மைத்திரியின் தலைவர் பதவிக்கு வந்த சோதனை: நீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

OruvanOruvan

Court Order

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு ஏப்ரல் 18ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க செய்த முறைப்பாட்டை தொடர்ந்து இவ்வாறு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.