கம்பஹாவில் பாடசாலை மாணவிகள் மூவர் மாயம்: தொடரும் சம்பவங்களால் விசாரணை சிஐடிக்கு மாற்றம்
பெண் பிள்ளைகளுக்கு இந்த சமூதாயதம்தில் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. அந்த வகையில், பல மாணவிகள் தங்களின் பரீட்சை முடிந்த கையோடு பெற்றோருக்கு எந்த தகவலும் வழங்காமல் வீட்டை விட்டு ஓடும் சம்பவங்கள் பல அண்மையில் இருந்து பதிவாகியுள்ளன.
அந்தவகையில், கம்பஹா, யக்கல பகுதியில் மேலதிக வகுப்புகளுக்காக சென்ற 14 வயதுடைய பாடசாலை மாணவிகள் மூவர் நேற்று மாலை முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக யக்கல பொலிஸாருக்கு ஒரு முறைப்பாடும் மற்றைய இரண்டு முறைப்பாடுகள் வீரகுல பொலிஸாருக்கும் கிடைத்துள்ளன.
அண்மையில், இரு பாடசாலை மாணவிகள் சாதாரண தர பரீட்சை முடிந்த கையோடு தலைநகருக்கு வேலைதேடி சென்றதொடு இரண்டு நாட்களின் பின் உறவினர் வீட்டிலிருந்து மீட்க்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விசாரணை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள பண ஆசை என்பது தீவிரமடைந்துள்ளது. இதனால் பரீட்சை எழுதிய கையோடு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் அவர்கள் மனதில் தோன்றவே பெற்றோரிடம் கூட தெரிவிக்காமல் வீட்டை விட்டு ஓடிவிடுகின்றனர்.
இதனால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றிய சரியான விழிப்புணர்வின்மையே இதற்கு காரணம் என்றும் கூறலாம். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.