அநுரகுமார திசாநாயக்க Archives - Oruvan.com

மதுவரித் திணைக்களமும் எதிர்பார்க்கப்பட்ட வருமான இலக்குகளைத் தாண்டியது
அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை வசூலிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவதில் அரச வருமானம் ஈட்டும் முக்கிய துறைகளுக்கு பெரும் பொறுப்பு உள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டில் மதுவரித் திணைக்களத்தின் முன்னேற்றம் மற்றும் 2026 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் இலக்குகள் குறித்து மீளாய்வு செய்வதற்காகநேற்று (30) பிற்பகல் அதன் சிரேஷ்ட அதிகாரிகளுடன் மதுவரித் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டிற்கான வருமான இலக்கான 227.4 பில்லியன் ரூபாவைத் தாண்டி 231.3 பில்லியன் ரூபா வருமான இலக்கை மதுவரித் திணைக்களம் எட்டவுள்ளதுடன், இது வரலாற்றில் முதல் முறையாக 102% வருமான இலக்காக அமைகின்றது.

அரச வருமானம் எவ்வளவு ஈட்டப்படுகிறது என்பதிலே நாட்டின் பொருளாதாரம் தங்கியுள்ளது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, அரச வருமானம் குறைந்தால், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும், 2020-2021 ஆம் ஆண்டில் அரச வருமானம் பெருமளவில் குறைந்ததன் விளைவுகளை நாடு எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்றும் குறிப்பிட்டார்.

வாகனங்கள் மற்றும் கட்டிட வசதிகள் பிரச்சினைகள் உள்ளிட்ட மதுவரித் திணைக்களத்தின் செயற்பாடுகளில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தியதுடன், குறிப்பாக நிறைவேற்றுப் பதவிகளில் உள்ள வெற்றிடங்கள் மற்றும் நியமனங்கள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளை உள்ளக இணக்கப்பாட்டுடன், விரைவாக தீர்க்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும், மதுவரி கட்டளைச் சட்டத்தின் திருத்தம் மற்றும் 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத போதைப்பொருள் சோதனைகள் மற்றும் அந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் ஆகியவை பற்றியும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டன.

தொழில் அமைச்சர், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.பீ.என்.ஏ. பேமரத்ன மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பணிக்குழாமினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

The post மதுவரித் திணைக்களமும் எதிர்பார்க்கப்பட்ட வருமான இலக்குகளைத் தாண்டியது appeared first on Oruvan.com.

25,000 கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு விடுத்துள்ள பணிப்புரை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கம் வழங்கும் ரூ.25,000 கொடுப்பனவு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்க்கவும் இந்த வாரத்திற்குள் உரிய தொகையை செலுத்தி முடிக்கவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் பங்கேற்றபோது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில், தேசிய பேரிடர் மேலாண்மை கூட்டு பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் 2005 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க இலங்கை பேரிடர் மேலாண்மைச் சட்டத்தைத் திருத்துதல் தொடர்பான தொடர்புடைய ஆவணமும் சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும் மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ், அபாய வலயத்தில் 15,000 வீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் அந்த மக்களுக்காக 8,000 வீடுகள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள், தோட்ட உரிமையாளர்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, தோட்டப் பகுதிகளில் மண்சரிவு அபாயத்தைக் குறைப்பதற்காக, வடிகால் அமைப்புகளை நிர்மாணித்தல் மற்றும் புதுப்பித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கான சான்றிதழ் பொறிமுறையை நிறுவுதல் மற்றும் பரிந்துரைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பேரிடர் காரணமாக 6,164 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 112,110 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தை ஈடுசெய்ய மக்களுக்கு ரூ.7.51 பில்லியன் வழங்கப்பட்ட போதிலும், மறுகாப்பீட்டு மீட்பு ரூ.1.42 பில்லியன் என தெரியவந்துள்ளது.

அதன்படி, அரசாங்கத்திற்கு ரூ.5.79 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

The post 25,000 கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு விடுத்துள்ள பணிப்புரை appeared first on Oruvan.com.

தேசிய விவசாய ஆராய்ச்சி சிறப்பு விருது வழங்கும் விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது
தேசிய விவசாய ஆராய்ச்சி சிறப்பு விருது வழங்கும் விழா 2023 மற்றும் 2025 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (23) பிற்பகல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

ஆராய்ச்சித் துறையில் சிறந்து விளங்க, விவசாய ஆராய்ச்சியாளர்களை ஊக்குவித்தல், அவர்களின் தொழில் எதிர்பார்ப்புகளை மேம்படுத்த உதவுதல் மற்றும் தேசிய விவசாயத் துறையின் வளர்ச்சிக்கு அளிக்கப்பட்ட பங்களிப்பைப் பாராட்டும் நோக்கங்களுக்காக இலங்கை விவசாய ஆராய்ச்சிக் கொள்கை சபை (SLCARP) இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்கின்றது.

இந்த ஆண்டு விருது வழங்கும் விழாவில், 2023 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான வனவியல் மற்றும் ஏற்றுமதி விவசாயப் பயிர்கள் உள்ளிட்ட பெருந்தோட்ட பயிர்ச்செய்கை, மலர் வளர்ப்பு உள்ளிட்ட பெருந்தோட்டம் அல்லாத பயிர்ச்செய்கை, கால்நடைகள் மற்றும் மீன்வளர்ப்பு மற்றும் நீர்வாழ் வளங்கள் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் விவசாய ஆராய்ச்சி சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விருது வழங்கும் விழாவில் உரையாற்றிய கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால்காந்த, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு இறக்குமதியை நம்பியிருக்க வேண்டியிருப்பதும், அதற்காக நுகர்வோர் பெரும் செலவுகளைச் சுமக்க வேண்டியிருப்பதும் விவசாயத் துறையில் எழுந்துள்ள பாரிய பிரச்சினையாகும் என்று தெரிவித்தார்.

எனவே, விவசாயத் துறையை நவீனமயமாக்குவதற்கான உத்திகளைக் கண்டறிதல், இளம் விவசாய தொழில்முனைவோரை உருவாக்குதல், விவசாயப் பொருட்களுக்கு பெறுமதி சேர்த்தல், ஏற்றுமதி சார்ந்த விவசாய உற்பத்திகளின் வளர்ச்சியை மேம்படுத்தல் ஆகியவற்றிற்கு விஞ்ஞான ஆராய்ச்சி மூலம் பங்களிப்பது விவசாய ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பாரிய பொறுப்பு என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளை கொள்கை வகுப்பாளர்களுக்கும் தொடர்புடைய அனைத்து தரப்பினர்களுக்கும் போதுமான அளவு தெரிவிப்பதன் மூலம், அந்தக் கண்டுபிடிப்புகளை களத்தில் யதார்த்தமாக மாற்ற செயற்படுமாறு ஆராய்ச்சியாளர்களை கேட்டுக்கொண்டார்.

மேலும், விவசாய ஆராய்ச்சிக் கொள்கை சபை இந்நாட்டில் விவசாய ஆராய்ச்சிக்கு வழங்கும் பங்களிப்புக்காக தனது நன்றியைத் தெரிவித்த அமைச்சர், விவசாயத் துறையில் உள்ள அனைத்துத் தரப்பினர்களுக்கும் சிறந்த, அதாவது, இந்த நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும், இறக்குமதியைக் குறைத்து விவசாய சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும், சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாய வளர்ச்சியை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் மேலும் குறிப்பிட்டார்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் விதாரண ஆகியோருடன் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட அரச அதிகாரிகள், இலங்கை விவசாய ஆராய்ச்சிக் கொள்கை சபையின் தலைவர் பேராசிரியர் ஆர்.எஸ். தர்மகீர்த்தி பல்கலைக்கழக உபவேந்தர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் தனியார் துறை தரப்பினர்கள் உட்பட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

The post தேசிய விவசாய ஆராய்ச்சி சிறப்பு விருது வழங்கும் விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது appeared first on Oruvan.com.

அபிவிருத்தியின் நன்மைகளை மக்களுக்கு வழங்குவதில் இடைப் பொறிமுறையாக தமது பொறுப்பை முறையாக நிறைவேற்றுங்கள்
அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் நன்மைகளை பொதுமக்களுக்கு வழங்குவதில் இடைப் பொறிமுறையாக அரச அதிகாரிகளுக்கு பாரிய பொறுப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இன்று (14) முற்பகல் இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இரத்தினபுரி மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

2025 ஆம் ஆண்டுக்காக இரத்தினபுரி மாவட்டத்தில் பல்வேறு அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் அவற்றை செயல்படுத்துவதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்த நிதியாண்டில் அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மீண்டும் திறைசேரிக்கு மீள் கையளிக்க இடமளிக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, அதன் மூலம் தேவையான அபிவிருத்திப் பணிகள் நடைபெறாததுடன், பணம் விரயமாகும் என்றும், ஒரே திட்டத்திற்கு மீண்டும் மீண்டும் பணம் ஒதுக்குவதால், புதிய திட்டங்களை ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் அரச திட்டங்களாக நிர்மாணப்பணிகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்ட போதிலும், அதன் சாத்தியக்கூறுகள் மற்றும் பராமரிப்பு தொடர்பில் உரிய மதிப்பீடுகள் இடம்பெறாததால், அதன் ஊடாக அரசாங்கத்திற்கு மேலதிக செலவினங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அவ்வாறு நிர்மாணிக்கப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை சார்க் கலாசார நிலையம், அநுராதபுரம் கேட்போர் கூடம் போன்ற பல கட்டிடங்களின் பராமரிப்புச் செலவு அதிகமாக

உள்ளதால் அவற்றை பொறுப்பேற்க எந்த நிறுவனமும் முன்வராத நிலை உருவாகியுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அத்துடன், அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட சுற்றுலா பங்களாக்கள், விடுதிகள், பொது வர்த்தக நிலையங்கள் போன்ற கட்டிடங்கள் வெறிச்சோடிய இருண்ட இடங்களாக மாறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவ்வாறான நிறுவனங்களை தனியார் துறை நிர்வாகத்தின் கீழ் பராமரிப்பது இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் பொருத்தமான பொறிமுறையாகும் என்றும் தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அச்சுறுத்தல் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இரத்தினபுரி மாவட்டத்தில் 15,000 குடும்பங்கள் அபாயகரமான பகுதிகளில் வசிப்பதாகவும், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் 2763 குடும்பங்கள் மாத்திரம் வசிப்பதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதன்போது சுட்டிக்காட்டியது.

இரத்தினபுரியை பாதிக்கும் வெள்ளத்தை கட்டுப்படுத்த களுகங்கையின் இரண்டு கிளை நதிகளை பயன்படுத்தி Dry Dam திட்டம் முன்மொழியப்பட்ட போதிலும், அதற்கான சாத்தியக்கூறு ஆய்வு 2014 இற்குப் பிறகு மேற்கொள்ளப்படவில்லை என நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர்.

இதன்படி, இரத்தினபுரி வெள்ள அபாயத்தைத் தடுப்பதற்கு மிகவும் பொருத்தமான செயற்திட்டத்தின் சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்வதற்குத் தேவையான நிதியை, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இணக்கம் தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த காலங்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பல குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளதுடன், இது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது கேட்டறிந்தார். பிரதேச செயலக உத்தியோகத்தர்களுடன் இணைந்து, பாதுகாப்பற்ற சிறுவர்களை இனங்கண்டு கண்காணிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் இங்கு சுட்டிக்காட்டினர்.

அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தில் போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கேட்டறிந்ததோடு, அது குறித்த நடவடிக்கைகளை நாளாந்தம் மேற்கொண்டு தற்போது ஓரளவு கட்டுப்படுத்த முடிந்துள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

மாவட்டத்தில் உள்ள சுரங்கத் தொழிற்துறை தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், இரத்தினக் கற்களின் பெறுமதி சேர்ப்பதற்கான ஆய்வுகூடத்துடன் கூடிய வர்த்தக நிலையம் ஆரம்பிக்கும் திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

தற்போது பயன்படுத்தப்படாத, அதிக வர்த்தகப் பெறுமதியைக் கொண்ட இரத்தினபுரி நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உரிய காணிகளை செயற்திறனுள்ள திட்டங்களுக்கு பயன்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.சாந்த பத்மகுமார மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், இரத்தினபுரி மாநகர சபை மேயர் கே.ஏ.டி.ஆர். இந்திரஜித் கடுகம்பல, சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளர் ஈ.கே.ஏ. சுனீதா, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் கே.ஜி.எஸ். நிஷாந்த மற்றும் மாவட்டத்தின் அரச உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

The post அபிவிருத்தியின் நன்மைகளை மக்களுக்கு வழங்குவதில் இடைப் பொறிமுறையாக தமது பொறுப்பை முறையாக நிறைவேற்றுங்கள் appeared first on Oruvan.com.

நிப்பொன் மன்றத்தின் ஸ்தாபக தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல்
ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (30) காலை டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் நிப்பொன் மன்றத்தின் ஸ்தாபக தலைவர் யொஹெய் சசகாவாவைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு யொஹெய் சசகாவா தனது தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக இதன் போது அவர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 100 பாடசாலைகளின் புனரமைப்பு மற்றும் நவீனமயமாக்கலுக்கான எதிர்காலத் திட்டங்களையும் அவர் முன்வைத்தார்.

இலங்கை மக்களின் முன்னேற்றம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கும், இலங்கையில் சமூக சேவைக்கான அவரது நீண்டகால அர்ப்பணிப்புக்கும் யொஹெய் சசகாவாவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது நன்றியைத் தெரிவித்தார்.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட பலர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

The post நிப்பொன் மன்றத்தின் ஸ்தாபக தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல் appeared first on Oruvan.com.

நாட்டு மக்களின் அபிலாஷைகள் மற்றும் நம்பிக்கைகளுக்கு மட்டுமே நான் கட்டுப்பட்டிருக்கிறேன்
நாட்டு மக்களின் அபிலாஷைகள் மற்றும் நம்பிக்கைகளுடன் மட்டுமே தான் கட்டுப்பட்டிருப்பதாகவும், தற்போதைய அரசாங்கம் ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த அரசை தெரிவு செய்து மக்கள் வைத்துள்ள அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் எந்தவொரு அழுத்தத்திற்கும் அடிபணியத் தயாராக இல்லை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை, சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்தல், செயற்திறனான அரச சேவையை ஏற்படுத்துதல் மற்றும் மோசடி மற்றும் ஊழலை முடிவுக்குக் கொண்டுவருதல், போதைப்பொருட்களுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுதல் மற்றும் ஒரு வருட குறுகிய காலத்தில் ஒரு சிறந்த அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குதல் ஆகியவற்றில் தற்போதைய அரசாங்கம் ஒரு தீர்க்கமான திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது . அனைத்து துறைகளிலும் இந்த சாதனைகள் முன்னோக்கி கொண்டு செல்லப்படுமே தவிர எக்காரணம் கொண்டும் திருப்பியமைக்கப்படாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

நாடு எதிர்கொள்ளும் அடுத்த சவால், அடைந்த பொருளாதார வெற்றிகள் நாட்டு மக்களைச் செல்வதை உறுதி செய்வதாகும் என்றும், இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டம் அந்த நோக்கத்தை மனதில் கொண்டு தயாரிக்கப்படுகிறது என்றும் ஜனாதிபதி கூறினார்.

நியூயார்க்கில் உள்ள ஸ்டெடன் ஐலண்ட் கலைக் கூடத்தில் நடைபெற்ற அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருடனான சந்திப்பில் பங்கேற்றபோது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரத் தூதரகம் ஏற்பாடு செய்த இந்தக் கூட்டத்தில் இலங்கை தொழில்வல்லுநர்கள் உட்பட அமெரிக்காவில் வசிக்கும் பெருந்தொகையானவர்கள் பங்கேற்றது. அவர்களின் பிரச்சினைகளும் இங்கு ஆராயப்பட்டதோடு இலங்கையின் புதிய பொருளாதார மாற்றத்திற்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பு பாராட்டப்பட்டது.

இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் புதிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றம் குறித்து அவர்களுக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி, இலங்கைக்கு அச்சமின்றி வந்து முதலீடுகளைச் செய்வதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு பங்களிக்குமாறு அவர்களிடம் கோரினார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றிய முழு உரை பின்வருமாறு;

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு, நான் நியூயோர்க் நகரில் இலங்கையர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினேன். செப்டம்பர் 21 ஆம் திகதி நாங்கள் அடைந்த வெற்றியில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் பெரும் பங்காற்றினர். அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

கடந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து புதிய அரசாங்கத்தை அமைக்க நீங்கள் ஏன் முடிவு செய்தீர்கள்? அந்த முடிவு ஒரு சாதாரண முடிவு அல்ல. நாங்கள் தலைமுறை தலைமுறையாக அரசியல் உரித்துள்ள குழு அல்ல. ஆனால் 2019 தேர்தலில் 3% வாக்குகளைப் பெற்ற ஒரு இயக்கம். இருப்பினும், 2024 ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் பாரிய வெற்றியைப் பெற்றோம். அதைத் தொடர்ந்து நடந்த பொதுத் தேர்தலில், விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் இலங்கை வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான பாராளுமன்ற உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் நாங்கள் ஒரு பெரிய வெற்றியைப் பெற்றோம்.

அந்த வெற்றியை அடைந்து வருடம் கடந்துவிட்டது. இந்த அரசாங்கம் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது? அந்த நோக்கத்துக்கு ஏற்றவாறு முடிவுகள் எட்டப்பட்டதா? இல்லையா? அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு குறித்து மீளாய்வு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், இந்த ஆட்சியை உருவாக்குவதற்கு பங்களிக்காத மற்றும் அதை எதிர்த்த குழுக்களின் அளவுகோல்களால் நம்மை அளவிட நாங்கள் தயாராக இல்லை. இந்த மாற்றத்திற்கு வழிவகுத்த காரணிகளைக் கொண்டே எம்மைப் பற்றி தீர்மானிக்க வேண்டும்.

நீங்கள் வெளிநாட்டில் வாழ்ந்தாலும், நம் நாட்டில் 2022/2023 ஆம் ஆண்டு பற்றி எழுதினால், நாடு வங்குரோத்தடைந்த காலகட்டமாக அது எழுதப்படும். 2022 ஏப்ரல் 12 ஆம் திகதி, கடனை செலுத்த மாட்டோம் என்று அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. அனைத்தும் வீழ்ச்சியடையத் தொடங்கின. அபிவிருத்தித் திட்டங்கள் பாதியில் நின்றுவிட்டன, தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கினர். சாதாரண மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை மேற்கொள்ள போதுமான வருமானம் இல்லாத சூழ்நிலை உருவாக்கப்பட்டது. பொருளாதார ரீதியாக ஒரு நாட்டிற்கு ஏற்படக்கூடிய அனைத்து பேரழிவு சூழ்நிலைகளும் எழுந்தன. இது எத்தகையதென்றால் இலங்கையில் முதல் முறையாக, ஆட்சியாளரை மக்களே தூக்கி எறிந்தனர்.

சுதந்திரத்திற்குப் பின்னர், நம் நாட்டில் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தேர்தல்கள் மூலம் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இருப்பினும், இலங்கையில் முதல் முறையாக, மக்கள் தெருக்களில் இறங்கி தேர்தல் இல்லாமல் ஆட்சியாளர்களை துறத்தியடித்தார்கள். இது பொருளாதாரத்தில் ஒரு பெரிய நெருக்கடியை உருவாக்கியது. அதனால், அந்த பொருளாதார நெருக்கடியைத் தணித்து, இலங்கையில் மீண்டும் ஒருபோதும் நடக்காத வகையில் ஸ்திரத்தன்மையை உருவாக்குவதே எங்களுக்கு பிரதான சவாலாக இருந்தது. ஒரு வருடத்தில், நமது நாடு இழந்த பொருளாதார நெருக்கடியில் கணிசமான அளவை சீரமைத்து, ஸ்திரத்தன்மையை உருவாக்க முடிந்துள்ளது. இன்று, பொருளாதார நெருக்கடியை மிக வேகமாகத் தணித்த நாடாக இலங்கை அறிமுகப்படுத்தப்படத் தொடங்கியுள்ளது. இது சர்வதேச நிதி நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற பொருளாதார வீழ்ச்சியில், அது நாட்டிற்கு இழந்த ஒரு தசாப்தமாகிறது என பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். அதாவது, ஒரு நாடு அதன் முன்பிருந்த நிலையை அடைய 10 ஆண்டுகள் செல்லும். இருப்பினும், 2019 ஆம் ஆண்டு இலங்கை கொண்டிருந்த பொருளாதாரத்தை அடுத்த ஆண்டு எட்ட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். மிகக் குறுகிய காலத்தில் நாங்கள் அதை மேற்கொண்டுள்ளோம். அனைத்து தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இதை நாம் கணிக்க முடியும்.

நமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததற்கு வழிவகுத்த முக்கிய காரணிகளில் ஒன்று, எமக்குத் தேவையான அளவுடொலர்களை சம்பாதிக்க தவறியமையாகும். இருப்பினும், டொலர்களை சம்பாதிக்கக்கூடிய நான்கு முக்கிய துறைகளிலும் இந்த ஆண்டு வரலாற்றில் மிக உயர்ந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு, சுமார் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நம் நாட்டிற்கு வருகை தருவார்கள். அதன்படி, 2025 ஆம் ஆண்டு இலங்கை வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்த ஆண்டாக இருக்கும்.

மேலும், இந்த ஆண்டு வெளிநாட்டில் இருந்து நாட்டுக்கு அதிக அளவு டொலர்கள் பெறப்படும் ஆண்டாக இருக்கும். அதன்படி, இந்த ஆண்டு அதிக வருமானம் ஈட்டப்பட்ட ஆண்டாக இருக்கும். நாங்கள் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கழித்து, ஒரு பில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுள்ளோம். மேலும், துறைமுக நகரத்தை அண்டியதாக 1.4 பில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன.

அதன்படி, இந்த ஆண்டு வெளிநாட்டு முதலீடுகள் அதிகம் ஈர்க்கப்பட்ட ஆண்டாகவும் இருக்கும். நாம் எதிர்கொண்டிருக்கும் டொலர் கையிஇருப்பு சிக்கலை எம்மால் தீர்க்க முடியும். 2028 ஆம் ஆண்டுக்குள் நமது கடன் திருப்பிச் செலுத்துதலைத் தொடங்கும் சவாலை நாம் எதிர்கொள்கிறோம். எனவே, 2028 ஆம் ஆண்டுக்குள், கடனைத் திருப்பிச் செலுத்தத் தேவையான திறன் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் செயல்படுகிறோம். அதன்படி,இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்தும் நெருக்கடியிலிருந்து கடனைத் திருப்பிச் செலுத்தும் சூழ்நிலைக்கு வளர்ச்சி கண்டுள்ளது.

நாம் எதிர்கொண்ட அடுத்த நெருக்கடி, அரசாங்கத்திற்குத் தேவையான வருவாயை உருவாக்கத் தவறியது. நமது நாட்டின் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படும் வருவாய் ஒருபோதும் பெறப்பட்டது கிடையாது. இருப்பினும், இலங்கையில் முதல் முறையாக, 2025 ஆம் ஆண்டில் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான அரச வருவாயைப் பெற்றுள்ளோம். மேலும், எப்போதும் அரசாங்கத்திற்கு வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டை விட அதிக செலவுகளைச் செய்ய வேண்டியிருந்தது. இந்த ஆண்டு, அதுவும் குறைந்துள்ளது. எனவே, நாங்கள் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்கியுள்ளோம். இருப்பினும், அது போதுமானதல்ல.

இந்த பொருளாதாரம் எட்டியுள்ள நன்மைகள் சாதாரண மக்களைச் சென்றடைய வேண்டும்.

பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்தாமல், அந்த முடிவுகளை கீழ்மட்டத்திலுள்ள மக்களுக்கு வழங்க முடியாது. எனவே, எங்கள் முதல் சவால் பொருளாதாரத்தை பலப்படுத்துவதாகும். இப்போது நாங்கள் எதிர்கொள்ளும் சவால் பொருளாதாரத்தில் அடையப்பட்ட இந்த வெற்றிகளை கீழ்மட்டத்தைச் சென்றடைய இடமளிப்பதாகும்.

இந்த ஆண்டு, எங்கள் வரவு செலவுத்திட்டம் முற்றிலும் அந்த நோக்கத்தையே கொண்டுள்ளது. விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவதற்கான அரசாங்க தலையீடு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை உருவாக்குதல் மற்றும் புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற பல துறைகளை இலக்காகக் கொண்டு இந்த வரவு செலவுத் திட்டத்தை நாங்கள் தயாரிக்கிறோம்.

அதேபோன்று, நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, ​​இந்த நாட்டு மக்களுக்கு எங்கள் அரச கட்டமைப்பு தொடர்பில் எதிர்பார்ப்புகள் இருந்தன. எங்கள் அரச கட்டமைப்பு மிகவும் செயற்திறனற்ற மற்றும் செயலிழந்த அரச கட்டமைப்புமாகும். எனவே, நாட்டைக் கட்டியெழுப்புவதில், இந்த அரச கட்டமைப்பின் செயல்திறன் அதிகரிக்கப்பட வேண்டும்.

அரசியல் நெருக்கத்தின் அடிப்படையில் மட்டுமே அரச சேவையை நிரப்புவதால், அரச சேவைக்கு அத்தியாவசிய ஆட்சேர்ப்புகள் நடைபெறவில்லை. எனவே, 70,000 பேரை புதிதாக அரச சேவையில் இணைக்க முடிவு செய்துள்ளோம். அரச சேவையை கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்குத் தேவையான சம்பள அளவுகளையும் உருவாக்கியுள்ளோம். இலங்கை வரலாற்றில் மிக உயர்ந்த சம்பள உயர்வை நாங்கள் வழங்கியுள்ளோம். இந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும், அந்த சம்பள உயர்வுக்காக 11,000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் தலா 11,000 கோடி ரூபா வீதம் வழங்கப்பட வேண்டியுள்ளது.

அதன்படி, 2027 ஆம் ஆண்டாகும் போது சம்பளம் 33,000 கோடி ரூபாவாக உயர்த்தப்படும். அரச சேவையின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தையும் நாங்கள் ஆரம்பித்துள்ளோம். அடுத்த ஆண்டுக்குள், அரசாங்கத்துடனான அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் டிஜிட்டல் முறை மூலம் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கிறோம். அரச சேவையில் பல சீர்திருத்தங்களையும் நாங்கள் தொடங்கியுள்ளோம். உள்நாட்டு இறைவரித் திணைக்களம், கலால் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களம் ஆகியவை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும்.

மேலும், ஒற்றை சாளரத்தின் மூலம் இவை அனைத்தையும் மேற்கொள்வதற்கான கட்டமைப்பின் அவசியத்தை ஏற்றுமதியாளர்களும் முதலீட்டாளர்களும் நீண்டகாலமாக சுட்டிக்காட்டி வருகின்றனர். இதற்காக ஒரு புதிய கட்டமைப்பை அறிமுகப்படுத்த நாங்கள் எதிர்பார்க்கிறோம், தற்போது அது குறித்து இறுதி உடன்பாட்டை எட்டியுள்ளோம்.வீழ்ச்சியடைந்துள்ள அரச சேவையை வலுப்படுத்த தேவையான பணிகளை நாங்கள் செய்துள்ளோம்.

மேலும், பழைய நிறுவன கட்டமைப்புகளை நாங்கள் மாற்றுகிறோம். மின்சார சபையை பழைய முறைமையில் தொடர்ந்து முன்னெடுக்க முடியாதுள்ளது. எனவே, அதை திறம்படச் செய்ய ஒரு புதிய நிறுவன கட்டமைப்பை நாங்கள் முன்மொழிந்துள்ளோம். இந்த வகையில் திறம்படச் செய்யக்கூடிய நிறுவனங்களுக்கு புதிய கட்டமைப்புகளை அறிமுகப்படுத்துகிறோம். அரச நிறுவனங்களை நெறிப்படுத்த நாங்கள் கணிசமான அளவு பணிகளைச் செய்துள்ளோம். இன்னும் மேற்கொள்ள வேண்டிய நிறைய விடயங்கள் உள்ளன.

மேலும், சிறந்த சர்வதேச உறவுகளை மக்கள் எதிர்பார்த்தனர். சர்வதேச அரங்கில் நமது நாடு குறிப்பிட்டளவில் கருப்பு பட்டியல் நாடாக மாறியிருந்தது. ஜனநாயகத்தை மதிக்காத, ஊடகவியலாளர்களைக் கொலைசெய்யும், மனித உரிமைகளை மீறும், பொருளாதாரத்தையே சீர்குலைத்த மோசடி மற்றும் ஊழல் நிறைந்த நமது நாட்டை மீண்டும் உலகில் ஒரு பிரகாசமான நாடாக மாற்ற வேண்டிய தேவை எமக்குள்ளது.

எனவே, வலுவான இராஜதந்திர உறவுகளையும், சர்வதேச அரங்கில் இலங்கையின் நல்ல பிம்பத்தையும் கட்டியெழுப்ப வேண்டியிருந்தது. சர்வதேச அமைப்புகளில் இன்று இலங்கை தொடர்பில் ஒரு புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் மற்றும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரைச் சந்தித்தபோது இந்த விடயம் குறிப்பிடப்பட்டது. எனவே, மீண்டும் எமது நாட்டிற்கு பிரகாசத்தையும் உரிமைகளையும் மீண்டும் பெற நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். அதில் குறிப்பிடத்தக்க பெறுபேறுகளை அடைந்துள்ளோம்.

மேலும், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய எமக்கு தேவையாக இருந்தது. நமது நாட்டில், அதிகாரத்திற்கும் செல்வத்திற்கும் முன்பாக வலைந்து கொடுக்கும் ஏழைகளைத் தண்டிக்கும் ஒரு சட்டம் இருந்தது. நமது நாட்டில் சட்டத்தை நெருங்கக்கூடியவர்களும், முடியாதவர்களும் இருக்கிறார்கள் என்ற ஒரு கருத்து நாட்டிலும் பொது சமூகத்திலும் இருந்தது. இருப்பினும், இன்று இலங்கையில் சட்டத்தை அடைய முடியாத எந்தவொரு நபரும் இல்லை என்பதை நடைமுறையில் நிரூபித்து வருகிறோம். யார் வேண்டுமானாலும் சட்டத்தை அணுக முடியும். இலங்கையில் இதுபோன்ற ஒரு தீர்க்கமான திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. நாட்டில் சட்டத்தின் ஆட்சியை முறையாக நிலைநாட்டுவது நமது பொறுப்பாகும். நாம் எடுத்துள்ள முன்னெப்புகளை தொடர்ந்து முன்கொண்டு செல்வோமே தவிர பின்நோக்கி திருப்ப மாட்டோம்.

எங்களுக்கு வாக்களிக்கும் போது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தன. அந்த எதிர்பார்ப்புகள் மற்றும் நம்பிக்கைகளுடன் அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் இணைந்திருக்கிறோம். மக்கள் ஆணையின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக நாங்கள் பணியாற்றுகிறோம். இதில் யாருக்கும் அடிபணிய மாட்டோம்.

அதேபோல், மோசடி மற்றும் ஊழலை நிறுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இந்நாட்டு மக்கள் மத்தியில் இருந்தது. எங்கள் நாட்டில் அரசியல்வாதியின் வீண் விரயம் ஒரு சட்டமாக மாறியிருந்தது. அவற்றைப் பற்றி கேள்வி கேட்க முடியாது. அரசியல்வாதிகளுக்கு தாம் விரும்பியவாறு பொதுமக்களின் பணத்தை வீணடிக்க முடியும் என்ற எண்ணக்கருவொன்று இருந்தது. அது தவறானது. பொருளாதாரம் பெரிதும் வீழ்ச்சியடைந்து, எரிவாயு, எரிபொருள் இல்லாமல் இருந்த நிலையில் கூட ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை புதுப்பிக்க 470 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. அரசியல்வாதிகளுக்கு அரச பணம் செலவிடுவதில் வரம்புகள் இருக்கவில்லை. அவர்களின் விருப்பத்தின் படி செலவு செய்யலாம் என்று நினைத்தார்கள்.

ஜனாதிபதிக்கு வரம்பு இல்லை. ஆனால், அந்த வரம்பு அந்த பதவியில் அமர்ந்திருப்பவரின் நாகரிகத்திலேயே அடங்கியுள்ளது. அப்படியானால் நாங்கள் சட்டத்தின் மூலம் அந்த வரம்பை உருவாக்க வேண்டியுள்ளது. அதற்காக நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். அந்த சட்டத்தின் வரம்பாக முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து இல்லங்கள் வழங்கப்படாது. இது யாரையும் பழிவாங்குவதற்காக அல்ல. எங்களுக்கு யாருடனும் தனிப்பட்ட குரோதம் கிடையாது. எங்கள் நாட்டுக்கு சிறந்த அரசியல் முன்மாதிரி தேவை. அது உருவாகும் வரை நாங்கள் சட்ட வரம்புகளை உருவாக்குகிறோம்.

பொதுமக்களின் பணத்தில் ஒரு சதமும் வீணாக்காத அரசாங்கம் இலங்கையில் முதல் முறையாக இன்று அமைக்கப்பட்டுள்ளது. அதுதான் மக்கள் ஆணையின் சாராம்சம். இந்த காரணிகளின் விளைவாகவே நமது நாடு வீழ்ச்சியடைந்தது . எனவே இந்த நிலைமையை மாற்றுவதற்கு அனைத்து காரணிகளிலும் மாற்றம் தேவை. எனவே லஞ்சம், ஊழலற்ற அரசொன்றை உருவாக்குவதற்கான மக்கள் ஆணையின் எதிர்பார்ப்பை நாங்கள் தற்போது நிறைவேற்றி வருகிறோம்.

அதேபோல், மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்தார்கள். இன்று நாங்கள் அதைச் செய்து வருகிறோம். அதேபோல், சர்வதேச அளவில் எங்கள் நாடு குறித்த கறைபடிந்த பிம்பத்தை உருவாக்கிய கொலைகள் மற்றும் கடத்தல்கள் குறித்து நீதி தேவை. அதற்கு நியாயம் தேவை. அதனைப் பற்றி நாங்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம் . படையினர்களை வேட்டையாடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. போரின்போது அவர்கள் செய்த பணி குறித்து எங்களுக்கு பாராட்டு உள்ளது. ஆனால் அதற்கு மறைமுகமாக செய்த குற்றங்கள் குறித்து நாங்கள் விசாரணை நடத்துகிறோம்.

நமது நாட்டில் நீதி பற்றிய கருத்து வெறும் சட்டத்தின் இருப்பை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்படவில்லை. நீதி பற்றிய சமூகக் கருத்து, தற்போதுள்ள சட்டம் நியாயமாக செயல்படுத்தப்படுகிறது என்ற மனநிலையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. சட்டம் இருப்பது மட்டுமே சமூகத்தில் நீதி பற்றிய கருத்தை உருவாக்காது. அநீதி ஏற்படும் தருணத்தில் நீதி செயல்படுத்தப்படும் என்ற கருத்து உருவாக்கப்பட்டால் மட்டுமே நீதி பற்றிய கருத்து உருவாக்கப்படுகிறது. நாங்கள் அதை மேற்கொண்டு வருகிறோம்.

குற்றங்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான விசாரணைகளை நாம் ஒருபோதும் அரசியல் கோணத்தில் நடத்துவதில்லை. லஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் என்பன தேவையான விசாரணைகளை நடத்துகின்றன. தேவையான வசதிகளை மட்டுமே நாங்கள் வழங்குகிறோம். அதற்கான அழுத்தம் கொடுப்பது எங்கள் பணியல்ல தற்போதுள்ள அரசாங்கத்தை அடிப்படையாகக் கொண்டு அன்றி, தற்போதுள்ள நிறுவனங்களின் அடிப்படையில் அவை மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த நிறுவனங்களை வலுப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மேலும், நமது நாடு எதிர்கொண்டுள்ள போதைப்பொருள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்க நாங்கள் பாடுபட்டு வருகிறோம். எனவே, இந்த மறைவான அரசை நசுக்க நாங்கள் பாடுபடுகிறோம். ஒரு நாட்டில் இரண்டு அரசாங்கங்கள் இருக்க முடியாது. ஒரு அரசாங்கமே இருக்க வேண்டும். அதனுடன் இணைக்கப்பட்ட ஒரு அரசு பொறிமுறையின் மூலம் மட்டுமே அரசு செயல்படுத்தப்பட வேண்டும். எனவே, நமது நாட்டிற்கு தேவையான மாற்றங்களை பல்வேறு கோணங்களில் செய்து வருகிறோம்.

எனவே, ஒரு வருடத்திற்கு முன்பு எங்களுக்கு வழங்கப்பட்ட ஆணையின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பாதையில் நாங்கள் இறங்கியுள்ளோம். பாதியில் நிறுத்தப்பட்ட திட்டங்களையும் மீண்டும் ஆரம்பித்துள்ளோம். கட்டுநாயக்க விமான நிலையத் திட்டம் 2023 இல் நிறைவுசெய்யப்பட வேண்டிய ஒரு திட்டமாகும். ஆனால் அது பாதியில் நிறுத்தப்பட்டது. எனவே, அடுத்த ஆண்டு பெப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் அதன் பணிகளை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளோம். மேலும், பாதியில் நிறுத்தப்பட்ட நிர்மாணப் பணிகள் ஏராளமாக உள்ளன. கலாசார அமைச்சர் மாத்தறையில் இருந்ததால், சார்க் கலாச்சார மையம் என்ற பாரிய கட்டிடம் மாத்தறையில் கட்டப்பட்டது. இப்போது எதுவும் செய்ய முடியாது. யாரும் அதைப் பொறுப்பேற்க தயாராக இல்லை. அது பழுதடைந்து வருகிறது. இவற்றை மறுசீரமைத்து பயனுள்ள பணிகளுக்கு பயன்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம்.

எனவே, நாங்கள் ஸ்திரத்தன்மை மற்றும் மறுசீரமைப்பை நோக்கி நகர்கிறோம்.எமக்கு மக்கள் ஆணையின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடிந்துள்ளது. ஆனால் அது போதாது, எங்களுக்கு கால அவகாசம் தேவை. அதற்கு உங்கள் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இன்று, நாட்டில் உங்களுக்காக முதலீட்டு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. உங்களிடமிருந்து எங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கூட தேவையில்லை, செயற் திட்டங்கள் மட்டுமே தேவை.

மேலும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களாக, சுற்றுலாத் துறைக்கு நீங்கள் பரந்த பங்களிப்பைச் செய்ய முடியும். தூதரகங்களுடன் இணைந்து பல்வேறு திட்டங்களை நாங்கள் ஏற்பாடு செய்யலாம். நாம் தூரமாக இருப்பதற்குப் பதிலாக பல்வேறு வழிகளில் இலங்கையுடன் தொடர்பு கொள்ளும் ஒரு சமூகமாக மாற அனைவரைக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, முன்னாள் பிரதம நீதியரசர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய மற்றும் பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

The post நாட்டு மக்களின் அபிலாஷைகள் மற்றும் நம்பிக்கைகளுக்கு மட்டுமே நான் கட்டுப்பட்டிருக்கிறேன் appeared first on Oruvan.com.

பலஸ்தீனத்ததை ஆதரிக்கும் அநுர தமிழ் மக்கள் தொடர்பில் அலட்டிக்கொள்ளமாட்டார்
அநுர அரசும் முன்னைய அரசுகளுக்கு நிகரான அரசுதான் என்பதை நிரூபித்து வருகின்றது.

தேர்தல் மேடைகளில் கூறியவற்றை மறந்து மக்களை திசை திருப்பி தங்களின் ஆட்சியை கொண்டு செல்லவே பாடுபடுகின்றது என்று ஐக்கிய சோசலிச கட்சியின் முக்கியஸ்தர் ஸ்ரீதுங்க ஜெயசூரிய தெரிவித்துள்ளார்

யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கூறிய அவர் மேலும் கூறுகையில்,

அநுர ஒரு சந்தர்ப்பவாதி. அமெரிக்கவின் நிகழ்ச்சி நிரலில் இருந்து நாட்டை சீரழிக்கும் ஒருவர். அமெரிக்கா என்ன நினைக்கின்றதோ அதையே நாட்டில் முன்னெடுத்து வருகின்றது

இதேநேரம் சர்வ அதிகரம் கொண்ட அநுரவுக்கு நாட்டில் புரையோடிக் கொண்டிருக்கும் அரசியல் பிரச்சினையை தீர்க்க ஒரு கையொப்பம் போதும். ஆனால் அதை அவர் செய்யமாட்டார்.

யாழ் மக்களுக்கு சர்வதேச மைதானம் அவசியமாக இருந்தாலும் அதைவிட அவசியமானவை எண்ணற்ற அளவில் இருக்கின்றன. ஆனால் அநுர அரசு மைதானத்தை காட்டி தமிழ் மக்களின் பிரச்சினைகளை மூடிமறைக்க முயல்கிறது.

வடக்கில் இருந்து பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் சென்றாலும் அவர்களில் ஒருவருக்கு கூட அமைச்சராக பொறுப்புக் கொடுக்காத அரசு இது.

வடக்கில் வந்து பேதங்கள் அற்ற ஆட்சி செய்வதாக கூறும் அநுர, தனது ஆட்சியில், அமைச்சரவையில் தமிழ் முஸ்லிம் சமூகங்களை ஓரங்கட்டி வைத்திருக்கின்றது.

இதேநேரம் யாழ்ப்பாணம் சாரா ஒருவரை யாழ்பாணத்தின் அமைச்சராக்கி யாழ். மக்களை இழிவுபடுத்தும் செயலே முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கு காரணம் இலங்கை தமிழர் ஒருவர் அமைச்சரானால் தமிழ் மக்கள் பிரச்சினைகள் குறித்த தீர்வுக்கு குடைச்சல் கொடுப்பார் என்பதால் தான் அமைச்சு கொடுக்கபடவில்லை. இதுவே உண்மை.

பலஸ்தீனத்ததை ஆதரித்து ஐ.நாவில் கருத்துக் கூறும் அநுர இலங்கை தமிழ் மக்கள் தொடர்பில் ஒருபோதும் அலட்டிக்கொள்ள மாட்டார். ஏனெனில் அநுர ஓர் இனவாத் குடும்பத்தின் பின்னணியில் இருந்து வந்தவர்.

மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் சதித்திட்டத்தை முன்னெடுக்கின்றது. இதை முறியடிக்க வேண்டும்.

நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதுடன் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

அதுமட்டுமல்லாது வடக்கு கடற்றொழில் சமூகத்தின் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்பதுடன் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள மக்களின் பாரம்பரிய பூர்வீக காணிகளை உடனடியாக விடுவிக்கவும் ஷ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேவேளை சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையில் தேசியப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க இந்த அரசு முயற்சி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

The post பலஸ்தீனத்ததை ஆதரிக்கும் அநுர தமிழ் மக்கள் தொடர்பில் அலட்டிக்கொள்ளமாட்டார் appeared first on Oruvan.com.

ஐநாவில் பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரித்தார் இலங்கை ஜனாதிபதி
பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதாக இலங்கை ஜனாதிபதி அநுரகுமார் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அனைத்து ஆதரவையும் வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆபத்தானது என்றாலும், அதை எதிர்த்துப் போராடாமல் இருப்பது இன்னும் ஆபத்தானது என்று ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும், ஊழலுக்கு எதிரான போராட்டம் உலகின் ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போதைப்பொருள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் இன்று உலகின் சமீபத்திய பிரச்சினையாக மாறிவிட்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

உலகளாவிய போதைப்பொருள் பிரச்சனை உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் சிக்கலான சவாலாக மாறியுள்ளது.

நாளுக்கு நாள், போதைப்பொருள் மற்றும் தொடர்புடைய பொருட்கள் உலக சந்தையை சாதனை விகிதத்தில் ஆக்கிரமித்துள்ளன.

போதைப்பொருள் வர்த்தகமும் அதன் மூலம் செயல்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றமும் பல உலக நெருக்கடிகளுக்கு வழிவகுத்துள்ளன.

இவற்றில் ஈடுபட்டுள்ள குழுக்கள் மாநிலங்களை இரையாக மாற்றுகின்றன. இந்த பேரழிவு உலக சுகாதாரம், உலக ஜனநாயகம், உலக அரசியல் மற்றும் உலக நலனுக்கு எதிரான ஒரு பெரிய போக்காக இது மாறிவிட்டது.

இலங்கையில் இந்தப் பெரும் கொள்ளை நோயை ஒழிப்பதற்கான ஒரு நேர்மறையான திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.

இதேவேளை, உலகில் போரை விரும்பும் எந்த தேசமும் இல்லை. போர் அல்லது மோதல் ஏற்படும் போதெல்லாம், அது சோகத்தில்தான் முடியும் என்பதை நாங்கள் அறிவோம்.

இந்த தருணத்திலும் கூட, அந்த துயரத்தின் வலி உலகின் பல பகுதிகளிலும் உணரப்படுகிறது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக போரின் கசப்பான அனுபவத்தை அனுபவித்த ஒரு நாடாக, அதன் அழிவை நாம் நன்கு அறிவோம்.

போரில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான மக்களின் நினைவு இடங்களுக்கு வந்து, அவர்களின் பெற்றோர், குழந்தைகள் மற்றும் மனைவியர் எழுப்பும் வலிமிகுந்த வேண்டுகோள்களை கூப்பிய கைகளுடன் பார்க்கும் எவரும், போரைக் கனவு காணக்கூட விரும்ப மாட்டார்கள்.

அந்த வேதனையான காட்சியை நம் கண்களால் பார்த்திருக்கிறோம்.

காசா பகுதியில் நடந்து வரும் கொடூரமான பேரழிவு நமக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, காசா பகுதி ஒரு வேதனையான மற்றும் சோகமான திறந்தவெளி சிறைச்சாலையாக மாறியுள்ளது.

அப்பாவி குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் அழுகை காது கேளாததாக உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொண்டபடி, இரு தரப்பினரும் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும்.

அனைத்து மனிதாபிமான உதவிகளையும் தடையின்றி அணுக வேண்டும், அனைத்து தரப்பினரும் பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

இந்த கொடூரமான கொலைகளை முடிவுக்குக் கொண்டுவர நாம் கடுமையாக அழுத்தம் கொடுக்க வேண்டும். பாலஸ்தீன மக்களுக்கு ஒரு அரசுக்கான பிரிக்க முடியாத உரிமையை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்கள் இருவரின் நியாயமான பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான கவலைகளையும் நாங்கள் அங்கீகரிக்க வேண்டும்.

1967 எல்லைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு நியாயமான மற்றும் நீடித்த தீர்வுக்காக நாம் ஒன்றுபட வேண்டும்” என ஜனாதிபதி அநுரகுமார் திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

The post ஐநாவில் பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரித்தார் இலங்கை ஜனாதிபதி appeared first on Oruvan.com.

ட்ரம்பை சந்தித்த ஜனாதிபதி அநுர குமார
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையிலான சந்திப்பு அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வின் போது இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, உத்தியோகபூர்வ விஜயமாக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் அவர் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் கலந்து கொண்டுள்ளார்.

அதன்படி, இன்று (24) இலங்கை நேரப்படி நள்ளிரவு 12 மணியளவில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அவர் உரையாற்றவும் உள்ளார்.

The post ட்ரம்பை சந்தித்த ஜனாதிபதி அநுர குமார appeared first on Oruvan.com.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆடைத் துறையினருடனான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல்
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் எதிர்கால பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் கைத்தொழிற்துறையினர் மற்றும் முதலீட்டாளர்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் முதலீடு செய்ய அரசாங்கம் தயக்கமின்றி செயற்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (11) பிற்பகல் நடைபெற்ற ஆடைத் துறையில் ஈடுபட்டுள்ள தரப்பினர்களுடன் 2026 வரவுசெலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலில் பங்கேற்றபோது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

தற்போதுள்ள கைத்தொழில்களுக்கு வசதிகளை வழங்குவதன் மூலம் முதல் சுற்றில் எதிர்பார்க்கும் முன்னேற்ற இலக்குகளை அடைய ஒரு அணுகுமுறையொன்றை எட்ட முடியும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு ரூபாயையும் அதிக பலன் கிடைக்கும் முதலீடுகளுக்குப் பயன்படுத்துவது அரசாங்கத்தின் கொள்கை என்றும் அவர் தெரிவித்தார்.

கூட்டு ஆடை சங்கங்களின் மன்றம் (Joint Apparel Association Forum) சுதந்திர வர்த்தக வலய உற்பத்தியாளர்கள் சங்கம் (FTZMA) உள்ளிட்ட ஆடைத் துறையில் உள்ள சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் பிரதிநிதிகளினால் ஒவ்வொரு துறை சார்ந்த வரவு செலவுத் திட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

உற்பத்திச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட ஆடைத் துறையில் ஏற்பட்டுள்ள புதிய சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து ஆடைத்துறையினர் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர். அனைத்துத் துறைகளுக்கும் வரிச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கம் அங்கீகரிப்பதாகவும், வருமான நிலைகளுக்கு அமைவாக நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாத்து எதிர்காலத்தில் அத்தகைய சலுகைகளை வழங்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

“பரஸ்பர வரி” முறையின் கீழ் அமெரிக்காவினால் இலங்கை மீது விதிக்கப்பட்ட தீர்வை வரி விகிதத்தைக் குறைக்க அரசாங்கம் தலையிட்டதை கைத்தொழில்துறையினர் பாராட்டினர். இதற்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்ததோடு எதிர்காலத்தில் இது தொடர்பாக மேலும் சலுகைகளைப் பெற தலையிடுமாறு கோரினர்.

ஆடைத் துறையில் பணியாற்றுகையில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும், உலக சந்தையில் இலங்கை தற்போது காணப்படும் புதிய வாய்ப்புகளை திறம்படப் பயன்படுத்துவதற்கும் சவால்களை எதிர்கொள்வதற்கும் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. இந்த விடயங்கள் குறித்து எதிர்வரும் வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயங்களின் போது கவனம் செலுத்துமாறும் கலந்துரையாடலில் பங்கேற்ற பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

அரசாங்கம் ஏற்கெனவே கவனம் செலுத்தியுள்ள . சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கான அபிவிருத்தி வங்கியொன்றின் அவசியம் குறித்து கலந்து கொண்ட பிரதிநிதிகள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

ஜனாதிபதி குறிப்பிட்டது போல், ஒன்லைன் முறைமை அபிவிருத்தி (ONLINE SYSTEM DEVELOPMENT) மற்றும் SVAT, Standard VAT வரை மேம்படுத்துவது அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் அணுகுமுறை என்பவற்றுக்கு கைத்தொழிற்துறையினர் இதன் போது நன்றி தெரிவித்தனர். E-Invoice உள்ளிட்ட வரி அறவிடல் வசதிகளை மேலும் மேம்படுத்தவும் அவர்கள் பரிந்துரைத்தனர்.

தற்பொழுது உற்பத்திகளில் 55% பெறுமதி சேர்க்கப்பட்ட தயாரிப்புகள் என்றும், எதிர்காலத்தில் இதனை மேலும் அதிகரிக்க எதிர்பார்ப்பதாக கைத்தொழிற்துறையினர் தெரிவித்ததோடு அரசாங்கம் இதற்குத் தேவையான வசதிகளை உருவாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

இந்தத் துறையில் நீண்டகால அனுபவத்தின் அடிப்படையில் நாட்டின் வளர்ச்சிக்காக முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, அந்த முன்மொழிவுகள் அனைத்தையும் ஆராய்ந்து , அரசாங்கம் எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் மற்றும் இது தொடர்பாக நடத்தப்படும் எதிர்கால கலந்துரையாடல்களுக்கான திட்டத்தைத் தயாரிக்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஜனாதிபதியின் சிரேஸ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர்களான ரஸல் அபோன்சு, கபில ஜனக பண்டார, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தலைவர் மங்கள விஜேசிங்க மற்றும் ஆடைத் துறையில் ஈடுபட்டுள்ள தரப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

The post ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆடைத் துறையினருடனான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் appeared first on Oruvan.com.