மூதூரில் நபர் ஒருவர் படுகொலை: வடக்கு - கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

North - East News Updates 03.04.2024

மூதூரில் நபர் ஒருவர் படுகொலை

மூதூரில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறிய நிலையில், நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஈச்சலம்பற்று இறங்குதுறை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரொருவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் இன்றுமுதல் போக்குவரத்து நடைமுறைகள் இறுக்கமாக கண்காணிக்கப்படும்

யாழ். மாவட்டத்தின் போக்குவரத்தை சீர்செய்வது தொடர்பில் பல்வேறு செயற்றிட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில் இன்றுமுதல் போக்குவரத்து நடைமுறைகள் இறுக்கமாகக் கண்காணிக்கப்படும் என யாழ். மாவட்ட மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்தார்.