இராகலை டெல்மாக் குளத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு: இன்றைய முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Short News updates 03.04.2024

இராகலை டெல்மாக் குளத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராகலை டெல்மார் மேற்ப்பிரிவு குளத்தில் இருந்து டெல்மாக் தோட்டம் உடப்புசல்லாவையைச் சேர்ந்த 18 வயதான சுதர்ஷிகா என்ற பெண்ணின் சடலம் இன்று புதன்கிழமை (03) பிற்ப்பகல் இராகலை பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளது.

வலுவிழந்து வரும் டொலரின் பெறுமதி - உலக வங்கி

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கான அறிகுறிகள் காணப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. அத்துடன் நாடு 2.2% மிதமான பொருளாதார வளர்ச்சியை காட்டுவதாக உலக வங்கி கணித்துள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் மீது கண்ணீர் புகை நீர்த்தாரை பிரயோகம்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

OruvanOruvan

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவை

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இண்டிபோலகேவினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மதப்போதகர் ஜெரோம் பெர்னாண்டோ வெளிநாடு செல்ல அனுமதி

மதப்போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 3 நாடுகளில் நடைபெறவுள்ள மத சொற்பொழிவுகளில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பால்டிமோர் பாலத்தில் மோதிய கப்பல் தொடர்பில் எவ்வித அறிவித்தலும் வழங்கப்படவில்லை

அபாயகரமான பொருட்களுடன் இலங்கைக்கு வரும் வழியில் பால்டிமோர் பாலத்தில் மோதிய கப்பல் தொடர்பில் எவ்வித அறிவித்தலும் வழங்கப்படவில்லை என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் வெனுர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்துக்கு கண்ணீர்ப்புகை பிரயோகம்

பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஐ.நா. அமைதி காக்கும் பணியை முடித்தவர்கள் தாயகம் திரும்பினர்

லெபனானில் ஐ.நா அமைதி காக்கும் பணிகளில் இருந்த இலங்கை இராணுவத்தின் 14வது பாதுகாப்புப் படைக் குழு, தமது கடமை காலத்தின் நிறைவின் பின்னர் நேற்று (செவ்வாய்கிழமை) நாடு திரும்பியது.

OruvanOruvan

முப்படையினருக்கு பொது மன்னிப்புக் காலம்

பாதுகாப்பு அமைச்சு முப்படையினருக்கு பொது மன்னிப்பு காலத்தை வழங்கியுள்ளது. ஏப்ரல் 20 முதல் மே 20 வரை ஒரு மாத காலத்திற்கு பொது மன்னிப்பு அமலில் இருக்கும். இந்தக் காலப்பகுதியில் முப்படையினர் சேவைகளில் இருந்து சட்டப்பூர்வ வெளியேற்ற முடியும்..

OruvanOruvan

மீள் ஏற்றுமதியின் போது கடலில் விழுந்த மோட்டார் வாகனம்

மீள் ஏற்றுமதிக்காக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்துக்கு வந்த கப்பலில் வாகனங்களை ஏற்றும் போது மோட்டார் வாகனமொன்று கடலில் விழுந்துள்ளது.

வாகனத்தின் சாரதி கடலில் விழுந்து காயமடைந்த நிலையில் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட ஜயமினியின் உடல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாய்ந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்த இலங்கையை சேர்ந்த இளம் பெண்ணின் உடல் இன்றையதினம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

களுத்துறை, மத்துகம பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய ஜயமினி சதமாலி விஜேசிங்க, என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கெஹலியவின் பிணை மனு நிராகரிப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பிணை மீளாய்வு மனுவை நிராகரித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க இந்த உத்தரவை வழங்கினார்.

முஸ்லிம் பாடசாலைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு - ஜனாதிபதி

கொழும்பிலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் பாடசாலைகள் அதிபர்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர். இதனைதொடர்ந்து அவற்றுக்கு விரைவில் தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

குடும்ப வன்முறைகளைத் தீர்பதற்கான புதிய சட்டம் கொண்டுவரப்படும் - கீதா குமாரசிங்க

தற்போதைய குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டமூலமொன்றை பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதென மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.

இரகசிய வாக்குமூலம் வழங்க விரும்பவில்லை - மைத்திரிபால

ஈஸ்டர் தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பில் நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் வழங்க விரும்பவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாளிகாகந்த நீதவான் லொச்சனி அபேவிக்ரம வீரசிங்கவிடம் இன்று (03) தெரிவித்தார்.

லஹிரு, துமிந்த, ரத்கரவ்வே ஜினரதன தேரருக்கு பிணை

மக்கள் போராட்ட இயக்கம் அண்மையில் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியின் போது கைது செய்யப்பட்ட துமிந்த நாகமுவ, லஹிரு வீரசேகர, ரத்கரவ்வே ஜினரதன தேரர் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

தேசிய வெசாக் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 22ஆம் மற்றும் 24ஆம் திகதி வரையான மூன்று நட்களுக்கு அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இரத்தினபுரி பகுதியில் விபத்து 7 பேர் காயம்

இரத்தினபுரி – பத்துல்பான பிரதேசத்தில் லொறி ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி விபத்தில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 8 கோடி மோசடி

மாளிகாவத்தை - லக்விரு செவன வீடமைப்புத் தொகுதியில் பெண்ணொருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 88 பேரிடம் சுமார் 8 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட சந்தேக நபரை ஏப்ரல் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முட்டையொன்றின் விலை 36 ரூபாவாக நிர்ணயம்

இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒன்றின் விற்பனை விலை இன்று முதல் 36 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை லங்கா சதொச நிறுவன தலைவர் பசத யாப்பா அபேவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தனியார் பேருந்தொன்றில் தீ விபத்து

மட்டக்குளிய - இக்பாவத்தை பகுதியில் கண்டி நோக்கி சுற்றுலா சென்ற தனியார் பேருந்தொன்று இன்று அதிகாலை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரியவருகின்றது. இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

OruvanOruvan

சீன வெங்காயத்தின் தரம் குறித்து வியாபாரிகள்

தற்போது சீனாவில் இருந்து இலங்கைக்கு பெரிய வெங்காயம் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில், இறக்குமதி செய்யப்படும் ஒரு பெரிய வெங்காயம் சுமார் 500 கிராம் எடையுள்ளதாகவும், அதன் திரவ தன்மை அதிகமாக இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு சீன வெங்காயம் ஒரு கிலோ 320 முதல் 350 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

நாடளாவிய ரீதியில் மழை பெய்வதற்கான சாத்தியம்

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.