நிதி மோசடி: நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் கைது

OruvanOruvan

Damitha abeyrathna arrested

கொரியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்ததையடுத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவரைக் கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சுமார் முப்பது அதிகாரிகள் கொண்ட பொலிஸ் படையொன்று கோட்டை நீதிமன்றத்திற்கு வருகை தந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கடந்த 2ஆம் திகதி, குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் இவர்களை கைது செய்வதை தடுக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் மறுத்துள்ளது.