அநுர குமார Archives - Oruvan.com

மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க புதிய அதிகாரசபை – ஜனாதிபதி தலைமையில் முக்கிய தீர்மானம்
மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக புதிய அதிகாரசபை ஒன்றை நிறுவும் செயற்பாட்டின் முன்னேற்றத்தை ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

கடந்த டிட்வா சூறாவளியின் போது ஏற்பட்ட மண்சரிவுகளால் மத்திய மலைநாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டதுடன், நாட்டின் இதயம் போன்ற மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

அதன்படி, உயர் நீரேந்துப் பிரதேசங்களில் நிலவும் சுற்றாடல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கும் எனத் தனியான அதிகாரசபை ஒன்றை நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இந்தச் செயல்முறை தொடர்பான முன்னேற்றம் மற்றும் சட்ட ஏற்பாடுகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டதுடன், அது தொடர்பான முன்மொழிவுகளும் கருத்துகளும் முன்வைக்கப்பட்டன.

அந்த அனைத்து முன்மொழிவுகளையும் ஆலோசனைகளையும் கருத்திற்கொண்டு, இதன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இலங்கையின் உயர் நீரேந்துப் பிரதேசங்களின் சுற்றாடல் மறுசீரமைப்பு மற்றும் முகாமைத்துவம் ஆகிய பணிகள் இந்தப் புதிய அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்படுவதுடன், தேசிய நீர் பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு, அனர்த்த அபாயக் குறைப்பு, பொருளாதார மற்றும் வலுசக்தி செயற்திறன், காலநிலை மாற்றங்களுக்கு இசைவாக்கம் அடைதல் மற்றும் அவற்றின் பாதிப்புகளைக் குறைத்தல், இயற்கை மூலதனக் கணக்கீடு ஆகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக, நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பையும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படும்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் வலுசக்தி அமைச்சின் செயலாளருமான ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க உள்ளிட்ட அமைச்சுகளின் செயலாளர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள், அரச அதிகாரிகள், சூழலியலாளர்கள், இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டுத் துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

The post மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க புதிய அதிகாரசபை – ஜனாதிபதி தலைமையில் முக்கிய தீர்மானம் appeared first on Oruvan.com.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகள் மீளவும் ஆரம்பித்து வைப்பு
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான கட்டுமானப் பணிகள் இன்று (17) அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்காக அரசாங்கம் 8.6 பில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த வீதிக்கு ஒதுக்கப்பட்ட கடன் வசதிகள் நிறுத்தப்பட்டதால், இந்தப் பகுதியின் கட்டுமானம் 2022 நடுப்பகுதியில் நிறுத்தப்பட்டது.

கட்டுமானத்தை மீண்டும் தொடங்க சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியால் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இணையான யுவான் கடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் 2028 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.மத்திய அதிவேக வீதியின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான தூரம் 37 கிலோமீற்றர் ஆகும்.

168.7 கிலோமீற்றர் நீளம் கொண்ட மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப்பணிகள் நான்கு கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளன.

முதல் கட்டம் கடவத்தை முதல் மீரிகம வரை 37 கிலோமீற்றர் நீளமும், இரண்டாவது கட்டம் மீரிகம முதல் குருணாகல் வரை 39.7 கிலோமீற்றர் நீளமும், மீரிகம முதல் அம்பேபுஸ்ஸ வரை ஒன்பது தசம் ஒரு கிலோமீற்றர் நீளமும் கொண்டுள்ளது.

மூன்றாவது கட்டம் பொத்துஹெர முதல் கலகெதர வரை 32.5 கிலோமீற்றர் நீளமும், நான்காவது கட்டம் குருணாகலிலிருந்து தம்புள்ள வரை 60.3 கிலோமீற்றர் நீளமும் கொண்டுள்ளது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாவது கட்டமான மீரிகம முதல் குருணாகல் வரையிலான பகுதி 2022 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

The post மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகள் மீளவும் ஆரம்பித்து வைப்பு appeared first on Oruvan.com.

வடக்கு மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான தனது பொறுப்பை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி
வடக்கிற்கு மீளவும் உயிர்கொடுத்து மக்களுக்கு வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான தனது பொறுப்பை நிறைவேற்றுவேன் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, வடக்கிற்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க எதிர்காலத்தில் தொழில்துறை வலயங்கள் உட்பட பல அபிவிருத்தித் திட்டங்களை எதிர்காலத்தில் செயல்படுத்தப் போவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உலக தெங்கு தினத்தை முன்னிட்டு, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரில் நடைபெற்ற வடக்கு தெங்கு முக்கோண ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,

புதுக்குடியிருப்பு பகுதி கடந்த காலங்களில் பாரிய யுத்தத்தை சந்தித்த ஒரு பகுதி என்பதை நாங்கள் அறிவோம். அந்த மோதல்கள் காரணமாக, இந்தப் பகுதி மக்கள் அனைத்தையும் இழந்துள்ளனர்.

கடந்த தேர்தலின் போது இந்தப் பகுதி மக்களை நான் சந்தித்தேன். இந்த அழிவுற்ற பகுதிக்கும் மக்களுக்கும் நாம் மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும்.

குறிப்பாக கடந்த தேர்தல்களின் போது, இந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வலுவான அடியை எடுத்து வைத்தனர்.

எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒரு அடி எடுத்து வைத்த மக்களை வெற்றியின் பக்கம் இட்டுச் செல்வதே எங்கள் எதிர்பார்ப்பாகும்.  அதற்காக, நாங்கள் பல துறைகளில் பணிகளைத் ஆரம்பித்துள்ளோம்.

முதலில், இந்த மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். காணி உரிமைகள், மொழி உரிமைகள் மற்றும் கலாசார உரிமைகள், அத்துடன் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமை ஆகியவற்றை அவர்களின் அடிப்படை உரிமைகளாக நாங்கள் பார்க்கிறோம்.

அந்த உரிமைகளைப் பாதுகாக்க நாங்கள் பல நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளோம். அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.

ஒரு அரசாங்கமாக, அவர்கள் இழந்த பொருளாதார வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் வலுவான பொருளாதாரத்தை உருவாக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

அதற்காக நாங்கள் ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, வடக்கிலும் தெற்கிலும் அதிகாரத்தைப் பெறுவதற்கான பிரதான கருவியாக இனவாதம் மாறியது. அந்த நிலைமையை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்நாட்டு மக்கள் தோற்கடித்தனர்.

மீண்டும் இந்த நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமளிக்க மாட்டோம். இந்த இனவாத அரசியலை நிராகரிக்க வேண்டும். ஒற்றுமையை உருவாக்குவதே எமது அரசாங்கத்தின் குறிக்கோள் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

The post வடக்கு மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான தனது பொறுப்பை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி appeared first on Oruvan.com.

வடக்கின் முதல் விதை தேங்காய் உற்பத்தி அலகு – ஜனாதிபதி திறந்து வைத்தார்
வடக்கு தெங்கு முக்கோண திட்டத்தின் கீழ், வடக்கின் முதல் விதைத் தேங்காய் உற்பத்தி அலகு இன்று (02) காலை பளை நகரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த திட்டம் இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டுத் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளை வடக்கு தெங்கு முக்கோணமாக அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் கீழ், 2025 ஆம் ஆண்டுக்குள் வட மாகாணத்தில் 16,000 ஏக்கர் தேங்காய் பயிரிட எதிர்பார்க்கப்படுகிறது. 2025 முதல் 2027 வரையிலான 03 ஆண்டுகளில் இது 40,000 ஏக்கராக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி விதை தேங்காய் மரக்கன்றையும் நட்டு, உற்பத்தி அலகைத் திறந்து வைத்தார்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், மற்றும் தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்தின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதேவேளை, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு முன்பாகவுள்ள பகுதியில் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையால் நடத்தப்படும் தெங்கு தொடர்பான கண்காட்சியையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

The post வடக்கின் முதல் விதை தேங்காய் உற்பத்தி அலகு – ஜனாதிபதி திறந்து வைத்தார் appeared first on Oruvan.com.

யாழ் நூலகத்திற்கு 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் வரவு – செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் பொதுநூலக மேம்பாட்டுக்காக விசேடமாக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதனை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் இன்று திங்கட்கிழமை மதியம் (01.09.2025) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ். மாநகர சபையின் மேயர் திருமதி மதிவதனி விவேகானந்தராஜா ஆகியோரால் வரவேற்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் வரவேற்புரையை நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் உரையாற்றினார்.

அதன் பின்னர் யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், எண்ணிமப்படுத்தல் செயற்றிட்டமும் தொடக்கி வைக்கப்பட்டது. இதனை யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் பிரதம நூலகர் நெறிப்படுத்தினார்.

இந்த நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, க.இளங்குமரன், ஜெ.றஜீவன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாநகர சபை உறுப்பினர்கள், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், யாழ். நூலக வாசகர் வட்டத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

The post யாழ் நூலகத்திற்கு 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு appeared first on Oruvan.com.

யாழில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் – அடிக்கல் நாட்டினார் ஜனாதிபதி
யாழ்ப்பாணம் மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று யாழ்ப்பாணம்மண்டைதீவில் இடம்பெற்றது.

இவ்விழாவில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் ஷாமி சில்வா, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ச.ஶ்ரீபவானந்தராஜா வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

வடமாகாணத்தில் கிரிக்கெட்டின் மேம்பாட்டிற்கும், இளம் வீரர்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இந்த மைதானம் முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இம்மைதானம் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கான வழிவகையை ஏற்படுத்தி, இலங்கையின் விளையாட்டுத் துறையில் புதிய கட்டத்தைத் தொடங்கவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபை, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து, நாடு முழுவதும் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காகவும்,  அனைத்துப் பகுதிகளிலும் உள்ள திறமையான வீரர்களுக்குச் சர்வதேச தரத்திலான வசதிகளை அளிப்பதற்கும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

எதிர்வரும் 3 வருடங்களில் இங்கு சர்வதேச போட்டிகள் இடம்பெறும் என ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடடதக்கது

The post யாழில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் – அடிக்கல் நாட்டினார் ஜனாதிபதி appeared first on Oruvan.com.

மயிலிட்டியில் பரபரப்பு – பொது மக்களை விரட்டியடித்த பொலிஸார்
யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியில் இன்று காலை ஒன்றுகூடிய காணி உரிமையாளர்களையும் அதனை செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களையும் பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக விரட்டியடித்தனர்.

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் பகுதியில் அபிவிருத்தி பணிக்கான அடிக்கலை நாட்டுவதற்காக ஜனாதிபதி அனுர குமார வருகைதந்தார்.

இதன்போது அப்பகுதியில் கூடிய காணி உரிமையாளர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் என அனைவரும் அப்பகுதியில் நிற்க விடாமல் விரட்டியடிக்கப்பட்டனர்.

பொலிஸார், வயோதிபர்கள் எனவும் பாராது போராட்டக்காரர்களை தூஷண வார்த்தைகளை பேசி முதுகில் பிடித்து தள்ளினர்.

கடும் பாதுகாப்புக்கு மத்தியில் பொலிஸார், இராணுவத்தினர், விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மயிலிட்டிக்கு வருகை தந்திருந்தார்.

கடந்த காலங்களில் ஜனநாயகம் பற்றி அதிகம் பேசிய அனுர குமார திஸாநாயக்கவின் ஆட்சியிலும் பொலிஸார் கடந்த காலங்களை போன்று மூர்க்கத்தனமாக செயற்பட்டமை அங்கிருந்தவர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியது.

The post மயிலிட்டியில் பரபரப்பு – பொது மக்களை விரட்டியடித்த பொலிஸார் appeared first on Oruvan.com.

மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டேன் – யாழில் ஜனாதிபதி சூளுரை
நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதற்கு ஒரு போதும் இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார் திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாட்டு மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடனும், நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும் எனவும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும், இனவாதத்தின் அடிப்படையில் வடக்கையும், தெற்கையும் குழப்பும் வகையில் சில அரசியல்வாதிகள் திட்டமிட்டுகொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

ஆகவே எந்தவொரு இனவாத அரசியலுக்குள்ளும் சிக்கி இரையாக வேண்டாம் என ஜனாதிபதி அநுர குமார் திஸ்ஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மயிலிட்டி துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பதித்து வைத்த பின்னர் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,

பிரிந்திருந்த நாட்டு மக்களை கடந்த கால ஜனாதிபதி மற்றும் பொது தேர்தல்கள் ஒன்றிணைத்துள்ளது. இனி ஒருபோது நாட்டு மக்கள் பிரிந்திருப்பதற்கு அனுமதிக்க முடியாது.

வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, மலைநாடு என பிரிந்திருக்காமல் ஒரு நாட்டு மக்களாக வாழவேண்டும். அதற்காக அரசாங்கம் கடும் முயற்சிகளை எடுத்துள்ளது.

இந்நிலையில், வடக்கு மாகாண மக்கள் முகம்கொடுத்துள்ள பொருளாதார பிரச்சினைகள் குறித்து நாங்கள் விஷேடமாக அவதானம் செலுத்தியுள்ளோம்.

வடக்கில் அதிகளவான விவசாய தொழிலாளர்கள் இருக்கின்றனர். அவர்களின் காணி உரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

யுத்தம் காரணமாக பாரிய அளவிலான காணிகளை படையினர் கைப்பற்றி முகாம்களை அமைந்திருந்தனர். இனிநாட்டில் யுத்தம் ஒன்று ஏற்படுவதற்கான சூழல் இல்லை.

யுத்தம் வரும் என்ற நோக்கத்துடன் அந்த காணிகளை இனி வைத்திருக்க வேண்டிய தேவையில்லை. யுத்தம் ஒன்று ஏற்படுவதை தடுக்கும் நோக்கிலேயே எமது அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

கடந்த கால அரசாங்கங்கள் மீண்டும் ஒரு யுத்தம் வருமென எண்ணி அந்த காணிகளை வைத்திருந்தன.

இந்நிலையில், திறந்துவிடக்கூடிய அனைத்து வீதிகளையும், விடுவிக்க வேண்டிய அனைத்து காணிகளை நாங்கள் மக்களுக்கு வழங்க தயாராக உள்ளோம்.

அதேபோல், வடமாகாண மீனவர்களின் பிரச்சினை குறித்தும் நாங்கள் அவதானம் செலுத்தியுள்ளோம். அதற்காகவே மயிலிட்டி துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளோம்.

மேலும், தமிழக மீனவர்களிடம் இருந்து எமது கடற்பரப்பை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது. அந்த வகையில் கச்சத்தீவை ஒருபோதும் யாருக்கும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை.

இன்று மாலை கச்சத்தீவிற்கு சென்று அங்குள்ள மீனவர்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளேன். எமது நாட்டின் நிலம், கடல், வானம் என அனைத்தையும் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு வழங்க வேண்டியது எங்களின் தார்மீக பொறுப்பாகும்.

எமது நிலம், கடல் மற்றும் வான்பரப்பிற்கு அச்சுறுத்தைலை ஏற்படுத்தும் எந்தவொரு சக்திக்கும் நாம் அடிப்பணியப் போதில்லை என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

The post மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டேன் – யாழில் ஜனாதிபதி சூளுரை appeared first on Oruvan.com.

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் ஜனாதிபதியை சந்தித்தார்
அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் (Samantha Joy Mostyn) நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினார்.

அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான 75 ஆண்டுகளுக்கும் மேலான நட்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், இரு நாடுகளின் பரஸ்பர நன்மைக்காக தற்போதுள்ள ஒத்துழைப்புத் துறைகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தெளிவான தலைமையின் கீழ் வெற்றிகரமான பயணத்திற்கு அவுஸ்திரேலியா தொடர்ந்து ஆதரவை வழங்க தயாராக உள்ளது என்று அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் வலியுறுத்தினார்.

குறிப்பாக இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த தேவையான ஆதரவை வழங்க அவுஸ்திரேலியா தயாராக உள்ளது என்று ஆளுநர் நாயகம் வலியுறுத்தினார்.

சுனாமி பேரழிவு மற்றும் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போது அவுஸ்திரேலிய அரசாங்கம் நேரடியாகவும், சர்வதேச நிறுவனங்கள் மூலமாகவும் வழங்கிய ஆதரவை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இந்தப் பயணம் அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நட்பை மேலும் வலுப்படுத்தும் என்று தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரம், கல்வி, பாதுகாப்பு, சுற்றுலா மற்றும் கடல்சார் விவகாரங்களில் அவுஸ்திரேலியாவிடமிருந்து கிடைத்த ஆதரவையும் இங்கு ஜனாதிபதி பாராட்டினார்.

அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் தொழில் பயிற்சிக்கான மையமாக அவுஸ்திரேலியா மாறியுள்ளது என்று கூறிய ஜனாதிபதி, இந்த துறைகளில் அவுஸ்திரேலியாவின் அனுபவங்களிலிருந்து இலங்கை அதிகம் கற்றுக்கொள்ள முடியும் என்றும், அந்த அனுபவங்களை வெற்றிகரமாக பகிர்ந்து கொள்ள இலங்கை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் மிகவும் சாதகமான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (06) பிற்பகல் இலங்கைக்கு வருகை தந்த அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்ய உள்ளதோடு பண்டாரகம, மிரிஸ்ஸ மற்றும் வெலிகம போன்ற பகுதிகளில் அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் பல திட்டங்களைக் கண்காணிக்க உள்ளார்.

தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோருடன் அவுஸ்திரேலிய பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

The post அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் ஜனாதிபதியை சந்தித்தார் appeared first on Oruvan.com.