ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு: உலகின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

World News Updates 04.04.2024

யுனஸ்கோவில் பெல்ஜியத்தின் பொம்மலாட்டத்தையும் சேர்க்குமாறு கோரிக்கை

யுனஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில், தங்கள் நாட்டின் பொம்மலாட்டத்தை சேர்க்க வேண்டும் என பெல்ஜியம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு

ஜப்பானின் ஹொன்ஷூ தீவின் கிழக்கு கடற்கரை பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 6.3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

20 ஆயிரம் யானைகளை ஜெர்மனிக்கு அனுப்பப்போவதாக மிரட்டும் போட்ஸ்வானா

பாதுகாப்பு தொடர்பான சர்ச்சையை அடுத்து 20,000 யானைகளை ஜெர்மனிக்கு அனுப்பப்போவதாக போட்ஸ்வானா ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பெர்லினில் வேட்டையாடும் பொருட்களை இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்தும் திட்டங்களினால் கோபமடைந்த அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

182 சீன குடிமக்களை அமெரிக்க எல்லை ரோந்து முகவர்கள் கைது செய்தனர்

அமெரிக்காவின் தெற்கு எல்லையின் முக்கிய பகுதி வழியாக சட்டவிரோதமாக நுழைந்த 182 சீன குடிமக்களை அமெரிக்க எல்லை ரோந்து முகவர்கள் கைது செய்ததாக ஃபாக்ஸ் நியூஸ் தெரிவித்துள்ளது.

சமீபத்திய மாதங்களில் சான் டியாகோ செக்டருக்குள் பெருந்தொகையான சீனாவிலிருந்து குடியேறியவர்கள் இதுவே முதல் தடவை என அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CBP) அமைப்பு தெரிவித்துள்ளது.

தாய்வான் நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 9ஐ எட்டியது

தாய்வானில் பாரிய நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதை எட்டியது மற்றும் 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்; மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

அனைத்து கருத்தடை சாதனங்களையும் இலவசமாக்கும் கனடா அரசு

கனடாவில் பெண்கள் பயன்படுத்தும் கருத்தடை மாத்திரைகள் முதலான அனைத்து கருத்தடை சாதனங்களும் இலவசமாக்கப்பட உள்ளதாக கனடா அரசு தெரிவித்துள்ளது. பெண்கள் தங்களுக்குத் தேவையான கருத்தடை சாதனங்களைப் பெற பணம் தடையாக இருக்கக்கூடாது, கருத்தடை முறைகளை அவர்கள் சுதந்திரமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ.