அநுர குமார திசாநாயக்க Archives - Oruvan.com

ஜனாதிபதியின் பங்கேற்புடன் 2026 எண்ணெய் தேய்க்கும் அரச விழா
புத்தாண்டின் பாரம்பரியங்களுக்கு அமைவாக 2026 எண்ணெய் தேய்க்கும் அரச விழா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் கண்டி வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகை, ஸ்ரீ மகா நாத தேவாலய வளாகத்தில் இன்று (15) காலை நடைபெற்றது.

மகா விகாரவங்சிக சியாமோபாலி மகா பீடத்தின் மல்வத்து மற்றும் அஸ்கிரி ஆகிய இரு பிரிவுகளின் மகா நாயக்க தேரர்களின் வழிகாட்டலுடன் சுகாதார மற்றும் வெகுஐன ஊடக அமைச்சு மற்றும் ஆயுர்வேத திணைக்களம் என்பன இணைந்து சம்பிரதாய முறைப்படி இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

இன்று (15) காலை வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி , பிறந்துள்ள சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக ஆசீர்வாதம் பெற்ற பின்னர், 2026 எண்ணெய் தேய்க்கும் அரச விழாவில் கலந்துகொண்டார்.

மத வழிபாடுகளைத் தொடர்ந்து, இன்று காலை 6.55 மணிக்கு சுப நேரத்தில் அஸ்கிரி பிரிவின் மகா நாயக்க தேரர் அதிவணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் அவர்கள், ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு முறைப்படி எண்ணெய் தேய்க்கும் சம்பிரதாயத்தினை முன்னெடுத்தார்.

இதன்போது மகா சங்கத்தினர் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதி உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினர்.

இதேவேளை, எண்ணெய் தேய்க்கும் சம்பிரதாயத்திற்காக தலதா மாளிகை வளாகத்திற்கு வருகை தந்திருந்த மக்களிடையே சென்ற ஜனாதிபதி, அவர்களின் நலன்களைக் கேட்டறிந்து சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது அங்கிருந்த மக்கள் பிறந்துள்ள புத்தாண்டுக்காக ஜனாதிபதிக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

மல்வத்து பிரிவின் அனுநாயக்க தேரர்களான வணக்கத்திற்குரிய கலாநிதி நியங்கொட விஜிதசிறி தேரர், வணக்கத்திற்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் மற்றும் அஸ்கிரி பிரிவின் அனுநாயக்க தேரர்களான வணக்கத்திற்குரிய வெண்டருவே உபாலி தேரர், வணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரர் உள்ளிட்ட மல்வத்து – அஸ்கிரி இரு விகாரைகளினதும் மகா சங்கத்தினர் , சுகாதார மற்றும் வெகுஐன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, புத்தசாசன, சமய மற்றும் அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகேதர திசாநாயக்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

The post ஜனாதிபதியின் பங்கேற்புடன் 2026 எண்ணெய் தேய்க்கும் அரச விழா appeared first on Oruvan.com.

எரிபொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை
மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் நேற்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக வலுசக்தி விநியோகக் கட்டமைப்பு சீர்குலைந்துள்ளதால், உலக நாடுகள் அனைத்தும் எதிர்கொண்டுள்ள வலுசக்தி நெருக்கடி மற்றும் அதன் விளைவாக எதிர்வரும் மாதங்களில் உலக சந்தையில் ஏற்படக்கூடிய புதிய போக்குகள் குறித்து இங்கு விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.

தற்போதைய நெருக்கடி நிலையால் இலங்கை பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையிலும், 2025 ஆம் ஆண்டில் எட்டப்பட்ட பொருளாதார வெற்றிகளை நிலைபேறாக முன்னெடுத்துச் செல்லும் வகையிலும், தடையற்ற வலுசக்தி விநியோகத்தை உறுதிப்படுத்துமாறும், பொருளாதார சுருக்கத்தை குறைக்கும் வகையில் விலைகளை முகாமைத்துவம் செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டன. இதற்காக நிவாரணத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, மத்திய வங்கி ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி உட்பட பலர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

The post எரிபொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை appeared first on Oruvan.com.

தூதுவர்கள் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பெயரிடப்பட்ட தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் அரச பிரதிநிதிகள் 10 பேரின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய நாடாளுமன்றக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரச சேவைகள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களுக்கு நியமிக்கப்படும் நபர்களின் தகைமைகளை பரிசோதிக்கும் இக்குழுவின் அனுமதியைத் தொடர்ந்து, அவர்கள் தத்தமது இராஜதந்திரப் பணிகளைப் பொறுப்பேற்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகள் மற்றும் அவர்களின் பதவிகள் குறித்த விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன:

1. தர்ஷன எம். பெரேரா – மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர்.

2. டி.எம்.எஸ்.பி. தசநாயக்க – ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் தூதுவர் மற்றும் நிரந்தரப் பிரதிநிதி (ஏற்கனவே பதவியேற்றுள்ளார்).

3. தயானி மென்டிஸ் – ஓஸ்திரியாவுக்கான இலங்கையின் தூதுவர் மற்றும் நிரந்தரப் பிரதிநிதி.

4. எஸ்.பி.டபிள்யூ. பத்திரண – ரூமேனியாவுக்கான இலங்கையின் தூதுவர் (ஏற்கனவே பதவியேற்றுள்ளார்).

5. என்.ஐ.டி. பரணவிதான – எத்தியோப்பியா மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கான இலங்கையின் தூதுவர் மற்றும் நிரந்தரப் பிரதிநிதி.

6. எஸ்.கே. சந்திரசிறி – இஸ்ரேலுக்கான இலங்கையின் தூதுவர்.

7. தம்மிக பெர்னாண்டோ – கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர்.

8. அநுர விதானகே – லெபனானுக்கான இலங்கையின் தூதுவர்.

9. பேராசிரியர் எம்.ஐ. பஸீஹா அஸ்மி – ஈரானுக்கான இலங்கையின் தூதுவர்.

10. எம். பாரூக் எம். பௌசர் – பாலஸ்தீனத்திற்கான இலங்கைப் பிரதிநிதி.

The post தூதுவர்கள் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி appeared first on Oruvan.com.

போக்குவரத்துத் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கான விரிவான திட்டம்
நாட்டின் போக்குவரத்துக் கட்டமைப்பை மிகவும் வினைத்திறன் மிக்க, பாதுகாப்பான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடனான போக்குவரத்துச் சேவையாக மாற்றி, பொதுமக்களுக்குக் கௌரவமான மற்றும் நம்பகமான சேவையை வழங்குவதற்காக முழுப் போக்குவரத்து கட்டமைப்பிலும் விரைவான மாற்றம் ஏற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

போக்குவரத்துத் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக பொருளாதாரப் போட்டித்தன்மை, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, டிஜிட்டல் மாற்றம், சமூக சமத்துவம் மற்றும் பிரவேசம் மற்றும் பாதுகாப்பு ஆகிய 05 தூண்களின் கீழ் போக்குவரத்து அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ள மூலோபாயத் திட்டம் குறித்து இதன்போது ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

கொழும்பு நகரில் தற்போது நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக ‘Lanka Metro Transit’ பஸ் சேவையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இந்தத் திட்டத்தின் கீழ் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் தற்போது தயார் செய்யப்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் இதற்கான பஸ்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.

கொழும்பைச் சுற்றியுள்ள 6 பிரதான வீதிகள் ஊடாக இந்தத் திட்டம் ஒரு முன்னோடித் திட்டமாகச் செயற்படுத்தப்படவுள்ளதோடு, மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படும் இந்தத் திட்டம் பின்னர் காலி மற்றும் கண்டி மாவட்டங்களுக்கும், அடுத்த 03 ஆண்டுகளுக்குள் 08 பிரதான நகரங்களுக்கும் விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முன்னோடித் திட்டத்தின் மூலம் கொழும்பு நகருக்கு நாளாந்தம் பிரவேசிக்கும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைத்து, பயணிகளைப் பொதுப் போக்குவரத்தை நோக்கி ஈர்க்க எதிர்பார்க்கப்படுகிறது. பஸ்களுக்கான முன்னுரிமைப் பாதைகளை அடையாளம் காண்பதும், அவற்றின் வினைத்திறனைப் பேணுவதும் அவசியமானது என ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

பொதுமக்களுக்குத் தரமான சேவையை வழங்குவதற்காக, தற்போது ஒழுங்கீனமாகக் காணப்படும் பஸ் சேவைகளுக்குப் பதிலாக பஸ் நிறுவனங்கள் (கிளஸ்டர்- Clusters) முறையை நோக்கி நகர வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். ”சிறந்த போக்குவரத்துச் சேவை கிடைப்பதே மக்களின் தேவையெனவும் அது எந்த வகையில் கிடைக்கிறது என்பது அவர்களுக்கு முக்கியமல்ல ” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நமது நகரங்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை அல்ல. காலப்போக்கில் தாமாகவே உருவானவை என்பதால், தற்போதுள்ள நகரக் கட்டமைப்பிற்குள் போக்குவரத்து முகாமைத்துவத்தை மிகவும் அவதானமாக மேற்கொள்ள வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ‘பஸ் நிறுவனங்கள்’ (Cluster System) முறையை நிறுவுவதே இப்பிரச்சினைக்குச் சிறந்த தீர்வாகும் எனக் குறிப்பிட்டார்.

இந்த முறையின் கீழ், பஸ் உரிமையாளர்களின் பஸ்களை ஈடுபடுத்துவதற்காக ஒரு நிறுவனம் உருவாக்கப்படும் என்றும், அதில் லாபம் தொடர்பான பிரச்சினை எழுந்தால் அந்த நிறுவனத்திற்கு அரசாங்கத்தின் ஊடாகச் சலுகைகளை வழங்க முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இதன்போது பஸ் உரிமையாளருக்கும் நிறுவனத்திற்கும் இடையில் ஒரு ஒப்பந்தமும், அதேபோன்று சேவையைத் தொடர்ச்சியாக வழங்குவது தொடர்பாக அரசாங்கத்திற்கும் பஸ் நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்றும் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். புதிய பஸ்களை இறக்குமதி செய்து பெருமளவு நிதியை செலவு செய்வதை விட இது எளிதான காரியமாக அமையும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பல்வகைப் போக்குவரத்து மையங்களை (Multi-modal Transport Hubs) திட்டமிடும்போது, ​​புகையிரத சேவைகளை மையப்படுத்தி ஏனைய போக்குவரத்து சேவைகளை அவற்றுடன் ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். களனி வெளி புகையிரத பாதையின் நவீனமயமாக்கல் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை கட்டமைப்புக்கு மின்னணு பொறிமுறையை அறிமுகப்படுத்தும் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

போக்குவரத்துத் துறையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்புரி திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி விசேஷட கவனம் செலுத்தினார். தொழிலாளர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் வகையிலும் அவர்களின் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் பணி நிபந்தனைகள் சீர்செய்யப்பட வேண்டும் என்றும், குறிப்பாக தனியார் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு முறையான நியமனக் கடிதங்களை வழங்குவதன் முக்கியத்துவத்தையும், முறையான நலன்புரி சேவைகளை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அதே இடத்தில் தண்டப்பணம் அறவிடல் (On-site Fine System) மற்றும் தகுதி இழப்பு புள்ளிகள் திட்டம் (Demerit Point System) தொடர்பான தற்போதைய நிலைமை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. 10 ஆண்டுகளாக சாரதி அனுமதிப்பத்திரம் சிப் (Chip) ஒன்றுடன் வழங்கப்பட்டாலும், அத்தகைய தகுதி இழப்பு புள்ளிகள் முறையை செயல்படுத்த எந்த தொழில்நுட்ப மென்பொருள் கட்டமைப்பும் உருவாக்கப்படவில்லை என்றும், அது வெறும் ஏமாற்று வேலை என்பது நிரூபனமாகியுள்ளது. Gov.pay மூலம் தற்போது அந்த செயல்முறை சீர்செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்படி, 6-7 மாதங்களுக்குள் ஒரு முறையான செயல்முறையை நிறுவ முடியும் என்றும் இதன் போது குறிப்பிடப்பட்டது.

முச்சக்கர வண்டிகள், டேக்சிகள் மற்றும் பாடசாலை வேன்களை கண்காணிப்பதற்கான ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னர் அதனை முன்வைக்க எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

சிசு சரிய பேருந்து சேவை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், 2025 ஆம் ஆண்டில் சிசு சரிய திட்டத்திற்காக அரசாங்கம் 2200 மில்லியன் ரூபா ஒதுக்கியதாகவும், அதில் 500 மில்லியன் ரூபா பயன்படுத்தப்படாவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, ‘சிசு சரிய’ திட்டத்தை மேலும் திறம்படச் செய்வது மற்றும் மாணவர்களுக்கு நேரடியாக பயனளிக்கும் வகையில் அதை விரிவுபடுத்துவது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இந்நாட்டின் போக்குவரத்துத் துறையில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் ஒரே தளத்திற்குக் கொண்டுவரும் வகையில், தேசிய போக்குவரத்து ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தை நிறுவுவது (Centre for Transport Research and Development) குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் கபில பெரேரா உள்ளிட்ட அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை புகையிரதத் திணைக்களம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, இலங்கை போக்குவரத்து சபை உள்ளிட்ட போக்குவரத்து அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

The post போக்குவரத்துத் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கான விரிவான திட்டம் appeared first on Oruvan.com.

போராட்டங்கள் செய்தாலும் பயனில்லை – ஜனாதிபதி அதிரடி
எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு சம்பள உயர்வு வரும் வரை, வேறு எந்தவொரு கொடுப்பனவும் அதிகரிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றும் கண்டி மாவட்ட வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார். இந்த நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று காலை மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, 2025, 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக 33,000 கோடி (330 பில்லியன்) ரூபா செலவிடப்படுவதாகக் குறிப்பிட்டார்.

அதற்கமைய, 2027 ஆம் ஆண்டில் மூன்றாவது சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்ட பின்னர், வரவு செலவுத் திட்டத்தில் ஏற்படும் தாக்கத்தைக் கருத்திற்கொண்டே ஏனைய கொடுப்பனவுகள் குறித்துப் பரிசீலிக்கப்படும் எனவும், அதுவரை யார் என்ன போராட்டங்களை முன்னெடுத்தாலும் கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்ததாவது:

“அரச சேவையைப் பொறுத்தவரை அடிப்படைச் சம்பள உயர்வே முக்கியம் என்று நாங்கள் கருதினோம். அந்த அடிப்படைச் சம்பள உயர்விற்காக மாத்திரம் 2025 ஆம் ஆண்டில் 11,000 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு இந்த ஜனவரி மாதத்திலேயே மேலும் 11,000 கோடி ரூபா செலவிடப்படுகிறது. 2027 இல் அடுத்த கட்டமாக 11,000 கோடி ரூபா செலவிடப்படவுள்ளது.

2027 ஆகும்போது எமது அரச சேவையின் சம்பள உயர்வுக்காக மாத்திரம் நாங்கள் ஏற்கும் செலவு 33,000 கோடி ரூபாவாகும். இவ்வாறு சம்பள உயர்வு செய்திருக்கும் நிலையில், சிலர் மீண்டும் இந்தக் கொடுப்பனவை கூட்டுங்கள், அந்தக் கொடுப்பனவை கூட்டுங்கள் என்று கேட்பதை நான் காண்கிறேன். அது நடக்காது. முதலில் நாங்கள் 2027 இல் மூன்றாவது சம்பள அதிகரிப்பு வந்த பின்னர், எமது வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்படும் தாக்கத்தைப் பார்த்துவிட்டுத்தான் ஏனைய கொடுப்பனவுகள் பற்றி யோசிப்போம். அதனால் யார் எவ்விதத்தில் ஆர்ப்பாட்டம் செய்தாலும், வீதியில் இறங்கினாலும் 2027 ஆம் ஆண்டு அடுத்த சம்பள உயர்வு வரும் வரை கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட மாட்டாது.

இந்த அனர்த்தத்தினால் எமது பொருளாதாரம் வீழ்ச்சியடையும் எனப் பலர் நினைத்தார்கள்… ஆனால் இரண்டு மாதங்களுக்குள் நாங்கள் ஒட்டுமொத்தமாக இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளோம். மின்சாரம், வீதிகள், தொடர்பாடல், நீர் எனப் பாரிய அளவில் மீண்டுள்ளோம். எமக்குத் தேவை இந்த நாடு அடையும் பொருளாதார வெற்றிகளை நாட்டு மக்களுக்குப் பகிர்ந்து கொடுப்பதேயாகும்.

அதேபோல் சட்டத்தின் ஆட்சியை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும். இதைச் செய்தே தீருவோம், யாரும் சந்தேகம் கொள்ள வேண்டாம். சட்டவிரோதமாக ஈட்டிய சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு ஏதுவான சட்டத்தை நாங்கள் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் நிறைவேற்றினோம். பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் திருத்தி விரைவில் கொண்டு வருவோம். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவதற்குச் சட்டம் தயாரிக்கப்படுகிறது. அதேபோல் பணமோசடியைத் தடுப்பதற்கு சர்வதேசத் தரத்திற்கு அமைய சட்டமொன்றைத் தயாரிக்கப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

சட்டத்தின் கோடு ஒன்று உள்ளது. அந்தக் கோட்டிற்குக் கீழேதான் அனைவரும் உள்ளனர். யாரும் சட்டத்தின் கோட்டிற்கு மேலே பாய முடியாது. அப்படியான ஒரு நாடுதான் எமக்குத் தேவை. அதனை நாங்கள் மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த மாற்றம் சிலருக்கு வலிக்கிறது. தவறு செய்பவர்களுக்கு இந்த மாற்றம் வலிக்கிறது.”

The post போராட்டங்கள் செய்தாலும் பயனில்லை – ஜனாதிபதி அதிரடி appeared first on Oruvan.com.

எம்.பிகளின் ஓய்வூதியத்தை இரத்து செய்தால் பெரும் செல்வந்தர்கள், வர்த்தகர்கள் மட்டுமே எம்.பிகளாக முடியும் – கரு ஜயசூரிய
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வது தொடர்பில், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் சார்பில், அதன் ஆலோசகர் என்ற ரீதியிலேயே அவர் இந்தக் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது,

நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில், அரசியல் என்பது நில உரித்துடையோருக்கும், படித்த மற்றும் செல்வந்த உயர்குடியினருக்கும் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும், 1956ஆம் ஆண்டுக்குப் பின்னர் சாதாரண பொதுமக்களுக்கும் அரசியலில் வாய்ப்பு கிடைத்ததால் பாரிய சமூக மாற்றம் ஏற்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், அரசியல் என்பது செல்வந்தர்கள், வர்த்தகர்கள், முறையற்ற வகையில் பணம் சம்பாதிப்பவர்கள் மற்றும் செல்வந்த அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படும்.

இதன் காரணமாக, நேர்மையான சமூக சேவகர்கள் அரசியல் துறைக்கு வருவது தடைப்படும் என முன்னாள் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தாமும் மற்றும் ஒரு சிலரும் மாத்திரமே இந்த ஓய்வூதியத்தை சமூக மற்றும் தொண்டு நிறுவனங்களுக்குப் பயன்படுத்துவதாகவும், ஆனால் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்த ஓய்வூதியத்தை நம்பியே வாழ்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதால், அந்த சந்தர்ப்பத்தில் இவ்விடயம் குறித்து கவனம் செலுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கரு ஜயசூரிய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post எம்.பிகளின் ஓய்வூதியத்தை இரத்து செய்தால் பெரும் செல்வந்தர்கள், வர்த்தகர்கள் மட்டுமே எம்.பிகளாக முடியும் – கரு ஜயசூரிய appeared first on Oruvan.com.

டிஜிட்டலுடனான அரச முதலீடுகளுக்கு வலுவான அடித்தளத்தை அமைப்பது அவசியம் – ஜனாதிபதி
டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் 2025 ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நேற்று (11) டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வளாகத்தில் ஜனாதிபதியும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சருமான அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களான இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL), ஆட்பதிவுத் திணைக்களம் (DRP) மற்றும் GovTech (Pvt) Ltd ஆகிய நிறுவனங்களின் டிஜிட்டல் மேம்பாட்டுத் திட்டங்களின் எதிர்காலச் செயற்பாடுகளை ஆராய்வது, செயல்படுத்துவதில் தாமதத்தை ஏற்படுத்தும் தடைகளை அடையாளம் காண்பது மற்றும் அந்த நோக்கத்திற்காக தேவையான கொள்கை மற்றும் நிர்வாக முடிவுகளை எடுப்பது போன்றவற்றை நோக்காகக் கொண்டு இந்தக் கூட்டம் நடைபெற்றது.

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்ட அறிக்கையில் மையக் காரணியாக உள்ள டிஜிட்டல் பொருளாதாரத்துடன் தொடர்புபட்ட அரச முதலீடுகளுக்கு வலுவான அடித்தளத்தை அமைப்பது அவசியம் என்று ஜனாதிபதி இந்தக் கலந்துரையாடலில் வலியுறுத்தினார்.

மேலும், நாடு முழுவதும் தொலைத்தொடர்பு கோபுரங்கள் மற்றும் ஏனைய டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு தனியார் முதலீட்டாளர்கள் மற்றும் சந்தையை கையாள்பவர்களுக்கு மிகவும் உகந்த சூழலை உருவாக்க எடுக்க வேண்டிய முன்னெடுப்புகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. “கிராமத்துக்கு தொடர்பாடல்” திட்டத்தை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அந்த திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளில் 500 கோபுரங்களை நிறுவும் இலக்கு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

அத்தோடு,தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதில் தற்போது நிலவும் தாமதத்தை துரிதமாக சீரமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஆட்பதிவுத் திணைக்கள அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

மேலும், இலங்கைக்குத் தனித்துவமான டிஜிட்டல் அடையாள அட்டை (SLUDI) திட்டத்தை விரைவுபடுத்துதல், அமைச்சின் நிர்வாக மற்றும் செயற்பாட்டு கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், புதிய டிஜிட்டல் பொருளாதார அதிகாரசபையை நிறுவுதல் மற்றும் வலுவான டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்கத் தேவையான மனித வளங்களை உருவாக்குதல் என்பன குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் (பதில்) வருண ஸ்ரீ தனபால, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட சிரேஸ்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

The post டிஜிட்டலுடனான அரச முதலீடுகளுக்கு வலுவான அடித்தளத்தை அமைப்பது அவசியம் – ஜனாதிபதி appeared first on Oruvan.com.

ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையின் முக்கிய அம்சங்கள்
நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்க, 2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றி வருகிறார்.

இன்று சமர்ப்பிக்கப்படுவது தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டமாகும்.

2026 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் மொத்தச் செலவு ரூபாய் 4,434 பில்லியன்களாகும்.

வரும் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் அதிகபட்ச நிதி ஒதுக்கீடு ஜனாதிபதியின் கீழ் உள்ள நிதி அமைச்சுக்கே வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, நிதி அமைச்சுக்கு ரூ.634 பில்லியன்களும், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கு ரூ. 554 பில்லியன்களும், பாதுகாப்பு அமைச்சுக்கு ரூ.455 பில்லியன்களும் மற்றும் கல்வி அமைச்சுக்கு ரூ.301 பில்லியன்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு,

அந்நியச் செலாவணி வீதத்தை நிலையான மட்டத்தில் பேண முடிந்துள்ளதாகவும், கடன் தரப்படுத்தல்கள் தற்போது உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அந்நியச் செலாவணி கையிருப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க டொலர் 7 பில்லியனாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.

அரச வருமானம் 16% மட்டத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் வெளிநாட்டு கையிருப்பை வலுப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

இலத்திரனியல் கொள்வனவு முறைமையை விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அரச நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான டிஜிட்டல் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

2026 மார்ச் மாதத்திற்குள் டிஜிட்டல் சொத்துக்களை அறிவிப்பதற்கான ஒரு முறையை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.

2025 செப்டம்பர் மாதம் வரை அமெரிக்க டொலர் 823 மில்லியன் நேரடி வெளிநாட்டு முதலீடு நாட்டிற்கு வந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டில் மொத்த அந்நிய நேரடி முதலீடு $737 மில்லியன்; 2024 இல் $614 மில்லியன்; ஆனால் இந்த செப்டம்பரில் மட்டும் $823 மில்லியன் மொத்த அந்நிய நேரடி முதலீடு கிடைத்துள்ளது.

நீதித்துறை அதிகாரிகளுக்காக ஒரு நன்னெறி விதிமுறையை 2026 இல் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

முறைசாரா வழிகளில் வரிச் சலுகைகள் வழங்குவது இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், வரிக் நிர்வாகம் மேலும் பலப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

வெளிப்படைத்தன்மையுடனும், விதிகளின் அடிப்படையிலும், அளவுகோல்களின்படியும் வரிச் சலுகைகளை வழங்குவதற்கான வழிமுறைகளை உருவாக்குவதற்காக ‘அபிவிருத்தித் திட்டங்கள் சட்டம்’ மற்றும் ‘துறைமுக நகர சட்டம்’ திருத்தப்படும்.

SVAT (Suspended Value Added Tax) இரத்து செய்யப்பட்டு, வரிப் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான முறைமை முறைப்படுத்தப்படும்.

அரச வர்த்தக முகாமைத்துவச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்காக, வழங்கப்பட்ட வரி விலக்கு அறிக்கைகள் வருடத்திற்கு இருமுறை நிதி அமைச்சின் இணையதளத்தில் வெளியிடப்படும். இதன் மூலம் எவ்வளவு வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என்பதை மக்கள் பார்க்க முடியும்.

2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் (மேலும் சில முக்கிய அம்சங்கள்)

வாகன இறக்குமதிக்காக அமெரிக்க டாலர் 1,933 மில்லியன் பெறுமதியான கடனுறுதிக் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு வெளிநாட்டுக் கடன் செலுத்துகை $2,435 மில்லியன் ஆகும். செப்டம்பர் 30 ஆம் திகதி வரை இதில் $1,948 மில்லியன் செலுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் மேலும் $487 மில்லியன் செலுத்தத் தயாராக உள்ளது. இது 2024 ஐ விட வெளிநாட்டுக் கடன் சேவை கொடுப்பனவில் $761 மில்லியன் அதிகமாகும்.

2028 ஆம் ஆண்டில் செலுத்தப்பட வேண்டிய வெளிநாட்டுக் கடன் சேவை $3,259 மில்லியன் மட்டுமே என்றும், இது 2025 ஆம் ஆண்டை விட $824 மில்லியன் அதிகரிப்பு மட்டுமே என்றும் ஜனாதிபதி கூறினார்.

வாகன சந்தை திறக்கப்பட்டு $1,373 மில்லியன் பெறுமதியான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

2024 செப்டம்பர் வரை வெளிநாட்டு வருமானம் $19,338 மில்லியன் ஆகும். 2025 ஆம் ஆண்டில் இது $21,272 மில்லியனாக இருக்கும், இது $1,934 மில்லியன் அதிகரிப்பாகும்.

நீடித்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி இலக்குகள்.

சில ஆண்டுகளில் 7% ஐத் தாண்டும் வளர்ச்சியை அடைதல்.

வெளிப்படைத்தன்மையுடன் கூடிய, விதிகளின் அடிப்படையிலான வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுதல்.

மூலோபாய அபிவிருத்தித் திட்டங்களை திறமையாகச் செயற்படுத்துதல்.

ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் மூலம் உயர் வருமானம்.

தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் 2025 – 2029 மூலம் ஏற்றுமதிகளைப் பல்வகைப்படுத்தல்.

தற்போதுள்ள சந்தைகளை விரிவுபடுத்துதல்.

ஏற்கனவே கையெழுத்திடப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை எட்டுவதற்காக ஒரு நிபுணர் குழுவை நியமித்தல்.

ஒரு புதிய சுங்க வரிக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

The post ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையின் முக்கிய அம்சங்கள் appeared first on Oruvan.com.

2032 இல் கடனை 90 வீதம் குறைப்பதற்கு எதிர்பார்ப்பு
2032 ஆம் ஆண்டு தேசிய உற்பத்திக்கு சமமாக கடனை 90 வீதம் குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நாடாளுமன்றில் முன்வைத்து உரையாற்றிவரும் ஜனாதிபதி இந்த கருத்தை தெரிவித்தார்.

2025 ஆண்டில் இறக்குமதி செலவீனம் அதிகரித்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.

அதற்கமைய 430 மில்லியன் அமெரிக்க டொலரால் இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு எதிராக எவரேனும் தவறு இழைத்திருப்பார்களாயின், அவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்திற்கு அமைய தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன் இந்த விடயத்தில் யாருக்கும் பாரபட்சம் காட்டப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post 2032 இல் கடனை 90 வீதம் குறைப்பதற்கு எதிர்பார்ப்பு appeared first on Oruvan.com.

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை பரிசீலித்த ஜனாதிபதி
2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (05) இரவு ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பார்வையிட்டார்.

இந்த சந்தர்ப்பத்தில் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும அவர்களும் கலந்துகொண்டார்.

தற்போதைய அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் நாளை (07) பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

The post வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை பரிசீலித்த ஜனாதிபதி appeared first on Oruvan.com.