அநுரகுமார திஸாநாயக்க Archives - Oruvan.com

ஏப்ரல் முதலாம் திகதிமுதல் புதிய வரி திருத்தங்கள் அமுல்
இலங்கையின் வரி கட்டமைப்பில் பாரிய மாற்றங்களைக் கொண்டுவரும் நோக்கில், 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் அரசாங்கம் சமர்ப்பித்துள்ளது.

ஜனாதிபதியும் நிதியமைச்சருமான அநுரகுமார திஸாநாயக்கவினால் கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி இதற்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.

நாடாளுமன்றத்தில் இந்தசட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னரே இவை நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, காணி, கட்டடங்கள் அல்லது பங்குகளை விற்பனை செய்யும்போது கிடைக்கும் இலாபத்திற்காக செலுத்தப்படும் வரி அதிகரிக்கப்படவுள்ளது.

தனிநபர்கள் மற்றும் பங்காளர் வணிகங்களுக்கு தற்போதுள்ள 10% வரி வீதம் 15% ஆக உயர்த்தப்படவுள்ளது.

அறக்கட்டளைகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு தற்போதுள்ள 10% வரி வீதம் பாரிய அளவில் 30% ஆக உயர்த்தப்படவுள்ளது.

நிலுவை வரிகளுக்கான ஒருமுறை மாத்திரம் வழங்கப்படும் நிவாரணம் வரி செலுத்துவதில் தாமதம் அல்லது நிலுவை வைத்துள்ளவர்களுக்கு ஒரு விசேட சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

2023 மார்ச் 31 ஆம் திகதி வரை திரட்டப்பட்ட வட்டித் தொகையை முழுமையாகத் தள்ளுபடி செய்ய உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது.

புதிய சட்டம் நடைமுறைக்கு வந்து 6 மாத காலப்பகுதிக்குள், அசல் வரித் தொகை மற்றும் அபராதங்களை முழுமையாகச் செலுத்த வேண்டும்.

2026 ஏப்ரல் 1 முதல், மதிப்பிடப்பட்ட வரி அறிக்கையைத் தாக்கல் செய்யும் முறை நீக்கப்படும். அதற்குப் பதிலாக, முந்தைய ஆண்டின் வருமானத்தின் அடிப்படையில் தவணை முறையில் வரி செலுத்த முடியும்.

ஒரு தனிநபர் தனது முந்தைய ஆண்டு வருமானத்தில் 120% இற்கும் அதிகமாக வரி செலுத்தி, எவ்வித மீளப்பெறலையும் கோராமல் சத்தியக்கடதாசி சமர்ப்பித்தால், அவரது வரி அறிக்கைகள் மேலதிக விசாரணையின்றி ஏற்றுக்கொள்ளப்படும்.

5% தடுத்து வைக்கப்படும் வரி விரிவாக்கம் புதிய சட்டத்தின் கீழ் மேலதிகமான பல சேவை வழங்குநர்கள் 5% தடுத்து வைக்கப்படும் வரிக்குள் உள்வாங்கப்படவுள்ளனர்.

கணக்காய்வாளர்கள், மதிப்பீட்டாளர்கள், தனிப்பட்ட பயிற்றுவிப்பாளர்கள் கலைஞர்கள், புகைப்படக் கலைஞர்கள், அழகுக்கலை நிபுணர்கள், சமூக ஊடக நிபுணர்கள் மற்றும் கடன் வசூலிப்போர் உள்ளிட்ட பல துறையினர் இதில் அடங்குவர்.

இதன் மூலம் இவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படும் போதே, அதில் 5% கழிக்கப்பட்டு இறைவரித் திணைக்களத்திற்குச் செலுத்தப்படும்.

The post ஏப்ரல் முதலாம் திகதிமுதல் புதிய வரி திருத்தங்கள் அமுல் appeared first on Oruvan.com.

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை – மொட்டு கட்சி விடுத்துள்ள எச்சரிக்கை
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக குற்றப் பிரேரணையொன்றை கொண்டுவருமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே மொட்டு கட்சி செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் மேற்படி கோரிக்கையை முன்வைத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ பேரிடர் குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இவ்வாறு தகவல் கிடைத்தும் அனர்த்தங்களால் ஏற்பட்ட இழப்புகளை கட்டுப்படுத்த முடியாமல்போயுள்ளது. இது விடயத்தில் தனது இயலாமை மற்றும் கவனயீனத்தை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் முயற்சித்துவருகின்றது.

அத்துடன், அரசாங்க பலத்தை பயன்படுத்தி தமது தரப்பில் இழைக்கப்பட்ட தவறை மறைப்பதற்குரிய நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகின்றது.

எனவே, ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணையொன்றை முன்வைக்குமாறு பிரதான எதிர்க்கட்சியிடம் கோருகின்றோம். அவ்வாறு கொண்டுவந்தால் எங்கு தவறிழைக்கப்பட்டது என்பது உட்பட அனைத்து தகவல்களும் தெரியவரும்.

தேசிய மக்கள் சக்தியில் மனசாட்சியின் பிரகாரம் செயல்படும் எம்.பிக்களும் அதனை ஆதரிக்கக்கூடும். அப்போது அரசாங்கத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலமும் ஆட்டம் காணும்.” என்றார்.

The post ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை – மொட்டு கட்சி விடுத்துள்ள எச்சரிக்கை appeared first on Oruvan.com.

பொய்களைக் கூறியமைக்காக மஹிந்தவிடம் அநுரகுமார மன்னிப்பு கேட்க வேண்டும்
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வணங்கி 14 மாதங்களாக நீங்கள் கூறிய இந்தப் பொய்களுக்கு மன்னிப்புக் கேட்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கேட்டுக்கொள்கின்றோம்.”

இவ்வாறு பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளையும் விரைவில் ஒரே மேடையில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

நுகேகொடையில் நேற்று நடைபெற்ற அநுர அரசுக்கு எதிரான பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“தங்காலையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது, நுகேகொடை பேரணி, போதைப்பொருள் வியாபாரிகளைப் பாதுகாக்கவே நடத்தப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறினார். இது என்ன முட்டாள்தனம்?

நுகேகொடை பேரணியில் யாராவது போதைப்பொருட்களுக்கு ஆதரவாகப் பேசினார்களா? இந்த அரசு பயந்துவிட்டது. ஒவ்வொரு கூட்டத்திலும் எதிர்க்கட்சிகளைப் போதைப்பொருள் ஆதரவாளர்கள் என்று அரசு குற்றம் சாட்டுகின்றது.

இப்போது மக்கள் இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை. ஜனாதிபதி கூறிய பொய்களை மக்கள் நன்கு அறிவார்கள். அதனால்தான் மக்கள் இப்போது இந்த அரசுக்கு எதிராகச் செயற்படுகின்றார்கள்.

ஜனாதிபதி கூறிய பொய்கள் நிறையவே உள்ளன. அவர் 14 மாதங்களாக பொய்களை மட்டுமே கூறி வருகின்றார். நான் அவருக்கு இன்னும் 14 மாத அவகாசம் தருகின்றேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வணங்கி 14 மாதங்களாக நீங்கள் கூறிய இந்தப் பொய்களுக்கு மன்னிப்புக் கேட்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

ஜனாதிபதி கூறிய இந்தப் பொய்களுக்கு நாட்டு மக்களிடமும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார்.

The post பொய்களைக் கூறியமைக்காக மஹிந்தவிடம் அநுரகுமார மன்னிப்பு கேட்க வேண்டும் appeared first on Oruvan.com.

ஆளுநர்கள் மாற்றமும் எந்நேரமும் நடக்கலாம்
தன்னுடைய பதவிக் காலத்தில் முதல் ஆண்டைப் பூர்த்தி செய்துள்ள கட்டத்தில் முதல் தடவையாகக் கடந்த வெள்ளிக்கிழமையன்று அமைச்சரவை மாற்றத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அடுத்து எந்நேரமும் தமது மாகாண ஆளுநர்களில் மாற்றங்களைச் செய்யக்கூடும் அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு மாகாணத்தினதும் ஆளுநர்களின் செயற்பாடுகள், பெறுபேறுகள், நடவடிக்கை முன்னேற்றங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் மதிப்பீடுகளைத் தயாரித்து வருகின்றது என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

அவற்றின் அடிப்படையில் ஜனாதிபதியின் முடிவுகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழர்களின் ஈடுபாடு உள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை ஜனாதிபதி செயலகம் ஓரளவு திருப்தி கொண்டிருப்பதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.

பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தாமல், நிர்வாக நடவடிக்கைகளை வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்னெடுத்துச் செல்வதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்களில் அறிய முடிகிறது.

என்றாலும், செயல்பாடுகளில் திருப்தி இல்லாத சில மாகாண ஆளுநர்கள் குறித்து ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அறிய முடிகிறது.

The post ஆளுநர்கள் மாற்றமும் எந்நேரமும் நடக்கலாம் appeared first on Oruvan.com.

அநுர அரசு கால் வைக்கும் இடமெல்லாம் கோரமாய் கண்ணிவெடிகள்
”ஜனாதிபதிக்கும் அரசுக்கும் உள்நாட்டுக்குள் தான் கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடிகள், மிதிவெடிகள் என்று பார்த்தால் இஸ்ரேல்-காஸா போர் ,இஸ்ரேல்-ஈரான் யுத்தம் போன்றவற்றில் ஏவப்படும் ஏவுகணைகளும் எங்கே மீண்டும் இலங்கையில் எரிபொருள் வரிசை யுகத்தை உருவாக்கி மீண்டும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை அரசுக்கு ஏற்படுத்தும் வகையில் இலங்கையிலும் வெடிக்க ஆரம்பித்துள்ளன”

இலங்கையின் அரசியலில் எவருமே நிகழ்த்தாத சாதனைகளை நிகழ்த்தி ஆட்சி பீடம் ஏறிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் அவரின் ஜே .வி.பி.- தேசியமக்கள் சக்தி அரசும் தற்போது இலங்கை அரசியலில் எந்த ஜனாதிபதியும் அரசும் எதிர்கொள்ளாதளவுக்கு நெருக்கடிகள்,சர்ச்சைகள்,குற்றச் சாட்டுக்கள்,விமர்சனங்கள்,கேலிகளுக்குள் சிக்கி படாதபாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.ஜனாதிபதியும் அரசும் கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடிகளும் மிதி வெடிகளாகவுமேயுள்ளன. அதுமட்டுமன்றி இஸ்ரேல்-காஸா போர் ,இஸ்ரேல்-ஈரான் யுத்தம் போன்றவற்றில் ஏவப்படும் ஏவுகணைகளும் இலங்கை ஆட்சியாளர் தலைக்கு மேலாகவும் வெடிக்க ஆரம்பித்துள்ளன . .

ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க பெற்ற வெற்றியின் மூலம் பாராளுமன்றத்தேர்தலில் 159 ஆசனங்கள் என்ற வரலாற்று வெற்றியுடன் தேசியமக்கள் சக்தி அரசு அரியணை ஏறிய நாள் முதல் கலாநிதிப் பட்டம்,அரிசி,தேங்காய்,குரங்கு,உப்பு,பாதாள உலகம்,படுகொலைகள்,சர்வாதிகாரம்,இந்திய பிரதமரின் வருகை ,ஜனாதிபதியின் இந்திய,சீன விஜயங்கள்,உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் வாக்கு வீழ்ச்சி,மின்சாரக் கட்டணம்,வடக்கு காணி சுவீகரிப்பு, 323 சிவப்பு முத்திரை கொள்கலன்கள் விடுவிப்பு, என பல சர்ச்சைகளில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றது.

ஆனாலும் ஜனாதிபதிக்கும் தேசிய மக்கள் சக்தி அரசுக்கும் எதிரான இவ்வாறான சர்ச்சைகள் , குற்றச்சாட்டுக்கள் ,விமர்சனங்கள், கேலிகளுக்கு ஜனாதிபதியோ அரசோ இன்றுவரை சரியான பதிலையோ தீர்வுகளையோ விளக்கங்களையோ வழங்காது இவற்றை மக்களை மறக்கடிக்கச்செய்யும் முயற்சியாகவும் இவ்வாறான சர்ச்சைகளை குற்றச்சாட்டுகளை,விமர்சனங்களை முன்வைக்கும் எதிர்க் கட்சிகளை அச்சுறுத்தும்,அடக்கும் விதமாகவும் அரசியல் கைதுகளை அதிகரித்துள்ள நிலையில்தான் ”சிறைக்கைதிகளுக்கான ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் மோசடி”என்ற கண்ணிவெடிமீது அரசு காலை வைத்தது.

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுகின்ற சிறைக் கைதிகள் தொடர்பிலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் அவரின் தேசிய மக்கள் சக்தி அரசும் தற்போது கடும் குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டுள்ளனர்.தேசிய பொசன் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய அனுமதிக்கப்பட்ட சிறை கைதிகளுக்கு பதிலாக வேறு கைதி ஒருவர் ஊழல்,மோசடிக் குற்றச்சாட்டில் குற்றவாளியாக நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்ட 10 நாட்களுக்குள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டதை அடுத்தே அரசுக்கு எதிரான இந்த சர்ச்சை வெடித்துள்ளது.

தேசிய பொசன் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 29 சிறைகளிலிருந்து 338 கைதிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டனர்.இவர்களில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட சிறைக் கைதி ஒருவரும் இம்முறை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.நாற்பது லட்சம் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நிதி நிறுவனமொன்றின் அநுராதபுரம் கிளை முகாமையாளரான இவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்ட 10 நாட்களுக்குள் ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

தேசிய பொசன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் கீழ் இந்தக் குற்றவாளி விடுதலை செய்யப்படுவதாக சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர்.அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகள், எழுத்து மூலம் நீதிமன்றத்திற்கு முன்வைத்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி லக்மாலி ஹேவாசமினால், இந்தக் குற்றவாளி இவருக்கு எதிரான வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் 2025 பொசன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அநு ராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்பவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தீர்ப்புவழங்கப்படட 10 தினங்களுக்குள் விடுவிக்கப்பட்டதாக பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்த எதிர்க்கட்சி, இந்தச் சம்பவத்தின் பின்னணியில் கடுமையான முறைகேடு இருப்பதாக குற்றம்சாட்டிய நிலையிலேயே கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக ”சிறைக்கைதிகளுக்கான ஜனாதிபதி பொது மன்னிப்பு”என்ற போர்வையில் நடந்த மோசடிகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க பதவியேற்ற பின்னர் ”சிறைக்கைதிகளுக்கான ஜனாதிபதி பொது மன்னிப்பு”என்ற போர்வையில் சட்டவிரோதமாக 68 கைதிகள் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறான நிலையில் ”ஜனாதிபதி பொதுமன்னிப்பு”என்றபெயரில் கைதி ஒருவர் மோசடியாக விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய பணி இடைநீக்கம் செய்யப்பட்டு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது,நீதிமன்றத்தில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், 2024 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தில் 57 கைதிகளும், இந்த ஆண்டு சுதந்திர தினத்தின் போது மேலும் 11 கைதிகளும் தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமல் முறைகேடாக விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை தவறாக பயன்படுத்தி சில கைதிகளை விடுதலை செய்ததாக குற்றம்சாட்டி சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய,அநுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சர் மோகன் கருணாரத்ன ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில்,இலங்கையில் தேசிய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு வழங்கப்படும் ஜனாதிபதியின் பொதுமன்னிப்புக்கான நிபந்தனைகளை, இனிவரும் காலங்களில் நீதி அமைச்சு கடுமையாக்கும் என்று நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார். அதேநேரம் கடந்த ஆட்சிகளிலும் இவ்வாறு ஜனாதிபதி பொது மன்னிப்பு தவறாக பயன் படுத்தப்பட்டுள்ளதா என்பதுதொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுமென அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார்.

இதேவேளை தேசிய பொசன் தினத்தையொட்டி ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட 388 கைதிகளின் முழுப் பட்டியலையும் , பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரியுள்ளது.ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு அனுப்பப்பட்ட கைதிகளின் பரிந்துரை பட்டியல் மற்றும் அவர் அங்கீகரித்த உரிய பட்டியல் இரண்டும் பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.ஜனாதிபதி யார் யாருக்கெல்லாம் மன்னிப்பு வழங்க அங்கீகாரம் அளித்தார் என்பதைப் பற்றி மக்களுக்கு பதிலளிக்கும் கடமை ஜனாதிபதிக்கு இருக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது

”ஜனாதிபதி பொதுமன்னிப்பு” மோசடியாக பயன்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய,அநுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சர் மோகன் கருணாரத்ன ஆகியோர் கைது செய்யப்பட்டாலும் சிறைக்கைதிகள் மோசடியாக விடுவிக்கப்பட்டதன் பின்னணியில் அரசியல் இல்லாமல் இல்லை. இவ்விருவர் கைது தொடர்பிலும் அரசு காட்டிய அவசரம் அதன் பின்னால் உள்ள அரசியலை மூடி மறைக்கும் ஒரு கைங்கரியமாகவே பார்க்கப்படுகின்றது. அரசியல் அழுத்தங்கள் அல்லது அரசியல் செல்வாக்கு இல்லாமல் ஜனாதிபதியின் பொது மன்னிப்பை மோசடியாக பயன்படுத்தும் தைரியம் இலகுவில் யாருக்கும் வராது.

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை முறையற்ற வகையில் பயன்படுத்தி விடுதலை செய்யப்பட்டதாக கூறப்படும் அதுல திலகரத்ன என்ற நபர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் தேடப்படும் நிலையில், அவர் தனக்கு எதிரான வேறு வழக்கு விசாரணையொன்றுக்காக அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்திற்கு வந்துள்ளமையும் அந்த நீதிமன்றத்தில் இடம்பெற்ற அநுராதபுரம் சிறைச்சாலை பணிப்பாளருக்கு எதிரான வழக்கு விசாரணையையும் பார்வையிட்டுள்ளமையும் தான் நீதிமன்றத்தில் இருக்கின்றேன் என்று கையுயர்த்தி நீதவானிடமும் தெரிவித்துள்மையும் இதனை உறுதிப்படுத்துகின்றன.

அவர் அநுராதபுரம் நீதிமன்றத்தில் இடம்பெற்ற தனக்கு எதிரான வேறு வழக்கொன்றில் தனது சட்டத்தரணியுடன் கலந்துகொண்டிருந்ததுடன், அந்த விசாரணை முடிவடைந்த பின்னர், சிறைச்சாலை பணிப்பாளருக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்ற பகுதிக்கு சென்று அங்கு பார்வையாளர் பகுதியில் இருந்து வழக்கு விசாரணைகளையும் பார்வையிட்டுள்ளார்.இவ்வேளையில் சிறைச்சாலை பணிப்பாளர் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி நீதிமன்றத்தில் விளக்கமளித்து, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறைச்சாலை பணிப்பாளர் சட்டவிரோதமான முறையில் அதுல திலகரட்ணவை விடுவிக்கவில்லை என்றும், விடுதலையான நபர் இந்த நீதிமன்றத்தில் இப்போது இருக்கின்றார் என்றும் கூறியுள்ளார். அவர் சட்டப்படி விடுதலையான காரணத்தினாலேயே இங்கே இருக்கின்றார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது அங்கிருந்த அதுல திலகரட்ன, தான் இங்கே இருக்கின்றேன் என்று கையுயர்த்தி கூறியுள்ளார். இவ்வேளையில் நீதிமன்ற வளாகத்தில் குற்றப்புலனாய்வு அதிகாரிகளும் இருந்துள்ளனர்.எவ்வாறாயினும் குறித்த வழக்கு விசாரணை முடிந்த பின்னர், அங்கிருந்து அதுல திலகரட்ன தனது நண்பர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடியதுடன், குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு முன்னாலேயே அங்கிருந்து வெளியேறி சென்றுள்ளார்.

அவர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பை மோசடியாக பயன்படுத்தி விடுதலை செய்யப்பட்டிருந்தால் ஏன் அவரை அங்கிருந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்யவில்லை?அவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிடவில்லை.அதனால் கைது செய்யவில்லை என்றால் ஏன் அவரை கைது செய்யுமாறு உத்தரவிடக்கோரி அரசு தரப்பு நீதிமன்றத்தை இதுவரையில் நாடவில்லை? அவர் அவ்வாறு மோசடியாக விடுதலை செய்யப்பட்டிருந்தால் எவ்வாறு இதுவரையில் தலைமைறைவாகாது தைரியமாக நீதிமன்றம் வந்து தான் இங்கு தான் இருப்பதாக கூறியிருப்பார்?ஆகவேதான் ஜனாதிபதி பொதுமன்னிப்பு என்ற விடயத்தை சிறை அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்துகின்றனரா அல்லது அமைச்சர்கள் தவறாக பயன்படுத்துகின்றனரா அல்லது ஜனாதிபதியே தவறாகப் பயன்படுத்திவிட்டு அதிகாரிகளை பலிக்கடாவாக்குகின்றாரா என்ற நியாயமான சந்தேகம் எழுந்துள்ளது. எனினும் இதனையும் இந்த அரசு எந்த நியாயமான பதிலும் தீர்வும் வழங்காது கடந்து சென்று இன்னுமொரு சர்ச்சையில் சிக்கிக்கொள்ளும்.

ஜனாதிபதிக்கும் அரசுக்கும் உள்நாட்டுக்குள் தான் கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடிகள், மிதிவெடிகள் என்று பார்த்தால் இஸ்ரேல்-காஸா போர் ,இஸ்ரேல்-ஈரான் யுத்தம் போன்றவற்றில் ஏவப்படும் ஏவுகணைகளும் எங்கே மீண்டும் இலங்கையில் எரிபொருள் வரிசை யுகத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை அரசுக்கு ஏற்படுத்தும் வகையில் இலங்கையிலும் வெடிக்க ஆரம்பித்துள்ளன ,ஜனாதிபதியாகவிருந்த கோத்தபாய ராஜபக்ஸவின் வீழ்ச்சிக்கும் அவரின் அரசின் வீழ்ச்சிக்கும் ஆரம்ப புள்ளியாக அமைந்தது எரிபொருளுக்கான வரிசை என்பதை எவரும் இலகுவில் மறந்துவிட முடியாது. அதனால் தான் தற்போதைய இஸ்ரேல்-ஈரான் யுத்தமும் ஜனாதிபதி அநுரகுமாரவுக்கும் அவரின் அரசுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கே.பாலா

The post அநுர அரசு கால் வைக்கும் இடமெல்லாம் கோரமாய் கண்ணிவெடிகள் appeared first on Oruvan.com.

மின்சாரக் கட்டணங்களில் ஓரளவு அதிகரிப்பு – அரசாங்கம் தீர்மானம்
மின்சாரக் கட்டணத்தில் ஓரளவு விலை அதிகரிப்பு ஏற்படுமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த விலை உயர்வு வரும் ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும், கடந்த டிசம்பர் மாத மின் கட்டணத்தை விட இது அதிகமாக இருக்காது என்றும் அவர் கூறினார்.

மேலும், ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் மின் விலை திருத்தத்தின்படி இந்த விலை திருத்தம் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மின்சார சபையின் 220 பில்லியன் கடன் மீள் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் ஒரு பகுதி மின்சார கட்டணத்தில் சேர்க்கப்படும் எனவும் அவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்துள்ளார்.

The post மின்சாரக் கட்டணங்களில் ஓரளவு அதிகரிப்பு – அரசாங்கம் தீர்மானம் appeared first on Oruvan.com.

அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காக இனவாதத்தைப் பரப்பினார்கள் – இனிமேல் நாட்டில் இனவாதம் இல்லை
புதிய சட்டங்களை வகுத்தேனும் நாட்டில் இனவாதம் தோற்கடிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சிங்கள மக்கள் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளனர். முஸ்லிம் மக்கள் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளனர்.

பிளவுபட்டிருந்த நாட்டையும், நாட்டு மக்களையும் நாம் ஒன்றிணைத்துள்ளோம்.

கடந்த காலங்களில் ஆட்சியமைத்தவர்கள் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காக இனவாதத்தைப் பரப்பினார்கள். சிங்கள முஸ்லிம் பிரச்சினையை ஏற்படுத்தினார்கள்.

இனவாத அமைப்புகளை வலுப்படுத்தினார்கள். அளுத்கமையில் தாக்குதல் நடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்தன. திகனையில் தாக்குதல் நடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்தன. தற்போது இவ்வாறான செய்திகளுக்கு இடமில்லை.

எமது நாட்டில் இனவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஒருபோதும் இனவாதத்திற்கு இடமளிக்கப்போவதில்லை எனும் உறுதிமொழியை வழங்குகின்றோம்.

இனவாதத்தைத் தோற்கடிப்பதற்கு நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள சட்டம் போதுமானதாக இல்லாத நிலையில், புதிதாகச் சட்டத்தினை வகுத்தேனும் இனவாதத்தைத் தோற்கடிப்போம் என்றார்.

The post அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காக இனவாதத்தைப் பரப்பினார்கள் – இனிமேல் நாட்டில் இனவாதம் இல்லை appeared first on Oruvan.com.

அமெரிக்க வரி சுனாமில் இருந்து மீள வியூகம் வகுக்கிறது இலங்கை – ஜனாதிபதி
” அமெரிக்காவின் வரி சுனாமியில் இருந்து தப்பிப்பதற்குரிய வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. சிலவேளை வரி சுனாமியில் சிக்க நேரிட்டால் அதிலிருந்து மீள்வதற்குரிய திட்டங்களும் வகுக்கப்பட்டுவருகின்றன.” – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘அமெரிக்காவின் வரி விதிப்பு காரணமாக இலங்கையின் பொருளாதாரத்துக்கு தாக்கம் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் உள்ளது. இந்த சவாலுக்கு நாம் முகங்கொடுக்க வேண்டும்.

உலக நாடுகளில் ஏற்படும் போர் மற்றும் தொற்று நோய்கள் போன்ற காரணங்களால் எந்நேரத்திலும் பொருளாதாரத்துக்கு தாக்கம் வரக்கூடும். எனவே, எந்த சூழ்நிலையையும் தாங்கிக்கொள்ளக்கூடிய வகையிலான பொருளாதாரத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.

இப்பிரச்சினையை தீர்த்துக்கொள்வது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதிக்கு நான் தனிப்பட்ட ரீதியில் கடிதம் எழுதியுள்ளேன். அக்கடிதம் கிடைத்தது என தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வரி சுனாமியால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு தாக்கம் ஏற்படாத வகையிலான முடிவுகளை எடுப்பதற்கு முயற்சித்துவருகின்றோம். அந்த சுனாமியில் இருந்து தப்பிப்பதற்கு வியூகம் வகுக்கப்படுகின்றது. சிலவேளை சுனாமியின் சிக்க வேண்டியேற்படின் அதற்கு முகங்கொடுப்பதற்கும் வியூகம் வகுக்கப்படுகின்றது.” – என்றார்.

The post அமெரிக்க வரி சுனாமில் இருந்து மீள வியூகம் வகுக்கிறது இலங்கை – ஜனாதிபதி appeared first on Oruvan.com.

ஜனாதிபதி அநுரவுக்கு ஜப்பான், வியட்நாம் அழைப்பு
நாடு மற்றும் நாட்டு மக்களை அடகுவைக்காது, காட்டிக்கொடுக்காமல் மிகவும் நேர்த்தியான முறையில் சர்வதேச உறவு பேணப்பட்டுவருகின்றது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சிமன்ற தேர்தல் பிரச்சாரத்தை நேற்று முன்தினம் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் சர்வதேச தொடர்பு இல்லாமல்போகும் என பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் எதிர்வரும் 4,5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இந்திய பிரதமர் இங்கு இருப்பார். இதற்கு முன்னர் எவரும் இப்படி வந்ததில்லை.

தேர்தல் முடிந்த பிறகு இந்தியா, சீனாவிடமிருந்து அழைப்பு வந்தன. தற்போது ஜப்பான் மற்றும் வியட்நாம் அழைத்துள்ளன. இவ்வாறு வலுவாக சர்வதேச தொடர்பை நாம் ஏற்படுத்தியுள்ளோம்.

சர்வதேச தொடர்பு இல்லாமல்போகும் என்றார்கள், நாட்டையும், நாட்டு மக்களையும் காட்டிக்கொடுக்காமல், நேரடியாக கொடுக்கல், வாங்கல் செய்யும் வகையில் சர்வதேச உறவு உள்ளது.

வெளிநாட்டு முதலீடு வராது என்றார்கள். ஆனால் முதலீட்டாளர்கள் வந்தவண்ணமுள்ளனர்.” – என்றார்.

The post ஜனாதிபதி அநுரவுக்கு ஜப்பான், வியட்நாம் அழைப்பு appeared first on Oruvan.com.

பொருளாதாரம் பற்றி போலி தகவல்களை பரப்பாதீர் – அநுரகுமார திஸாநாயக்க
பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்துவதற்குரிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் பற்றி போலி தகவல்களை பரப்ப வேண்டாம், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் எதிரணி உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இந்நாட்டு மக்களை ஒன்றிணைத்து நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கு கடந்தகாலங்களில் கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளை ஆட்சியாளர்கள் கைநழுவிவிட்டனர். எமக்கு அதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது. அந்த வாய்ப்பை நாம் தவறவிடமாட்டோம் எனவும் ஜனாதிபதி கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க,

‘ கடந்த டிசம்பர் முதலாம் திகதியே வங்குரோத்து நிலையிலிருந்து அதிகாரப்பூர்வமாக நாடு மீண்டது. இதனையடுத்தே நிறுத்தப்பட்டிருந்த வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கு ஜப்பான் நடவடிக்கை எடுத்தது. சீனாவின் 76 வேலைத்திட்டங்களையும் ஆரம்பிப்பதற்கு இணக்கம் எட்டப்பட்டது. அதேபோல இந்திய பிரதமரின் வருகையின் பின்னர் சம்பூர் திட்டம் ஆரம்பமாகும். நாட்டில் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்துவதற்குரிய சமிக்ஞைகளை வெளிப்படுத்தியதால்தான் இதுவெல்லாம் நடக்கின்றது.” என்று குறிப்பிட்டார்.

எமது பொருளாதாரம்மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை வரவேண்டும். எனவே, பொருளாதார ஸ்தீரத்தன்மையையும் ஏற்படுத்த வேண்டும். எதிரணிகள் அரசியல் செய்யும் உரிமை உள்ளது. அதற்காக பொருளாதார ஸ்தீரமற்ற தன்மையை ஏற்படுத்தும் வகையில் பொய்யுரைக்ககூடாது. விமர்சனங்களை முன்வையுங்கள். ஆனால் போலி தகவல்களை வெளியிடவேண்டாம். அவ்வாறு வெளியிடப்படும் தகவல்களால் பங்கு சந்தையில் தாக்கம் ஏற்படக்கூடும். முதலீட்டாளர்கள் அச்சமடையக்கூடும்.” எனவும் ஜனாதிபதி அநுர குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியம் இல்லாது செய்யப்படும். அதற்குரிய சட்டமூலம் விரைவில் வரும். 10 லட்சமாக உள்ள எம்.பிக்களுக்குரிய காப்புறுதிய இரண்டரை லட்சமாக குறைக்கப்படும். வாகன பேமீட் வழங்கப்படமாட்டாது.

தேசிய மக்கள் சக்தியின் பயணத்தைவிடவும் சிறப்பானதொரு மாற்று பயணம் இருந்தால் சொல்லுங்கள், இல்லை. எனவே, எமது பயணத்துக்கு எதிரணிகளுக்கு ஆசிர்வாதம் வழங்குவதைத்தவிர வேறு வழியில்லை. ஊடக கண்காட்சிமூலம் அரசியல் நடத்தலாம் என நினைத்த காலம் மலையேறிவிட்டது. எமது நாட்டில் புதியதொரு அரசியல் கலாசாரத்தை நாம் உருவாக்கிவிட்டோம்.” – என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

The post பொருளாதாரம் பற்றி போலி தகவல்களை பரப்பாதீர் – அநுரகுமார திஸாநாயக்க appeared first on Oruvan.com.