புதிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் 'மொனரா தொலைக்காட்சி': இன்று முதல் ஆரம்பம்

OruvanOruvan

Monara TV

இலங்கைத் தொலைக்காட்சி வரலாற்றில் இணைந்திருக்கும் புதிய தொலைக்காட்சி அலைவரிசையான "மொனரா தொலைக்காட்சி" இன்று புதன்கிழமை காலை 9.47க்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

'VIS மீடியா நெட்வொர்க்' குடன் இணைந்து மொனரா தொலைகாட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊடகத்துறையில் பலமான அடையாளமாக விளங்கும் புத்திக விக்ரமதா இந்த அலைவரிசையின் தலைவராக செயற்படுவார்.

இலங்கையில் தற்போதுள்ள தொலைக்காட்சி அலைவரிசைகளில் இருந்து வேறுபட்டு, “மொனரா தொலைகாட்சி"மகிழ்ச்சியாக வாழும் கலையை" வழங்குகிறது.

அனைத்து இலங்கையர்களுக்கும் ஒரே அலைவரிசையாக இயங்கும் இந்த புதிய தொலைக்காட்சி அனுபவம், பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளால் வடிவமைக்கப்படும். அதன் முதன்மை நோக்கம் உயர்ந்த பொழுதுபோக்கை அளிப்பதாக அமைந்துள்ளது.

இலங்கைக்கு அப்பாலும் பரந்து விரிந்துள்ள உலகளாவிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்ட ஒரு அலைவரிவையாக மொனரா தொலைக்காட்சி செயற்படுவது மிக முக்கியமான அம்சமாகும்.

உலகில் எந்த பகுதியில் இருந்தும் இந்த அலைவரிசையை கண்டுகளிக்கமுடியும்.

இது தவிர தமிழ் திரைப்படங்கள், ஆங்கில திரைப்படங்கள், ஹிந்தி திரைப்படங்கள் மற்றும் உயர்தர தொடர்நாடகங்களை மொனரா தொலைக்காட்சியில் பார்வையிடலாம்.

நாட்டின் இளைஞர்களுக்காக ஒரு சிறப்பு நிகழ்ச்சி வரிசையையும் கொண்டுள்ள Monara TV, தனது வார இறுதி நாட்களை சிறுவர்களுக்காக ஒதுக்கியுள்ளது.

மொனரா தொலைகாட்சியை நாடளாவிய ரீதியில்,

கொழும்பு (UHF 29)

கண்டி (UHF 60)

மாத்தறை (UHF 56)

மாத்தளை(UHF 56)

பதுளை (UHF 56)

நுவரெலியா (UHF 60)

Peo TV சேனல் எண். 104 மற்றும் Freesat சேனல் எண். 28 இல் "Monara TV" இன் பெருமைமிக்க தொலைக்காட்சி பாரம்பரியத்தின் புதிய அனுபவத்தை இனிமேல் நீங்கள் பெறலாம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.....

OruvanOruvan