கே.எச்.நந்தசேன காலமானார்: வெற்றிடத்திற்கு எம்.ஜி.வீரசேன நியமனம்

OruvanOruvan

Sri Lanka Parliament

நாடாளுமன்ற உறுப்பினர் கே.எச்.நந்தசேன காலமானதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு எம்.ஜி.வீரசேன நியமிக்கப்படவுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.எச்.நந்தசேன (04) இன்று அதிகாலை காலமானார்.

சுகயீனம் காரணமாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அனுராதபுரம் மாவட்டத்தை சேர்ந்த எம்.ஜி.வீரசேன நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாவட்ட முன்னுரிமை பட்டியலில் எம்.ஜி.வீரசேன 38,241 விருப்பு வாக்குகளை பெற்று நந்தசேனவுக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.