அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு: இன்று முதல் அமுலாகும் வகையில் விலைத் திருத்தம்

OruvanOruvan

Reduction in prices of some essential goods

பண்டிகை காலத்தை முன்னிட்டு 09 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இந்த பொருட்களின் விலை இன்று முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம், கடலை, உருளைக்கிழங்கு, LSL பால்மா, கோதுமை மா, இறக்குமதி செய்யப்பட்ட முட்டை, வெள்ளை அரிசி, சோயா மீட் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, பெரிய வெங்காயம், ஒரு கிலோ கிராமின் விலை 55 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 495 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறிய வெங்காயம் ஒரு கிலோ கிராமின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 290 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு கிலோ கிராம் கடலையின் விலை 16 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் உருளைக்கிழங்கின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

அவற்றின் புதிய விலையாக 494 ரூபா மற்றும் 195 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, LSL பால்மா 400 கிராமின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு 925 ரூபா புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோதுமை மா ஒரு கிலோ கிராமின் விலை 08 ரூபாவால் குறைக்கப்பட்டு 192 ரூபா புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது முட்டை யொன்று 43 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்ற நிலையில் புதிய விற்பனை விலை 36 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை அரிசி ஒரு கிலோ கிராம் 03 ரூபாவால் குறைக்கப்பட்டு 192 ரூபா புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன் சோயா மீட்டின் புதிய விலை 593 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

OruvanOruvan