அணுசக்தி திட்டம் Archives - Oruvan.com

அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சு நடத்த ஈரான் மறுப்பு
அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் நேரடி பேச்சு நடத்தப்படாது என ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா அலி கமேனி அறிவித்துள்ளார்.

மேற்கு ஆசிய நாடான ஈரான், 2015ல் அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளுடன் ஒரு அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதையடுத்து ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்பட்டன.

அதன் பின் 2018ல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன் முதல் பதவிக் காலத்தில், இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார். பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமுல்படுத்தினார்.

அதன்பின் ஈரான் தன் விருப்பம் போல் அணு உற்பத்தியில் இறங்கியது. அணுசக்திக்கான முக்கிய தனிமமான யுரேனியத்தை அணு ஆயுத தரத்துக்கு செறிவூட்டியதாக புகார் எழுந்தது.

இது தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் என இஸ்ரேல் கடந்த ஜூலையில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்கியது. அவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் உதவினார். 12 நாட்களுக்கு பின் இந்த மோதல் நின்றது.

தற்போது ஈரான் புதிய அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இணங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இல்லையெனில் 2015க்கு முந்தைய பொருளாதாரத் தடைகள் மீண்டும் அமுலுக்கு வரும்.

ஆனால் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சு கிடையாது என ஈரான் உயரிய தலைவர் அயதுல்லா அலி கமேனி நேற்று அறிவித்தார்.

இது தொடர்பாக தொலைக்காட்சி உரையில் அவர் பேசுகையில்,

“அமெரிக்காவின் நோக்கம் பேச்சு நடத்துவது அல்ல அழுத்தம் தருவது. அமெரிக்கா பேச்சின் முடிவை முன்கூட்டியே அறிவித்துள்ளது. ஈரானின் அணு செயல்பாடுகளை நிறுத்துவதே அவர்கள் நோக்கம்,” எனக் குறிப்பிட்டார்.

The post அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சு நடத்த ஈரான் மறுப்பு appeared first on Oruvan.com.

அணுசக்தி திட்டம்: அமெரிக்காவின் முன்மொழிவை நிராகரித்தது ஈரான்
ஈரான் அனைத்து யுரேனிய செறிவூட்டல்களையும் நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் முன்மொழிவை ஈரானிய ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா செய்யத் அலி காமெனெய் நிராகரித்துள்ளார்.

ஈரான் இஸ்லாமிய குடியரசின் நிறுவனர் மறைந்த இமாம் கொமெய்னியின் 36 வது வருட நினைவு நிகழ்வு தெற்கு தெஹ்ரானில் உள்ள இமாம் கொமெய்னியின் கல்லறையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் உரையாற்றிய ஆயத்துல்லா காமெய்னி, நமது புரட்சியின் தலைவர் ஒரு சிறந்த மனிதர், அவர் இறந்து பல ஆண்டுகள் கடந்த பின்னரும் உலகில் அவரது இருப்பு இன்னும் உணரத்தக்கது. அவரது புரட்சியின் தாக்கம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு தெளிவாகத் தெரியும்.

உலகில் அமெரிக்காவின் நிலையில் ஏற்பட்ட கூர்மையான சரிவுக்கு அவரது இருப்பு முக்கிய காரணமாகும். சியோனிஸ்டுகள் மீதான வெறுப்பு அவரது புரட்சியின் விளைவாகும்.

அமெரிக்காவின் முதல் வார்த்தை என்னவென்றால், ஈரான் அணுசக்தித் தொழிலைக் கொண்டிருக்கக்கூடாது. அமெரிக்காவை நம்பியிருக்க வேண்டும் என்பதாகும்.

அமெரிக்காவின் முட்டாள்தனத்திற்கு எங்கள் பதில் தெளிவானது. இந்த விடயத்தில் அவர்களால் எதுவும் செய்ய முடியாது. ஈரானின் அணுசக்தி விவகாரத்தில் யுரேனியம் செறிவூட்டல் தான் முக்கியம். ஈரானின் அணுசக்தித் துறைக்கான அமெரிக்காவின் திட்டம் நம்மால் முடியும் கோட்பாட்டிற்கு முற்றிலும் எதிரானது. ஈரான் அதன் யுரேனிய செறிவூட்டல் நடவடிக்கைகளைப் பேணிப் பாதுகாக்கும். அது அமெரிக்காவின் வேலை அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

The post அணுசக்தி திட்டம்: அமெரிக்காவின் முன்மொழிவை நிராகரித்தது ஈரான் appeared first on Oruvan.com.