ஊடுருவப்பட்ட கல்வி அமைச்சின் இணையத்தளம்: சைபர் தாக்குதல் மேற்கொண்ட உயர்தர மாணவன்

OruvanOruvan

Sri Lanka Education Ministry Website hacked

கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் ஊடுருவப்பட்டுள்ளதாக தகவலொன்று வெளியாகியுள்ளது.

அடையாளம் தெரியாத நபரொருவரால் இணையத்தளம் ஊடுருவப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சின் இணையத்தளத்தில் காணப்படும் பாதுகாப்பு குறைபாடுகளை கவனத்திற்கொண்டு தாம் ஊடுறுவியதாக குறித்த நபர் இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்,

“எனது பெயர் “Anonymous EEE” நான் தற்போது உயர்தரத்தில் கல்வி கற்கிறேன். உங்கள் இணையதளத்தை ஊடுருவியமைக்கு மன்னிக்கவும்.

இந்த இணையதளத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் காணப்படுகின்றன.

இலங்கைப் பிரஜை என்ற வகையில் நாட்டின் பாதுகாப்பிற்காக இதனை அறியப்படுத்துகிறேன். அதை சரி பார்க்கவும்”.

OruvanOruvan