அகதிகள் Archives - Oruvan.com

மியன்மார் அகதிகளை சந்திக்க அனுமதி கோரும் மனித உரிமைகள் ஆணைக்குழு – ஜனாதிபதிக்கு கடிதம்
நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மார் அகதிகளை சந்திக்க அனுமதி வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி எல். டி.பி.தெஹிதெனிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் எழுத்து மூலம் இது தொடர்பான கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் மியான்மரில் இருந்து படகில் வந்த 115 அகதிகள் முல்லைத்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.

கப்பலில் இருந்த 12 பணியாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர், மீதமுள்ளவர்கள் முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அகதிகளிடம் விசாரணை நடத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு கடந்த 26ஆம் திகதி முல்லைத்தீவு விமானப்படை முகாமுக்கு சென்றிருந்தனர்.

எவ்வாறாயினும், குடிவரவு கட்டுப்பாட்டு நாயகத்தின் அனுமதியின்றி அகதிகளை பார்வையிட அனுமதி வழங்க முடியாது என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அகதிகளை சந்திக்க எவருக்கும் அனுமதி வழங்கக்கூடாது என குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டு நாயகம் உத்தரவிட்டுள்ள நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டு நாயகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

ஆனால் குறித்த கோரிக்கைக்கு பதிலளித்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், புகலிடக் கோரிக்கையாளர்களை அணுகுவதற்கு அனுமதி வழங்காமல் இருப்பது பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சரே என தெரிவித்துள்ளது.

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளர் ஒருவரினால் வாய்மொழியாக இது தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டதாகவும், குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் இது தொடர்பில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

நீதிமன்ற உத்தரவின் மூலமோ அல்லது வேறு வகையிலோ தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நலன்களை தொடர்ந்தும் பரிசோதிக்கும் அதிகாரம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முகாமில் உள்ள அகதிகளில் 40இற்கும் அதிகமானோர் சிறுவர்கள் எனவும் அவர்களில் பெரும்பாலானோர் கைக்குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் ஆராய வேண்டிய பொறுப்பு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் என கடிதத்தில் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, ஆணைக்குழுவின் அதிகாரிகள் தடையின்றி உரிய புகலிட கோரிக்கையாளர்களை சந்திப்பதற்கு வசதியாக தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்குமாறு முப்படைகளின் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.

The post மியன்மார் அகதிகளை சந்திக்க அனுமதி கோரும் மனித உரிமைகள் ஆணைக்குழு – ஜனாதிபதிக்கு கடிதம் appeared first on Oruvan.com.