லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் பாரிய மாற்றம்: இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் விலை குறைப்பு

OruvanOruvan

Laughfs Gas prices reduced

சமையல் எரிவாயு விலையை குறைப்பதற்கு லாஃப்ஸ் நிறுவனம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 625 ரூபாவால் குறைக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 4,111 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 05 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 248 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன் புதிய விலை 1,652 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு

ஏப்ரல் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் 135 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 4,115 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 05 கிலோ கிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 55 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 1,652 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2.5 கிலோ கிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 23 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 772 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

OruvanOruvan