிக்கை ஒன்று செயலகத்தின் இணையத்தில் உண்டு.

பா.ராஜ்குமார் என்ற ஆய்வாளர் மண்டை தீவுக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்.

அதனைவிட மண்டைதீவு விவசாய நிலம் என்றும், ஆனாலும் தொழில்நுட்ப ஆய்வுகள் செய்யப்பட்டு அதற்குத் தேவையான மேலதிக உதவிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் மொறட்டுவ பல்கலைக்கழக மாணவிகள் 2018 இல் செய்த ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம், மண்டைதீவின் நில பயன்பாடுகள் பற்றிய ஆய்வு ஒன்றை 2020 இல் செய்த தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவி ஒருவர் அந்த நிலப்பகுதி விவசாயத்திற்குரியது என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மண்டைதீவில் நன்னீர் வளம் மிகக் குறைவாகவே உள்ளது. தீவின் சில பகுதிகளில் மாத்திரம் நன்னீர் கிணறுகள் உள்ளன. கடல் நீர் நிலத்தின் கீழாக நிலப்பரப்பிற்குள் ஊடுருவுவது இதற்கான காரணம்

மண்டைதீவில் மூலிகைகள் அதிகம் காணப்படுகின்றன. 2009 இற்குப் பின்னர், யாழ் மாவட்ட கல்லூரிகளின் உயர்தர வகுப்பு மாணவர்கள் அங்கு சென்று தாவரவியல் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதுண்டு.

ஆகவே, மண்டைதீவில் சர்வதேச மைதானம் அமைக்கப்பட வேண்டும் என தீர்மானம் எடுத்தவர்கள் இது பற்றியெல்லாம் கவனம் செலுத்தினார்களா?

வெறுமனே அரசியல் நோக்கில் ஆய்வுகள் எதுவுமின்றி நிலம் ஒன்றை தெரிவு செய்து மைதானத்தை அமைத்த பின்னர் அதில் உள்ள பக்க விளைவுகள் பாதிப்புகள் போன்றவற்றை எதிர்கொள்ளப் போவது மண்டைதீவு பிரதேச மக்கள் தான்.

ஆகவே, உண்மையில் மக்கள் நலன் நோக்கில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறதா? அல்லது ஜனாதிபதியை மேன்மைப்படுத்தி அபிவிருத்தி என்ற மாயைகளை காண்பித்து, ‘அரசியல் விடுதலை’ என்ற உணர்வுகள் கோரிக்கைகளை தமிழ் மக்களிடம் இருந்து மடைமாற்றும் உத்தியா?

இவ்வாறான உத்திகளையே மகிந்த, மைத்திரி, கோட்டாபய, ரணில் ஆகியோர் செய்தார்கள். ஆகவே, 76 ஆண்டு கால ஆட்சி முறைகளில் இருந்து மாற்றம் என்று மார்தட்டிக் கொண்டு பதவிக்கு வந்த அநுர அரசாங்கமும் முன்னய சிங்கள அரசியல் தலைவர்கள் மேற்கொண்ட பகட்டு அரசியலை முன்னெடுக்கிறது என்ற உணர்வு சாதாரண மக்களிடம் மேலோங்கியுள்ளது.

இதனை யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் தமிழ் முகவர்கள் புரிந்திருப்பர்.

அதேநேரம் அல்லைப்பிட்டி, மண்கும்பான் பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட சுமார் 80 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் – பெண்கள் கொலை செய்யப்பட்டு மண்டைதீவு தோமையார் ஆலயக் கிணற்றில் வீசப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றத்தில் 2023 ஆம் ஆண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

வேலனை பிரதேச சபை தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றி இருந்தது. தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் கடந்த ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்ற அமர்வில், மண்டைதீவில் உள்ள பல பாழடைந்துள்ள கிணறுகளில் எலும்புக்கூடுகள் இருப்பதாகவும், 1990 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டு கிணறுகளுக்குள் வீசப்பட்டதாகவும் அத்தீர்மானத்தில் உண்டு.

மண்டைதீவில் மனித புதைகுழிகள் இருப்பதாகவும் சாட்சியங்கள் இன்னும் உண்டு எனவும் உறுப்பினர் பிரகலாதன் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது சுட்டிக்காட்டியிருந்தார்.

இராணுவம் பொதுமக்களின் காணிகளை அபகரித்து பாரிய முகாம்களை அமைத்துள்ளது என்றும் காணிகளை இழந்த மக்கள் வேறு பிரதேசங்களில் வாழ்வதாகவும் வேலனை பிரதேச சபை உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

ஆகவே, சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு முன்னர் பிரதேச மக்களின் அடிப்படை வசதிகள், அந்த மக்களின் உள்ளூர் சுய தொழில் முயற்சிகள் போன்றவற்றை ஊக்குவிக்க வேண்டும். குடிதண்ணீர் பிரச்சினைக்கு முதலில் தீர்வு காண வேண்டும்.

மைதானம் அமைக்கப்பட்டால் பிரதேச மக்களுக்கு முதலில் அங்கு தொழில்வாய்ப்பு என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஆகவே, வெறும் அரசியல் நிகழ்ச்சி நிரலாகவும், தமிழர்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை குறைத்து மதிப்பீடு செய்யும் வகையிலும் அநுர அரசாங்கம் செயல்படக் கூடாது.

மைத்திரி – ரணில் ஆட்சி காலத்தில் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப மண்டைதீவில் கிரிக்கெட் மைதானம் அமைக்க முயற்சிக்கப்பட்டது. ஆனால், அப்போது முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரன் மேற்படி ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இதன் காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது.

ஆகவே, 13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் நிராகரித்துள்ளனர் என்பது வேறு. ஆனால் 13 இற்கு கீழ் அரை குறையாகவுள்ள மாகாணங்களின் அதிகாரங்களை கூட மீறும் வகையில் அநுர அரசாங்கம் செயல்படுகிறமை பகிரங்கமாகிறது.

அத்துடன் காணி அதிகாரங்கள், கட்டிட நிர்மாண அனுமதி அதிகாரங்கள் அனைத்தும் கொழும்பு நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதையும் இந்த மண்டைதீவு சர்வதேச மைதான விவகாரம் எடுத்துக் காண்பிக்கிறது.

1981 ஆம் ஆண்டு அமரர் ஜேஆர் ஆட்சியின் போது, யாழ் கல்லுண்டாய் வெளி சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்டிருந்த முறைகள் பற்றியும் ஞாபகப்படுத்த வேண்டும்.

அ.நிக்ஸன்

The post மண்டைதீவு சர்வதேச விளையாட்டு மைதானம் – சாத்தியக்கூற்று மற்றும் சுற்றுப்புறச் சூழல் அறிக்கைகள் எதுவும் இல்லாத அரசியல் நிகழ்ச்சி நிரல் appeared first on Oruvan.com.

டொலர் இல்லாத நாட்டிற்கு தோழர் அநுர டொலர்களை தேடி கொடுத்துள்ளார்
விவசாயத் துறையுடன் தொடர்புடைய தனியார் துறை ஏகபோகம் கட்டுப்படுத்தப்படும் என்று வேளாண் அமைச்சர் கே.டி. லாலாகாந்த தெரிவித்துள்ளார்.

பாசிப்பயறு சாகுபடியை ஊக்குவிப்பதற்கான தேசிய திட்டத்தின் தொடக்க விழாவில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“டொலர் இல்லாத ஒரு நாட்டில் தோழர் அநுர எங்களுக்கு டாலர்களை தோடிக்கொடுத்துள்ளார். நாட்டில் போதுமான அரிசி இல்லையென்றால், வெளிநாட்டிலிருந்து அரிசியைக் கொண்டு வரலாம். நாட்டில் போதுமான சோளம் இல்லையென்றால், வெளிநாட்டிலிருந்து சோளத்தைக் கொண்டு வரலாம். மக்களைப் பசியால் வாட விட முடியாது.”

2028 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், நம் நாட்டை மீண்டும் நெல்லினால் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்ற முடியும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என லாலாகாந்த கூறியுள்ளார்.

The post டொலர் இல்லாத நாட்டிற்கு தோழர் அநுர டொலர்களை தேடி கொடுத்துள்ளார் appeared first on Oruvan.com.

இந்தியா – பாகிஸ்தான் மோதலும் வெளிப்பட்டுள்ள புவிசார் அரசியல் உறவும் – ஆழமாக ஆராயும் அநுர
பாகிஸ்தான் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணம், நிலப்பரப்பு அடிப்படையில் மிகவும் பெரியது. அப் பகுதியைத் தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பலுசிஸ்தான் போராளிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர் .

ஆனால், அந்தப் போராளிகளுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கி வருவதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சுமத்தி வரும் நிலையில், காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவியளிப்பதாக இந்தியா குற்றம் சுமத்தி வருகின்றது.

பழங்குடி மக்களை அதிகம் கொண்ட பலுசிஸ் தேசிய இன விடுதலைப் போராளிகளை அமெரிக்கா, பிரித்தானியா உட்பட ஐரோப்பிய ஒன்றியமும் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ள நிலையிலும், 2004 ஆம் ஆண்டு பலுஸ் இன மக்களின் தன்னாட்சி கோரி, பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பலுசிஸ் தேசிய விடுதலை இராணுவம் போராடி வருகின்றது.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள்

காஷ்மீர் போராளி இயக்கங்கள் சிலவற்றை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் பெரிய அளவில் தடை விதிக்கவில்லை. ஆனால் , பலுசிஸ் இன தேசிய விடுதலை இராணுவத்தை நோக்கி பல தடைகள் விதிக்கப்பட்டுள்ள பின்னணியில் இந்தியா மாத்திரம் பலுசிஸ் போராளிகளுக்கு ஒத்தழைத்து வருகின்றது.

இப்பின்னணியிலேயே இந்தியா – பாகிஸ்தான் மோதல் 2000 ஆம் ஆண்டில் இருந்து மேலும் தீவிரமடைந்து வருகின்றது. காஷ்மீர் பஹல்காமில் கடந்த மாதம் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீர் போராளிகள் சுற்றுலா பயணிகள் 26 பேரை கொலை செய்த பின்னர் ஏற்பட்ட முறுகல், கடந்த சில நாட்களாக இந்திய பாகிஸ்தான் இராணுவ மோதலாக மாறியுள்ளது.

சென்ற 8 ஆம் திகதி வியாழக்கிழமை இந்தியா நடத்திய தாக்குதலில் லாகூர் நகரை பாதுகாக்க பாகிஸ்தான் இராணுவம் பல வியூகங்களை வகுக்க ஆரம்பித்துள்ளது. பாகிஸ்தான் இராணுவம் ஏவிய சீன தயாரிப்பான எச்க்யூ – 9 பி ஏவுகணை தடுப்பு ஆயுதங்களை தாக்கி அழித்துள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.

சீன தயாரிப்பு ஏவுகணைகளை இந்தியா தடுத்து அழித்தமை தொடர்பாக தற்போது உலக அரங்கில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இது பரபரப்பான தகவல் என்று இந்திய ஊடகங்கள் வர்ணிக்கின்றன..

ஜம்மு விமான நிலையம், சம்பா, ஆர்எஸ் புரா, ஆர்னியா உள்ளிட்ட பகுதிகளை நோக்கி பாகிஸ்தானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கிருந்து ஏவப்பட்ட சீனத் தயாரிப்பு, எஸ் -400 என்ற தடுப்பு மையங்கள் முறியடித்தன..

இதையடுத்து இந்தியா மீது மீண்டும் வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியிருக்கிறது. வெள்ளிக்கிழமை அதிகாலை வரை கடும் மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தான் இராணுவம் ஏவிய 7 ஏவுகணைகள் தடுக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமான தளத்தில் தாக்குதல் நடத்த முற்பட்ட நிலையில், இந்திய விமானப்படை பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தியாவின் இத் தாக்குதல் குறித்து வெள்ளிக்கிழமை இரவு கருத்து வெளியிட்ட அமெரிக்க பென்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின், இந்திய இராணுவத்தை பாராட்டியிருக்கிறார். நன்கு திட்டமிட்டு இந்தியா தாக்கியுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

எஸ் 400 என்ற தடுப்பு ஏவுகணை

பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை அழிக்க இந்திய இராணுவம் பயன்படுத்திய எஸ் 400 என்ற தடுப்பு ஏவுகணை ரசியத் தயாரிப்பா என்று சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ள நிலையிலேயே அமெரிக்கப் பென்டகனின் முன்னாள் அதிகாரி பாராட்டியுள்ளமை கவனிக்கத்தக்கது.

இப் பின்னணியில்தான் சீனாவின் எச்க்யூ 9 பி என்பது என்ன என்பது பற்றியும் அதனை இந்திய இராணுவம் அழித்தது ஏன் என்ற கேள்விகள், விமர்சனங்கள் தற்போது முன்வைக்கப்படுகின்றன. சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் அதிக அளவு சக்தி வாய்ந்த ஆயுதங்களை கொள்வனவு செய்கிறது.

எஎ போர் விமானங்கள், ஏவுகணை தடுப்பு ஏவுகணை ஆயுதங்கள் உள்ளிட்ட பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து ஆயுதங்களையும் சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் கொள்வனவு செய்வதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

சீனாவில் எச்க்யூ 9 வான்வெளி பாதுகாப்பு முறைமை.(HQ 9 Air Defence System) பயன்பாட்டில் உள்ளது. இதனை தமக்கு வழங்குமாறு பாகிஸ்தான் சீனாவிடம் 2015 இல் கோரியது. இதன் காரணத்தால் சீனா பாகிஸ்தானுக்கு என்று கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தனியாக ஒன்றை தயாரித்து வழங்கியுள்ளது. ”எச்க்யூ 9பி வான்வெளி பாதுகாப்பு முறைமை” என்ற பெயர் கொண்ட இந்த ஆயுத பரிமாற்றம் தொடர்பாக ஏற்கனவே இந்தியா அதிருப்தி வெளியிட்டிருந்தது.

இந்த ஆயுதத்தில் உள்ள P என்ற எழுத்து பிரத்தியேகமாக பாகிஸ்தானை குறிக்கும். சீனாவில் பயன்படுத்தும் இந்த ஆயுதத்தில் அந்த P என்ற எழுத்து இல்லை. இந்நிலையில் தான் லாகூரை பாதுகாக்க, பாகிஸ்தான் சீனாவின் எச்க்யூ 9 பி வான் பாதுகாப்பு முறைமையை நிறுவி இருந்தது. இதனை பாகிஸ்தான் 2021ம் ஆண்டில் இருந்து பயன்படுத்தி வருவதாக அதானி குழுமத்தின் ஆங்கில ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இது வானில் 125 கிலோமீட்டர் தொலை தூரத்தை கொண்டது. இது போர் விமானங்கள், குரூஸ் வகை ஏவுகணைகள் போன்றவற்றை 100 கிலோ மீட்டர் தூரத்திலேயே கண்டுபிடித்து அழிக்கும் வல்லமை கொண்டது. ஆனால் பாகிஸ்தான் ஏவிய இந்த சீன ஏவுகணையை, இந்திய இராணுவம் தாக்கி அழித்தமை தொடர்பாக இந்திய ஊடகங்கள் பாராட்டும் விமர்சனங்களை முன்வைக்கின்றன.

அதேவேளை, எச்க்யூ 9பி ஏர் பாதுகாப்பு (Defense) மூலமான தாக்குதல் முறைமையை, பதில் தாக்குதல் நடத்தி அழிக்க இந்திய இராணுவம் பயன்படுத்திய ட்ரோன் இஸ்ரேல் தயாரிப்பு என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் ட்ரோன்

இஸ்ரேல் நாட்டின் நவீன ட்ரோன் தான், பாகிஸ்தான் ஏவிய சீனத் தயாரிப்பு ஏவுகணைகளை குறி தப்பாமல் தாக்கி அழித்தது என்று இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி உறுதி செய்திருக்கிறார்.

இஸ்ரேல் தயாரிப்புகளை பயன்படுத்தியே வியாழக்கிழமை இரவும் தாக்குதல் முறியடிக்கப்பட்டது என்று விக்ரம் மிஸ்ரியை மேற்கோள் காண்பித்து இந்திய ஆங்கில ஊடகங்கள் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டிருக்கின்றன.

இந்தியா பயன்படுத்திய ட்ரோன், இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் என்ற ஆயுத உற்பத்தி நிறுவனம் உருவாக்கியதாகும். ரேடார் மற்றும் வான்வெளி பாதுகாப்பு முறைகளை துல்லியமாக தாக்குவது தான் இதன் சிறப்பாகும். இந்த ட்ரோனால் 9 மணிநேரம் வரை இடைவிடாது பறக்கக் கூடியது என்று இந்திய இராணுவ ஆய்வாளர்கள் கூறுவதாக இந்துஸ்தான் ரைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

அதேநேரம் பலுசிஸ் தேசிய இன விடுதலை போராளிகள் பாகிஸ்தான் இராணுவம் மீது தாக்குதல்களைத் தொடர்ந்துள்ளது என்றும், இதற்கு இந்தியா பின்னணி எனவும் பாகிஸ்தான் ருடே (pakistan today) என்ற ஆங்கில ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது.

காஷ்மீர் போராளிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை எனவும், பாலுஸிஸ் போராளிகளை பாகிஸ்தானுக்கு எதிராக தூண்டி விடவே, இந்தியா, பாகிஸ்தான் மீது குற்றம் சுமத்தி உள்ளதாகவும் அந்த ஊடகம் விமர்சிக்கிறது.

புவிசார் அரசியல் – பொருளாதார நோக்கில் அமெரிக்க, இந்திய மற்றும் இஸ்ரேல் உறவும், சீன பாகிஸ்தான் உறவும் இந்த மோதல் மூலம் வெளிப்பட்டுள்ளது. அதேநேரம் இந்திய ரசிய உறவும் இராணுவத் தளபாடங்கள் பரிமாற்றமும் வெளிப்பட்டுள்ளன.

ஆனால், டொனால்ட் டிரம்ப் மறைமுக ரசிய சார்ப்புத் தன்மையுடன் செயற்படுவதால், இந்தியாவுக்கு தற்போதைக்கு அது பாதுகாப்பானதாகவே இருக்கும். இந்த நிலைமை இலங்கைக்கும் சாதகமானதே.

பலுசிஸ் தேசிய இன விடுதலை போராளிகளுக்கு இந்தியா ஆதரவு வழங்கும் பின்னணிகள் மற்றும் பாகிஸ்தான் மீதான குற்றச்சாட்டுக்கள் பற்றி மகிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் இலங்கை இராஜதந்திரிகள் ஆய்வு நடத்தி இருந்ததை தமிழ்த் தரப்பு கவனத்தில் எடுக்க வேண்டும்.

அநுரவின் அவதானிப்பு

தற்போதைய அநுர அரசாங்கமும் அமெரிக்க இந்திய உறவு மற்றும் சீன உறவுகளை பயன்படுத்தும் உத்திகள் கூட, சமகால புவிசார் அரசியல் – பொருளாதார நிலைமைகளை ஆழமாக அறிந்து காய் நகர்த்துவதாகவே உள்ளது .

காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்தும், மோடிக்கு அனுதாபம் தெரிவித்து அநுர அனுப்பிய அனுதாபச் செய்தியின் உள்ளடக்கமும் முக்கியமானது. அதேநேரம் சர்வதேச மனித உரிமைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் குறித்து ஜெனீவா மனித உரிமைச் சபையில் சீனா முன்வைத்த பரிந்துரைகள் பற்றி அநுர அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது.

குறிப்பாக உள்நாட்டு மோதல்களில் சர்வதேசம் தலையிடாத முறையில் மனித உரிமை விவகாரங்கள் பற்றி சீன முன்வைத்துள்ள காரண – காரியங்களை அநுர அரசாங்கம் தீவிரமாக பரிசீலிக்கிறது.

இப் பின்னணியில் தமிழர் தரப்பு சர்வதேச நிலைமைகளையும் சர்வதேசத்தை நோக்கிய அநுரவின் காய் நகர்த்தல்கள் பற்றியும் ஆராயாமல் வெறுமனே தேர்தல்களில் மாத்திரம் கவனம் செலுத்துவது ஆபத்தான ஒன்று.

-அ.நிக்ஸன்-

The post இந்தியா – பாகிஸ்தான் மோதலும் வெளிப்பட்டுள்ள புவிசார் அரசியல் உறவும் – ஆழமாக ஆராயும் அநுர appeared first on Oruvan.com.

புதிய வகிபாகத்தில் அமெரிக்க – இந்திய உறவு, சீனாவை விடவும், அமெரிக்க உறவு மேலானது என்ற போக்கில் அநுர
மீண்டும் அமெரிக்க – இந்திய உறவு மேலோங்கி வருகிறது. 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது, நரேந்திர மோடி அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்தியிருந்தார். இக் காலப்பகுதியில்தான் அமெரிக்க – இந்திய பாதுகாப்பு ஒப்பந்தங்களும் வெவ்வேறு வடிவங்களில் செய்யப்பட்டிருந்தன.

இப் பின்னணியில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், மோடியுடன் மீண்டும் உறவை புதுப்பித்திருக்கிறார். உலக அளவில் அமெரிக்கா விதித்துள்ள வரிகள், இந்தியாவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும் இந்தியாவுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி குறைந்தளவானதுதான்.

இந்தியா மாற்றுத் திட்டங்களை மேற்கொள்வதுடன் அமெரிக்க உற்பத்திப் பொருட்களுக்கும் வரியை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறது. ஆனாலும் அமெரிக்க இந்திய உறவு ட்ரம்ப் – மோடி என்ற தனிப்பட்ட முறையிலான கூட்டிணைப்பு ஊடாக புதிய வகிபாகம் ஒன்றை உருவாக்கும் சந்தர்ப்பங்கள் உண்டு.

அமெரிக்க நாடாளுமன்றக் குழு உறுப்பினர்

இந்தியா அமெரிக்காவுடன் உறவை வலுப்படுத்தி வருவதாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளியுறவு குழு மூத்த உறுப்பினரான பிராட் சொர்மன் (Brad Sherman) தெரிவித்துள்ளார்.

அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த உறவு பற்றி விபரித்துள்ளார்.

‘பிரதமர் மோடி இந்தியாவின் முகம்’ என்று வர்ணித்துள்ள பிராட் சொர்மன், மோடியின் ஆட்சியில் இந்தியா குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தை கண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இப் பின்னணியில் இராணுவ உளவுப் பகிர்வு மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட பசுபிக் பகுதியை சுதந்திரமாகவும் அமைதியாகவும் வைத்திருக்க முயற்சி செய்வதில் கவனம் செலுத்துவதன் மூலம், மிகப்பெரிய கூட்டு நடவடிக்கைகள் மற்றும் பயிற்சிகளுடன் பாதுகாப்பு முறைமைகளில் அமெரிக்க – இந்திய உறவு வலுவாக இருப்பது தெளிவாக தெரிகிறது.

அதேநேரம் ட்ரம்ப் விதித்த வரிகளினால் 500 பில்லியன் டொலர் சந்தையை சீனா இழக்கும்போது, மலிவான விலைகளில் தனது உற்பத்திகளை இந்திய சந்தைகளில் சீனா குவிப்பதற்கான சாத்தியம் இருப்பதாக’ இந்திய உற்பத்தித் துறைத் தலைவர் அஜய் சஹாய் சுட்டிக்காட்டியுள்ளார்.

மலிவான சீன தயாரிப்புகள் இந்திய சந்தையில் குவிக்கப்பட்டால், அது இந்திய உற்பத்தியாளர்களுக்கு பெரிய பாதிப்பாக அமையும் என்றும், இந்திய நிறுவனங்கள் வலிந்து மலிவாக்கப்பட்ட சீன பொருட்களுடன் போட்டியிட முடியாது என்றும் என்றும் அஜய் சஹாய் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க துணை ஜனாதிபதி

இந்திய உற்பத்தியாளர்களின் நலன்களுக்காக அமெரிக்க வர்த்தகத் துறையுடன் எவ்வாறு கைகோர்ப்பது என்பது குறித்து இந்தியா கவனம் செலுத்தும் என நம்புவதாகவும் அவர் கூறுகிறார்.

அதேவேளை அரசியல் பொருளாதார ரீதியில் அமெரிக்க இந்திய உறவுக்கும் புதிய உடன்பாடுகளுக்கும் ஏற்ப அணுகுமுறைகளை வகுக்கவுள்ளதாக புதுடில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகமும் கூறியிருக்கிறது.

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் கடந்த 21 ஆம் திகதி திங்கட்கிழமை புதுடில்லிக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய பாதுகாப்பு துறையின் உயர் அதிகாரிகள் இந்திய பொருளாதார வல்லுநர்கள் உள்ளிட்ட பலரைச் சந்தித்திருக்கிறார்.

மோடி – ட்ரம்ப் ஆகிய இருவரும் கடந்த பெப்ரவரி மாதம் வோஷிங்டன் நகரில் நடத்திய பேச்சுவார்த்தைகளின்போது, 2030 ஆம் ஆண்டுக்குள் அமெரிக்க – இந்திய வர்த்தகத்தை 500 பில்லியன் டொலர்களாக உயர்த்துவதற்குரிய திட்டங்களை வகுத்திருந்ததாக நியுயோர்க் ரைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் பின்னர் புதுடில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பொன்றில் அமெரிக்க – இந்திய உறவின் முக்கியம் தொடர்பாக விபரிக்கப்பட்டுள்ளது,

குறிப்பாக பொருளாதார ஒத்துழைப்பு இந்தோ – பசுபிக் பாதுகாப்பு போன்ற விடயங்களில் அமெரிக்க – இந்திய செயற்பாடுகள் பற்றிய நம்பிக்கைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அதேநேரம் ஜெயப்பூர் உற்பத்தி, எரிசக்தி, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் இராணுவ துறைகளில் இந்தியா – அமெரிக்கா வேகம் காட்டத் தவறினால், அது உலகிற்கே மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற தொனியில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டிய விடயம் நியாயமானது என்ற தொனியில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார்.

சீனாவின் செல்வாக்கு

அதாவது குறித்த விடயங்களில் அமெரிக்க இந்தியக் கூட்டுச் செயற்பாட்டின் அவசியத்தை ஜெய்சங்கரும் வலியுறுத்துவதாக பிபிசி உலக செய்திச் சேவை கூறுகிறது.

இந்திய அதிகாரிகளுடன் இந்தோ – பசிபிக் பிராந்திய பாதுகாப்பு, சீனாவின் செல்வாக்கு மற்றும் உலகளாவிய வர்த்தக பிரச்சினைகள் தொடர்பாக இந்தியாவும் அமெரிக்காவும் குவாட் இராணுவக் கூட்டணியில் இணைந்து எதிர்கொள்ளும் என்று சென்ற 22 ஆம் திகதி ஜெய்ப்பூரில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் வான்ஸ் உரை நிகழ்த்தியபோது பகிரங்கமாகக் கூறியிருக்கிறார்.

அதாவது இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு மற்றும் சீன இராணுவ ஆதிக்கங்களை தடுக்க அமெரிக்க – இந்திய கூட்டுக்கு அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளும் ஒத்துழைக்கும் என்றும் அவர் விபரித்திருக்கிறார். குவாட் இராணுவ கூட்டு அணியில் இந்த நாடுகள் பிரதான அங்கம் வகிக்கின்றன.

இப் பின்னணியில் அமெரிக்கத் துணை ஜனாதிபதி வான்ஸ் நிகழ்த்திய உரை அமெரிக்க இந்திய ஊடகங்களில் முக்கியம் பெறுகின்றன. இச் சூழலில்தான் அமெரிக்க உறவின் முக்கியத்துவம் பற்றி இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கொழும்பில் கருத்து வெளியிட்டிருக்கிறார்.

ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைப்பதற்கு முன்னர் அதாவது எதிர்க்கட்சியாக இருந்தபோது அநுரகுமார திஸாநாயக்க அமெரிக்க – இந்திய நாடுகளுக்குப் பயணம் செய்தமை பற்றியும், இந்த இரு நாடுகளின் உறவுகள் இலங்கைக்கு முக்கியமானது என்பது தொடர்பாகவும் விஜத ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமரிக்க பொருளாதார குழுவுடன் சந்திப்பு

அமெரிக்க விரியின் பாதிப்புகள் மற்றும் இலங்கை பொருளாதாரத்தை முன்னேற்றுவது தொடர்பான அநுரகுமாரவின் ஆலோசனையுடன் இலங்கைப் பொருளாதார இராஜதந்திர குழு ஒன்று சென்ற 22 ஆம் திகதி வோசிங்டனில் பேச்சு நடத்தியுள்ளது.

ஆசியப் பிராந்தியத்தின் தெற்கு – மத்திய ஆசிய பகுதிகளுக்குப் பொறுப்பாகச் செயற்படும் அமெரிக்க வர்த்தகச் செயற்பாட்டுப் பிரிவு அலுவலகத்த்தின் (Office of the United States Trade Representative -USTR) தலைமைச் பிரதிநிதி பிரெண்டன் லின்ச் (Brendan Lynch) உள்ளிட்ட அமெரிக்க முதலிட்டுச் சபை உறுப்பினர்கள் பலருடன் இலங்கைப் பொருளாதார இராஜதந்திரக் குழு பேச்சு நடத்தியிருக்கிறது.

இலங்கைக்குப் பாதகம் இல்லாத முறையில் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்வதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய வர்த்தகச் சபை உறுப்பினர்களையும் இலகைப் பொருளாதார இராஜதந்திர குழு சந்திக்கவுள்ளது. விரைவில் கொழும்பில் சந்தப்புகள் இடம்பெறவுள்ளன.

அமரிக்க உறவை விரும்பும் அநுர

அதேவேளை அமெரிக்க – இந்திய உறவுகள் பற்றியும் சீனாவோடு பொருளாதார உறவைப் பேணுவது குறித்தும் வெளியுறவு இலங்கை அமைச்சு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

குறிப்பாக அமெரிக்க – இந்திய உறவு தொடர்பாகவும் அந்த உறவுடன் இலங்கை சேர்ந்து பயணிக்க வேண்டிய அவசியம் பற்றியும் ஆராயப்பட்டு வருவதாகக் கொழும்பில் தகவல்கள் கசிந்துள்ளன. வெளியுறவு அமைச்சர் விஜத ஹேரத் தலைமையில் இலங்கைப் பொருளாதார இராஜதந்திரிகள் (Economic Diplomats) இது தொடர்பான

அதாவது அமெரிக்காவுடன் இலங்கை நேரடியான உறவை பேணுவது அநுரகுமார அரசாங்கத்தின் பிரதான இலக்கு என்பது தெரிகிறது.

தற்போது குழப்பமடைந்திருக்கும் சர்வதேச ஒழுங்கு முறைக்குள் இராணுவ மற்றும் பொருளாதார விஸ்தரிப்பு விவகாரங்களில் புதிய உருவெடுக்கும் அமெரிக்க – இந்திய உறவுக்குள், தங்கி வாழும் புதிய அரசியல் அணுகுமுறை ஒன்றை அநுர வகுக்கிறார் என்பது சமீபத்திய தகவல்.

காஷ்மீரில் கடந்த வாரம் 27 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் இந்தியா – பாகிஸ்தான் இராஜதந்திர உறவு முறிவு மற்றும் சமீபத்திய புவிசார் அரசியல் சூழல் இலங்கைக்குச் சாதகமான ஒன்றே.

ஆகவே ஈழத்தமிழர் விவகாரத்தை சர்வதேச அரங்கில் இருந்து முற்றாக நீக்க வேண்டுமானால், சீனாவை விடவும் அமெரிக்க – இந்திய உறவு பாதுகாப்பானது என்ற உணர்வு ராஜபக்ச குடும்பத்துக்கும் இருந்தது. ஏறத்தாள ஜேஆர், சந்திரிகா கால அணுகுமுறைதான்.

ஆனால் புதிய அரசியல் கோணத்தில் ஈழத்தமிழர்களின் ‘அரசியல் விடுதலை’ என்பதன் நியாயப்பாடுகள் அத்தனையும் தேசிய மக்கள் சக்திக்குள் கரைக்கப்படுகின்றன.

அதேவேளை, அமெரிக்கத் துணை ஜனாதிபதியுடன் புதுடில்லிக்குப் பயணம் செய்திருந்த அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரி மைக்கல் வால்ட்ஸ், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலை சந்தித்துப் பேசியிருக்கிறார். இதன்போது இந்தோ – பசுபிக் விவகாரத்தில் அயல் நாடுகளின் பாதுகாப்பு செயற்பாடுகள் பற்றியும் பேசப்பட்டிருப்பதாக டில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜித் டோவால் விரைவில் கொழும்புக்கு வருவார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

அ.நிக்ஸன்-

The post புதிய வகிபாகத்தில் அமெரிக்க – இந்திய உறவு, சீனாவை விடவும், அமெரிக்க உறவு மேலானது என்ற போக்கில் அநுர appeared first on Oruvan.com.

‘செப்டம்பர்’ அநுர அரசாங்கத்துக்கு சவாலானது – காரணம் என்ன?
இலங்கை அரசாங்கமோ அல்லது வேறு எவரும் எதிர்பார்க்காத வகையில் படலந்த அறிக்கை குறித்த தகவல் அல் ஜசீரா தொலைக்காட்சி விவாதத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டது. இதன் பின்னர் படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை  நாட்டில் பிரதான பேசுபொருளானது.

அரசாங்கம் படலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றில் தாக்கல் செய்ததுடன், சர்வதேச சமூகம் இலங்கை தொடர்பாக சில நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய சூழலையும் உருவாக்கியுள்ளது.

படலந்த அறிக்கை ஊடாக வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் கூட, மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்பதையும் மக்கள் கடுமையான சித்திரவதைகள் மற்றும் படுகொலைகளுக்கு ஆளாகியுள்ளனர் என்பதையும் சர்வதேச சமூகத்திற்கு நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன.

2009 ஆம் ஆண்டு போர் வெற்றிக்குப் பின்னர், வடக்கில் உள்ள தமிழ் மக்களின் மனித உரிமைகள் போரினால் மீறப்பட்டுள்ளதாகக் கூறும் ஏராளமான முன்மொழிவுகள் ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்கு வந்துள்ளன. ஆனால் இவற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தெற்கில் உள்ள மக்களின் மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறப்படவில்லை. ஆனால் படலந்த ஆணைக்குழுவின் அறிக்கையின் ஊடாக் இப்போது, ​​அதற்கான பாதை திறக்கப்பட்டுள்ளதாக மனிதவுரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த செப்டம்பரில் நடைபெறும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவால் மிக்கதாகவும்  இருக்கும் என கூறும் மனிதவுரிமை ஆர்வலர்கள்,  செப்டம்பரில் ஜெனீவா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான ஒரு வலுவான பிரேரணையும் முன்மொழியப்பட உள்ளதாகவும் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற  மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இந்தப் பிரேரணை ஏற்கனவே சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டிருந்தாலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்காலத்தின் இறுதி நாட்கள் மற்றும் தேர்தல் ஆண்டாக இருந்ததால் பிரேரணையை கடந்த அரசாங்கம் தள்ளிப்போட முடிந்தது. என்றாலும், இந்த ஆண்டு செப்டம்பரில் இந்த பிரேரணை உறுதியாக சமர்ப்பிக்கப்படும் என பிரேரணையை கொண்டுவரும் நாடுகள் புலம்பெயர் தமிழ் அமைப்புகளிடம் உறுதியளித்துள்ளன.

படலந்த அறிக்கையை மேற்கோள்காட்டி இலங்கை அரசாங்கம், தெற்கு மக்களின் மனித உரிமைகளையும் கடுமையாக மீறியுள்ளதாக  கூறி மேற்கத்திய நாடுகள் இப்போது தொடர்புடைய முன்மொழிவை வலுப்படுத்தத் தயாராகி வருகின்றன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சராக இருந்தபோது படலந்த சம்பவத்தின் போது இந்த மனித உரிமை மீறல்கள் நடந்தன என்பதை  நிரூபிக்க மேற்கு நாடுகள் தயாராகி வருகின்றன.

மேலும், விளக்கமறியலில் உள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பான சம்பவம் இலங்கைக்கு மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கருதுகின்றனர். தேசபந்து சம்பந்தப்பட்ட சம்பவத்தில் சட்டமா அதிபரின் சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், தேசபந்து தென்னகோன் ஒரு அதிகாரப்பூர்வமற்ற போர் குழுவை வழிநடத்தியதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்த விடயமும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக மேற்கத்திய நாடுகள் இதை ஜெனீவா குற்றச்சாட்டுகளில் ‘அரச பயங்கரவாதம்’ என்று கூறி சேர்க்க திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. அதன்படி, நீண்ட காலமாக இலங்கையின் மனித உரிமை மீறல்களை அவதானித்துவரும் மேற்கு நாடுகளுக்கு இப்போது அரசாங்கம் இரண்டு எளிதான பிடிகளை வழங்கியுள்ளது. அல்லது, வடக்கில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்த தெற்கில் இருந்து இரண்டு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, சர்வதேச அரசியலை பகுப்பாய்வு செய்யும் பலர், இந்த நிகழ்வுகளின் சங்கிலி தொடர் செப்டம்பரில் அரசாங்கத்திற்கு பாரிய சவாலாக இருக்கும் என்று நம்புகின்றனர்.

The post ‘செப்டம்பர்’ அநுர அரசாங்கத்துக்கு சவாலானது – காரணம் என்ன? appeared first on Oruvan.com.