யாழில் ஆலயத்திலிருந்து திரும்பியவர் உயிரிழப்பு: வடக்கு - கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

North - East News Updates 01.04.2024

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனம்

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக மீண்டும் வி.பி.எஸ்.டி.பத்திரண சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளராக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி செயற்பட்டுவரும் நிலையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

யாழில் ஆலயத்திலிருந்து திரும்பியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் தேங்காய் உடைத்துவிட்டு வந்த சின்னத்தம்பி அர்ஜீனன்(68) என்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

மட்டி எடுக்க சென்ற இளைஞன் கடலில் மூழ்கி உயிரிழப்பு

மட்டி எடுப்பதற்காக கடலுக்கு சென்ற மட்டக்களப்பு பெரியகல்லாறு ஓடக்கரையைச் சேர்ந்த 19 வயதான ரவீந்திரன் யதுசன் என்பவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். கொழும்புத்துறை கடற்பகுதியில் நேற்று மட்டி எடுப்பதற்கு கடலுக்குள் சென்றவர் காணாமல் போன நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

25 அடி உயரமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திறந்துவைப்பு

மட்டக்களப்பு இராமகிருஷனமிஷனின் நூற்றாண்டின் தொடக்க விழாவினை சிறப்பிக்குமுகமாக, கல்லடிப்பாலத்தடி பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட 25.05 அடி உயரமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை ஞாயிற்றுக்கிழமை (31) இராமகிருஷனமிஷன் இலங்கைக் கிளையின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜீ மஹராஜினால் சம்பீராய பூர்வமாக திந்து வைக்கப்பட்டது.

தமிழரசுகட்சியின் ஆதரவு இன்றி ஜனாதிபதியாக எவரும் வரமுடியாது

இந்த வருடம் இரண்டு தேர்தல்கள் வருவதற்கான வாயப்புக்கள் இருக்கின்றது இதில் எந்த தேர்தல் முதல்வரும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிற்கு மட்டுமே தெரியும். எனவே, அடுத்த ஜனாதிபதியாக வர நினைக்கின்ற எவருமே தமிழரசுக்கட்சியின் ஆதரவு இன்றி ஜனாதிபதியாக வரமுடியாதளவிற்கு தமிழரசு கட்சியைபலப்படுத்திக் கொள்வது தான் எங்களுக்கு தற்போது இருக்கும் பொறுப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

வவுனியாவில் தந்தை செல்வாவின் 126வது ஜனன தினம்

தந்தை செல்வாவின் 126ஆவது ஜனன தினம், வவுனியா, மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தந்தை செல்வாவின் திருவுருவ சிலையடியில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு, அன்னாரது நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்துடன், மலர் அஞ்சலியும் செலுத்தியிருந்தனர்.

யாழ். ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு

தந்தை செல்வாவின் 126 ஆவது ஜனனதின விழாவும், விருது வழங்கும் நிகழ்வும் நேற்று யாழ்.வலிகாமம் மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் வடமாகாண தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஊடகத்துறை சார்பில் தீம்புனல் பத்திரிகையின் ஆரியர் ஏ.ரவிவர்மா, ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் ஏ.தேவராஜன், சக்தி ரி.வி தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் வி.கஜீபன், யாழ்.தினக்குரல் பத்திரிகையின் உதவி ஆசிரியர் க.ஹம்சனன், டான் ரி.வி தொலைக்காட்சியின் உதவி ஆசிரியர் இ.நிர்மல் உள்ளிட்டோருக்கும், வைத்திய துறை மற்றும் சமுகசேவை உள்ளிட்ட பல துறைகளில் சாதித்த 20 பேருக்கு ''தந்தை செல்வா விருது'' வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.