கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பு: இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

OruvanOruvan

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தொழில் வாய்ப்பை பெற்றுள்ள இலங்கையர்கள் விசா பெற்றுக்கொள்ள இந்தியா செல்லவேண்டியுள்ளதாக பெரும் நிதிச் செலவுகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

போலந்து, ஹங்கேரி உள்ளிட்ட 15 நாடுகளில் தொழில்வாய்ப்பை பெற்றுள்ள இலங்கையர்கள் இவ்வாறு நெருக்கடியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாடுகளின் தூதுரகங்கள் இலங்கையில் இல்லையெனவும், ஆகையினால் விசா உள்ளிட்ட ஆவணங்களில் கையெழுத்திட இந்தியா செல்லவேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒருவர் மூன்று லட்சம் ரூபாய் மேலதிகமாக செலவிட வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, விசா தாமதம் ஏற்பட்டால் பணி அனுமதிப்பத்திரமும் ரத்து செய்யப்படலாம். அவ்வாறு நடந்தால் தொழில் விண்ணப்பதாரர் பெரும் நிதியை இழக்க நேரிடும்.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் அரச மட்டத்தில் கலந்துரையாடப்பட்ட போதிலும், உரிய பதில் இதுவரையிலும் கிடைக்கவில்லை அந்தச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.